PDA

View Full Version : மூடநம்பிக்கையின் உச்சம்!அன்புரசிகன்
06-03-2010, 05:25 AM
இந்த செய்தியை படித்தபோது இந்த தாயை நடுநேரட்டில் தூக்கிலிடவேண்டும் என்று நினைக்க தூண்டுகிறது.

செய்தியின் சுட்டி (http://www.manithan.net/index.php?subaction=showfull&id=1267739322&archive=&start_from=&ucat=1&)
http://i701.photobucket.com/albums/ww12/anburasihan/Mantram/misel/kindar_mokkusami.jpg

இந்த செய்தியை பார்த்தவுடன் ஒரு கணம் அப்படியே ஆடி போய்விட்டேன். ஒரு கைக்குழந்தையின் மேல் ஒரு ஆசாமி நின்று கொண்டிருக்கிறார். இந்த கொடுமை நடந்தது பீகார் மாநிலத்தில் உள்ள கதிஹார் என்ற ஊரில். அந்த ஊரில் உள்ள ஒரு சாமியார் தன்னிடம் அபார சக்தி இருப்பதாகவும் அதன் மூலம் எல்லா வியாதிகளையும் குணப்படுத்துவேன் என்று அப்பாவி மக்களை ஏமாற்றி வந்துள்ளான். அந்த கிராம மக்களும் அந்த சாமியாருக்கு சக்தி இருப்பதாகவும் அந்த சக்தி அவன் கால்கள் மூலமாக வெளிப்படுவதாக நம்புகிறார்கள்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபெற்ற பீகார் மாநில சுகாதார துறை அமைச்சர் இந்த பிரச்சனையில் கலாச்சாரமும் (இது என்ன கலாச்சாரமோ?) மதமும் சம்பந்த பட்டிருப்பதால் இந்த சாமியார் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

இதை விட கொடுமை கதிஹார் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நிகில் சௌதிரி (பி.ஜே.பி) இப்படி கூறியிருக்கிறார் ”இந்த சடங்கினால் மக்கள் பலன் அடைவார்களே ஆனால், இது அவர்களின் உரிமை, அதை யாரும் தடுக்க முடியாது.” அது மட்டும் இல்லாமல் எந்த விதமான தயக்கமும் இன்றி இந்த காட்டுமிராண்டி தனத்தை நியாப்படுத்தி உள்ளார். இவர் மட்டும் அல்லாமல் அதே தொலைகாட்சி நிகழ்ச்சியில் பங்குபெற்ற காசி சுமேரு மடத்தின் தலைவர் சங்கராச்சரிய சுவாமியும் அவருக்கு ஒத்து ஊதியுள்ளார்.

சனல் எடமரக்கு அவர்கள் அவரிடம் இந்த காட்டுமிராண்டி தனத்தை தடுத்து நிறுத்துமாறு அந்த நிகழ்ச்சியில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த காட்டுமிராண்டி தனம் ஒளிபரப்பான 24 மணி நேரத்திற்குள் அந்த காட்டுமிராண்டி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவா.ஜி
06-03-2010, 05:46 AM
மூட நம்பிக்கைகளுக்கும், முரட்டுத்தனத்துக்கும் பெயர் 'போன' பீகாரில் இதுவும் நிகழும்...இதற்கு மேலும் நிகழும். எத்தனை வருடங்களாக நடந்துவந்ததோ தெரியவில்லை. இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. நீங்கள் சொன்னதைப்போல அந்த தாய்க்கு எப்படி மனசு வந்தது, தன் குழந்தையை ஒரு காட்டெருமை மிதிப்பதைப் பார்க்க?

இதைக் கலாச்சாரமென்று சொன்னாமைச்சரை நினைத்து சிரிப்பதா அழுவதா தெரியவில்லை.

ம்... மெத்தப்படித்த நமது மாநிலத்திலேயே இன்னும் சில இடங்களில் பல மூடப் பழக்கங்களை நடத்திக்கொண்டிருக்கும்போது....பீகாரைச் சொல்லி என்ன பயன். இது 21ஆம் நூற்றாண்டுதானா என சந்தேகமாக இருக்கிறது.

அக்னி
06-03-2010, 08:21 AM
பிழைப்புக்காகப் பிஞ்சை நிலத்தோடு நசுக்கும் அசுரத்தனத்தை,
சக்தியின் வெளிப்பாடு என நம்பும் மக்களை நினைக்கப் பரிதாபமாக இருக்கின்றது.

‘ஆயிரம் பெரியார்கள் வந்தாலும், இவர்களைத் திருத்தமுடியாது’
என்பதுதான் நினைவுக்கு வருகின்றது.

இன்னும் எத்தனை காலம்தான் ஏமா(ற்)றுவார் நம் நாட்டிலே...

பாரதி
06-03-2010, 09:19 AM
சஹாரா செய்திகள் தொலைக்காட்சியில் இதைப்போன்ற நிகழ்வுகள் அடிக்கடி இடம் பெறுகின்றன. அவற்றை பார்க்கும் போது மிகவும் வருத்தமும் அதிர்ச்சியும் தரும் வகையில் இருந்தாலும், மூட நம்பிக்கையில் மக்களும் ஆழ்ந்த நித்திரையில் அரசும் இருக்கும் வரையில் இவை நிற்கப்போவதில்லை என்றுதான் தோன்றுகிறது.

கலையரசி
06-03-2010, 10:05 AM
அய்யோ! பார்க்கும் போதே நெஞ்சம் பதைபதைக்கிறது. மூட நம்பிக்கைக்கு ஓர் அளவேயில்லையா? பூப்போன்ற அந்தப் பிஞ்சு உடலின் மீது ஏறி நிற்க அந்தக் கொடியவனுக்கு எப்படித்தான் மனசு வந்ததோ?

rajarajacholan
06-03-2010, 11:56 AM
இன்னும் எத்தனை காலம்தான் ஏமா(ற்)றுவார் நம் நாட்டிலே...

சரியா சொன்னீங்க சார்

xavier_raja
08-03-2010, 10:03 AM
ஒரு ஊருக்கு 100 பெரியார் வந்தால் கூட இந்த நாடு திருந்தாது.

THEVENTHIRAR
08-03-2010, 02:20 PM
இந்தியாவில் உள்ள அனைத்து இந்து கோவிலும் உடனடியாக சாதிக்கு ஒரு அர்ச்சகர் நியமியுங்கள்.அனைத்தும் சரியாகும்