PDA

View Full Version : பிந்தியசெய்தி இணைப்பு: மெல்பேர்னில் அடுத்தடுத்து நிகழும் கொடூரம்.அன்புரசிகன்
05-03-2010, 07:32 AM
பிந்திய செய்தி:

பாலகனின் கொலை சம்பந்தத்தில் ஒரு டக்ஸி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் இந்தியாவைச்சேர்ந்த 23 வயது இளைஞன். முகம் மறைத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பிக்கொண்டுடிருக்கிறார்கள். இதுசம்பந்தத்தில் இன்னும் சில பல கைதுகள் நிகழலாம் என விக்டோரியா காவல்துறை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.


ஒரு காலத்தில் விக்டோரியா இன்னும் சொல்லப்போனால் மெல்பேர்னை உலகிலேயே வாழ்வதற்கு சிறந்த இடமாக கூறினார்கள்... அவுஸ்திரேலியாவிலேயே அனைத்து இனமக்களும் ஒரே சமூகமாக வாழும் இடமாக மெல்பேர் ஐ கூறினார்கள்... ஆனால் சமீபகாலமாக அடுத்ததுத்து நிகழும் கொலைகள் இந்த பெயரை கெடுப்பதாகவே உள்ளது.

அண்மையில் பஞ்சாப் இனை சேர்ந்த ஒருவர் கொலைசெய்து அதன் சுவடு காயமுன் அடுத்த சம்பவம் நேற்று நிகழ்ந்தேறியுள்ளது...

குருஷான் சிங் என்ற 3 வயது சிறுவன் வீட்டிலிருந்து காணாமல் போய் பின் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்... இரண்டு வாரங்களுக்கு முன் தனது 3வது பிறந்ததினத்தினை சிறப்பாக கொண்டாடிய குருஷான் குடும்பத்தினர் இன்னும் ஒருவாரத்தில் இந்தியாவிற்கு திரும்புவதற்கு முடிவெடுத்திருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது...

நேற்று மதியம் 1 மணிக்கு பொலிசாருக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தாயாரின் வாக்கு மூலத்தில் தான் பிள்ளையை மதியம் 12.15 ற்கு பின்னர் காணவில்லையாம்... 21 km ற்கு அப்பால் மாலை 7 மணியளவில் அந்த பாலகனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது... அவனது உடலில் எந்தவித காயங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. தாயாரின் வாக்குமூலத்தில் வீடு பூட்டப்பட்டிருந்ததாம். வீட்டினை உடைத்த எந்த தடையமும் இல்லை...

http://i701.photobucket.com/albums/ww12/anburasihan/Mantram/misel/GurshanSingh420_kidnapping-map-420x.jpg

இதுசம்பந்தமாக விக்டோரியா காவல்துறையினர் விசாரணையினை முடுக்கிவிட்டுள்ளதாக ஆணையாளர் கூறியுள்ளார். இதுசம்பந்தமான முழுவிபரமும் இந்தியபிரதமருக்கு அவுஸ்திரேலிய உயர்ஸ்தானியராலயத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளதாம்...

அண்மையில் நிகழ்ந்த கொலை சம்பவத்திற்கு ஆப்கானிஸ்தான் மற்றும் சீன நாட்டு இளைஞர்களை காவல்துறை கைதுசெய்தது... ஆனால் இந்த செய்தியினை இந்நாட்டு ஊடகம் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

ஆனால் இன்றய அனைத்து ஊடகங்களினதும் பார்வை இந்த குருஷான் பாலகனின் மீது தான்...

சடல பரிசோதனை அறிக்கையில் சிறுவனின் மரணம் கொலை என கூறப்பட்டுள்ளதாம். பொலிசார் நிறையவே குழம்பியுள்ளனர்...

பாலகனினது படங்களும் பொலீஸ் மற்றும் தடய நிபுணர்களின் படங்களும் கீழே...

http://i701.photobucket.com/albums/ww12/anburasihan/Mantram/misel/277951-gurshan-singh.jpg

http://i701.photobucket.com/albums/ww12/anburasihan/Mantram/misel/GurshanSingh1.jpg

http://i701.photobucket.com/albums/ww12/anburasihan/Mantram/misel/278637-gurshan-singh.jpg

http://i701.photobucket.com/albums/ww12/anburasihan/Mantram/misel/278324-gurshan-singh.jpg

http://i701.photobucket.com/albums/ww12/anburasihan/Mantram/misel/275485-gurshan-singh-investigation.jpg

http://i701.photobucket.com/albums/ww12/anburasihan/Mantram/misel/275485-gurshan-singh-investigation.jpg

http://i701.photobucket.com/albums/ww12/anburasihan/Mantram/misel/275384-gurshan-singh-investigation.jpg

http://i701.photobucket.com/albums/ww12/anburasihan/Mantram/misel/209905-gurshan-singh-039-s-death.jpg

ஓவியன்
05-03-2010, 07:37 AM
இந்தக் குழந்தையின் முகத்தினைப் பார்த்த பின்னரும் கொலை செய்யத் துணிந்த அந்த ஈனப்பிறவியை(களை) எந்த வர்க்கத்தில் சேர்ப்பது...??

aren
05-03-2010, 07:39 AM
இனவெறி ஆஸ்திரேலியாவில் அதிகமாவிட்டது என்பது அடுத்தடுத்து நடக்கும் இந்த மாதிரிய துயரச்சம்பங்களினால் நன்றாகவே தெரியவருகிறது.

ஆஸ்திரேலியா இதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்தியர்கள் அங்கே போவதென்பதே அரிதாகிவிடும்.

ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அங்கே படிக்கச் செல்கிறார்கள். இந்த வருடம் அது ஐந்தில் ஒரு பகுதியாக குறைந்துவிட்டது. அடுத்த வருடம் இன்னும் குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அன்புரசிகன்
05-03-2010, 07:50 AM
நேற்று மாலை இந்த கடத்தப்பட்ட செய்தியினை அறிந்தேன். ஆனால் கொலைசெய்யப்பட்ட விடையம் தெரியாது. இன்று காலை வேலைக்கு போகும் போது இந்த செய்தி கேட்டதும் கண்கள் கலங்கிவிட்டது. எந்த இனமாக இருந்தாலும் இந்த வயது என்று சொன்னதும் தாங்க முடியவில்லை. வேலையில் ஒரு வெள்ளை கூறியது இது தான். கொலைகாரர்களை விசாரணைகளால் இழுத்தடிக்காது head spot தான் செய்யவேண்டும் என்றார்...
-------------

அண்ணா படிக்கவருவது எக்காலத்திலும் குறையாது. காரணம் இன்னமும் மற்றய அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இந்தியர்களின் பாதுகாப்பிலும் இங்கு தான் சிறந்த பாதுகாப்பு என கூறுகிறார்கள்... அமெரிக்கா ஐரோப்பாவில் நிகழும் துயரங்கள் செய்திக்கு வருவது குறைவு என இங்கு இருக்கும் இந்திய நண்பர்கள் சொன்னார்கள்.

பால்ராஜ்
06-03-2010, 05:21 AM
ஆஸ்ஸிகள்...இன வெறியர்கள் போலும்...!
எத்தனைபேரை இன்னும் கொல்லப் போகிறார்களோ??

அன்புரசிகன்
06-03-2010, 05:30 AM
இதற்கு முன்னர் நிகழ்ந்த கொலைகளுக்கு காரணமானவர்கள் அவுஸிகள் அல்ல. சீன நாடும் ஆப்பானியர்களும்...

நேற்று ஒரு இந்திய நண்பர் கூறியது... முன்னர் கொலைசெய்யப்பட்ட அந்த சிங் ஹெரோயின் கடத்துபவராம். அந்த பிரச்சனையில் தான் ஒரு ஆப்பானியர் வீதியால் துரத்தி கொலைசெய்ததை கண்டு சாட்சி சொன்னது ஒரு அவுஸி வெள்ளை...

அவுஸில் உள்ள சுதந்திரங்களை வேற்று நாட்டு மக்கள் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். இது தான் தற்போதய அரசுக்கு உள்ள தலையிடி. 3 நாட்க்களுக்கு முன்னர் சட்டம் ஒன்று கொண்டுவந்துள்ளார்கள். கத்தியுடன் பிரயாணம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த இடத்திலேயே 2000 டொலர் அபராதமும் சிறைத்தண்டனையும்.

அத்துடன் எழுந்தமானமான சோதனைகளுக்கு பொலிசாருக்கு அரசு அதிகாரம் வழங்கியுள்ளது...

அக்னி
06-03-2010, 08:21 AM
மிகவும் வேதனையான சேதி...

அந்தச் சிறுவனின் மரணவேதனைக்கும்,
அந்தத் தாயின் பிரிவுவேதனைக்கும்,
கொலைகாரர்கள் தோலை உரித்தாலும் தண்டனை போதாதுதான்...

*****

கத்தியுடன் பிரயாணம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த இடத்திலேயே 2000 டொலர் அபராதமும் சிறைத்தண்டனையும்.
அப்போ இனி அவுஸ் அமைதியா இருக்கும்னு சொல்லுங்க... :rolleyes:

பாரதி
06-03-2010, 09:25 AM
வர வர எங்கும் மனித நேயம் குறைந்தே வருகிறது என்பதைத்தான் இது உணர்த்துகிறது. அரசு ஆதரவும், தொடர்ந்த கண்காணிப்பும், மக்களின் விழிப்புணர்வும் இருந்தால் இவை போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் குறையக்கூடும். அப்படி நிலைமையில் மாற்றம் இல்லையேல் குற்றங்கள் கூடும்; எதிர்தாக்குதல்களும் நேரிடலாம்.

கலையரசி
06-03-2010, 10:12 AM
இந்தக் குழந்தையின் புகைப்படத்தைப் பார்த்ததிலிருந்து மனசே சரியில்லை. கொலைகாரர்கள் தங்கள் வீரத்தை ஒரு பாலகனிடமாக காட்ட வேண்டும்?

அன்புரசிகன்
08-03-2010, 12:06 AM
பாலகனின் கொலை சம்பந்தத்தில் ஒரு டக்ஸி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் இந்தியாவைச்சேர்ந்த 23 வயது இளைஞன். முகம் மறைத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பிக்கொண்டுடிருக்கிறார்கள். இதுசம்பந்தத்தில் இன்னும் சில பல கைதுகள் நிகழலாம் என விக்டோரியா காவல்துறை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

aren
08-03-2010, 01:22 AM
அந்த டிரைவர் இறந்த சிறுவனின் வீட்டிலேயே வசிப்பவராம், ஆனால் சொந்தக்காரர் இல்லையாம்.

இன்னும் சில நாட்களில் உண்மைவிவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கிறேன்.

கீதம்
08-03-2010, 02:47 AM
ஆஸ்ஸிகள்...இன வெறியர்கள் போலும்...!
எத்தனைபேரை இன்னும் கொல்லப் போகிறார்களோ??

என்னைப் பொறுத்தவரை ஆஸ்ஸிகள் நம்முடன் இணக்கமாகப் பழகுவதாகவே உணர்கிறேன். எங்கு சென்றாலும் ஒரு புன்னகையுடன் நம்மை அவர்கள் ஏறிடுகின்றனர். ஆனால் நம் எதிரே காண்கின்ற இந்தியர்களோ, கண்டவுடனேயே முகத்தைத் திருப்பிக் கொள்கின்றனர். நாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பேருந்து ஓட்டுநர்களே இதற்குச் சாட்சி. மற்ற வெள்ளையின ஓட்டுநர்கள் வழக்கமான புன்னகையுடன் நலம் விசாரித்தப் பின்பு பயணச்சீட்டு வழங்க, நம் இன மக்களோ, நாம் செலுத்தும் வணக்கத்தையும் பாராததுபோல் முகத்தை இறுக்கமாய் வைத்துக்கொண்டு இருக்கின்றனர்.

அது மட்டுமில்லாமல் இங்கு (மெல்போர்னில்) நான் கண்டவரை, கார்களை காட்டுத்தனமாக ஓட்டுபவர்களும் நம் இன மக்களே! இதைப் பார்த்து மற்றவர்கள் ஆத்திரப்பட்டு நம்மவர்களைத் தரக்குறைவாய்ப் பேசும்போது நாம் வாயை மூடிக்கொண்டு இருப்பதைத்தவிர வேறென்ன செய்ய முடிகிறது?

சிவா.ஜி
08-03-2010, 09:02 AM
பச்சிளம் பாலகன்....மனமெல்லாம் பதறுகிறது. கொன்றவர்கள் ஆஸிகளோ, இந்தியரோ.....யாராவது இருக்கட்டும். ஆனால் நிச்சயம் மனிதர்கள் அல்ல. அரக்கர்கள்.

அன்புரசிகன்
08-03-2010, 09:50 AM
சரியாக சொன்னீர்கள் கீதம். நம்மவர்களே நம்மை மதிப்பதில்லை.

உண்மையில் பொது இடங்களில் வெள்ளையர்கள் நம்முடன் சீண்டமாட்டார்கள். காரணம் பொலிஸ் வந்தால் நம்மவர்களோ பிளேட்டையே மாத்தி இவன் என்னை கறுப்பு என்று சொன்னவன் என்று இனவெறியினை வாதத்தினை கொண்டுவந்து வெள்ளையர்களை மாட்டிவிடுவார்கள்...
==========

சிவா அண்ணா... அந்த செய்தி கேட்டவுடன் எனக்கு கண்கலங்கிவிட்டது. ஆனால் செய்தியில் பெற்றாரை காட்டுகிறார்கள். எந்தவித துக்கமும் இன்றி காட்சியளித்தார்கள். தவிர அங்கு நின்ற ஒருவர் தான் கொலைக்கு பின்னணி கூட... வீட்டுக்குள்ளே ஏதோ ஒரு மர்மம் உண்டு. பார்க்கலாம். என்ன செய்தி வெளிவர உள்ளதென்று...

அன்புரசிகன்
08-03-2010, 08:14 PM
குருஷான் சிங்கை அவர்களுடன் இருந்தவர் ஒருவரே கடத்தியிருக்கிறார் என்பது தெரிந்து. அவர் கடத்தப்பட்டு சுமார் 3 மணிநேரம் காரின் பின்பக்க பூட் இல் வைத்துக்கொண்டு சுற்றித்திரிந்துள்ளார்கள்... பின்னர் அவன் இறந்துவிட்டானா என்று கூட பார்க்காது மெல்பேர்ன் விமானநிலையத்திற்கு அருகாமையிலுள்ள ஓரிடத்தில் வீசிவிட்டு சென்றுள்ளார்கள்...

பொலீஸ் கூறுவது "பாலகனுக்கு தகுந்த முதலுதவி கிட்டியிருந்தால் காப்பாற்றப்பட்டிருக்கலாம்" என்று. காரணம் அவர்கள் வீசியபோது அவன் மயக்கத்திலேயே இருந்துள்ளான்...
===========
நரகம் என்ற ஒன்று இருப்பதானால் இறைவன் என்ற ஒருவன் இருப்பதானால் நிச்சயம் நரகம் தான் அந்த காரில் இருந்த அனைவருக்கும்...

தொடர்புபட்ட செய்தி ninemsn இலிருந்து


Dead Indian toddler Gurshan Singh Channa could have been saved if he had received basic first aid, police believe.
Police allege Gursewak Dhillon, who lived with Gurshan's parents and others, placed the boy unconscious into the boot of his car and drove around for at least three hours before dumping him at Oaklands Junction without checking to see if he was dead or alive.
Police said that it was probable that Gurshan would have survived if he had not been trapped in the car boot for hours, The Age reports.
Dhillon, 23, faced an out-of-sessions court hearing before a bail justice on Sunday evening charged with manslaughter by criminal negligence.
He was remanded in custody to appear in the Melbourne Magistrates' Court today.
The toddler's body was found at Oaklands Junction, near Melbourne Airport, about six hours after he disappeared from his Lalor home, about 20km away.
An autopsy has not revealed the cause of death, and police have given no information on how Gurshan came to be unconscious.
The court case comes after Gurshan's mother, Harpreet Kaur Channa, wrote of her anguish in a letter to the Herald Sun newspaper.
"Our son was a beautiful boy and he was very loved and he is still in the front of our eyes," the letter said.
"Up to this point our grief has been so bad, so deep, so beyond explanation.
"We want to thank the Australian people for their support and the Victoria Police for (making an arrest) so fast."


http://news.ninemsn.com.au/national/1024930/gurshan-might-be-alive-if-given-first-aid

govindh
08-03-2010, 08:55 PM
அரக்கர்களின் கொட்டம் அடங்கட்டும்.. ஆஸ்திரேலியாவில் அமைதி நிலவட்டும்..!
இனிய உலகம் அமையட்டும்..!