PDA

View Full Version : போலி!



குணமதி
05-03-2010, 03:34 PM
போலி!


முத்திரைத் தாளில் போலி!

குடும்ப அட்டையில் போலி!

வாக்காளர் பட்டியலில் போலி!

மருந்திலே போலி!

மருத்துவர் போலி!

காவலர் போலி!

காவலும் போலி!

வழக்குகள் போலி!

வாழ்க்கையும் போலி!

துறவு போலி!

தூய்மையும் போலி!

"போலி" நாடு!

அக்னி
05-03-2010, 03:41 PM
போலிகளின் தாக்கத்தால்..,
போலியோ தாக்காமலேயே
நாடு முடமாய்...

போலியைக் காலி செய்தால்
மட்டுமே
எழும் திடமாய்...

என் பாராட்டு, போலிகளைக் கிழிக்கும் கவிக்கும்.., கவி தந்தவருக்கும்...

குணமதி
06-03-2010, 12:53 AM
நன்றி.

Ravee
06-03-2010, 12:59 AM
ஆமாம் நம் இந்திய வரை படமும் போலி பக்கத்து நாடுகளிடம் தாரை வார்த்த பகுதிகளையும் பேசி தீர்க்காமல் இன்னும் இத்தனை காலம் பொழுதை வீணடிக்கும் போலி அரசியல் தலைகள்.

குணமதி
07-03-2010, 04:08 AM
ஆமாம் நம் இந்திய வரை படமும் போலி பக்கத்து நாடுகளிடம் தாரை வார்த்த பகுதிகளையும் பேசி தீர்க்காமல் இன்னும் இத்தனை காலம் பொழுதை வீணடிக்கும் போலி அரசியல் தலைகள்.

சரியாகச்சொன்னீர்கள்.

நன்றி ரவி.

கலையரசி
07-03-2010, 04:25 AM
எல்லாமே போலி
திருந்தாவிடின் முடிவில்
எல்லாமே காலி

நன்று குணமதி அவர்களே!

குணமதி
07-03-2010, 10:44 AM
நடைமுறை உண்மையைச் சொன்னீர்கள் கலையரசி.

பின்னூட்டத்திற்கு நன்றி.

சிவா.ஜி
07-03-2010, 10:54 AM
கடவுளே நேரில் வந்தாலும், பரிசோதனைக்குப் பிறகே ஏற்றுக்கொள்ள*ப்படுவார்.

அத்தனையும் போலி.....ஆனால் அனைத்துக்கும் அரசாங்கமே காரணம். ஏனென்றால் போலி அரசியல்வாதிகள்....போலிகளைத்தானே உருவாக்குவார்கள்.

வாழ்த்துக்கள் குணமதி.

குணமதி
07-03-2010, 01:57 PM
நன்றி சிவா.

அமரன்
07-03-2010, 09:09 PM
நிதர்சனமான வரிகள் குணமதி.

நீங்கள் பட்டியலிட்ட அனைத்துமே எம்மால் உருவாக்கப்பட்டவை.

போலிகள் இல்லாதோர் நம்மில் எத்தனை பேர்?

தனிமனித ஒழுக்கமே அனைத்தையும் சீர் செய்யும் என்பது என் நிலைப்பாடு.

கவிதைக்கு வாழ்த்து.

Akila.R.D
08-03-2010, 03:56 AM
உண்மையை கூறும் வரிகள்...

வாழ்த்துக்கள் குணமதி...

குணமதி
08-03-2010, 04:42 AM
///தனிமனித ஒழுக்கமே அனைத்தையும் சீர் செய்யும் என்பது என் நிலைப்பாடு.///
சரியாகச் சொன்னீர்கள் அமரன்.
நன்றி.

குணமதி
08-03-2010, 04:42 AM
உண்மையை கூறும் வரிகள்...

வாழ்த்துக்கள் குணமதி...

மிக்க நன்றி.

govindh
09-03-2010, 08:11 AM
போலிகளைச் சாடும்..
போலிகளைச் சுடும்..
உங்கள் கவி வரிகள்..
அருமை...வாழ்த்துக்கள்..

நாகரா
09-03-2010, 11:00 AM
மெய்போல் இருக்கும் போலிப் பொய்யுரி
மெய்யாந் திருவைப் புரி

போலிகளைச் சாடுங் கவி, மெய்யின் சுரணையேற்றும் உம் தனி உத்தி! வாழ்த்துக்கள் குணமதி

குணமதி
09-03-2010, 03:30 PM
போலிகளைச் சாடும்..
போலிகளைச் சுடும்..
உங்கள் கவி வரிகள்..
அருமை...வாழ்த்துக்கள்..

மிக்க நன்றி.

குணமதி
09-03-2010, 03:31 PM
மெய்போல் இருக்கும் போலிப் பொய்யுரி
மெய்யாந் திருவைப் புரி

போலிகளைச் சாடுங் கவி, மெய்யின் சுரணையேற்றும் உம் தனி உத்தி! வாழ்த்துக்கள் குணமதி

மிக்க நன்றி ஐயா.