PDA

View Full Version : தடயமில்லை



kulirthazhal
03-03-2010, 09:28 AM
வழக்கொழிந்து போன
வெட்கத்தை
செருப்பறுந்து போனதற்கு
காட்டினால்...

சிளிர்ப்பேற்றிய அந்த சாரலில்
மன மிதவை
சுழலில் சிக்கி தேடியும்
வேறெதுவும் தடயமில்லை
வெக்கத்திற்கு....

மரபில் ஒட்டி வந்து
மாறாமல் நின்றததோ
குட்டை பாவாடை அணிந்து
வெட்கப்பட்டவளுக்கு......

- குளிர்தழல்.

சிவா.ஜி
03-03-2010, 10:59 AM
பூனை நடை நடக்கும் நாகரீகப் பெண் குட்டைப்பாவடையணிந்ததற்கு வெட்கப்படாமல், செருப்பறுந்துபோனதற்குக் காட்டினாளோ....

வழக்கொழிந்துபோனதென்று நினைத்த வெட்கம், மரபில் ஒட்டி வந்தது....ஆனாலும் காரணம் மாறி வந்தது.

வாழ்த்து குளிர்தழல் அவர்களே. தொடர்ந்து எழுதுங்கள்.

அக்னி
03-03-2010, 11:39 AM
வெட்கப்படுவதே வெட்கமாகிவிட்டது
என்பது கொஞ்சம் உண்மைதான்.

முழுதாய் மூடி
ஜீன்ஸ் போட்டாலும்
கதைப்பதுதான் நம் சமூகம்.

வளரும் சூழல்தான் தீர்மானிக்கின்றது,
உடையில் நாகரீகத்தை...

அதனால்,
குட்டைகளெல்லாம் குட்டைகள் இல்லை
என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும்.