PDA

View Full Version : காதல் நூலகம்..!



govindh
06-03-2010, 10:06 AM
நாம் இருவரும்
சேர்ந்து கட்டுவோம் -
காதல் நூலகம்..

அதில் நம்
இருவர் பெயருமே..
பெரும் புத்தகம்..

உன்னை நான் படிக்க..
என்னை நீ படிக்க..

நாம் இருவரும்
சேர்ந்து கட்டுவோம்..
காதல் நூலகம்..!

சிவா.ஜி
06-03-2010, 11:28 AM
இருவர் பெயருமே என்பதற்குப் பதிலாக நாம் இருவருமே பெரும் புத்தகம் என்றிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். பெயர்களை மட்டுமே எவ்வளவு நேரம் படிப்பது....ஒருவரையொருவர் படிக்க இந்த ஆயுள் போதாது......

வாழ்த்துக்கள் கோவிந்த்.

அமரன்
06-03-2010, 07:11 PM
சரிதான்...

மௌனம்
பேசிக்கொண்டிருக்க..
பழங்காற்று
வீசிக் கொண்டிருக்க..
இன்னும் இன்னும்
எதுவெனத் தெரியாதவை
எக்காளிக்கும்..
இன்றைய காதலே ஒரு நூலகம்தானே..
பலருக்கு புரியாத புத்தகங்களின் அடுக்குத்தானே..

ஆக....

இந்தக் கவிதை
காதலின் கன்னிக் கடிதம்..

சரிதானா கோவிந்த்!

இப்பெல்லாம்
நூல்களில் நூல்களோடியிருக்கும்
அகம்தான் நூலகம்.

இதையும்
கவனத்தில் கொள்ளல் அவசியம்:)

govindh
06-03-2010, 07:17 PM
நூல்களில் நூல்களோடியிருக்கும்
அகம்தான் நூலகம்.
காதலின் கன்னிக் கடிதம்..
சரி தான் அமரன் அவர்களே..!

Ravee
07-03-2010, 02:27 AM
:)

இன்றைய காதலே ஒரு நூலகம்தானே..
பலருக்கு புரியாத புத்தகங்களின் அடுக்குத்தானே..


ம்ம் நூலகம் செல்ல வாய்ப்பு கிட்டவில்லை. நான் பார்க்க நேர்ந்தது எல்லாம் தகவல் பலகை மட்டும்தான் . ஒரு வழி சேதி பரிமாற்றம் ... :traurig001: :traurig001: :traurig001: