PDA

View Full Version : ஆஸ்திரேலியாவில் வானிலிருந்து மீன் மழை!



ஜனகன்
04-03-2010, 05:24 PM
http://www.tamilmantram.com/vb/photogal/images/7388/large/1_Fish-Rain_j300.jpg

ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் லஜாமானு நகரம் உள்ளது. இது அங்குள்ள ஆற்றில் இருந்து 326 மைல் தொலைவில் உள்ளது. இங்கு 2 நாட்களாகக் கடுமையான மழை பெய்தது. அப்போது வானத்தில் இருந்து மழைநீருடன் சேர்ந்து நூற்றுக்கணக்கான மீன்களும் விழுந்துள்ளன.

அந்த மீன்கள் வெள்ளை நிறத்தில் இருந்தன. அவை இன்னும் உயிருடன் இருக்கின்றன. மீன்மழை பெய்ததை பார்த்த மக்கள் மிகவும் ஆச்சரியமடைந்தனர்.

கடந்த 30 ஆண்டுகளில் இங்கு இதுவரை 3 தடவை மீன்மழை பெய்துள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 1974 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் இதுபோன்று மழை பெய்ததாகக் கூறுகின்றனர்.

அக்னி
04-03-2010, 05:28 PM
இனிக் குடையும் வலையாகுமோ...

பகிர்வுக்கு நன்றி ஜனகன்...

பா.ராஜேஷ்
04-03-2010, 06:34 PM
தகவலுக்கு நன்றி ஜனகன். எப்படி சாத்தியம் என்று தாமரை அண்ணாதான் கூற வேண்டும்.



இனிக் குடையும் வலையாகுமோ...


உங்களது பின்னூட்டத்தை மிக்க ரசித்தேன் அக்னி. பாராட்டுக்கள் !!

aren
05-03-2010, 01:16 AM
இதே மாதிரி கேரளாவில் ஒரு இடத்தில் நடந்ததாக போன வருடம் விஜய் டிவியில் சொன்னார்கள்.

ஓவியன்
05-03-2010, 03:25 AM
மீன் மழை பற்றி மேலதிக தகவல்களுக்கு இந்த சொடுக்கிகள் உதவுமென நம்புகிறேன்...

http://news.bbc.co.uk/2/hi/uk_news/magazine/3582802.stm

http://www.bbc.co.uk/shropshire/features/halloween/raining_fish.shtml

http://paranormal.about.com/library/weekly/aa082602a.htm

இன்பா
05-03-2010, 05:59 AM
இதேப் போல தங்கமெல்லாம் கொட்டதா?

aren
05-03-2010, 06:11 AM
இதேப் போல தங்கமெல்லாம் கொட்டதா?

தங்கத்தைவிட தண்ணீர் முக்கியமானது. தங்கம் இல்லையெல்லாம் நாம வாழமுடியும், தண்ணீர் இல்லையென்றால் முடியுமா?

அன்புரசிகன்
05-03-2010, 06:49 AM
யாழ்ப்பாணம் நந்தாவில் பகுதியில் ஒருமுறை தவளைக்குஞ்சுகள் இவ்வாறு மழையாக விழுந்தது. இதெல்லாம் நீர் ஆவியாகும் போது சிறுபராயங்கள் அல்லது முட்டைகளும் சேர்ந்து சென்றுவிடுமாம். அதுவே மீண்டும் இவ்வாறு வீழ்வது என்று 9ம் ஆண்டு விஞ்ஞான பாடத்தில் கற்றிருக்கிறேன். விஞ்ஞான விளக்கம் கூட எழுதியிருக்கிறேன்... :D

ஓவியன்
05-03-2010, 06:51 AM
இதேப் போல தங்கமெல்லாம் கொட்டதா?

உங்களைப் போல யாராவது ஒருவர் கொட்டினால்,
நாம பொறுக்க தயார்..!! :D:D:D:D

அன்புரசிகன்
05-03-2010, 06:58 AM
உங்களைப் போல யாராவது ஒருவர் கொட்டினால்,
நாம பொறுக்க தயார்..!! :D:D:D:D
நான் ............................

இன்பாவினால் தங்கமழை. பொறுக்கும் ஆர்வத்தில் ஓவியன் என்ற தலைப்பில் செய்திச்சோலையில் திரி ஆரம்பிப்பேன்... :lachen001:

சிவா.ஜி
05-03-2010, 07:48 AM
அந்த மீன்கள் வெள்ளை நிறத்தில் இருந்தன. "அவை இன்னும் உயிருடன் இருக்கின்றன."



நம்ம ஊர்ப்பக்கம் விழுந்திருந்தா....இன்னும் இருக்குமா....???

ஜனகன்
05-03-2010, 01:44 PM
நம்ம ஊர்ப்பக்கம் விழுந்திருந்தா....இன்னும் இருக்குமா....???

இப்போ சட்டியில் குழம்பாக இருக்கும்.

ஜனகன்
05-03-2010, 01:51 PM
என்னை ஆச்சரிய பட வைத்த செய்தி.
பின் ஊட்டம் கொடுத்த அனைவருக்கும் நன்றி.