PDA

View Full Version : காதல் ஒரு அரசியல் நாடகம்



jawid_raiz
06-03-2010, 04:27 AM
காதல் ஒரு அரசியல் நாடகம்!
குறுங்கால நோக்கங்களுக்காய்
உன்னை அரியணை ஏற்றி
எதிர்கட்சியில் இருந்தும்
உனக்கு ஆதரவு தருகிறது
என் ஆண்மை!

'உரசல்', 'முத்தம்'
குறுங்கால வாக்குறுதிகள்
குறைவின்றி நிறைவேற்றப்படுகின்றன

'எந்த பெண்ணையும் பார்க்கக்கூடாது !'
'எந்த ஆணோடும் பேசக்கூடாது!'
அரசியல் ஒப்பந்தங்கள்
உனக்கும் எனக்கும் இடையில்
கைச்சாத்திடப் படுகிறது

திருமண ஒப்பந்தத்தின் மேல் மட்டும்
நம்பிக்கையில்லா பிரேரணை
நிறைவேற்றப்படுகிறது


- ஜாவிட் ரயிஸ்

govindh
13-03-2010, 10:17 PM
திருமண ஒப்பந்தத்தின் மேல் மட்டும்
நம்பிக்கையில்லா பிரேரணை
நிறைவேற்றப்படுகிறது
காதல் ஒரு அரசியல் நாடகம்!
குறுங்கால நோக்கங்களுக்காய்....
ஓ....இது தீர்ந்த காதலா....

sofi
13-03-2010, 11:07 PM
காதல் எப்போதும் காதல் தான் ...காதலர்கள் தான் நாடகம் ஆடுகிறார்கள் .. அருமை உங்கள் கவிதை வாழ்த்துக்கள்

jawid_raiz
14-03-2010, 06:09 AM
Govindh, Shofi!

உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி

சிவா.ஜி
14-03-2010, 06:58 AM
ஆங்கிலப்பதிவுகள் மன்ற*த்தில் அனுமதிக்கப்படுவதில்லை ஜாவித். தயவுசெய்து தமிழில் மாற்றிவிடுங்கள்.

jawid_raiz
15-03-2010, 01:05 AM
ஆங்கிலப்பதிவுகள் மன்ற*த்தில் அனுமதிக்கப்படுவதில்லை ஜாவித். தயவுசெய்து தமிழில் மாற்றிவிடுங்கள்.

மாற்றிவிட்டேன் அன்பரே !

அக்னி
15-03-2010, 07:54 AM
ஒப்பந்தம் ஏதுமில்லாத
ஒப்பற்ற பந்தம் காதல்...

மண ஒப்பந்தத்தை விடவும்
மேலான மன ஒப்பந்தம்...

ஆளும் எதிர்க் கட்சிகளின்
எதிர்ப்பே இங்கு ஆதரவு.

நெருங்கினால் விலத்துவதும் விலத்தினால் நெருங்குவதும்
உரசினால் முறைப்பதும் முறைத்தால் உரசுவதும்
என்று எப்போதுமே உடன்பாடில்லா ஆட்சி.

ஒரு முத்தம் பெறவும் கொடுக்கவும்,
கைச்சாத்து நிகழும்முன்
கைச் சாத்தும் நிகழும்
அடிதடி ஆட்சி...

ஆனால் சில காதல் ஆட்சிகள்
சுயாட்சிகளாகிவிடுவதுதான் வேதனை...

ஜாவிட் ரயிஸ் அவர்களுக்குப் பாராட்டு...
உங்கள் ஆட்சி தொடரட்டும்...

jawid_raiz
15-03-2010, 08:40 AM
நன்றி அக்னி! ஒரு உண்மை சொல்லட்டுமா? என் கவிதையை விட நான் உங்கள் கவிதையை ரசிக்கிறேன்

govindh
15-03-2010, 11:11 AM
கவிதைக்கு ...கவிதை அருமை...அக்னி அவர்களே...அசர வைக்கிறீர்கள்..