PDA

View Full Version : மனங்கவர் பதிவாளார் தெரிவு குறித்து

குணமதி
02-03-2010, 06:40 PM
மேலே உள்ள தலைப்பு நான் எழுதியதன்று. நான் எழுதிய தலைப்பு கீழே!

ஒரு தன்னிலை விளக்கம்!

என் இசைவின்றியே என் பெயர் இதில் சேர்க்கப்பட்டிருந்தது.

நான் எதிர்க்கவுமில்லை; ஏற்கவுமில்லை.

ஏனெனில் இதைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.

நான் எந்தக்குழுவிலும் சேர்ந்திருக்கவில்லை; சேர விரும்ப வில்லை.

அனைவரின் நண்பனாக இருக்கவே விருப்பம்.

எந்தத் தேர்ந்தெடுப்பிலும் என்னை நானே தேர்ந்து கொண்டதில்லை.

நான் எந்த இடத்தில் இருக்கிறேன் எனபதை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறேன்.

(தேர்ந்தெடுப்பு நிகழ்வின் வழிதான் எந்த இடம் என்று தெரியவேண்டும் என்பதில்லை)

எனவே, இதில் எனக்கு வருத்தமுமில்லை; மகிழ்ச்சியுமில்லை.

இன்னொன்று -

7689 உறுப்பினர்களில் 21 பேர் மட்டுமே கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கும் முறை... சரியானதா என்பது அனைவரும் கவனிக்க வேண்டிய செய்தி.

என்னிடம் பேசிய நண்பர்களுக்காக மட்டுன்றி அனைவர்க்கும் செய்தி தெரிவிக்கவே இதை எழுதினேன்.

நன்றி.

muthuvel
03-03-2010, 02:37 AM
என் இசைவின்றியே என் பெயர் இதில் சேர்க்கப்பட்டிருந்தது.

நான் எதிர்க்கவுமில்லை; ஏற்கவுமில்லை.

ஏனெனில் இதைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.

நான் எந்தக்குழுவிலும் சேர்ந்திருக்கவில்லை; சேர விரும்ப வில்லை.

அனைவரின் நண்பனாக இருக்கவே விருப்பம்.

எந்தத் தேர்ந்தெடுப்பிலும் என்னை நானே தேர்ந்து கொண்டதில்லை.

நான் எந்த இடத்தில் இருக்கிறேன் எனபதை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறேன்.

எனவே, இதில் எனக்கு வருத்தமுமில்லை; மகிழ்ச்சியுமில்லை.

இன்னொன்று -

7689 உறுப்பினர்களில் 21 பேர் மட்டுமே கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கும் முறை... சரியானதா என்பது அனைவரும் கவனிக்க வேண்டிய செய்தி.

என்னிடம் பேசிய நண்பர்களுக்காக மட்டுன்றி அனைவர்க்கும் செய்தி தெரிவிக்கவே இதை எழுதினேன்.

நன்றி.
சரியாக சொன்னிர்கள்

muthuvel
03-03-2010, 02:38 AM
7689 உறுப்பினர்களில் 21 பேர் மட்டுமே கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கும் முறை... சரியானதா என்பது அனைவரும் கவனிக்க வேண்டிய செய்தி.
யோசிக்க வேண்டிய விஷயம்

muthuvel
03-03-2010, 02:49 AM
குணமதி கூறியது சரியே ,
இந்த இணையதளத்தை பற்றிய விளம்பரம் தேவைபடுகிறது என்றே நினைக்கிறன் , பார்த்த பெயர்களே திரும்ப திரும்ப இடம் பெறுகிறது ,
icash பணம் முறை , மன்றத்தில் புது முகங்களை அறிமுகபடுத்தும் மன்ற நண்பர்களுக்கும் கொடுக்கலாம் என்பது என் கருத்து , இதன் மூலம் தான் மன்ற உறுபினர்களை அதிக படுத்த முடியும் ,

அன்புரசிகன்
03-03-2010, 05:45 AM
அன்பின் குணமதி மற்றும் முத்துவேல் அவர்களுக்கு...
வழமையாக நம் மன்றில் நிகழ்பவையே... இருந்தாலும் நான் இந்த தைமாத (2010) தெரிவு திரியினை ஆரம்பித்ததால் உங்களுக்கு கூற கடமைப்பட்டுள்ளேன்....

யாரையும் வலுக்கட்டாயமாக தமிழ்மன்றத்திற்கு இழுக்கப்படவில்லை. இனிமேல் இழுக்கப்படப்போவதும் இல்லை. நம் மன்றம் தனித்தன்மையை பேணியே வருகிறது.

யாருடைய பெயரும் எழுந்தமானமாக தெரிவில் இணைக்கப்படவில்லை. நண்பர்களின் பரிந்துரைப்பின் பெயரில் இணைக்கப்பட்டவையே அவை. உங்களுக்கு அதில் இணக்கம் இல்லாதிருந்திருப்பின் இதை நீங்களே அந்த திரியில் தெரிவித்திருக்க வேண்டும். அப்படி இணைந்திருந்தால் நிச்சயம் உங்களது பெயர் அங்கு இணைக்கப்பட்டிருக்காது... அதில் எந்த ஐயமும் வேண்டாம். (உங்களது பெயரை அக்னி அவர்கள் தெரிவுசெய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது)

நான் எந்த இடத்தில் இருக்கிறேன் எனபதை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறேன்.
இந்த வரியினை சற்றே விளக்கமாக கூறினால் இதற்கும் தகுந்த பதில் நம் மன்ற உறவுகளாலேயே தரப்படும்.

எனவே, இதில் எனக்கு வருத்தமுமில்லை; மகிழ்ச்சியுமில்லை.

இன்னொன்று -

7689 உறுப்பினர்களில் 21 பேர் மட்டுமே கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கும் முறை... சரியானதா என்பது அனைவரும் கவனிக்க வேண்டிய செய்தி.

என்னிடம் பேசிய நண்பர்களுக்காக மட்டுன்றி அனைவர்க்கும் செய்தி தெரிவிக்கவே இதை எழுதினேன்.

நன்றி.
இதற்கு மன்றம் எந்தவகையிலும் பொறுப்பில் இருக்காது. அனைவரும் புரிந்துகொள்ள வேண்டியது. மன்றத்தின் வளர்ச்சிக்கு பொறுப்பாளர்களோ நிர்வாகிகளோ மட்டும் காரணிகளாக இருந்திருக்க முடியாது. பதிவாளர்களாகிய மன்ற உறுப்பினர்களின் பங்களிப்புகளும் காரணம். நிர்வாகத்தினர் ஊன்றுகோலாக இருந்திருக்கலாம்.

பலர் பல காரணங்களுக்காக மன்றம் வருகிறார்கள். உறுப்பினராக பதிந்த பலர் பதிவே இட்டதில்லை. மின்னூலுக்காக மாத்திரம் வருபவர்கள் பலர். அப்படி வந்தவர்கள் சிலர் நம் மன்றின் தனித்தன்மையால் ஈர்க்கப்பட்டு சிறந்த பதிவாளர்களாக இடம்பெற்றிருக்கிறார்கள். அப்படி பார்த்ததில் நானறிந்த சுனைத்ஹஸனீ என்பவரை சொல்லலாம். மின்னூலுக்காக வந்து நம் மன்றின் சிறந்த கவிதை படைப்பாளராக திகழ்ந்தவர். பின்னர் வேலையின் நிமிர்த்தம் அவரது வருகை குறைந்தது. இப்படி பல காரணங்களுக்காக மன்ற உறுப்பினரின் வருகை குறைந்து கூடுகிறது.

இந்த போட்டி சரியானதா பிழையானதா என்று பல விவாதங்களுக்கு பிறகே இங்கு அமுல்படுத்தப்பட்டது. இது ஒன்றும் போட்டியல்ல. மன்ற உறவுகளின் பங்களிப்பினை மேம்படுத்தவே அன்றி வேறேதும் உள்நோக்கம் அற்றது. அதை திரிபுபடுத்தி பார்ப்பது அவரவர் எண்ணம்.

சிவா.ஜி
03-03-2010, 05:59 AM
பார்த்த பெயர்களே திரும்ப திரும்ப இடம் பெறுகிறது ,

என்ன சொல்ல வருகிறீர்கள்? தொடர்ந்து மன்றத்தில் தங்கள் பங்களிப்பைக் கொடுப்பவர்களின் பெயர்கள் திரும்பத் திரும்ப எப்படி வராமல் இருக்கும்? மன்றம், அன்பு சொன்னதைப்போல விளம்பரம் தேவைப்படாத ஒரு தளம். விருப்பப்பட்டு இணைபவர்களுக்கு இது ஒரு அற்புதமான இடம். விருப்பமில்லாதவர்கள்...இணைந்தாலும், நீடிப்பதில்லை. அவர்களைப் பற்றி யாருக்கும் கவலையில்லை. படைக்கும் திறன், படிக்கும் ஆர்வம், ஊக்குவிக்கும் பெரிய மனது, ரசிக்கும் தன்மையுள்ள எல்லோருமே இங்கே வரவேற்கப்படுகிறார்கள்.

தங்கள் நேரத்தை, மன்றத்துக்காக ஒதுக்கி, நடத்திச் செல்லும் பலரின் பெயர்கள் நிச்சயம் திரும்பத் திரும்ப வந்துகொண்டேதான் இருக்கும்

aren
03-03-2010, 06:05 AM
இந்தப் போட்டியில் உங்களது பெயர் பரிந்துரைத்திருந்து உங்களுக்குப் போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் இல்லையென்றால் நீங்கள் இங்கே பதிவு செய்து உங்கள் பெயரை விடுவித்துக்கொள்ளலாம்.

அதே மாதிரி நாங்கள் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என்றே விரும்புகிறோம், ஆனால் பலர் ஓட்டளிப்பதில்லை. அதை எப்படி மேம்படுத்தலாம் என்று சொல்லுங்கள், கவனிப்போம்.

மன்றத்தில் சிறப்பாக பங்களிப்பவர்களை கெளரவப்படுத்தவே இந்த போட்டியே தவிற, இதில் வேறு எந்த உள்ளர்த்தமுமில்லை.

வெற்றி பெற்ற கீதம் அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

எனக்குத் தெரிந்தவரை போட்டியில் பங்குகொண்ட அனைவருமே சிற்ந்த படைப்பாளிகள், இல்லையென்றால் அவர்கள் பெயரை யாராவது பரிந்துரைசெய்வார்களா, ஆகவே என்னப் பொறுத்தவரை அவர்களும் வெற்றிபெற்றவர்களேயாவார்கள்.

அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

அன்புரசிகன்
03-03-2010, 06:07 AM
குணமதி கூறியது சரியே ,
இந்த இணையதளத்தை பற்றிய விளம்பரம் தேவைபடுகிறது என்றே நினைக்கிறன் ,,
எக்காலத்திலும் எதற்கும் மன்றம் விளம்பரம் வேண்டிநின்றதல்ல... அப்படிப்பட்ட நிலையில் மன்றமும் இல்லை. அது தேவைப்படப்போவதுமில்லை.

நீங்கள் ஏதும் பணம் கொடுத்து நம் மன்றத்திற்கு இணைந்தீர்களா???

muthuvel
03-03-2010, 07:42 AM
எக்காலத்திலும் எதற்கும் மன்றம் விளம்பரம் வேண்டிநின்றதல்ல... அப்படிப்பட்ட நிலையில் மன்றமும் இல்லை. அது தேவைப்படப்போவதுமில்லை.

நீங்கள் ஏதும் பணம் கொடுத்து நம் மன்றத்திற்கு இணைந்தீர்களா???

இது யாரையும் வேண்டி நிற்க சொல்லவில்லை ,
எல்லோருக்கும் தெரிந்தால் பயனுலதாக இருக்குமே ,நான் பணம் கொடுத்து சேரவில்லை,
தொலைகாட்சிகளில் எத்தனையோ விளம்பரம் வருகிறது , அவை அனைத்தும் என்ன ,எல்லோரையும் வாங்குங்கள் என்று வேண்டி கொண்டா இருக்கிறது , மற்றவர்கள் ஆலோசனையையும் கொஞ்சம் சிந்தியுங்கள் ,
நிங்கள் சொல்வதே சரி என்று வாதிடாதிர்கள்

அன்புரசிகன்
03-03-2010, 07:59 AM

தங்கள் தயாரிப்புக்களை வாங்கவேண்டாம் என்று சொல்லி ஏதாவது விளம்பரம் செய்கிறார்களா??? விளம்பரம் என்ற பதம் வந்துவிட்டாலே அதன் நோக்கம் என்னவாக இருக்கும்???

நான் சொன்னது சரி என்று வாதிடுவதாக சொல்லி நீங்கள் என்ன செய்கிறீர்கள். உபதேசம் ஊருக்கு மட்டும் தானா...?

அதுசரி. இங்கே உங்களது ஆக்கபூர்வமான ஆலோசனை தான் எங்கு உள்ளது... சரி. ஆக்கபூர்வம் வேண்டாம். ஆலோசனை தான் என்ன???

நீங்கள் கூறிய புள்ளிவிபரம் தான் ஆலோசனையா??? மன்றத்தின் மேல் மன்றத்தின் நடவெடிக்கை ஒன்றினை குற்றம் சாட்டியதாகவே தோன்றுகிறது.

ஆலோசனை சொல்ல ஆசைப்படுகிறீர்கள். இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்ற ஆலோசனையை நீங்களே கூறிவிடுங்கள். இந்த 21 பேரை எப்படி ஏழாயிரமாக மாற்றுவதென்று சொல்லுங்கள். அமுல்ப்படுத்தலாம்...

aren
03-03-2010, 08:28 AM
ஆலோசனை சொல்ல ஆசைப்படுகிறீர்கள். இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்ற ஆலோசனையை நீங்களே கூறிவிடுங்கள். இந்த 21 பேரை எப்படி ஏழாயிரமாக மாற்றுவதென்று சொல்லுங்கள். அமுல்ப்படுத்தலாம்...

இதையே தான் நானும் கேட்கிறேன். இங்கே போட்டி நடத்துபவர்கள் என்ன வேலை இல்லாமல் சும்மாவா உட்கார்ந்துகொண்டிருக்கிறார்கள். கிடைக்கும் சிறிது ஓய்வு நேரத்திலும் மன்றம் வந்து கஷ்டப்பட்டு படைக்கும் படைப்பாளிகளை ஊக்குவிக்கலாம் என்று நினைத்து ஒரு போட்டியை நடத்துகிறார்கள். உறுப்பினர்கள் அனைவரும் ஓட்டு போடவேண்டும் என்பதே எங்கள் விருப்பம், ஆனால் அதிகமானோர் வெறும் படைப்புகளை மட்டும் படித்துவிட்டு அதற்கு விமர்சனம் கூட எழுதுவதில்லை, அதிலே ஓட்டு போடுவது என்பது அவர்களுக்கு முடியாத காரியம்.

இனி வரும் போட்டிகளிலாவது அதிகமானோர் ஓட்டு போடட்டும்.

muthuvel
03-03-2010, 08:32 AM
நேர்மறை எண்ணமே கிடையாதா உங்களுக்கு ?
எது எடுத்தாலும் ஏறுக்குமாறாக பேசுவது ,
கொஞ்சம் பொறுமை கடைபிடியுங்கள் ,
என் நேரத்தை வாதிட்டு வீணாக விரும்பவில்லை ,

muthuvel
03-03-2010, 08:33 AM
தங்கள் தயாரிப்புக்களை வாங்கவேண்டாம் என்று சொல்லி ஏதாவது விளம்பரம் செய்கிறார்களா??? விளம்பரம் என்ற பதம் வந்துவிட்டாலே அதன் நோக்கம் என்னவாக இருக்கும்???

நான் சொன்னது சரி என்று வாதிடுவதாக சொல்லி நீங்கள் என்ன செய்கிறீர்கள். உபதேசம் ஊருக்கு மட்டும் தானா...?

அதுசரி. இங்கே உங்களது ஆக்கபூர்வமான ஆலோசனை தான் எங்கு உள்ளது... சரி. ஆக்கபூர்வம் வேண்டாம். ஆலோசனை தான் என்ன???

நீங்கள் கூறிய புள்ளிவிபரம் தான் ஆலோசனையா??? மன்றத்தின் மேல் மன்றத்தின் நடவெடிக்கை ஒன்றினை குற்றம் சாட்டியதாகவே தோன்றுகிறது.

ஆலோசனை சொல்ல ஆசைப்படுகிறீர்கள். இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்ற ஆலோசனையை நீங்களே கூறிவிடுங்கள். இந்த 21 பேரை எப்படி ஏழாயிரமாக மாற்றுவதென்று சொல்லுங்கள். அமுல்ப்படுத்தலாம்...

நேர்மறை எண்ணமே கிடையாதா உங்களுக்கு ?
எது எடுத்தாலும் ஏறுக்குமாறாக பேசுவது ,
கொஞ்சம் பொறுமை கடைபிடியுங்கள் ,
என் நேரத்தை வாதிட்டு வீணாக விரும்பவில்லை ,

அன்புரசிகன்
03-03-2010, 08:37 AM
நேர்மறை எண்ணமே கிடையாதா உங்களுக்கு ?
எது எடுத்தாலும் ஏறுக்குமாறாக பேசுவது ,
கொஞ்சம் பொறுமை கடைபிடியுங்கள் ,
,
ஒரே பதில் தான் மீண்டும். உபதேசங்களை முதலில் நீங்கள் அமுல்படுத்திவிட்டு மற்றவருக்கு திணியுங்கள்.

ஏறுக்கு மாறு பேசப்படுவது யாரால்??? மாறு பேசுவது யார்??? நானா நீங்களா??? முந்தய பதிவுகளை படியுங்கள்??? குற்றம் சுமத்தியது யார்???

என் நேரத்தை வாதிட்டு வீணாக விரும்பவில்லை ,
ஆமா.. எனக்குமட்டும் தமிழ்மன்றம் மாசாமாசம் காசு தருகிறார்கள். உங்களுக்கு பதில் போட....

muthuvel
03-03-2010, 08:42 AM
ஒரே பதில் தான் மீண்டும். உபதேசங்களை முதலில் நீங்கள் அமுல்படுத்திவிட்டு மற்றவருக்கு திணியுங்கள்.

ஏறுக்கு மாறு பேசப்படுவது யாரால்??? மாறு பேசுவது யார்??? நானா நீங்களா??? முந்தய பதிவுகளை படியுங்கள்??? குற்றம் சுமத்தியது யார்???

ஆமா.. எனக்குமட்டும் தமிழ்மன்றம் மாசாமாசம் காசு தருகிறார்கள். உங்களுக்கு பதில் போட....

உபதேசங்களை முதலில் நீங்கள் அமுல்படுத்திவிட்டு மற்றவருக்கு திணியுங்கள். அதைதான் நானும் சொல்லுறேன் உங்களுக்கு,
முதல்ல உங்க உண்மையான பெயரை போடுங்க அப்புறம் அறிவுரை வழங்கலாம் பிறருக்கு ,என்னால் என் பெயரை தைரியமா போட்டேன் அது முடியுமா உங்களுக்கு ,
சம்பந்தமே இல்லாம திடீருன்னு யாருக்காவது மின் அஞ்சல் அனுப்புறது , மின் அஞ்சல் அனுப்புறதுக்கு முன்ன நிங்கா யாருன்னு சொல்லணும் ,
நாங்களா ஓடிபோய்யு தெரிஞ்சுகனுமா ? மன்றத்தின் பொருபாலருனு ?

அன்புரசிகன்
03-03-2010, 08:51 AM
உபதேசங்களை முதலில் நீங்கள் அமுல்படுத்திவிட்டு மற்றவருக்கு திணியுங்அதைதான் நானும் சொல்லுறேன் உங்களுக்கு,
முதல்ல உங்க உண்மையான பெற போடுங்க அப்புறம் அறிவுரை வழங்கலாம் பிறருக்கு ,
கள்.
உபதேசம் வழங்கியவர் நீங்களே... நான் அல்ல... அதனை அமுல்ப்படுத்த வேண்டிய கட்டாயம் எனக்கு அல்ல...

என்ன பெயர் வைத்திருக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு.. அதை தட்டிக்கேட்க்க உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை...

ஆலோசனை தருவதாக சொல்லிவிட்டு ஏன் என்மீது சேறு வீசுகிறீர்கள்??? இங்கு பெயரிடுவது ஒரு பிரச்சனையாக யாராவது கூறினார்களா???

ஏழாயிரம் பேரை எப்படி வாக்கு செலுத்தவைப்பது என்பதற்கு மட்டும் பதில் தரவும். தகுந்த பதில் வந்தால் நானே மீதிப்பதிவுகளுக்கு மன்னிப்பு கோருவேன்...

அன்புரசிகன்
03-03-2010, 08:53 AM
முத்துவேல் அவர்களுக்கு...

தமிழ்மன்ற விதிமுறைகளை மீண்டும் ஒருமுறை சரியாக படிக்கவும்...

சிவா.ஜி
03-03-2010, 09:05 AM
முத்துவேல்....என்ன பெயர் வைத்துக்கொள்வது என்பது அவரவர் விருப்பம். உண்மையானப் பேரைப் போடச் சொல்லிக் கேட்க யாருக்கும் உரிமையில்லை. உங்கள் பெயரே உண்மையானதுதானா என்பதற்கு நாங்கள் என்ன உங்கள் சான்றிதழையாக் கேட்கிறோம்?

ஆக்கப்பூர்வமான ஆலோசனை அளிக்க முடிந்தால் மிக நல்லது. அதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். அதைவிட்டுவிட்டு பொறுப்பாளரை இப்படி பேசுவது சரியில்லை. பதட்டப்படாமல், அமைதியாய் யோசியுங்கள். இங்கு அனைவருமே அவரவர் விருப்பத்துக்கிணங்கத்தான் இணைந்திருக்கிறோம். யாரும் யாரையும், எந்தவிதத்திலும் கட்டாயப்படுத்தமுடியாது. ஆனால் அதே சமயம், மன்ற விதிமுறைகளை மீறும்போது நடவடிக்கை எடுக்க நிர்வாகத்தினருக்கு அதிகாரமிருக்கிறது.

muthuvel
03-03-2010, 10:15 AM
முத்துவேல் அவர்களுக்கு...

தமிழ்மன்ற விதிமுறைகளை மீண்டும் ஒருமுறை சரியாக படிக்கவும்...

யார் மனதையும் காயபடுதிருந்தால் மன்னிக்கவும் திரு அன்பு ரசிகன் அவர்களே,

muthuvel
03-03-2010, 10:17 AM
முத்துவேல்....என்ன பெயர் வைத்துக்கொள்வது என்பது அவரவர் விருப்பம். உண்மையானப் பேரைப் போடச் சொல்லிக் கேட்க யாருக்கும் உரிமையில்லை. உங்கள் பெயரே உண்மையானதுதானா என்பதற்கு நாங்கள் என்ன உங்கள் சான்றிதழையாக் கேட்கிறோம்?

ஆக்கப்பூர்வமான ஆலோசனை அளிக்க முடிந்தால் மிக நல்லது. அதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். அதைவிட்டுவிட்டு பொறுப்பாளரை இப்படி பேசுவது சரியில்லை. பதட்டப்படாமல், அமைதியாய் யோசியுங்கள். இங்கு அனைவருமே அவரவர் விருப்பத்துக்கிணங்கத்தான் இணைந்திருக்கிறோம். யாரும் யாரையும், எந்தவிதத்திலும் கட்டாயப்படுத்தமுடியாது. ஆனால் அதே சமயம், மன்ற விதிமுறைகளை மீறும்போது நடவடிக்கை எடுக்க நிர்வாகத்தினருக்கு அதிகாரமிருக்கிறது.
உங்கள் வார்த்தைக்கு நான் கட்டுபடுகிறேன் ,
இது போன்ற, நல்ல உறவுகள் கிடைப்பது அரிது ,
பொய்யும் புரட்டும் நிரம்பிய உலகம் ,அதில் இவாறான மனிதர்கள் கிடைப்பது அரிது

சிவா.ஜி
03-03-2010, 10:35 AM
மிக மிக சந்தோஷம். புரிதலுக்கு மிக்க நன்றி முத்துவேல். என்றும் மன்றத்துடன் இணைந்திருங்கள்.

ஆதி
03-03-2010, 10:41 AM
உங்கள் வார்த்தைக்கு நான் கட்டுபடுகிறேன் ,
இது போன்ற, நல்ல உறவுகள் கிடைப்பது அரிது ,
பொய்யும் புரட்டும் நிரம்பிய உலகம் ,அதில் இவாறான மனிதர்கள் கிடைப்பது அரிது

உங்க புரிதலுக்கு நன்றி முத்துவேல்..

இனியாவது ஒரு பதிவை இருமுறை பதிக்காதீங்க..

இந்த திரியிலும் நீங்க அதை செய்திருக்கீங்க.. இதை சொல்ல அவர் தனிமடல் போட்டா நீ யாரு னு கேப்பிங்களா ?

நீங்க யாரு னு தெரிஞ்சுகிட்டு தான் இந்த மன்றம் உள் நுழையும் அனுமதி உங்களுக்கு தந்ததா?

சிவா அண்ணா பதில் தந்திருப்பதால் மற்ற கேள்விக்கு நான் பதில் போடாமல் போகிறேன்..

அமரன்
03-03-2010, 10:23 PM
உங்கள் வார்த்தைக்கு நான் கட்டுபடுகிறேன் ,
இது போன்ற, நல்ல உறவுகள் கிடைப்பது அரிது ,
பொய்யும் புரட்டும் நிரம்பிய உலகம் ,அதில் இவாறான மனிதர்கள் கிடைப்பது அரிது

முத்துவேல் அவர்களே!

மன்றத்தில் எச்சரிக்கைகள் தடைகள் போன்றவற்றின் முதலாய நோக்கம் திருந்தல் என்பதே..

அதனடிப்படையில் சாது`ர்யமானா மேற்காட்டலுடன் போர்`த்திக்கொண்ட திருத்தப் பதிவு 7) நடத்துனர்களுடன் வீணான விவாதங்களை தவிருங்கள் என்ற விதி மீறலிருந்து உங்களைக் காப்பாற்றி விட்டது........

அக்னி
04-03-2010, 07:21 AM
குணமதி அவர்களுக்கு...

உங்களை மனங்கவர் பதிவாளர் தேர்வுக்குப் பரிந்துரைத்தவன் நான் என்றவகையில்
சில விடயங்களைச் சொல்லவேண்டிய கடப்பாட்டிலிருக்கின்றேன்.

முதலில்,
உங்களைப் போட்டிக்குப் பரிந்துரைத்துவிட்டு
வாக்களிக்காததற்கு மன்னிப்பைக் கோரி நிற்கின்றேன்.
உங்களுக்கு மட்டுமல்ல, யாருக்குமே நான் வாக்களிக்கவில்லை.
அது வாக்களிப்பை அவதானிக்காத எனது கவனயீனமே.

பதிப்பாளர்களில், முந்தைய மாதத்தில் பதிவுகளால் நம்மைக் கவர்ந்தவரைப் பரிந்துரைத்து,
அவருக்கு வாக்களித்து, அவரும் நாமும் சேர்ந்து மகிழ்வதே
‘மனங்கவர் பதிவாளர்’இன் நடைமுறையாகும்.
மற்றும்படி, இந்தப் போட்டியினால் யாருடைய தகுதிகளும் தீர்மானிக்கப்படுவதில்லை.
மகிழ்ந்து கொள்வது மட்டுமே இப்போட்டியின் ஒரே குறிக்கோள்.
இது தங்களுக்கு வேதனையைத் தந்தது, வேதனைக்குரியதானாலும்,
அது இந்தப் போட்டியைக் குறித்த தங்களின் தெளிவின்மையே என்பதுதான் உண்மை.

தங்களது பதிவுகளும் படைப்புக்களும் என்னைக் கவர்ந்திருந்ததால்,
நான் உங்களைப் பரிந்துரைத்திருந்தேன்.
இத்தனை பேருக்குள் ஒருவர் மனதுக்குள் படைப்புக்களாற் பதிவதென்பது இலகுவான விடயமில்லைதானே...

இப்போட்டியினால்,
தங்கள் நிலை தாழ்ந்துபோகவில்லை என்பதை எனது இந்தப் பதிவு உங்களுக்கு தெரியப்படுத்தும் என நம்புகின்றேன்.

*****
இது ஒரு மூன்றாந்தர மன்றமல்ல. வியாபார, விளம்பர நோக்கங்களைக் கொண்டதல்ல.
7000 பதிவர் இருந்தாலும்,
தினமும் மன்றம் வருபவர்கள் 75-150 இற்கு இடைப்பட்டவர்களே.
அவர்களிற் பதிவிடுபவர்கள் சராசரியாக 50 பதிவர்களே.
இதுதான் புள்ளிவிபரம்.

பின்னர் ஏன் 7000 பதிவர் பெயர்கள்... என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாது.
இவர்களில், சமகாலச் சூழல் காரணமாக மன்றம் வராதோரும்,
மற்றைய பொழுதுபோக்கம்சங்கள் இல்லாததால் பதிந்து எட்டிப்பார்த்ததோடு நின்றுவிட்டவர்களும்,
விஷமத்தனங்களாற் பிரிக்கப்பட்டவர்களும்,
புரிதலின்றிப் பிரிந்தவர்களும் எனப்,
பலதரப்பட்டவரும் அடங்குவர்.

வியாபார நோக்கற்றதால்,
இவர்களை வருந்தி அழைக்க வேண்டிய அவசியம் மன்றத்திற்கில்லை.
அதேவேளை, அவர்கள் மன்றம் வர எண்ணினால், வரவிரும்பும்போது வருவதற்காகவே அவர்கள் மன்றப் பதிவேட்டிலிருந்து நீக்கப்படவில்லை.

தொழில் ரீதியாக, எவருமே மன்றத்தில் இல்லை.
தமிழ் ஒன்றே இணைத்தது. தமிழ் மட்டுமே இணைத்தது.

எம் மன உணர்வுகள்தான் இங்கே படைப்புக்களாகக் குவிந்து கிடக்கின்றன.
காலம், நம் மன்றத்தையும் கருவூலமாக்கலாம்.

என்னைப் பொறுத்தவரையில்,
எனக்கு இப்போதே மன்றம் மட்டும்தான் என் உணர்வுகளின் பதிவிடம். கருவூலம்.

எந்தவித இலக்குமற்றுப் பயணிக்கவில்லை மன்றம்.
‘பகிர்வோம் தெரிவோம் மகிழ்ந்து மகிழ்விப்போம்’
என்பது (என்னைப் பொறுத்தவரையில்) மன்றத் தாரகமந்திரத்தின் சாரம்...

நன்றி!