PDA

View Full Version : நித்யானந்தா சுவாமிகள்..பாலியல் கைது -ஹைக்கூmuthuvel
03-03-2010, 04:36 AM
"கதவை திற ,
காற்று ( காவல் துறை)
வரட்டும் ""அன்று ஆன்மிகம் ,
இன்று பெண் மோகம் "உடுத்தியது காவி,
உள்ளத்தில் பாவி ,

கூந்தலை அவிழ்த்தான் ,
அவனுக்கும்,
அவளுக்கும் ...


பெண் ,ஆசையை அடக்கினர் அன்று, ,(விவேகானந்தா)
பெண்ணின் ஆசையை அடக்கினர் இன்று (நித்தியானந்தா)..


அன்றாட நிகழ்வு,
பகல்,
இரவு,
காற்று,
வெயில்,
குளிர்,
`போலிச்சாமியார் கைது ,

தாமரை
03-03-2010, 05:23 AM
இதே நாளில் தெலுகு TV 9 சேனல் கல்கி சாமியாரைப் பற்றிய குற்றச்சாட்டுகளை வெளியிட்டு பரபரபாக்கி உள்ளது.

http://www.xteb.com/news/kalki-bhagavan-fraud-news-videos-kalki-avatar-amma-bhagavan-fraud-news-on-tv9-032010.html

தினமலரிலும் இந்தச் செய்தி இன்று வெளியாகி உள்ளது.

http://www.dinakaran.com/indiadetail.aspx?id=6640

போலிச்சாமியார் தினசரி செய்திதான்.

யாருக்குத் தெரியப் போகிறது என்ற கர்வத்தில் அதிமேதாவித்தனமாக தவறு செய்பவர்கள் என்றாவது ஒரு நாள் மாட்டத்தான் செய்வார்கள்.

சிவா.ஜி
03-03-2010, 05:40 AM
இதில் வருத்தம் என்னவென்றால், எத்தனைதான் வெளிச்சம்போட்டுக்காட்டினாலும், கண்ணை மூடிக்கொண்டு அவர்களின் காலில் விழும் மாக்களை என்னவென்று சொல்வது.

போலிச்சாமியார் கைது தினசரி செய்தி எனச் சொன்ன முத்துவேலின் வரிகள் அருமை.

muthuvel
03-03-2010, 07:34 AM
இவனை கொல்லவேண்டும்

அக்னி
03-03-2010, 04:16 PM
‘அன்றாட நிகழ்வு’ அருமை முத்துவேல்...

கோயிற்கருவறையிலேயே
காமக்களியாட்டம் நிகழும்
கலிகாலத்திலல்லவா
வாழ்கின்றோம்...

இதுவும் அவர்களுக்கு ஒரு இலவசப் பிரச்சாரமாய்த்தான் போகும்
என்பதுதான் வேதனையான உண்மை...

ஜனகன்
03-03-2010, 05:14 PM
காமலீலை அம்பலப்பட்டார் மேலும் ஒரு சாமியார். மக்களே சிந்திப்பீர்!!!

தணிக்கை செய்யப்பட்டது.....அமரன்

இதயம்
03-03-2010, 05:19 PM
யாருக்குத் தெரியப் போகிறது என்ற கர்வத்தில் அதிமேதாவித்தனமாக தவறு செய்பவர்கள் என்றாவது ஒரு நாள் மாட்டத்தான் செய்வார்கள்.

என்னோட மனசாட்சியா மாறி நீங்க சொன்ன கருத்து மாதிரி இருக்கு. ஒரு வாசகமா இருந்தாலும் திருவாசகமா சொல்லி இருக்கீங்க..!!

இது புரியாம ஆழம் தெரியாம காலை விட்டுட்டு பிறகு குத்துதே குடையுதேன்னு புலம்புவாங்க..சம்பந்தப்பட்டவங்களுக்கு புரிஞ்சா சரி...புரியாட்டி..??????????

leomohan
03-03-2010, 05:44 PM
[QUOTE=muthuvel;458009
உடுத்தியது காவி,
உள்ளத்தில் பாவி ,
/QUOTE]

நச்சென்று எழுதியிருக்கிறீர்கள். இறைவனை நம்புபவர்கள் இறைவனுக்கும் தமக்கும் இடையில் இடைதரகர் தேவையில்லை என்று நம்பத்துவங்கினால் தான் இந்நிலை மாறும்.

என்னவன் விஜய்
03-03-2010, 09:19 PM
நான் முன்பே நித்யானந்தா சுவாமிகளின் `ஸ்கண்டல்` என்ற பதிவை இணையத்தில் படித்துவிட்டேன்.

மக்களுக்கு படம்போட்டு காட்டினால் மட்டுமே உண்மை விளங்கும்.

rajureva
05-03-2010, 08:55 AM
நான் யார் என்று- தன்னை உணரும் வரை இந்த மாதிரி சாமியார்களை மக்கள்
தேடி போவார்கள்................ஒரு நல்ல காலம் வரும் என்று நம்புவோம்.

இன்பா
05-03-2010, 09:48 AM
ஆசாமியை சாமியாக்கி்யது நான் தானே, இனியாவது...

rajureva
06-03-2010, 12:44 PM
காற்று கூட புகாமல் உன் அறையை அடைத்தாய்
நேற்று வரை...................
பெண் வாசனையை அந்த காற்றில் கலந்தாய்
கண் கூசும் வரை
புகைப் பட கருவியே வெட்கப்பட்டது -உன்
செய்கை யினாலே

ஷண்முகம்
06-03-2010, 03:27 PM
நேற்றொரு பிரேமானந்தா
இன்றொரு நித்யானந்தா
நாளைக்கு எந்தானந்தாவோ
ஆன்மீகப் பித்தர்களே
நிறுத்துங்கள் உங்கள் ஓட்டத்தை.

muthuvel
11-03-2010, 03:57 AM
அனந்தா என்று முடிந்தாலே பயமாக உள்ளது

muthuvel
15-03-2010, 01:39 PM
நேற்றைய செய்தியில் பாலியல் தொடர்பான ஆராச்சியில் இருபதாக தகவல்

muthuvel
22-03-2010, 12:32 PM
சாமியார் ஆத்திகம் ,
"சாமி" யார் நாத்திகம்

இனியவள்
22-03-2010, 05:40 PM
காவி கரையானது
உன் போன்ற பாவிகளால்

muthuvel
24-03-2010, 11:54 AM
நான் அப்பாவி: வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி நித்யானந்தா மனு

உதயா
25-03-2010, 05:41 AM
இதில் வருத்தம் என்னவென்றால், எத்தனைதான் வெளிச்சம்போட்டுக்காட்டினாலும், கண்ணை மூடிக்கொண்டு அவர்களின் காலில் விழும் மக்களை என்னவென்று சொல்வது.
முற்றிலும் உண்மை. காவி உடையனிந்த காமன். எவ்வளவு விளிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தினாலும் நம் மக்கள் திருந்த போவதில்லை.