PDA

View Full Version : நித்திரை தொலைத்த நித்யானந்தா சுவாமிகள்..!!



இதயம்
02-03-2010, 06:38 PM
http://3.bp.blogspot.com/_Qpq24bUd4mY/S41cN8cwuXI/AAAAAAAAAGc/PUPWkBB_neQ/s320/Swamy-Nithyananda-scandal-video.jpg


போலி ஆன்மீகம் என்பது இன்றைய தினத்தில் மிகவும் இலாபகரமான, முதல் போட தேவையில்லாத தொழில். மக்களின் துன்பங்கள், பேராசை, மூடநம்பிக்கையை மையமாக வைத்து ஏமாற்று பேர்வழிகள் உலகெங்கும் கோடிகளை குவிக்கிறார்கள், ராஜ வாழ்க்கை வாழ்கிறார்கள். சராசரி மனிதனுக்கே உரிய எல்லா வகையான பலவீனங்களை கொண்ட குள்ளநரிகள் ”சாமியார்” என்ற பெயரில் செய்யும் தில்லுமுல்லுகள் இந்தியாவில் கொஞ்ச நஞ்சமல்ல. அதுவும் தமிழகத்தில் மாதம் ஒரு போலிச்சாமியார் கையும் களவுமாக மாட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம் பரமஹம்ச நித்தியானந்த சாமிகள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வந்த நித்தியானந்தா..!! இவர் ஒரு பிரபல தமிழ் நடிகையுடனான ஆபாச வீடியோவை சன் தொலைக்காட்சி வெளியிட்டு இவரின் போலி ஆன்மீக முகத்திரையை கிழித்திருக்கிறது. இது அவரை நம்பிய பல்லாயிரம் மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இன்பங்களை தவிர்த்து துறவற நிலையில் இருக்க வேண்டிய ஒரு துறவி திரைப்பட நடிகையுடன் கொண்ட தொடர்பும், அது தொடர்பான வீடியோவும் ஆன்மீகத்தை கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை உலகுக்கு உணர்த்தும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.! இந்த குள்ளநரியின் உண்மையான பெயர் இராஜசேகரன். 32 வயதாகும் இவர் திருவண்ணாமலையை சேர்ந்தவர். சாமியார்களுக்கே உரிய சித்து வேலைகளை சிறு வயது முதலே கற்று, அதை மக்கள் முன் காட்டி தான் ஒரு சக்தி வாய்ந்த சாமியார் என்று நம்ப வைத்தார். தியான பீடம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தியானத்தில் மக்களை ஈடுபட வைத்து அவர்களின் நோய்கள், பிரச்சினைகளை தீர்க்கிறார் என்று பரபரப்பாக பேசப்பட்டார். இந்த அமைப்பு பெங்களூருவை தலைமையகமாக கொண்டு பல கிளைகளுடன் தன் வியாபாரத்தை ஜெகஜ்ஜோதியாக நடத்தி வந்தது. இதையெல்லாம் தாண்டி பெரும் நகைச்சுவையாக 2007-ம் வருடம் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் இருக்கும் அமெரிக்க இந்து பல்கலைக்கழகத்தின் (Hindu University of America) சேர்மனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். Life Bliss Foundation என்ற பெயரில் 2003-ம் ஆண்டு இவர் தொடங்கி நடத்தி வந்த தியான அமைப்பு 33 நாடுகளில் 1000 மையங்களை கொண்டது என்று சொன்னால் நம்புவீர்களா..? ஆனால் அத்தனையும் உண்மை..!! யார் கண் பட்டதோ.. சன் டிவியின் மூலம் சாமியாரின் கெட்ட நேரம் தொடங்கி விட்டது..!!

பசுத்தோல் போர்த்திய இந்த போலி ஆன்மீகப்புலி சில ஆண்டுகளுக்கு முன் பிரபல தமிழ் வார இதழான குமுதத்தில் “கதவைத்திற..காற்று வரட்டும்..!!” என்ற தலைப்பில் ஆன்மீக கட்டுரைகளை எழுதி மக்களை ஏமாற்றி வந்தது. அந்த தொடர் மூலம் தான் சாமானிய மக்களிடையே மிகவும் பிரபலமானார். இன்றைய காலகட்டத்தில் பெரும் தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்ட எல்லா தரப்பிலும் பெரும் எண்ணிக்கையில் பக்தர்களை பெற்றிருக்கிறார். பதிவுலகில் பரபரப்புக்கு பெயர் போன எழுத்தாளர் சாரு நிவேதிதா இவரின் தீவிர பக்தர்..! ”இவர் தொட்டால் எல்லா நோயும் குணமாகிறது” என்று சொல்லிக்கொண்டிருந்தார். இனி என்ன சொல்வாரென தெரியவில்லை..!! அதென்னவோ தெரியவில்லை, இவர் தூக்கி புகழும் அத்தனை பேரும் சில நாட்களிலே தூற்றும் படியான நிலையை அடைகிறார்கள் அல்லது சாருவாலேயே தூற்றப்படுகிறார்கள்.!!!

இவருடன் ஆபாச வீடியோவில் இருந்த அந்த பிரபல தமிழ் நடிகையின் பெயரை சன் தொலைக்காட்சி வெளியிடாமல் “ஆர்” எழுத்தில் தொடங்கும் நடிகை என சஸ்பென்ஸ் வைத்தார்கள்.. ஆர்வ மிகுந்தவர்கள் பேப்பர், பேனாவுடன் உட்கார்ந்து “ஆர்” எழுத்தில் தொடங்கும் நடிகைகள் யார் என்று பட்டியலிட தொடங்கியிருந்தார்கள். ஆனால் நக்கீரன் பத்திரிக்கை அந்த நடிகை ”நாடோடி தென்றல்” படத்தில் பாரதிராஜா அறிமுகம் செய்த ரஞ்சிதா தான் என்று பட்டவர்த்தனமாக வெளியிட்டு, பெரும் சஸ்பென்ஸை உடைத்து அவர்களின் புண்ணியத்தை தேடிக்கொண்டு விட்டது. நடிகைகளுக்கு இது போன்ற செய்திகளில் தொடர்பு இருப்பதாக செய்து வெளிவருவது ஒன்றும் புதிதல்ல. அது மட்டுமல்லாமல் பிரேமானந்தாவில் தொடங்கி இன்றைய நித்தியானந்தா வரை பெண்கள் விஷயத்தில் மாட்டிக்கொள்வது கூட புதிதில்லை தான். ஆனால் என்ன தான் சன் போன்ற தொலைக்காட்சி ஊடகங்கள் உண்மையை உலகத்துக்கு கொண்டு வந்தாலும் ஆன்மீகம் என்ற பெயரில் ஏமாறும் ஏமாளிகள் இருக்கும் வரை நித்தியானந்தா போன்று இன்னுமொரு வித்யானந்தா போன்ற ஏமாற்று பேர்வழிகள் தோன்றிக்கொண்டு தான் இருப்பார்கள். அது ஒரு தொடர் கதை..!!

”கதவைத்திற... காற்று வரட்டும்..!” என்று ஊருக்கு உபதேசம் செய்து புத்தகம் எழுதிய நித்தியானந்தரிடம் ”கதவைத்திற.. காவல்துறை வரட்டும்..!” என்று தான் எனக்கு இப்போது சொல்ல தோன்றுகிறது..!!

குணமதி
02-03-2010, 06:47 PM
ஏமாறிகள் இருக்கும் வரை ஏமாற்றிகள் இருக்கவே இருப்பார்கள்.

கடவுளின் பெயரால் காலா காலத்ததிற்கும் நடக்கும் இந்தக் கயமைகளை அறிந்தும், திருந்தாதவர்களை என்னன்னென்பது?

cmn_raj
03-03-2010, 03:50 AM
பகவத்கீதை கொஞ்சம் , யோகா கொஞ்சம் தெரிந்து கொண்டால் நாம் கூட மேற்படியானந்தா ஆகிவிடலாம்.

பரமஹம்சர்,விவேகானந்தர் பேரை கெடுக்கறானுக.. நாயிக. அனேகமாக அடுத்தது கல்கி சாமியார் தான்.

சிவா.ஜி
03-03-2010, 04:19 AM
கடவுளை மட்டுமே நம்பினால் நல்லது. ஆசாமிகளை நம்பி, அவர்கள் காலடியில் விழும் அறிவிலிகள் இருக்கும்வரை அவர்களை சாமியும் காப்பாற்றாது.

பங்காரு என்ற ஒரு போலிப்பெருச்சாளி பலகாலமாக கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறது. அதை எப்போது பிடிக்கப் போகிறார்களென்று தெரியவில்லை.

நச்சைப் பற்றி நச்சுன்னு சொன்ன இதயத்துக்கு நன்றி.

ஓவியன்
03-03-2010, 04:25 AM
எப்போதுமே நாம் `அன்னப் பட்சி` போல நல்ல விடயங்களைப் பற்றிக் கொண்டால் போதுமானது, அது சாமியோ, ஆசாமியோ எல்லோருக்குமே பொருந்தும்.

rajarajacholan
03-03-2010, 04:31 AM
நானும் நெனச்சேன், என்னாடா, ஆப்ட்ரால் மனுசன்.. பாவம் குமுதம்


( தணிக்கை செய்யப்பட்டது - இளசு)

aren
03-03-2010, 05:37 AM
மனிதர்களை மனிதர்களாக மட்டுமே நினைக்கவேண்டும், எவன் ஒருவன் மனிதனை கடவுளுக்கு இணையாக நினைக்கிறானோ அன்றே அவன் தன்னை கீழ்படுத்திக்கொள்கிறான்.

மனிதர்கள் இவர்களை நம்புவதால்தான் இந்த மாதிரியான போலிகள் வருகிறார்கள்.

நான் இவர்களை நம்புவதில்லை, அதனால் இந்த மாதிரியான விஷயங்களுக்கு முக்கியத்துவமும் கொடுப்பதில்லை.

சிவா.ஜி
03-03-2010, 05:43 AM
உண்மைதான் ஆரென். நான் இவர்களை மனிதர்களாகவே நினைப்பதில்லை. இவர்களை மட்டுமல்ல, இவர்களை நம்பி, காலில் விழுபவர்களைக் கூட நான் மனிதர்களாக மட்டுமல்ல, விலங்குகளாகக்கூட மதிப்பதில்லை. விலங்குகள் சுயமாய் வாழ்கின்றன.

ஆதி
03-03-2010, 07:34 AM
நித்யாநந்தா.. ஒரு பெரும் இழுக்கை தேடி கொண்ட இவர் உண்மையில் ஆன்மிகத்தில் அடைந்த விடயம் பல.. இவர் அறிந்ததை எல்லாருக்கும் போய் சேர்க்க வேண்டும் என்று இவர் நினைக்காமல், தன்னை எல்லாரும் ஒரு மகானாக, மீட்பராக, ரட்சகனாக பார்க்க வேண்டும் என்று இவர் நினைத்ததே, இவரின் இந்த நிலைக்கு முழுமுதல் காரணம்..

நித்யானந்தா சாமியார் இல்லை, சாமாணியன் தான் என்று நான் எப்போதோ புரிந்து கொண்டேன்..

1) தியான பீடம் தளத்தில், "எப்படி தியானம் செய்வது" என்னும் பயிற்சியில் கலந்து கொள்ள 5000 டாலர் கட்டணம் என்று போட்டிருந்ததை, பார்த்ததும் இவர் பணத்தாசை கொண்டுவிட்டார், இனி சாமியாராய் இவரால் வாழ் முடியாது என்பதை புரிந்து கொண்டேன்..

2) தமிழாராகிய நீங்கள், தமிழாட்டை விட்டு பெங்களூரில் வந்து தங்கி இருப்பது ஏன் ? என்ற கேள்விக்கு..

தமிழ் நாட்டில் என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று சொன்னார்..

அப்போது புரிந்து கொண்டேன் இவர் துறவி எனும் தகுதியை இழுந்து பல நாளாகிறது என, உண்மையான துறவி மக்களை தேடிப்போய் நன்மை செய்வான், இல்லை இவ்வுலகை விட்டு ஒதுங்கி தனிமை கொள்வான், தன் முக்திக்காக, தன்னை யாரும் புகழ வேண்டும் என்று அவன் நினைப்பது இல்லை, அவன் அதை விரும்புவதுமில்லை..

ஒருதன் தப்பு செய்துவிட்டான் என்பதற்காக அவனை புழுதி வாரி தூற்றி, அவன் மீது உமிழ்ந்து அசிங்கப்படுத்துவதை நாம் பாரம்பரியமாக வைத்திருக்கோம்..

கண்ணதாசன் சொல்வார்.. மலையளவு துக்கி, பின் பாதளம் அளவு வீழ்த்தி தாக்குதல் நம் குணம் என்பார்..

இந்த திரியிலும் அதுதான் நடக்கிறது..

எல்லா காலத்திலும் ஞானத்தை போதிக்க தீர்க்க தரிசீகள் வந்து சென்றிருக்கிறார்கள், அதில் பலரை நம் ஞான குருவாக தேர்ந்து பிறகு அவர்களை கடவுளாகவும் நாமாக்கி இருக்கிறோம்..

நமக்கான ஞான குருவை நாம் தேர்ந்து கொள்வது என்பது நம் கையில் இருக்கிறது, குருவை சரியாக தேர்ந்து கொள்ள நமக்கு அறிவு கொடுக்கப்படிருக்கிறது, அதை நாம் சரியாக பயன் படுத்தி நம் குருவை அறிந்து கொள்ளாமல், அவர் ஏமாற்றுக்காரர் என்று அறிந்த உடன் போலிச்சாமியார் என்று தூற்றுவதில் எந்த பிரையோசனமும் இல்லை..

அவர் இந்த் அளவுக்கு பிரபலமாக காரணம் யார், அவரா ? நாமா ?

நாம பிரபலப்படுத்தலனா அவர் எப்படி பிரபலமாகி இருக்க போகிறார்..

இந்த பதிவை நானிட்டிருப்பதால், என்னை நித்யாநந்தரின் சீடன் என்று பலர் எண்ண, சொல்ல கூடும், அதை பற்றி எனக்கு கவலை இல்லை....

தப்பு எல்லாம் நம்ம பேர்ல, இப்ப அவரை திட்டி என்ன பிரையோசனம் என்பதே என் கருத்து..

வெட்ட வெளிச்சம் போட்டு காட்ட நினைத்த சன் தொலைக்காட்சியின் நோக்கம் சரி, செய்த விதத்தில் இன்னும் கொஞ்சம் நாகரீகம் இருந்திருக்கலாம் என்பது என் கருத்து..


நேற்று இந்த செய்தியை பார்த்துவிட்டு நண்பனிடம் சொன்னேன்..

டேய் நித்யாநந்தாவை விடு.. அந்த நடியாரு னு தெரிஞ்சுதா என்றான்..

இதுதான் நம் மனநிலை.. நமக்கு நித்யாநந்தா பற்றி கவலை இல்லை, நம் கவலை எல்லாம் அந்த நடிகை மீதுதான்..

யாருனு தெரிஞ்சுக்கலனா தூக்கம் வராது இல்ல..

ஓவியன்
03-03-2010, 07:57 AM
ஆதன்.....!! :)


சொல்ல வார்த்தைகள் இல்லை,
நான் என்ன நினைத்துக் கொண்டு இந்த திரியில் என் முதல் பதிவினை இட்டேனோ,
அந்தக் கருத்துக்களும் உங்கள் பதிவில்.....!!

நல்ல விடயங்களைப் பற்றிக் கொண்டு,
தீயவற்றை விலக்க நமக்கு அறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது,
ஆனால் நாம் தான் அதனை சரி வர பயன்படுத்துவதில்லை.

ஒருவரது அந்தரங்கத்தை தொலைக்காட்சி பகிரங்கப்படுத்துவதென்பதில் அது `டைகர் வூட்` தொடக்கம் `நித்தியானந்தா; வரை என் கருத்துக்கள் வேறானவை....

சரி, சமியார் தப்பு செய்த பட்சத்தில் அந்த காணொளிக் காட்சியை காவல்துறையிடம் கையளிக்காது பகிரங்கப்படுத்திய சன் தொலைக்காட்சியின் நோக்கம் பட்டவர்த்தமானது.

அடுத்து, இது போன்ற விடயங்களில் மற்றவர்களுக்குத் தெரியாமல் வீடியோ காட்சிப்படுத்தல் என்பது எந்தளவில் நாகரீகமானதென்று எனக்கு விளங்கவில்லை.

அன்புரசிகன்
03-03-2010, 08:08 AM
ஆமா... இந்த சாமியார்கள் எத்தனை தேவாரங்கள் திருவாசகங்கள் இதுவரை இயற்றியுள்ளார்கள்???

aren
03-03-2010, 08:11 AM
அந்த நடிகை பாரதிராஜா அறிமுகப்படுத்தி கார்த்திக்குடன் நடித்த ரஞ்சிதா

ஓவியன்
03-03-2010, 08:12 AM
டேய் நித்யாநந்தாவை விடு.. அந்த நடியாரு னு தெரிஞ்சுதா என்றான்..

இதுதான் நம் மனநிலை.. நமக்கு நித்யாநந்தா பற்றி கவலை இல்லை, நம் கவலை எல்லாம் அந்த நடிகை மீதுதான்..

யாருனு தெரிஞ்சுக்கலனா தூக்கம் வராது இல்ல..


அந்த நடிகை பாரதிராஜா அறிமுகப்படுத்தி கார்த்திக்குடன் நடித்த ரஞ்சிதா

:D:D:D:D:D:lachen001::lachen001::lachen001::lachen001::icon_b:

சிவா.ஜி
03-03-2010, 08:17 AM
அடுத்து, இது போன்ற விடயங்களில் மற்றவர்களுக்குத் தெரியாமல் வீடியோ காட்சிப்படுத்தல் என்பது எந்தளவில் நாகரீகமானதென்று எனக்கு விளங்கவில்லை.

ஓவியன் அருமையான கருத்துக்கள். இங்கு மேற்கோள்காட்டியக் கருத்தில்தான் எனக்கு உடன்பாடில்லை. மற்றவர்கள் ஒரு சாமான்யமானவராகவோ, குடும்பத்தினராகவோ இருந்தால், இப்படி வீடியோ எடுப்பது சட்டப்படிக் குற்றம், தார்மீகப்படி தண்டனைக்குற்பட்டது.

ஆனால், போலியாய் உலவும் சிலரை, ஊழல் செய்யும் ஒருவரை, முகமூடிக்குப் பின்னே குற்றம் புரியும் ஒருவரை, வெளிச்சம்போட்டுக் காட்டவேண்டியதுதானே பத்திரிக்கை தர்மம்? இதுவரை அவரை நம்பி, ஆன்மீகவாதியாய் ஏற்றுக்கொண்டவர்களல்லாது, இனியும் ஏமாறாமல் இருக்க இந்த முகத்திரை கிழிப்பு அவசியமாகிறதல்லவா?

என்னைப் பொருத்தவரை, இப்படியான புலனாய்வு செய்தி சேகரிப்பு, சேகரிப்பவரின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியது. இருந்தாலும், அதையும் சட்டை செய்யாமல், உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவருபவர்களைப் பாராட்டத்தான் வேண்டும்.

இன்னும் பலரின் முகமூடிகள் கிழிக்கப்படவேண்டியுள்ளது. ஆனால், ஆதன் சொன்னதைப்போல....இதில் மாட்டிக்கொண்டவர்களைவிட அதிக குற்றம் செய்தவர்கள், அவர்களை நம்பியவர்கள்தான். அவர்கள்தான் குற்றவாளிகள். இன்னும்கூட லிங்கம் எடுப்பவரையும், விபூதி வரவழைப்பவரையும் பகவான் என சொல்லும், அதிமேதாவிகள் இருக்கத்தானே செய்கிறார்கள்.

வசீகரன்
03-03-2010, 08:18 AM
நேற்று இந்த செய்தியை பார்த்துவிட்டு நண்பனிடம் சொன்னேன்..

டேய் நித்யாநந்தாவை விடு.. அந்த நடியாரு னு தெரிஞ்சுதா என்றான்..

இதுதான் நம் மனநிலை.. நமக்கு நித்யாநந்தா பற்றி கவலை இல்லை, நம் கவலை எல்லாம் அந்த நடிகை மீதுதான்..

யாருனு தெரிஞ்சுக்கலனா தூக்கம் வராது இல்ல..

நக்கீரன் பத்திரிக்கை அடித்து ஒட்டியுள்ள போஸ்டர்களில் நிதியானந்தன் நடிகை ரஞ்சிதாவின் சரசலீலைகள் சென்னை முழுவதும் நாறிக் கொண்டிருக்கிறது...

இன்று இவன்... நாளை எவனோ... கடவுள் பெயரையோ அல்லது தவம் ஞானம் என்றோ இனி எவனும் ஆசிரமம்...பீடம் அது இது என்று
ஆரம்பித்தால்.. உடனே தண்டிக்கும்படியான சட்டம் ஏதும் உடனே அமல்படுத்த வேண்டும்... இவன்களை நாடிசென்று வளர்த்துவிடும் மூட நம்பிக்கை கூட்டத்தையும் தண்டிக்கவேண்டும்..

தினசரி தொலைக்காட்சிகளை திறந்து பாருங்கள்.... இவன்களின் அட்டகாசம்தான்.... போதாக்குறைக்கு சிவப்புகல்.. மரகதக்கல் என்று ஒரு கூட்டமும்.. வாஸ்து சாஸ்து என்று இன்னொருவனும்.... லேகியம் விற்பவன்கள் என்று எத்தனை திருட்டு பயல்கள்....

இனியாவது யோசியுங்கள் மக்களே....

Narathar
03-03-2010, 08:37 AM
அவர் இந்த் அளவுக்கு பிரபலமாக காரணம் யார், அவரா ? நாமா ?.

குமுதம் பத்திரிக்கை தான் இவரது அபரிமித விளம்பரத்துக்கு காரணம்....... அதனால் தானோ என்னவோ "குங்குமம்" பத்திரிகையை நடத்தும் சன் குழுமத்தால் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளார்............

ஒருவேளை "கதவைத்திற காற்று வரட்டும்" கட்டுரை குங்குமத்தில் வெளியாகியிருந்தால் இந்த செய்தி வெளிவரமலேயே போய் இருக்கும்

நாராயணா!!!!!

இதயம்
03-03-2010, 09:56 AM
நண்பர்களின் கருத்துக்கள் சிலவற்றில் எதார்த்தம் இல்லாதது மாதிரி தோணுது. நல்லது செய்றது மட்டும் தான் நன்மை இல்லை. தீமைக்கு எதிரா நடந்துக்கிறதும் நாம செய்ற நன்மை தான். சிலர் மனசாட்சி, பொருள் பலவீனம், தண்டனை உள்ளிட்ட காரணங்களை மனசில் நினைச்சி தான் செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்பாங்க, திருந்துவாங்க. மேலே சொன்ன எந்த காரணங்களும் இல்லாத இது மாதிரியான சாமியார்களுக்கு சமூக புறக்கணிப்பும், சட்ட கொடுக்கும் தண்டனையும் தான் சரியா வரும். அந்த வகையில் சமூக புறக்கணிப்புக்கு நாம் ஒவ்வொருத்தரின் விமர்சனமும் அவசியமாகுது. நண்பர் சொன்ன மாதிரி அந்த வீடியோவை சன் ஒளிபரப்பாம போலீஸ் கிட்ட கொடுத்திருந்தா அவங்க நடவடிக்கை எடுத்திருப்பாங்கன்னு என்ன நிச்சயம்..? சாமியாரின் பண பலம், அதிகார பலத்துக்கு காவல் துறை அடி பணிஞ்சி இருக்கும். இந்தியாவில் இதுக்கு முன்னாடி அப்படி நடக்கலைன்னு சொல்ல முடியுமா..? இந்தியாவின் பணக்காரர்கள் வரிசையில் வெகுவேகமா முன்னேறி வந்துட்டு இருக்கிற, தன் குடும்பத்தின் கையில் அரசாங்கம் இருக்கிற கலாநிதி மாறனுக்கு சாமியாரின் பணமும், அதிகாரமும் தூசு.!! பணத்தையும் தாண்டி புகழ்னு ஒரு போதை இருக்கு. அதையும் அடையும் அவரின் வேகம் தான் இத்தனை பெரிய விஷயத்தை சந்திக்கு கொண்டு வந்துச்சின்னு நான் நினைக்கிறென்.! இந்த சாமியாரை சந்தி சிரிக்க வச்சதன் மூலம் அவர் தண்டனை பெறப்போவது மட்டும் நன்மை இல்லை. இது மாதிரி மாட்டாம இருக்கிற இன்னும் பல சாமியாரை பயமுறுத்தி இனி ஒழுங்கா இருக்க வைக்கும்.

மக்கள் மன்றத்தில் வெளிப்படையா இந்த பிரச்சினை வந்த பிறகு இனி இதை ஒளிக்கிறது, தடுக்கிறது முடியாத காரியம். ஏன்னா மக்கள் சக்தியை நம்பித்தான் அரசியல், அரசாங்கம், வியாபாரம் எல்லாமே..!! இந்த வீடியோவை அந்த நடிகை எடுத்திருக்க வாய்ப்பு இல்லை. காரணம், இந்த வீடியோ வெளியானா அந்த நடிகையும் சேர்ந்து தான் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க வேண்டி இருக்கும். சன் குழுமம் நினைச்சா கூட அந்த நடிகையை காப்பாற்ற முடியாது. ஆனா சாமியாருக்கு மிகவும் நெருங்கிய ஒரு நபர் அல்லது குழு தான் திட்டம் போட்டு இதை பண்ணியிருக்கணும். நடிகையை யாருன்னு தெரிஞ்சிக்கிறதில் ஒண்ணும் பெரிய ஆர்வமில்ல. பொதுவா நமக்கு எது தெரியாதோ அதை தெரிய தான் முயற்சி பண்ணுவோம். உதாரணத்திற்கு ”நடிகை ரஞ்சிதா சாமியாருடன் உல்லாசம்”னு தலைப்பு போட்டு சாமியார் முகத்தை மறைச்சி வீடியோ வெளியான நம் பேச்சு அதிகம் நடிகை பத்தி இருக்காது. முகம் தெரியாத அந்த சாமியார் யார்னு தான் தேடுவோம். அதுவும் பிரபல சாமியார்னு போட்டுட்டா சொல்லவே வேணாம். நம் மனக்கண்ணில் சத்ய சாய்பாபாவில் இருந்து பங்காரு அடிகளார் வரைக்கும் க்யூவில் வருவாங்க. இது மனிதனின் சைக்காலஜி..! அவ்வளவே..!!

இதில் சன்னின் வழக்கமான வியாபார தந்திரம் இல்லாமல் இல்ல. பொதுவா நடிகையின் முகத்தை மறைச்சி இரகசியம் காக்கணும்கிறது சன்னின் நோக்கம் இல்ல. எந்த ஒரு விஷயத்தையும் உடனடியா சொல்லாம ஜவ்வா இழுத்து, மீடியா பக்கம், பத்திரிக்கை பக்கமும் மக்களை கொண்டு வருவது அவர்களின் நோக்கம். இன்னிக்கு தினகரன் சைட்டில் ரஞ்சிதாவின் பக்கவாட்டு தோற்றம் தெரியும் படம், வீடியோ வந்திருக்கு. அதற்கு அருகிலேயே ”முக்கிய அறிவிப்பு : நாளை நமது தினகரன் டாட் காமில் சுவாமி நித்தியானந்தா லீலை பிரத்யேக படங்கள் மேலும் பல அப்டேட் செய்யப்படவுள்ளது”ன்னு தகவல் இருக்கு. அப்படின்னா நாளை இன்னும் தெளிவா படங்கள் வெளிவரும். மக்கள் இன்னும் ஆர்வமா பார்ப்பாங்க..!! இந்த வியாபார தந்திரம் கூட கலாநிதி மாரனின் இமாலய வளர்ச்சிக்கு ஒரு காரணம்..!! எது எப்படியோ சன்னின் தைரியம் + வியாபார தந்திரம் ஒரு ஈனப்பிறவியை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கு. பாராட்டுவோம் சன் குழுமத்தை..!

இந்த சாமியாருக்கு எதிரா பேசுற ஒவ்வொருத்தரும் ”தான் மற்றும் தன் குடும்பத்தார்களும் இனி ஆன்மீகம் என்ற பெயரில் இது போன்ற புல்லுருவிகளை ஆதரிக்க மாட்டோம்னு” உறுதி எடுக்கிறது தான் ஒவ்வொருத்தரும் கடைசியா செய்ய வேண்டியது. அப்படி இல்லாட்டி.. இதே போல் இன்னொருத்தன் இப்படி வருவதை யாராலும் தடுக்க முடியாது..!!!!

இன்பா
03-03-2010, 10:00 AM
நடிகையின் முகத்து மறைத்து ஒளிபரப்ப வேண்டியதன் அவசியம் என்ன...? சாமி சேவை செய்ததற்கா...? இல்லை இனிமேலும் அவள் சேவை தேவை என்பதற்கா...?

பணத்திற்காக அவன் ஏமாற்றினான், அதே பணத்துக்காக இவர்கள் போட்டுடைத்தார்கள்.

ஆதன் சொன்னது மிக்க சரி.

அன்புரசிகன்
03-03-2010, 10:56 AM
இதுவரை இந்த திரியின் உள்ளடக்கத்தின் சீரியஸ் தெரியவில்லை. நண்பன் ஒருவன் இரண்டு சுட்டிகள் யூடப்பில் தந்தான். ஒரு முகமும் மறைக்கப்படவில்லை. அப்படியே யார் அந்த நடிகை என்பது தெரிகிறது. பாக்கியராஜ் இன் ஒரு பாடலுடன் அந்த ஒளிநாடா உள்ளது...

ஸ்...........ஸப்பா............... ரொம்ப கண்ணக்கட்டுது...

அக்னி
03-03-2010, 11:08 AM
இதயம் எடுத்துரைக்க, ஆதன் கருத்துரைக்க, ஓவியன் தொடர்ந்துரைக்க, சிவா.ஜி இடித்துரைக்க...
சூடாகத்தான் இருக்கின்றது திரி...

போலிச்சாமியார்கள்,
இதயம் சொன்னதுபோல ஒரு தொடர்கதைதான்.
இன்று இவர். நாளை இன்னொருவர்.

அவர்களை நம்பியது நாம், அவர்களை வளர்த்துவிட்டதும் நாமே.
ஆதன் சொன்னதிற் தவறேயில்லை.

தந்தைக்கும் தாய்க்கும் பிள்ளைக்குமிடையே,
காதலனுக்கும் காதலிக்குமிடையே,
கணவனுக்கும் மனைவிக்குமிடையே,
சகோதரர்களுக்கு இடையே,
நண்பர்களுக்கு இடையே,
தரகர் வைத்துக்கொண்டால் எப்படியிருக்கும்...???

இந்த உறவுகளுக்கிடையே இல்லாத தரகர்,
இறைவனுக்கும் நமக்குமிடையே மட்டும் ஏன் முளைத்துவிடுகின்றார்... எங்கிருந்து முளைத்துவிடுகின்றார்...

ஒரு நாட்டிற்கு நாட்டுமக்கள் எல்லோரும் தலைவராக இருக்கமுடியாது.
தலைவரில்லாமலும் இருக்கமுடியாது.

அதே போலத்தான் மதத்திலும்,
மத நெறிகளைக் கட்டிக்காக்கவும், வழி காட்டவும் துறவிகள் அவசியமாகின்றனர்.

இதற்குத் தேர்தல் வைத்துத் தேர்ந்தெடுக்க முடியாது.
நம் மனதுக்குட் தேர்வு வைத்துத்தான் தெரிந்துகொள்ள முடியும்.

ஆதன் சொன்னதுபோல,
உண்மையான துறவிகளிடம் எளிமையும், தனிமையும் தனித்துவமாயிருக்கும்.

சொத்துச் சேர்க்கத் துறவு மூலதனமற்றத் தொழிலாகிவிட்டது பெரும் வேதனையே.

ஓவியன்
03-03-2010, 11:15 AM
சாமியாரின் பண பலம், அதிகார பலத்துக்கு காவல் துறை அடி பணிஞ்சி இருக்கும். இந்தியாவில் இதுக்கு முன்னாடி அப்படி நடக்கலைன்னு சொல்ல முடியுமா..?

காவல்துறைக்கு கொடுத்திருக்க வேண்டியது சன் குழுமம் தானே, சன் குடும்ப(ழும)த்தில் இல்லாத பண+அதிகார பலம் சாமியாருக்கு இருக்கா என்ன...?? :eek:

ஆதி
03-03-2010, 11:31 AM
இதுவரை இந்த திரியின் உள்ளடக்கத்தின் சீரியஸ் தெரியவில்லை. நண்பன் ஒருவன் இரண்டு சுட்டிகள் யூடப்பில் தந்தான். ஒரு முகமும் மறைக்கப்படவில்லை. அப்படியே யார் அந்த நடிகை என்பது தெரிகிறது. பாக்கியராஜ் இன் ஒரு பாடலுடன் அந்த ஒளிநாடா உள்ளது...

ஸ்...........ஸப்பா............... ரொம்ப கண்ணக்கட்டுது...

ரசிகன், தினகரன் தளத்திலேயே எல்லாம் இருக்கு பாருங்க..

ஓவியன்
03-03-2010, 11:52 AM
ரசிகன், தினகரன் தளத்திலேயே எல்லாம் இருக்கு பாருங்க..

சரிங்க...!! :D:D:D

ஆதி
03-03-2010, 11:54 AM
சரிங்க...!! :D:D:D

ஹி.. ஹி.. ஒரே வார்த்த................ (டீலா, நோ டீலா ) :D :D

கலையரசி
03-03-2010, 12:38 PM
பிரேமானந்தா வரிசையில் இப்போது நித்யானந்தா.
எத்தனை முறை ஏமாந்தாலும் ஏமாந்தே திருவோம் என்று தாமாக போய் வலையில் விழும் மக்கள் எப்போது தான் திருந்துவார்களோ?

பால்ராஜ்
03-03-2010, 02:27 PM
தொலைக்காட்சியில் பார்த்தபோது மனுஷன் மேல் பொறாமையாக இருக்கிறது:)

சாலைஜெயராமன்
03-03-2010, 03:28 PM
சிறுமை கண்டு பொங்கும் சீர் குணம் கொண்ட இதயம் துவக்கி வைத்த இத்திரி நன்றாகவே பற்றிக் கொண்டது மனத்திற்கு இதமளிக்கிறது.

மடங்கள் மடத்தனத்தின் கூடாரங்களாகத்தான் இருந்து வருகிறது இதயம். நான் நித்யானந்தாவை எந்தக் குறையும் சொல்ல மாட்டேன். மக்களின் அபரிமிதமான பேராசை, சுயநலம் சார்ந்த பங்களிப்புக்கள் இந்த மாதிரி குடிகேடர்களை இயல்பாகவே அரங்கேற்றிவிடும் அபாயத்தை ஆரம்பித்து விடும் காரணமாகிவிடுவதுமிகக் கொடுமை. துர்ப்பாக்கியசாலிகள் இந்த மக்கள்.

இந்த ஆபாசத்தை சன் டிவியாவது இலை மறை காய்மறையாகக் காட்டியிருக்கலாம். பொதுமக்கள் குடும்பத்துடன் காணக் கூடிய ஒரு பொதுக்களத்தில் தொடர்ந்து காட்டி மக்களின் வக்கிரத்திற்கு மேலும் எண்ணை வார்த்திருக்கிறார்கள்.

எதற்காக ஒரு தனிமனித சமுதாயத்திற்கு சாமியாரின் துணை வேண்டும். மக்கள் என்று இத்தகைய புல்லுரிவிகளைப் புறக்கணிக்கும் திராணியைப் பெறுகிறார்களோ அன்றுதான் இந்தஅவக் கேடு ஒழியும்.

சமூகப் பிரக்ஞையுடன் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திய திரு,இதயத்திற்கும், சாமியாரின் இச் செயலுக்கு கண்டனம் தெரிவித்த நம் மன்ற அங்கங்களுக்கும் பாராட்டுக்கள்.

ஓடி ஒளிந்து விட்டான் உதவாக்கரை சாமி
உரலுக்கும் கேடானான் உண்மை நிலைகண்டு

அறிவின் சார் கூட்டத்திற்குதான் மோட்ச வீட்டின் கதவு திறக்கும். ஊரையே கதவைத் திறந்து காற்றுக்கு வழிவிடச் சொன்னவன் தன் வீட்டுக் கதவை மூடத் தெரியாமல் முச்சந்திக்கு வந்து விட்டான். கதவுகளையும், சன்னல்களையும் ஒருமுறை நன்றாக சரிபார்த்துவிட்டு களியாட்டத்தில் இறங்கியிருக்கலாம். திருட்டுத்தனமாய் படம் பிடித்த அந்த பாக்கியவானுக்கு நன்றிகள் பல. சாமியாருக்காக மட்டுமல்ல அவன் பக்தகோடிகள் பலரின் முகத்திரையைக் கிழித்து விட்டானல்லவா அதற்காக.

வாழ்க பாரதம். வெல்க அதன் புகழ். கயவர் கூட்டங்களை மறப்போம். தாய் நாட்டு மானம் காப்போம். புறக்கணிப்போம் போலி முகவர்களை.

இதயம்
03-03-2010, 06:17 PM
காவல்துறைக்கு கொடுத்திருக்க வேண்டியது :eek:

எதைக்கொடுத்திருக்க வேண்டியதுன்னு சொல்றீங்கன்னு எனக்கு புரியலை ஓவி. அதை சொல்லுங்க.. அப்புறம் என் பதிலை சொல்றேன்..!!

பால்ராஜ்
04-03-2010, 06:45 AM
சற்றே மாறுபட்ட கருத்துக்களைக் கூறினால்தான் சபை சூடுபிடிக்கும் என்ற காரணம் அல்லாமலும் என் மனதில் ஆழத்தில் உண்மையாக எழுந்த சில கருத்துக்களின் பிரதிபலிப்புக்கள் என்றும் கூறலாம்.

ஆன்மீகம் என்பது சில உணர்வுகளைத் தவிர்ப்பதா...???

இது ஆன்மீகப் பகுதியில் விவாதிக்கப் படவேண்டியது. ஏன் இதை எழுப்பினேன் என்றால், எல்லா மனிதர்களுக்கும் பல உணர்வுகள்.. தேவைகள் ..இயற்கையாகத் தோன்றுபவை.. ஆன்மீகவாதிகள் சாப்பிடவேண்டியதில்லை என்றோ.. மனிதனுக்கு இயற்கையாக தேவைப்படும் ... காமம் உட்பட.. பல உணர்வுகளை அடக்கி வைக்க வேண்டும் என்றோ எங்கும் கூறப்பட்டதாக எனக்குத் தோன்றவில்லை.

எது நடக்க வேண்டுமோ .. அது நடந்தே தீரும்....!!!

இங்கு நடந்திருப்பது ஒரு ஊடகத்தின் திருவிளையாடல்.. ஒரு மனிதனின் அந்தரங்கத்தைப் படம் பிடித்து வெளியிட்டு அதை வர்த்தகம் ஆக்கியிருப்ப்வர்கள் அவன் போலி சாமியார் என்று பட்டம் சூட்டு விழா நடத்தும்போது அந்த ஊடகத்தை அணு அணுவாக சோதித்தால், இத்தனை சானல்கள் நடத்துவத்தற்கு கோடிகோடியாக வந்த செல்வம் எங்கிருந்து வந்தது? என்ற கேள்வியும் எழுகிறது.. ! ஆராய்ந்தால் வம்பு..!

ஆனால் திரியின் மையக் கருத்து.. "நித்தியானந்தா"..
நான் இவரது கட்டுரைகளை,, குமுதத்தில் எப்போதும் வாசிப்பது உண்டு.. துணுக்குகள் தவிர வாசிக்கும் சில பகுதிகளில் இதுவும் ஒன்று..

சின்னப் பையன் மாதிரித் தோற்றம் அளிக்கும் ஒரு நபரில் இருந்து இத்தனை முதிர்ச்சி உள்ள கருத்துக்களா என்று வியப்பதும் உண்டு..

இன்றைக்கும் என் கருத்தில் மாறுபாடு இல்லை...

ஒரு தனி மனிதனில் அந்தரங்க வாழ்க்கை அவனது சுதந்திரம்...! அதை கொச்சைப் படுத்தி பப்ளிசிட்டி தேடுபவர்களையே சாடவேண்டும் என்பது எனது கருத்து.

Akila.R.D
04-03-2010, 07:12 AM
//ஒரு தனி மனிதனில் அந்தரங்க வாழ்க்கை அவனது சுதந்திரம்...! அதை கொச்சைப் படுத்தி பப்ளிசிட்டி தேடுபவர்களையே சாடவேண்டும் என்பது எனது கருத்து. //

உங்களது கருத்து சரியே....

ஒரு தனி மனிதனின் அந்தரங்கத்தை விமர்சிக்க நமக்கு அனுமதி இல்லை...

ஆனால் தன்னை ஒரு ப்ரம்மச்சாரி என்றும் சன்னியாசி என்றும் கூறிக்கொண்டு,
தனக்கு கீழ் இருப்பவர்களையும் துறவறம் ஏற்க சொல்லி இருப்பவர் இவ்வாறு செய்வதுதான் தவறு....

ஒரு சிந்தனையாளர் தன்னை ப்ரம்மச்சாரி என்று சொல்லிக்கொண்டுதான் ஆன்மீகத்தை பற்றி பேச வேண்டும் என்ற அவசியம் இல்லையே...
இல்லற வாழ்வில் இருப்பவர் பகவத்கீதை கருத்தை கூறினாலும் நாம் ஏற்போம் அல்லவா?..

அவர் ஆன்மீகதை பற்றி பேசுவதும் தவறு இல்லை... நடிகையுடன் இருந்ததும் தவறு இல்லை...

தன்னை சன்னியாசி, சாமியார், ப்ரம்மச்சாரி என்று மக்களிடம் சொல்லிக்கொண்டு இவ்வாறு நடந்து கொண்டதுதான் தவறு...

சிவா.ஜி
04-03-2010, 08:09 AM
மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் அகிலா. சந்நியாசியாய் தன்னைச் சொல்லிக்கொள்ளாமல், கருத்துக்களை மட்டும் சொல்லியிருந்தால், அவரது அந்தரங்கத்தை அம்பலப்படுத்தியது தவறு.

சாமியார், பிரம்மச்சாரி என பீலா விட்டுக்கொண்டே இந்தத் திரைமறைவு வாழ்க்கையை வாழ்ந்ததற்குத் தண்டிக்கப்பட வேண்டும்.

பால்ராஜ்
04-03-2010, 08:35 AM
நான் நிச்சயமாகக் கள்ள சாமியார்களை நியாகரீகரிக்க முயலவில்லை..

சமூகத்தில் எல்லா தளங்களிலும் இந்த முரண்பாடு நடந்து கொண்டே இருக்கிறது..

மனைவி உயிரோடு இருக்கும்போது இன்னொருத்தியை வைத்துக் கொண்டு பொது இடங்களில் வலம் வரும் பிரபங்களைப் பற்றி ஏன் இந்தக் கவலை இல்லை...??

பிரம்ம்மச்சாரிகள் திருமணம் ஆகாதவர்களே தவிர ... மற்ற விஷயங்கள் இல்லை என்று நினைப்பது தவறு..

நம் நாட்டின் முக்கியத் தலைவர்களைப் பற்றி சில கிசு கிசுக்கள் கேட்டிருக்கிறேன்.. உண்மை என்று என் மனத்தில் படவில்லை.. ஆனாலும் நெருப்பு இல்லாமல் புகை வருமா என்று கேட்டால்... சில கேள்விகள் எழவே செய்கிறது.

நித்யானந்தாவைப்பொறுத்தவரை.. அவரது எழுத்துக்களை மட்டுமே வாசித்திருக்கிறேன்.. அவரையோ மற்று எவரையோ கடவுள் என்ற நிலைக்கு நான் என்றும் நினைத்ததில்லை.. ஏன் கடவுளைக்கூட .. "இல்லை என்றா சொல்கிறோம்.. இருந்தால் நன்றாக இருக்கும்.."என்ற கமல் தத்துவம் கூட என்னைக் கவர்ந்தது..

யாரையும் நம்பும் செம்மறியாட்டுக் கூட்டங்களுக்கு எவரையும் உயர்த்தவும் முடியும்.. ஏதோ சில கிறுக்கர்கள் செய்யும் இவ்வித 'பப்ளிசிட்டி ஸ்டண்ட்' மூலமாக கல்லெறியவும் முடியும்..

ஆமாம் ..ஒரு சின்ன கேள்வி.. நண்பர் நித்யானந்தா .. யாரையும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றெல்லாம் போதித்தாரா??

தூயவன்
04-03-2010, 09:08 AM
நித்திரை தொலைக்கப் போகும் நித்யானந்தா சுவாமிகள்

இதுக்கு மேல என்ன இவனுக்கு சுவாமிகள் என்ற பெயர் வேண்டி கிடக்குது

sofi
04-03-2010, 10:01 AM
ஹம் அடுத்தவர் தூக்கத்தை கலைத்தவர் ...
இதுக்கு மேலையும் இவருக்கு சுவாமி என்கிற பட்டம் ..?
எங்கள் மக்கள் வளர்ச்சி குறைவு என்று தான் சொல்ல வேணும் ... எல்லாம் அறிந்தும் சிலர் இன்னும் மூட நம்பிக்கையாகவே காண படுகின்றனர் ..
பல கோடி மக்கள் கண் திறக்க விலை என்று தான் சொல்ல வேணும் ..

Akila.R.D
04-03-2010, 10:05 AM
//பிரம்ம்மச்சாரிகள் திருமணம் ஆகாதவர்களே தவிர ... மற்ற விஷயங்கள் இல்லை என்று நினைப்பது தவறு..//

திருமணம் செய்து கொள்ளாமல் இல்லறம் (யாருடன் வேண்டுமானலும்) நடத்தினாலும் அவரை ப்ரம்மச்சாரி என்று கூறுவீர்களா...

இது எனக்கு இவ்வளவு நாட்களாக தெரியாமல் போனதே...

இனி நம் நாட்டில் நிறைய ப்ரம்மச்சாரிகள் தான் இருப்பர்(அவ்வப்போது மாற்றிக்கொள்ளலாம் அல்லவா)..

//ஆமாம் ..ஒரு சின்ன கேள்வி.. நண்பர் நித்யானந்தா .. யாரையும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றெல்லாம் போதித்தாரா??//

அவர் போதித்தாரா என்றெல்லாம் எனக்கு தெரியாது....

அவரது சிஷ்யர்களும் காவி உடை தான் உடுத்தி இருப்பர்(சன்னியாசம்)...

அவரது ஆசிரமத்தில் தங்கி இருப்பவர்களும் வெள்ளை உடை அணிந்து குடும்பத்தோடு இல்லாமல் தனியாக வாழ்பவர்களே...
தன்னிடம் வந்தவர்களை தனியாக இருக்க சொல்லி விட்டு அவர் நடிகையுடன் இருந்துள்ளார்...

Akila.R.D
04-03-2010, 10:27 AM
மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் அகிலா. சந்நியாசியாய் தன்னைச் சொல்லிக்கொள்ளாமல், கருத்துக்களை மட்டும் சொல்லியிருந்தால், அவரது அந்தரங்கத்தை அம்பலப்படுத்தியது தவறு.

சாமியார், பிரம்மச்சாரி என பீலா விட்டுக்கொண்டே இந்தத் திரைமறைவு வாழ்க்கையை வாழ்ந்ததற்குத் தண்டிக்கப்பட வேண்டும்.

நன்றி சிவா.ஜி அவர்களே...
நேற்று இரவுதான் தொலைக்காட்சியில் இதைப்பார்த்தேன்...உள்ளம் கொதித்தது...இந்தப்பதிவை பார்த்த பிறகு கொட்டிவிட்டேன்

அன்புரசிகன்
04-03-2010, 10:49 AM
தவறு எந்த மட்டத்தில் இருக்கிறது என்று ஆராயுங்கள்...

நான் கத்தாரிலிருந்து இந்தியாவுக்கு விசாவுக்கு அனுமதி கோரியபோது எத்தனை கேள்விகேட்டார்கள்... வெறுப்பின் உச்சிக்கு அழைத்துச்சென்றே அனுமதி கிட்டியது...

அண்மையில் நண்பன் ஒருவனின் திருமணத்தினை இந்தியாவில் நடத்துவதற்கு இலங்கையில் உள்ள பெற்றோரை இந்தியாவுக்கு அழைப்பதற்கு விசா அனுமதி கோரிய போது விசா நிராகரிக்கப்பட்டது. காரணம் அவர்கள் வன்னி பிரதேசத்து மக்கள் என்பதால். ஆனால் அவரது சொந்தக்காரர்கள் (அதே பிரதேசம்) அம்மா பகவானை தரிசிக்க என்று விசாவுக்கு அனுமதி கோரிய போது 2 மணித்தியாலங்களில் விசா அனுமதி கிட்டியது... (விடுதலைப்புலிகளை அழித்துவிட்டோம் என்று கூறியபின்பும்...)

இப்போ சொல்லுங்கள். எந்த மட்டத்திலிருந்து பிரச்சனை கிளப்பப்படுகிறது. இந்திய அரசாங்க அதிகாரிகளால் தானே விசா அனுமதிக்கான தருவிக்கப்படுகிறது... இதன் அர்த்தம் தான் என்ன??? இவற்றையெல்லாம் சன் செய்திகளின் கருத்துப்பார்வையில் படம் பிடித்து காட்டமாட்டார்களா??? இல்லை நக்கீரனின் கண்களுக்கு அகப்படவில்லையா???

அரசியல்வாதிகளின் அரசியலில் ஊழல்கள் இல்லையா??? பணத்திமிங்கிலங்களின் சொத்துச்சேர்ப்பில் அநியாயங்கள் இல்லையா??? அதற்காக நித்தியானந்தாவை வக்காளத்து வாங்குகிறேன் என்று இல்லை. பல விடையங்கள் கண்டும் காணாதது போலிருக்கும் இத்தகைய ஊடகங்களுக்கு இதில் மட்டும் வந்த அக்கறை ஏது...?

ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றல்கள் மறையாது... நித்தியானந்தா தான் முதலாவது கள்ளச்சாமியா??? இதுக்கு முன்னர் ஒருவரும் கைதுசெய்யப்படவில்லையா??? ஏன் மீதிச்சாமியார்கள் பிடிபடாது உள்ளார்கள்??? வலை விரிக்கவில்லையா??? இல்லை விரிக்க விருப்பமில்லையா???

பணத்தால் மேம்பட்ட சாமியார்கள் என்று அகப்படுவார்கள்???

பால்ராஜ்
04-03-2010, 11:56 AM
திருமணம் செய்து கொள்ளாமல் இல்லறம் (யாருடன் வேண்டுமானலும்) நடத்தினாலும் அவரை ப்ரம்மச்சாரி என்று கூறுவீர்களா...??
திருமணம் செய்த கணவன் மனைவி மட்டுமே "இல்லறம்" என்ற பரந்த நிலையை எய்த முடியும். இது இல்லத்துக்குள் நடப்பது.. படுக்கை அறை விஷயம் மட்டும் அல்ல. உறவுகளின் சங்கமம்.
மற்றவை... ஹி ஹி.. எக்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ்.. . அவ்வப்போது பலரும் 'அப்படி இப்படி'த்தான் இருப்பார்கள்.. திருமணமானவர்களும் சரி பிரம்மச்சாரிகளும் சரி.. ஒவ்வொருவர் தேவையைப் பொறுத்தது. சிலர் ரிஸ்க் எடுத்து மாட்டிக் கொள்ளுகிறார்கள்.. அங்குதான் பிரச்சினை. எத்தனையோ பேர் .. எல்லா துறைகளிலும் ... அரசியல், மருத்துவம், போலீஸ், திரைப்படம் .. இந்தக் கற்பின்மை இருக்கத்தான் செய்கிறது.;)


அவரது சிஷ்யர்களும் காவி உடை தான் உடுத்தி இருப்பர்(சன்னியாசம்)...
இது இயல்புதானே...! டாக்டர்களுக்கு, வக்கீல்களுக்கு, போலீஸ்காரர்களுக்கு எல்லோருக்கும் ஒவ்வொரு யூனிஃபாரம் இருப்பதுபோல சாமியார்களுக்கு காவி உடை ஒருவித சீருடை. காவிஉடை உடுத்தியவர்கள் காமத்தில் ஈடுபடக்கூடாது என்று எங்கும் சட்டம் கிடையாது. சில மதங்களில் குருக்கள், போதகர்கள், திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப் படுகிறார்கள். சில மதங்களில் மறுக்கப் படுகிறார்கள். ஆனால் எல்லா மதங்களிலுமே அங்கே இங்கே மடங்களில் கூட இசகு பிசகுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மருத்துவ மனைகள், காவல் நிலையங்கள் மட்டும் விதி விலக்கா என்ன.

ஒரு திரைப்படத்தில் விவேக் ஒரு காமராவை எடுத்துக் கொண்டு திரிவாரே.. அந்த மாதிரி ஒவ்வொருவரும் ஒரு காமராவை எடுத்துக் கொண்டு சுற்றினால் எக்கச்சக்கமான விஷயங்கள் அம்பலத்துக்கு வரக்கூடும்.

ஆனால் ஒரு அந்தரங்கத்தை, ஒரு தொலைகாட்சி சானலில் காண்பித்தது அநாகரீகமான .... பொறுப்பற்ற காரியம். பொது மக்களின் சீற்றத்தைக் கிளப்ப முடியுமே தவிர சட்டப்படி ஒரு மண்ணும் செய்ய முடியாது. சொல்லப் போனால் இதை ஒளிபரப்புச் செய்ததற்காக தொலைகாட்சி நிறுவனத்தை வேண்டுமானால் தண்டிக்க முடியும்... அவர்கள் ஆட்சியில் இல்லாத பட்சம்....

ஆதி
04-03-2010, 12:34 PM
//சொல்லப் போனால் இதை ஒளிபரப்புச் செய்ததற்காக தொலைகாட்சி நிறுவனத்தை வேண்டுமானால் தண்டிக்க முடியும்... //

இது முன்பே ஒரு பிரபலமான இதழுக்கு நடந்திருக்கு.. அந்த கோபம் இன்னும் அந்த இதழ் உரிமையாளரிடம் இருப்பதை நான் பல முறை கண்டிருக்கிறேன்..

அக்னி
04-03-2010, 12:55 PM
ஆனால் ஒரு அந்தரங்கத்தை, ஒரு தொலைகாட்சி சானலில் காண்பித்தது அநாகரீகமான .... பொறுப்பற்ற காரியம்.
அவர் காவி உடுத்தும்போது, அல்லது குளிக்கும்போது
காண்பித்திருந்தாற்தான் அது அந்தரங்கத்தை அம்பலமாக்கும் அநாகரீகமாகும்...

இது பட்டவர்த்தனமான ஏமாற்று.
துறவு நிலை என்ற உன்னதத்தையே கேவலப்படுத்தும் செயல்.

இதனைவிடவும் திருமணம் செய்த துறவியாக அவர் வாழ்ந்திருக்கலாம்.

இவரை மட்டும் காட்டியதுதான் ஊடகத்தின் பொறுப்பற்ற செயல்.

இவர் போன்ற அனைவரையும் வெளிச்சம்போட்டுக் காட்டி, மக்களுக்குப் பொறுப்பான சேவை செய்யுமா ஊடகம்...???

செல்வா
04-03-2010, 01:09 PM
இந்தத் திரியில் இதுவரை வந்திருக்கும் பதிவுகளினடிப்படையில் பார்க்கும் போது

ஆன்மீகம் என்றால் என்ன?
பிரம்மச்சர்யம் என்பது ஆன்மீகத்திற்கு தேவையா?
துறவு என்பது என்ன?

சன் தொலைக்காட்சியின் செயல் மனித உரிமை மீறலா?

நிதாயனந்தர் செய்தது தவறா?

போன்ற பல ஆரோக்கியமான அத்தியாவசியமான விவாதங்களுக்கு இடமிருப்பதாகத் தெரிகிறது..

ஏன் இத்தகயை ஒரு தெளிவானப் பார்வையுடன் நமது விவாதத்தை முன்னிறுத்தக் கூடாது?

தனித் தனித் திரிகளின் துணையுடன்.....

பால்ராஜ்
04-03-2010, 01:14 PM
இவர் போன்ற அனைவரையும் வெளிச்சம்போட்டுக் காட்டி, மக்களுக்குப் பொறுப்பான சேவை செய்யுமா ஊடகம்...???
ஹாஹ்ஹா...:lachen001: ஊடகங்கள் - பொறுப்பான சேவை...:aetsch013:
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் கூட இன்னும் சுலபமாக முடிச்சுப் போட்டு விடலாம்.

இன்றைய ஊடகங்கள்.. அதுவும் மின்னணு ஊடகங்களைப் போல மட்டமான ஊடகங்கள்.. இல்லாமல் இருப்பதே நல்லது.. 26/11-ஐ யாராவது மறக்க முடியுமா என்ன??

இத்தனையும் சொன்னாலும், கிளுகிளுப்பான பிட்-ஐ ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீர் என்று என் மகள் வந்ததும் அவசரமாக சானலை மாற்றினேன்... ஏன்...?? அடி மனத்தில் ஏன் விளக்கை அணைக்கிறார்கள் என்று கோபம் கூட வந்தது. அதுவும் சானலின் வர்த்தக வித்தையாக இருக்கலாம்...

ஆனாலும் 'துறவு' ... 'ஆன்மீகம்' .. 'பிரம்மச்சாரியம்' போன்ற வார்த்தைகளை எந்த அளவுக்கு குறுகிய அளவில் "மிஸ்டர் பொதுஜனம்" புரிந்து கொண்டிருக்கிறார் என்று நினைக்கும்போது துணுக்குற வைக்கிறது:icon_ush:

aren
04-03-2010, 01:14 PM
இது வெட்கப்படவேண்டிய விஷயம்.

இந்த விவாதத்தை இதுக்குமேல் நடத்த வேண்டுமா, எத்தனை சாமியார்கள் திருட்டுத்தனம் பண்ணி அம்பலமானது, அதுபோல் இதுவும் ஒன்று, இதே மாதிரி இன்னும் வந்துகொண்டுதான் இருக்கும், மக்கள் என்னமோ இனிமேலும் மாறப்போவதில்லை சீட்டுகம்பெனி மோசடி மாதிரி.

நமது நேரத்தையாவது நல்ல விஷயத்துக்காக செலவிடலாமே.

இதுக்கு மேல் நான் இந்தப் பக்கம் தலைவைத்தும் படுக்கமாட்டேன் என்று சொல்லிக் கொள்கிறேன்.

பால்ராஜ்
04-03-2010, 01:17 PM
ஏன் இத்தகயை ஒரு தெளிவானப் பார்வையுடன் நமது விவாதத்தை முன்னிறுத்தக் கூடாது? தனித் தனித் திரிகளின் துணையுடன்.....
ஆம்.. கொஞ்சம் க்ராஸ்டாக் ஆகி விட்டது.. ஆனால் நிர்வாகம் செய்தால் சிறப்பாக இருக்கும்..

செல்வா
04-03-2010, 01:30 PM
இது வெட்கப்படவேண்டிய விஷயம்.

இந்த விவாதத்தை இதுக்குமேல் நடத்த வேண்டுமா,

இப்படி ஒரேயடியாக ஒதுக்கிவிடக் கூடாது என நினைக்கிறேன் அண்ணா.

எத்தனைபேர் தங்கள் குழந்தைகளுக்கு ஒழுக்கம் என்றால் என்ன ?

ஆன்மீகம் என்றால் என்ன?

துறவு என்றால் என்ன?

அறவுணர்வு என்றால் என்ன என்பதைச் சொல்லி வளர்க்கிறோம்?

இங்கே சமுதாயத்திற்கு தேவையான முக்கியப் பிரச்சனையாக இது எனக்குப் படுகிறது.

இத்தனைப் படித்திருந்தும் இந்த வயதுவரை வாழ்ந்திருந்தும்

நித்யானந்தர் செய்தது தவறா?

சன் தொலைக்காட்சி செய்தது தவறா? என்ற கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை.

அவரவர் மனதிற்குத் தோன்றியதைச் சொல்கிறோம்.

ஆனால் இல்லறத்திற்கு வகுத்திருக்கும் ஒழுங்கைப் போல் நமது கலாச்சாரம் துறவறத்திற்கு ஏதாவது வகுத்திருக்கிறதா?

ஆன்மீகம் பற்றிய கேள்விகள் இந்தப் பிரச்சனை வழியாக நமது கலாச்சாரத்தின் முன்னே வைக்கப் படும் கேள்விகள்.

நம்மை நாமே தெளிவுபடுத்திக் கொள்கிறோம்.

இது வெட்கப்பட வேண்டிய விடயம் என்றால் எதற்காக வெட்கப் படுகிறீர்கள்...?

சன் தொலைக்காட்சியின் செயலுக்கா?

நித்யானந்தரின் செயலுக்கா?

இல்லை இருவரின் செயலுக்கா?

எது சரி ? எது தவறு ? என்பதை அடுத்து வரும் தலைமுறைக்கு யார் எடுத்துச் சொல்வது?

இத்தகைய விவாதங்கள் தான் இதை வாசிக்கும் பிறருக்கும் ஒருத் தெளிவைக் கொடுக்கக் கூடியது..

எனவே இது காலத்தின் தேவை கட்டாயம் என்பது எனது எண்ணம்.

ஸ்ரீதர்
05-03-2010, 03:49 AM
தமிழனுக்கு கிடைக்கவேண்டிய காவிரி தண்ணி கிடைக்கலே ! - டாஸ்மாக் தண்ணியிலே மூழ்கி இருக்கும் தமிழா உனக்கு என்ன காவேரி தண்ணி பத்தி கவலை?

விலைவாசி ஏறிப்போச்சு !! - அதான் ஒட்டு போட காசு கெடைக்குதே விலைவாசி பத்தி தமிழா உனக்கென்ன கவலை ?

வேலைவெட்டி இல்லை !!! - அதான் இலவச டிவி இருக்கே வேலை வெட்டி பத்தி தமிழா உனக்கென்ன கவலை ???

பெட்ரோல் விலை ஏறிப்போச்சு !!! எல்லா விலை யும் ஏறுமே அதப்பத்தி உனக்கென்ன கவலை இலவசமா அதையும் கேட்டா போச்சு !!

அம்மா , அப்பா , குடும்பத்தை கவனிக்கனுமே !!! அதைபத்தி நமக்கென்ன கவலை !! டிவி சீரியல் பாத்தா சந்தோசம் தானா வருது !

பிள்ளைகளை நல்லா வளர்க்கணுமே !! அதைபத்தி நமக்கென்ன கவலை சாமியார் லீலைகளை நாள் முழுவதும் டிவியில் பார்த்து நியாயம் பேசணுமே!

இந்த அளவு விவாதம் தேவையில்லாத விவகாரம் இது.


1) அப்பா அம்மாவை தவிர எந்த மனிதனும் கடவுள் இல்லை.

2) விளம்பரம் , இலவசம் இரண்டையும் நம்பாதே !

இதை follow பண்ணாலே போதுங்க!!! ஏமாறாமல் இருக்கலாம்.

Mano.G.
05-03-2010, 04:40 AM
மூட நம்பிக்கைகள் என்று (காரணமற்ற சடங்குகள்)
ஒழியுதோ அன்றுதான்,
பரிகாரம், புணஸ்காரம், சாங்கியம், சம்பிரதாயம்
இவைகளை செய்ய இடைத்தரகர்கள் (சாமியார்கள்)
இவர்கள் மூலம் தான் கடவுள் நேரடியாக வந்து இதை
செய் அதை செய் அதற்கு செலவு என
வயிறு வளர்ப்பவர்களை நம்பி, அவர்களை நாடி அவர்களை போல
மேலும் பலரை வளரவிடுபவர்களை தான் குறை கூறவேண்டும்.

இது சமய சீர்கேடா? இல்லை சமுதாய சீர்கேடா?

Akila.R.D
05-03-2010, 09:11 AM
@பா.ரா...

நீங்கள் அனைத்திற்கும் புது விளக்கம் அளித்துள்ளீர்கள்....

ஒரு மனிதனை எப்போது ப்ரம்மச்சாரி என்று சொல்லுகிறோம்...

குடும்பத்தில் மற்ற உறவுகளுடன் வாழ்ந்தாலும் தனக்கு என்று ஒரு துணையை தேடிக்கொள்ளாமல் 'அந்த' சுகத்தை மறுப்பவனே ப்ரம்மச்சாரி..

குடும்பத்தில் மற்ற உறவுகளுடன் வாழாமல் அனைத்து சுகங்களையும் துறந்து பணம்,பதவி என்ற போகங்களையும் துறந்து வாழ்பவரே துறவி, சன்னியாசி...

துறவரமும், சன்னியாசமும் இல்வாழ்கையில் வாழ்ந்த பிறகும் எய்த முடியும்... (எய்திய பின் அப்படி இப்படி எல்லாம் இருக்க மாட்டர்கள்)

ஆஞ்ஜனேயரையும் விவேகானந்தரையும் ப்ரம்மச்சாரி என்று சொல்லும் நம்மல் எப்படி நித்யானந்தாவை ப்ரம்மச்சாரி என்று கூற முடியுமா?.....

நித்யானந்தாவை துறவி என்று கூறினால் ராகவேந்திரரை என்னவென்று கூறுவீர்கள்?...

காவி உடை ஒரு சீருடை என்று கூறினீர்கள்...

மருத்துவம் படித்தவர் வெள்ளை நிற சீருடை அணிந்து மருத்துவர் ஆனர்...

இவர் ஆன்மீகத்தை பேசுவதால் காவி உடை உடுத்தினார்...

ஒரு மருத்துவர் நடிகையுடன் இருந்த காட்சி வெளிவந்து இருந்தால் நாட்டில் இவ்வளவு புரட்சி நடந்திருக்காது...அது அவரது தனிப்பட்ட விஷயம்..

ஆனால் அதே மருத்துவர் ஒரு நடிகை தனக்கு நிம்மதி இல்லை என்று கூறியதால் அந்த நடிகையின் சம்மதத்துடன் அவரை கொன்றால் அது குற்றம் இல்லையா?..

ஒரு காவல் துறை அதிகாரி கைதி தனக்கு நிம்மதி இல்லை என்று சொன்னதால் அவனை விடுதலை செய்தால் அது குற்றம் இல்லையா?..

துறவி என்று தன்னை காட்டிக்கொண்டு அவர் செய்த இழி செயலும் மேற்கூறிய குற்றங்களுக்கு சமமானது..

ஒவ்வொரு சீருடைக்கும் ஒரு கண்ணியம் உண்டு...அதைகூட நித்யானந்தா காக்கவில்லயே(வீடியோ பார்த்தவர்களுக்கு புரியும்)..

சன் டி.வி செய்தது சரி என்று நான் சொல்லவில்லை...
அது கண்டிப்பாக வியாபார நோக்கத்துடன் தான் செய்யப்பட்டது..

அவர்கள் வீடியோவை வெளியிடாமல் நித்யானந்தா ஒரு நடிகையுடன் இருந்தார் என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா இல்லை நான்தான் நம்பி இருப்பேனா?..

அவர்கள் தனக்கு கிடைத்த செய்தியை மக்களுக்கு ஆதாரத்துடன் காட்டியுள்ளார்கள்..அவ்வளவே..

richard
05-03-2010, 12:06 PM
http://3.bp.blogspot.com/_Qpq24bUd4mY/S41cN8cwuXI/AAAAAAAAAGc/PUPWkBB_neQ/s320/Swamy-Nithyananda-scandal-video.jpg


போலி ஆன்மீகம் என்பது இன்றைய தினத்தில் மிகவும் இலாபகரமான, முதல் போட தேவையில்லாத தொழில்.

”கதவைத்திற... காற்று வரட்டும்..!” என்று ஊருக்கு உபதேசம் செய்து புத்தகம் எழுதிய நித்தியானந்தரிடம் ”கதவைத்திற.. காவல்துறை வரட்டும்..!” என்று தான் எனக்கு இப்போது சொல்ல தோன்றுகிறது..!!

ந்த்யானந்தம் தவிர நீங்களத்தனை பேரும் உத்தமர்கள்தானா கொஞ்சம் சொல்லுங்கள்

பதிவுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு அவரைப்பற்றி அநியாயத்துக்கு,பதிவுலகமே ஸ்தம்பித்து போகும் அளவுக்கு அடுக்கடுக்கான பதிவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

ஏறிவிட்ட விலைவாசி குறித்து பாராளுமன்றத்தில் ஏழுமணி நேரம் விவாதம் செய்ததைப் போல சரி நம் பதிவுலகில் அவர் செய்தது சரிதான்...,"இல்லை அவர் செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது", "பாவம் அந்த நடிகை!" என்றெல்லாம் பல கோணங்களில் விவாதம்.

அப்படி பரபரப்பாயிருக்கும் நித்யானந்தா பற்றி வலயுலக பதிவர்கள் என்ன சொல்கிறார்கள்?

இங்கே பல பதிவர்கள் எழுதிய எழுத்துகளில் ஒரு சிலரின் தொகுப்பு.

உண்மை தமிழன்

நித்தி இனி ஒதுக்கப்பட்டவர்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த மனிதரை நேசித்தக் குற்றத்திற்காக ரஞ்சிதா இனி வாழ்க்கை முழுவதும் தன்னை எப்படி வைத்துக் கொள்ளப் போகிறார் என்பதுதான் தெரியவில்லை. நித்தி செய்த குற்றத்திற்காக அவருடைய காவி உடையைப் பறித்துவிடலாம். ரஞ்சிதாவிற்கு மீடியாக்கள் இழைத்த கொடுமைக்காக அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்..?
தொடர்ந்து படிக்க... http://truetamilans.blogspot.com/2010/0 ... z0hEWvQh6K

கடந்த இரண்டாம் தேதி இரவு எட்டரை மணிமுதல் கோடம்பாக்கத்தில் யாருக்கும் உறக்கமில்லை. எப்படி இப்படி நடந்தது என்று இரவு முழுவதும் போன் போட்டு அழுதவர்கள், இப்போதுவரையிலும் அதையேதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

திரையுலகம் மட்டும்தான் என்று நினைத்தேன். வலையுலகத்தில் நான் எதிர்பார்த்தது போலவே இதைத் தவிர முக்கியம் வேறில்லை என்பதைப் போல் ஒரே சமயத்தில் ஒரே சம்பவத்தை வைத்து பதினைந்து பதிவுகள் தமிழ்மணத்தின் முகப்பில் நின்றது என்றால் அது நிச்சயம் இந்தப் பிரச்சினைக்காகத்தான்.


எப்போதடா சமயம் கிட்டும் என்று காத்துக் கொண்டிருந்தவர்கள் பக்தியின் மீது, கடவுள் மீதும், அந்த நம்பிக்கை மீதும், சாமியார்கள் மீதும், அவர்களது பிரதான பக்தர்களின் மீதும், கடைநிலை பக்தர்கள் மீதும் பாய்ந்து குதறியெடுத்துவிட்டதை நினைத்து இனிமேல் இந்தப் பிரச்சினையில் எழுதுவதற்கு எதுவுமே இல்லை என்றாகிவிட்டது.

ஆனாலும் இந்த விஷயத்தில் நமது தரப்புக் கருத்தைச் சொல்லாவிட்டால் பின்னாளில் நாட்டுப் பிரச்சினைகள் எதையும் பொதுவில் வைத்து வாதாடும்போது உனக்கென்ன உரிமை இருக்கிறது என்கிற கேள்வி எழ வாய்ப்பு உண்டு என்கிற காரணத்தினால் விருப்பமே இல்லாமல் இந்தப் பதிவு.

காமம் மனிதர்களைக் கொல்லத்தான் செய்கிறது. எவ்வளவு செல்வாக்கு படைத்த மனிதர்களும் இதை வெல்ல முடியாமல் கடைசியில் தோற்றுத்தான் போயிருக்கிறார்கள். இதைத்தான் கடவுளர் வரலாறுகளும், தேசங்களின் வரலாறுகளும், ஒரு சமான்யனின் வரலாறுகளும் வருடக்கணக்காக சொல்லி வருகின்றன. ஆனாலும் சாதாரண மக்களுக்கு தங்களிடம் அதன் மீதிருக்கும் ஒரு மரியாதை கலந்த பயத்தையும், விருப்பம் கலந்த வெறுப்பையும் நீக்க முடியவில்லை.

நித்தியானந்தம் என்கிற தனி நபரும், ரஞ்சிதா என்கிற பெண்மணியும் கலந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு இது என்கிற பட்சத்தில் இது இருந்திருந்தால், தற்போது இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் லட்சணக்கணக்கான அந்தரங்க வீடியோக்களில் ஒன்றாக இதுவும் போய்விட்டிருக்கும்.

மாறாக தன்னையொரு அவதாரப் புருஷனாகவும், மக்களுக்கே அறிவுரை சொல்லும் மகானாகவும், ரட்சிக்க வந்த புனிதராகவும் காட்டிக் கொண்டதால்தான் நித்தியானந்தம் இன்றைக்கு தலைகாட்ட முடியாமல் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல வேண்டியிருக்கிறது.

அவரால் முடிந்தது.. போய்விட்டார். ஆனால் அவரைத் தொழுதவர்கள் அன்றைய இரவு முதல் பட்டபாட்டை அவர் நிச்சயம் உணர்ந்திருக்க மாட்டார். கவுதம புத்தர் தோரணையில் நித்தியானந்தம் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை பலரது வீடுகளின் வரவேற்பறையில் பார்த்திருக்கிறேன். இப்போது போனால் நிச்சயமாக அது குப்பைக் கூடைக்குள்தான் இருக்கும்.

திரையுலகில் கோவைசரளாவும், நடிகர் விவேக்கும் இவரது பிரதான சீடர்கள். தயாரிப்பாளர் 'சத்யஜோதி' தியாகராஜன் இவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்து புண்ணியத்தைத் தேடிக் கொண்டதாகச் சொல்கிறார்கள். பல பிரபலங்களுக்கு மத்தியில் இப்படி குருவாக இருந்தவர் தனக்குத்தானே குழியைத் தேடிக் கொண்டார் என்றால், அதற்குக் காரணம் அவரது வயதுதான். இளம் வயதில் பெயரும், புகழும், பணமும், அளவற்ற செல்வாக்கும் கிடைத்தால் எது நடக்குமோ அதுதான் இவருக்கும் நடந்திருக்கிறது.

ஏதோ நம்மைத்தான் இந்தப் பிரச்சினை தாக்கியிருக்கிறது என்றில்லை. தமிழ்நாடு முழுக்கவே நிலைமை இதுதான். டீக்கடையில் இருந்து பெட்ரோல் பங்க்வரையிலும் அனைவரின் முகத்திலும் ஒரு நக்கல் சிரிப்பு. அடுத்தவர்களின் அந்தரங்கம் உலகத்தில் அத்தனை பேருக்குமே எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது பாருங்கள்..?

நித்தியானந்தம் ஒரு சாமியார் என்கிற ரீதியிலேயே கவனிக்கப்பட்டுவிட்டாலும் அவருக்குள் இருந்த இயற்கையான, இயல்பான மனித குணம் இல்லாமல் போயிருக்காது. ஆனால் அதற்காக அவர் அதனைப் பயன்படுத்தியவிதமான அந்த காவி உடையை அணிந்து அந்தச் செயலில் ஈடுபட்டிருக்கக் கூடாது என்பதும் ஒரு புறும் இருக்கட்டும்.. இந்தச் செயல் எதற்காக, எப்படி வெளிப்பட்டது என்பதையும் ஒருபுறம் பாருங்கள்..

பல்வேறு மீடியாக்களுக்கும் குறிப்பாக குமுதம் பத்திரிகைக்கும் இந்தச் செய்தி டிவிடியுடன் ஒரு கோரிக்கை கடிதத்துடன் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்தக் கடிதத்தில் இடம் பெற்றிருக்கும் வாசகங்களைப் படிக்கின்றபோது இந்தச் செயலில் பங்கு கொண்ட மூன்றாமவரும் நிச்சயம் ஒரு பெண்ணாகத்தான் இருக்க முடியும் என்கிறார்கள் அதனை வாசிக்க வாய்ப்புக் கிடைத்த பத்திரிகையாளர்கள்.

நீண்ட வருடங்களாக தனக்கும், நித்தியானந்தத்திற்கும் இடையில் இருந்த நெருங்கிய நட்பை உடைத்தெறிந்துவிட்டு புதிய நட்பை உருவாக்கிக் கொண்ட ரஞ்சிதாவின் மேல் கோபம் கொண்டுதான் அந்த பெண் அவர்கள் இருவருக்குமே தெரியாமல் இதனை ரிக்கார்டு செய்து மீடியாக்களுக்கு அனுப்பியிருக்கிறார் என்பது பலரது அனுமானம். அந்தப் பெண்ணை கிட்டத்தட்ட ஸ்மெல் செய்துவிட்ட பத்திரிகையாளர்கள் விரைவில் அந்தப் பெண்ணின் பெயர் போட்டு கவர்ஸ்டோரி எழுதுவார்கள் என்று நினைக்கிறேன்.

போடலாமா வேண்டாமா என்றெல்லாம் பலரும் தங்களது அலுவலகத்தில் யோசித்துக் கொண்டிருக்க பல்வேறு டிவிக்களின் செய்தி ஆசிரியர்களும் இரவு 9 மணியோடு கடைசி புல்லட்டின்னை முடித்துவிட்டு கிளம்பிவிடுவார்கள் என்பதை யூகித்து இரவு நேரத்திலேயே சப்தமில்லாமல் வெளியிட்டுள்ளார்கள் சேனல்காரர்கள்.

அதுவும் துணை முதல்வர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவின் நேரடி ஒளிபரப்பு கலைஞர் டிவியில் முடிகின்றவரையில் காத்திருந்து அதன் பின்புதான் ஸ்கிரால் நியூஸே ஓடத் துவங்கியது. அப்போதிலிருந்தே சேனல்காரர்கள் நினைத்ததுபோல தமிழ்நாடே பரபரக்கத் துவங்கியது.

ஒளிபரப்பு செய்யப்படுவதற்கு முன்பாகவே நித்தியானந்தத்தை தொடர்பு கொண்டு இது பற்றிக் கேட்கப்பட்டு அவர் அதனை மறுத்து அது தன்னுடையதல்ல என்று சொன்ன பின்புதான் ஒளிபரப்பியுள்ளார்கள். இதனால்தான் நேற்று மதியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தம் தரப்பினர் ஒளிபரப்புக்கு தடைகோரியபோது ஸ்டே ஆர்டரை கொடுக்க நீதிபதியும் மறுத்துவிட்டாராம்.

நான் அந்த வீடியோவை பார்த்தபோது ஒரு 32 வயது வாலிபனும், அவன் மீது தாளாத காதல் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிற்குமான உணர்ச்சிக் குவியலைத்தான் பார்க்க முடிந்தது. எனது பக்கத்துவீட்டுப் பெண்கள் "புருஷனுக்குக்கூட எந்த பொம்பளையும் இவ்வளவு மரியாதையா கால் பிடிச்சுவிட மாட்டாங்க.." என்று கிண்டல் அடித்தார்கள். அவர்களுடைய பார்வை எப்படிப்பட்டது என்பதைப் பாருங்கள்..

நடந்ததெல்லாம் ஒரு நிகழ்வு என்று சொல்லிவிட்டுப் போக இங்கே யாருக்கும் மனமில்லை. காரணம் அவர் ஒரு சாமியார்.. சாமியார் பெண்ணுடன் சம்போகிக்கலாமா என்கிறார்கள். அதனால் நித்தியின் உடலை இரண்டாகப் பிளந்ததுபோல் அத்தனை பேரின் கோபச் சொல்லாடல்கள் அவரைத் துளைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் இதற்கெல்லாம் தகுதிகள் யாருக்கு உண்டு..? அந்தக் காட்சிகளை ஒளிபரப்பிய அந்தத் தொலைக்காட்சி சேனலுக்கு முதலில் இருக்கிறதா..? இந்தக் காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஃபிரேமுக்குக் கீழேதான் தீராத விளையாட்டு பிள்ளை என்கிற நடிகைகளின் திவ்ய தரிசனத்தை முழுமையாகக் காட்டிக் கொண்டிருக்கும் திரைப்படத்தின் விளம்பரம் ஓடியது.

அதே தொலைக்காட்சியில் எத்தனையோ நிகழ்ச்சிகளில் காட்டப்படுகின்ற காட்சிகள் எதுவும் நித்தியும், ரஞ்சிதாவும் இருந்த காட்சிகளுக்குக் குறைந்ததல்ல.. வெறுமனே கட்டில் அறை காட்சிகள் மட்டும்தான் ஆபாசமா..?

பத்தாண்டுகளுக்கு முன்பாக 'மெட்ரோ பிரியா' என்றொரு தொகுப்பாளினி பற்றிய ஒரு விளம்பரம் அதே தொலைக்காட்சியில் ஓடியது.. பாலங்கள், சாலைகள், போக்குவரத்து நெரிசல்கள் அனைத்தையும் கடந்து ஓடி வருகிறார்கள் இரண்டு பெரியவர்கள். அரக்கப் பறக்க ஓடி வரும் அவர்கள் ப்ரியாவின் எதிரில் வந்தமர்ந்தவுடன் அதில் ஒருவரின் வாயில் இருந்து உமிழ்நீர் அப்படியே கொட்டிக் கொண்டேயிருக்கும். கேட்டால் இது அந்த ப்ரியா என்றொரு பெண்ணிற்காக தமிழ்நாடே காத்துக் கொண்டிருப்பதை உணர்த்துவது போன்ற கான்செப்டாம்..

அடுத்து திடீரென்று ஒரு ஜட்டி கம்பெனி லம்பமாக ஒரு தொகையைக் கொடுத்து அனைத்து நிகழ்ச்சிகளின் இடையிலேயும் தங்களது உலகப் புகழ் பெற்ற ஜட்டியைக் காட்டச் சொன்னது.. காட்டினார்கள்.. எப்படி..? ஒரு ஆண் கட்டிலில் படுத்திருப்பார்.. கான்செப்ட்டின் டயலாக்குகள் முடிந்தவுடன் சடாரென்று தனது ஜிப்பைத் திறந்து பேண்ட்டை முட்டி வரையிலும் கீழிறக்கி ஜட்டியைக் காண்பிப்பார். அப்படியே ஜட்டி மீது லோகோ வந்து நிற்க.. விளம்பரம் முடியும்.. இப்படிப்பட்ட அற்புதமான காட்சிகளையும் அள்ளித் தெளித்ததுதான் இந்த சேனல்.

இவர்கள் என்றில்லை.. இப்போது அனைத்து மீடியாக்களுமே சிற்றின்பத்தை மையமாக வைத்துதான் தங்களை வளர்த்துக் வருகின்றன. இந்த சிற்றின்பத்தில் அடுத்தக் கட்டமான 'பெரிய' இன்பத்தையும் இவர்கள் நட்ட நடு இரவில் சில வருடங்கள் தொடர்ந்து காட்டிக் கொண்டுதான் இருந்தார்கள்..

'சூர்யா' டிவியில் சனிக்கிழமை இரவு 12 மணிக்கு ஷகிலா நடித்த மலையாளப் படங்களையும் காண்பித்தார்கள். தமிழக சட்டப்பேரவைவரையிலும் இந்த விஷயம் பேசப்பட்டு தாத்தா வழக்கம்போல பேரன்கள் பக்கமே பேச.. இனி போடுவதற்கு படங்கள் கிடைக்காததால் அது அப்படியே நின்று போனது. ஆனாலும் வசந்த் தொலைக்காட்சியில் இப்போது இந்த அரிய சேவையை மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் எதைவிடக் குறைந்துபோய்விட்டது நித்தியின் இந்த உறவு..?

இந்த வெளியீட்டீன் மூலம் நித்தியானந்தத்தை குதறியெடுக்கும் பலரும் உடன் காட்சியளிக்கும் அந்தப் பெண் ரஞ்சிதாவை ஏன் நினைத்துப் பார்க்கவில்லை?

கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு டைவர்ஸ்.. திரைப்படங்களில் முன்புபோல் நடிக்க வாய்ப்பில்லை.. சின்னத்திரையிலும் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநரிடமே மோதல் ஏற்பட்டு அங்கிருந்தும் விலக வேண்டிய நிர்ப்பந்தம்.

இப்படி எல்லா இடத்திலும் பிரச்சினைகள் என்று வந்த பிறகு ஒரு மன அமைதி வேண்டி அவர் சென்றடைந்த இடம் அது. அங்கே ஏற்கெனவே அமைதி வேண்டி வந்திருந்த மனிதர்களில் ஒருவரோடு ஒருவராக இருந்திருக்க வேண்டியவர், நித்தியுடன் ஒட்டிக் கொண்டதுதான் இப்போது இந்தளவுக்குக் கொண்டு வந்துவிட்டுள்ளது.

இதனைத் தவறு என்று நான் சொல்ல மாட்டேன். அவர் அந்த வீடியோவில் நடந்துகொண்டிருக்கும் விதத்தினைப் பார்க்கின்ற போது எந்த அளவிற்கு நித்தி மீது அவருக்கு இருக்கும் காதலையும், மரியாதையையும் புரிந்து கொள்ள முடிகிறது. நிச்சயம் அது ஏதோ ஒருவித செட்டில்மெண்ட்டுக்காக நடத்தப்பட்டவிதமாக இல்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ரஞ்சிதா நித்தியை முழுமையாக நம்பியிருக்கிறார். ஆனால் இப்போது அவரது நிலைமைதான் பரிதாபமாக இருக்கிறது. இனி அவர் எப்படி வெளியுலகில் தயக்கமில்லாமல் நடமாட முடியும்..? எத்தனை கேள்விகளுக்கு அவரால் பதில் சொல்ல முடியும்..? கேள்விகள் அனைத்தும் தார்மீக ரீதியாக வருமா..? 'அந்தக்' காட்சிகளை மையமாக வைத்துதானே கேள்விகள் பறந்து வரும். அதற்கு ஒரு பெண்ணால் எப்படி பதில் சொல்ல முடியும்..?

ரஞ்சிதாவின் பொருட்டாவது இந்த வீடியோவை வெளியிடாமல் இருந்திருக்கலாம்.. கண் மூடித்தனமான பக்தியும், காதலையும்தான் அந்தப் பெண் அந்த வீடியோவில் காண்பித்திருக்கிறார். ஒரு கணவருக்கும், மனைவிக்குமான உறவு போல இருந்த அவற்றை இப்படி பகிரங்கப்படுத்தியிருப்பதில் காணாமல் போயிருப்பது நமது நாகரிகமும் சேர்ந்துதான்.

நித்தியின் உடன் இருந்தவர்களின் பொறாமையும், பயமும் அந்தப் பெண்ணையும் இப்போது பலி வாங்கிவிட்டது. இது பல மாதங்கள் நீடித்திருக்கும் நட்புதான் என்று உறுதியாகச் சொல்கிறது ஆசிரம வட்டாரம்.

உரிமையாக நித்தியின் படுக்கையறைக்குள் நுழையும் அளவுக்கு செல்வாக்கையும், தகுதியையும் உடைய ஒரு பெண் திடீரென்று வந்துசேர்ந்த ரஞ்சிதாவால், நித்தியை சந்திக்க முடியாத அளவுக்குப் போய் அந்தக் கோபத்தில்தான் வீடியோ கேமிராவை நித்திக்கும், ரஞ்சிதாவிற்குமே தெரியாத அளவுக்கு மறைத்து வைத்து படம் பிடித்திருக்கிறார் என்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.

நித்தி இன்றைய செய்தியின்படி ஹரித்துவாருக்கு சென்றிருக்கிறார். உண்மையாக அவர் நாளை அலகாபாத்தில் நடக்கும் ஒரு கும்பமேளாவில் பல சாமியார்களுக்குத் தலைமை தாங்கி பூஜை நடத்த வேண்டுமாம். இருக்கின்ற குழப்பத்தில் அங்கே அவர் சென்றால், அவருக்கே பூஜை நடத்திவிடுவார்கள் என்பது உறுதி.

வீடியோவை வெளியிட்டவர்கள் சாமியாரின் சல்லாபம் என்றே குறிப்பிடுவதும் மிக நகைச்சுவையான ஒன்று.. இவர்களது சேனல்களில் நிமிடத்துக்கொருமுறை காட்டப்படுகின்ற சினிமா பாடல் காட்சிகளில் இருப்பது மட்டும் என்ன என்பதை இவர்கள் விளக்கிச் சொன்னால் தேவலை.

அதோடு அந்த வீடியோவின் காட்சிகளுக்கேற்ப 'சிருங்கார ரசம்' சொட்டும் சினிமாப் பாடல்களைச் சேர்த்து வெளியிட்டிருக்கும் அற்பபுத்திக்காரர்களை எதை வைத்து அடிப்பது..? யார் இவர்களைக் கண்டிப்பது..? எப்படி கண்டிப்பது என்று தெரியவில்லை. நிச்சயமாக அது ஸ்பாட் ரிக்கார்டிங் அல்ல. எடிட்டிங் டேபிளில் இணைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகப் புலனாகிறது.

மற்றபடி சேனல்காரர்கள் என்ன நினைத்தார்களோ அது அப்படியே நடந்து கொண்டிருக்கிறது.. தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் இருக்கும் நித்தியின் ஆசிரமங்கள் தாக்கப்பட்டுள்ளன. அவருடைய புகைப்பட போஸ்டர்கள் கிழித்து எறியப்பட்டுள்ளன. அவருடைய புகைப்படங்கள் எரிக்கப்பட்டுள்ளன. பெங்களூரில் இருக்கும் தலைமை அலுவலகமும் தாக்கப்பட்டுள்ளது.

இவ்வளவுக்குப் பின்பும் "இது ஒரு கிராபிக்ஸ் வேலை.. நாங்கள் இதனை சட்டரீதியாக அணுகுவோம். நித்தி சாமி ஒரு தவறும் செய்யாதவர்.." என்று இன்னொரு சாமி பேட்டியளித்திருக்கிறார். உடன் போலீஸார் இருந்ததால் தப்பித்திருக்கிறார்.

நேற்று மட்டும் முகத்தை மார்பிங் செய்துவெளியிட்ட சேனல் இன்றைக்கு அப்படியே வெளியிட்டது. அதோடு அவர்கள் ரஞ்சிதாவின் புகைப்படத்தையும் பயன்படுத்திக் கொண்டார்கள். 'உதயா' தொலைக்காட்சியில் ரஞ்சிதா நடித்த ஒரு நெருக்கமான காதல் காட்சியையும், அவரைக் கற்பழிக்க முனையும் காட்சியையும் போட்டுக் காண்பித்து இவர்தான் ரஞ்சிதா என்கிறார்கள். இதுவா ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கும் முறை..? இதற்கு நித்தி, காவி உடை அணிந்து காதலியுடன் ஒன்றாக இருந்ததில் ஒன்றும் தவறில்லையே..?

எந்தவிதத்திலும் இந்த விஷயத்தில் நித்தியானந்தத்தை கண்டிக்க யாருக்கும் தகுதியில்லை என்பது எனது தாழ்மையான கருத்து. ஒரு விரல் அவரைக் குற்றம் சுமத்தினால் மற்ற நான்கு விரல்களும் நம்மைத்தான் காட்டுகின்றன. அவர்கள் நடத்தியது சல்லாபம் என்றால் அடுத்தவர்களின் சல்லாபத்தை உச்சுக் கொட்டி பார்த்த நம்முடைய செயலை என்னவென்று சொல்வது..?

முதல் முறையாக அந்தக் காட்சிகளைப் பார்த்தபோது ரஞ்சிதாவாக இருக்காது என்றுதான் நினைத்தேன். ஆனால் 'நக்கீரன்' இணையத் தளத்தில் முழுமையாகப் பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்துதான் போனேன். நான் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அடுத்தடுத்த முறைகள் பாஸ்ட் பார்வேர்டும், ரிவர்ஸுமாக மாற்றி மாற்றிப் பார்த்ததில் பாதி நித்தியானந்தமாக நானே மாறிவிட்டேன். பின்பு எனக்கு எங்கே இருக்கிறது கண்டிக்கின்ற தகுதி..?

இல்லை. எங்களுக்கு இருக்கிறது என்றால், உங்களது வாழ்க்கையை கொஞ்சம் புரட்டிப் பார்த்துக் கொள்ளுங்கள். ஏதோ ஒருவிதத்தில் ஒரு நோக்கில் நீங்களும் இந்தக் காமத்தை எதிர்கொண்டிருப்பீர்கள். அல்லது தெரிந்தும், தெரியாததுபோல் இருந்திருப்பீர்கள். யாரோ ஒரு நித்தியானந்தமோ அல்லது ரஞ்சிதாவோ உங்களுக்குத் தெரிந்தவர்களாக இருந்திருக்கலாம். ஆனால் அப்போது மெளனமாக இருந்த நீங்கள், இப்போது இவர்கள் என்றவுடன் வெளிப்படையாகக் கொட்டுகிறீர்கள் என்றுதான் அர்த்தம்.

வலையுலகில் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் பற்றி பதிவர்கள் எழுதிய விமர்சனத்தில் அத்தனை பேரும் அட்சரப் பிசகாமல் சொன்ன ஒரு வாக்கியம் "ரீமாசென்னின் உடல் மொழி அசத்தல்" என்பது. ஆனால் படத்தைப் பார்த்தபோதுதான் அந்த உடல்மொழியை எப்படி பதிவர்கள் கண்டுகொண்டுள்ளார்கள் என்பது புரிந்தது. அடிப்படையே காமம்.. அத்தனை காமக்கண்ணோட்டத்தோடு ரீமாசென்னை அணு, அணுவாக ரசித்துத் துடித்த அந்த ரசனைதான், இன்றைக்கு இரு உடல்கள் இசைவோடு இணைந்திருப்பதை குற்றமாக பார்க்கிறது. விந்தையாக இல்லை..?

நித்தியானந்தம் செய்த ஒரே தவறு அவர் சாமியாராக இருப்பதுதான். தன்னை பின்பற்று என்று அவர் சொல்லியிருக்கும்பட்சத்தில் அதை தீர ஆராயாமல், யோசிக்காமல் பின்பற்றியிருக்கும் தொண்டர்களைத்தான் நாம் கண்டிக்க வேண்டும்.

ரஞ்சிதாவை இப்போது நினைத்துப் பார்த்து வருத்தமடையும் என் மனம் அந்த வீடியோவில் பார்க்கின்றபோது அவருடன் சேர்ந்து களியாட்டம் ஆடியதை நான் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். பின்பு நான் எப்படி "இதுவொரு சாமியாரின் சல்லாபம்" என்று கண்டிக்க முடியும்..?

இணையத்தில் இன்றைய தேதிவரையில் இது போன்று நித்தியானந்தங்களும், ரஞ்சிதாக்களும் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களில் சிலரை அவ்வப்போது நாம் பார்த்து ரசிப்பதுண்டு.. 'காஞ்சிபுரம் தேவநாதன்' வீடியோக்களை தேடித் தேடிப் பார்த்த அனைவரும் அவன் மீது வழக்குப் போடவா பார்த்தார்கள்? இல்லையே.. என்ன நடந்தது என்பதற்காகத்தான் என்று மனசில் சல்ஜாப்பு சொல்லிக் கொண்டாலும் அதில் இருந்த காமத்தின் ஈர்ப்பை யாராலேயும் மறுக்கமுடியாது.

நித்தியானந்தம் துறவற வாழ்க்கைக்குத் தகுதியானவர் இல்லை என்று சொல்வதற்குக்கூட எனக்குத் தகுதியில்லை. அது மாதிரியான கணக்கிலடங்காத வீடியோக்களை திரையரங்கத்தின் இருட்டு மூலையிலும் கணிணியின் உதவியாலும் பார்த்துப் பார்த்துச் சலித்துப் போயிருக்கும் என் மனது "நீயே ஒரு நித்தியானந்தம்தான். அவருக்கு வாய்ப்புக் கிடைத்து செய்திருக்கிறார். நீயும் அவர் நிலையில் இருந்தால் அதைத்தான் செய்வாய்.. இனி முடிவெடுக்க வேண்டியது நித்திதான். என்ன செய்ய வேண்டும் என்று அவருக்குத் தீர்ப்பு சொல்ல வேண்டியது நீயல்ல.." என்று கூப்பாடு போடுகிறது.

அவருடைய செயல் ஒரு கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து பிறண்டதுதான். இந்தக் கட்டுப்பாட்டை மீறியை செயலை செய்யாதவன் எவனும் உலகத்தில் இருக்க முடியாது என்பதே எனது கருத்து. நான் ஒரு காலத்தில் கை நீட்டி சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை பார்த்த இடத்தில் அந்த நிர்வாகத்தின் தயாரிப்பையும், அதன் பொருட்களையுமே பார்க்காதீர்கள்.. வாங்காதீர்கள்.. கண்டுகொள்ளாதீர்கள் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தேன். இது எவ்வளவு பெரிய தவறு..? ஆனால் தனியொரு மனிதனாக நான் செய்தது சரி.. இப்படிப்பட்ட குழப்பம்தான் நமக்குள் இப்போதும் இருந்துவருகிறது.

பல கட்சிக்காரர்களின் அனுதாபிகளும் வலையுலகில் இருப்பார்கள். அவர்களைக் கேட்டுப் பாருங்கள். அவர்கள் கட்சியிலும் இப்படிப்பட்ட ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும் அவர்களைப் பொருட்படுத்தாமல் கட்சிதான் முக்கியம் என்று நினைத்து கொள்கைகளில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நித்தி கட்சிக்காரர் இல்லையே.. கட்சியில் இருந்துகொண்டு கொள்ளையடிப்பவனைப் பற்றிக் கவலைப்படாத சிலர்தான், காவி உடையை மட்டும் தனி கவனம் கொண்டு பறந்து வருகிறார்கள். ஏனெனில் அவர்களும் கட்சிக்காரர்களே..

வலையுலகத்தில் நித்தியானந்தத்திற்கு அடுத்து அதிகமாக சாடப்பட்டுள்ளவர் சாருநிவேதிதா. அவர் செய்த தவறு அவரும் நித்தியை அதீதமாக நம்பியதுதான். மனிதர்களை கடவுளாக்கினால் என்ன நடக்கும் என்பதை இப்போது அவரும் உணர்ந்திருக்கிறார் போலும். ஆனால் அதனை வெளிப்படுத்த நினைத்து அவர் எழுதியிருக்கும் கட்டுரையைப் படித்தபோது வேதனையாக இருந்தது.

தான் தமிழ் மொழியின் குறிப்பிடத்தக்க எழுத்தாளன். என்னை வறுமையால் வாட வைத்து வேடிக்கை பார்க்கிறது இச்சமூகம் என்றெல்லாம் பொங்கியெழும் சாரு இப்போதைய கட்டுரையில் பயன்படுத்தியிருக்கும் சில வார்த்தைகளைப் பார்க்கின்றபோது நிச்சயமாக இவர் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமான எழுத்தாளராகவோ, குருவாகவோ, வழிகாட்டியாகவோ இருக்க சிறிதும் தகுதியில்லாதவர் என்றே சொல்லத் தோன்றுகிறது.

இப்படியொரு எழுத்தினை தமிழில் பதிவு செய்யப்படுவதற்கு எந்தவிதத்திலும் தமிழ் மொழி உதவாமலேயே இருந்து தொலைந்திருக்கலாம் என்கிற ஆதங்கம்தான் எனக்குள் தோன்றுகிறது.

இன்றைய வாரமே சாமியார்கள் வாரமோ என்று சொல்லக் கூடிய அளவுக்கு புலனாய்வு பத்திரிகைகள் அத்தனையிலும் சாமியார்களின் நடவடிக்கைகள் பற்றியச் செய்திகள்தான் பிரதானம். டெல்லியில் ஒரு சாமியார் விபச்சார விடுதியே நடத்தியிருக்கிறார். திருச்சி அருகே ஒரு சாமியார் கடவுளின் வரம் கிடைத்த வாழைப்பழத்தை பெண் பக்தர்களுக்கு வாயாலேயே டிரான்ஸ்பர் செய்கிறாராம்.. எங்கேயிருந்துதான் இப்படியெல்லாம் கிளம்புகிறார்கள் என்று தெரியவில்லை.

கல்கி ஆசிரமத்தில் உருண்டை வடிவத்தில் தரப்படும் பிரசாதத்தில் ஏதோ ஒரு மயக்க மருந்து இருக்கிறது. அதை வைத்து எங்களது பிள்ளைகளை கடத்துகிறார்கள் என்ற புகார் நீண்ட வருடங்களாகவே இருந்துவருகிறது. திவாரியின் அக்கப்போர் லீலைகளை அம்பலப்படுத்தியே அதே டிவி சேனல், நேற்றைய முன்தினம் கல்கி ஆசிரமத்திற்குள் நடக்கும் ஓஷோ ஸ்டைல் விஷயங்களை வெளிப்படையாக்க.. அங்கேயும் பிரச்சினைகள்.. கலவரங்கள்..

இந்து மதம் வேரோன்றியிருக்கும் இந்திய நாட்டில் சாமியார்களுக்கும், கடவுள்களுக்கும் பஞ்சமில்லாமல் இருப்பதும், மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளும் பெரிது, பெரிதாக வளர்ந்து கொண்டேயிருப்பதும்தான் இதற்குக் காரணம்.

மூன்று வேளையும் சாப்பிட்டே தீர வேண்டும் என்கிற கட்டாயமும், அப்படி சாப்பிட்டதையும் வெளியில் அனுப்பித்தான் தீர வேண்டும் என்கிற நிர்ப்பந்தமும் உள்ள மனித உடலைத் தாங்கிய எவரும் இங்கே கடவுளர் இல்லை என்பதை சராசரி மனிதர்கள் புரிந்து கொள்ளவே மறுக்கிறார்கள். மொழி இந்த சாமியார்களது நாவில் அரசியல்வியாதிகளைவிடவும் அபாரமாக விளையாடுவதுதான் சாமான்யர்களை கவர்ந்திழுக்கக் காரணம்.

ஆறுதல் தேடி கோவிலுக்கு ஓடி வரும் மனிதர்கள் பாரத்தை அங்கே இறக்கி வைத்துவிட்டு அமைதியாக பெருமூச்சுடன் வீடு நோக்கிச் செல்லலாம், இதுவும் கடந்து போகும் என்ற நினைப்பில்.. என்னைப் போலவே..

ஆனால் ஒரு சிலர்தான் இப்படியொரு குறுக்குச் சந்தில் நிற்கும் ஒருவரிடம் உபதேசம் கேட்டு வாழ்க்கையைத் திசை திருப்பிக் கொள்ளலாம்.. மனதை அமைதிப்படுத்திக் கொள்ளலாம் என்றெல்லாம் நினைத்து அங்கே போய் சிக்கிக் கொள்கிறார்கள். மீள்வது சுலபம்தான் என்றாலும் இங்காவது தனக்கு நல்லதொரு ஆறுதல் வார்த்தைகள் கிடைக்கிறதே என்பதால்தான் அவர்கள் மீள்வதில்லை.

குடும்பங்களில் சோகங்களும், சோதனைகளும் ஏற்படத்தான் செய்யும். அத்தனைக்கும் நாம் வருத்தப்பட்டுக் கொண்டே அப்படியே அமர்ந்திருந்தால் வந்த நோய் வாசலைத் தாண்டிப் போகாது. வீட்டுக்குள்தான் இருக்கும். இருப்பதை விரட்டுவதற்கும் அவரவர்க்கு போதிய சக்தியைக் கொடுக்கத்தான் செய்திருக்கிறான் ஆண்டவன். நமக்குள்ளேயே நம்மிடையையே, நம்மின் அருகிலேயே தீர்வுக்கு வழி இருக்கிறது என்பதை நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

இவருடைய தப்பினால் இவர்கள் மேற்கொண்ட கடவுள் பக்தி என்பது பொய்யாகிவிடாது. எவன் ஒருவன் அனுபவத்தால் இறைவனை உணர்ந்தானோ, அவனே உண்மையான பக்தன். வெறும் வார்த்தைகளாலும், கோஷங்களாலும், பஜனைகளாலும், பாடல்களாலும் இறைவனை நீங்கள் அணுகவே முடியாது. இது நன்கு படித்த மனிதர்களுக்கே புரியாமல் போகிறது.

பக்தி என்பது கடவுளிடம் பக்தன் காட்டுகின்ற தீவிரத்திற்கு மட்டுமல்ல.. கட்சியின் உண்மையான தொண்டனாக இருப்பவன் காட்டுவதும் பக்திதான். உழைக்கின்ற இடத்தில் முழுமையான அர்ப்பணிப்பு நோக்கத்துடன் உழைப்பவன் வெளிப்படுத்துவதும் பக்திதான். குருவின் பேச்சைத் தட்டாமல் செய்து முடிக்கும் சிஷ்யனிடம் உள்ளதும் பக்திதான். இந்த பக்திக்கு மதச் சாயமோ, இனச் சாயமோ தேவையில்லை என்பது எனது கருத்து.

நித்தி இனி ஒதுக்கப்பட்டவர்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த மனிதரை நேசித்தக் குற்றத்திற்காக ரஞ்சிதா இனி வாழ்க்கை முழுவதும் தன்னை எப்படி வைத்துக் கொள்ளப் போகிறார் என்பதுதான் தெரியவில்லை. நித்தி செய்த குற்றத்திற்காக அவருடைய காவி உடையைப் பறித்துவிடலாம். ரஞ்சிதாவிற்கு மீடியாக்கள் இழைத்த கொடுமைக்காக அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்..?


http://truetamilans.blogspot.com/

http://oruvaarthai.blogspot.com/2010/03 ... st_04.html

http://writervisa.blogspot.com/2010/03/ ... st_04.html

http://truetamilans.blogspot.com/2010/0 ... z0hEWvQh6K

http://mathavaraj.blogspot.com/2010/03/ ... st_04.html

http://pitchaipathiram.blogspot.com/201 ... st_04.html

http://kismath.blogspot.com/2010/03/blog-post.html

http://osaichella.blogspot.com/2010/03/blog-post.html

பால்ராஜ்
05-03-2010, 02:01 PM
இந்த அளவு விவாதம் தேவையில்லாத விவகாரம் இது.

நிச்சயமாக ஒத்துக் கொள்ள வேண்டிய உண்மை.. ஹி ஹி.. .. தற்போதைக்கு வேறு வேலை இல்லாததால்.. கொஞ்சம் ஆழமாக வாத விவாதங்களில் ஈடுபடுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன்..

நண்பர் ரிச்சர்டுக்கு ஒரு ஷொட்டு.. எம்மாம் பெரிய பதிப்பு...:icon_ush: ஆனால் பல சுட்டிகளும் வேலை செய்யவில்லை


அவர்கள் தனக்கு கிடைத்த செய்தியை மக்களுக்கு ஆதாரத்துடன் காட்டியுள்ளார்கள்..அவ்வளவே..

கிடைத்ததா? யாராவது போட்டுக்கொடுத்தார்களா?? ஆதாரமா?? பகுத்தறிவுடன் சிந்தித்தால் பல கேள்விகளும் எழும்:D


இது வெட்கப்படவேண்டிய விஷயம்.
இதைவிட வெட்கக்கேடான விஷயங்கள் இடைத்தேர்தல்களில் நடந்துள்ளன.. எங்கே சென்றன இந்த ஊடகங்கள்...??

வானதிதேவி
05-03-2010, 02:20 PM
முதலில் பார்த்து பின் அதிர்ந்து அருகில் மகன் இருக்கின்றானே இவ்வளவுமா காட்டுவார்கள் என முகம் சுளிக்க வைத்தது.மீண்டும் செய்தியை பார்க்க மனம் வரவில்லை.அவர்களுடைய அந்தரங்கம் என்றாலும் சமுதாயத்தில் எல்லோராலும் மதிக்கப்படுகிற மனிதர் இவ்வாறு நெறி பிறழலாமா என்ற வேதனை தான் எழுந்தது.

Ravee
05-03-2010, 03:41 PM
நாட்டுப்புறத்தில் சொல்வார்கள் செம்மறிஆடு வாலை ஆட்டும் போது வெள்ளாடு சொல்லுமாம் அதன் பின்புறத்தை பார்த்து அய்யே அசிங்கம் அசிங்கம் என்று , வெள்ளாட்டின் வால் எப்போதும் வானத்தை பார்த்து தூக்கி இருப்பதை மறந்து . இங்கே மனிதர்கள் அடுத்தவரை குற்றம் சொல்லும் போது மற்ற மூன்று விரல்கள் அவர்களின் மார்பை நோக்கி காட்டுவதை உணர்வதில்லை . ரிச்சர்டின் இந்த மாறுபட்ட கண்ணோட்டத்தை நான் ஆதரிக்கிறேன் .

சத்தியஜித்ரே இயக்கிய தேவி படம்தான் என் நினைவுக்கு வந்தது. ( தமிழில் தெய்வ வாக்கு என்று வந்தது) . ஊரே கடவுளாக பார்த்தாலும் தனக்குள் இருக்கும் சாதாரண ஆசைகளை அடைய துடிக்கும் மனது. இது நித்தி விசயத்தில் பல படிகள் கிழே இறங்கி போய் விட்டது. நம்ம ஊரு பெரிய மனிதர்கள் வீட்டு படுக்கை அறையில் இப்படி ரகசிய கேமரா பொருத்தினால் நூற்றுக்கு தொன்னூத்தி ஒன்பது பேர் ஒழுக்கம் இல்லாமல்தான் இருப்பார்கள் . இங்கே காவி உடையில் இந்த அசிங்கம் தேவை இல்லை . அப்படியே காமம் தேவை என்று இருந்தால் இவர் கல்யாணம் பண்ணிக்கூட தன கருத்துக்களை பரப்பி இருக்கலாம் .

இவைகள் ஒன்றும் இன்றைக்கு நடக்கும் விசயங்களும் இல்லை. வள்ளுவன் காலத்திலேயே இப்படி அசிங்கங்கள் இருக்க போய்தான் மாற்றான் மனை சேருவதை பற்றியும் குறள் எழுதி சென்றார் . நம் மக்கள் அசிங்கங்களை தேடி செல்வதிலும் , அசிங்கங்களை பற்றி பலமணிநேரம் பேசவும் கவலை படுவதில்லை. தான் நாளை அசிங்கப்பட போகிறோம் என்ற உணர்வும் இருப்பதில்லை.

வாழ்ந்து காட்டிய மனிதன் தொலைந்து போனான் , சீர்கெட்டு போன ஒரு ஜோடிகளை காண வந்த கூட்டத்தில் .

ஓவியன்
05-03-2010, 03:52 PM
வாழ்ந்து காட்டிய மனிதன் தொலைந்து போனான் , சீர்கெட்டு போன ஒரு ஜோடிகளை காண வந்த கூட்டத்தில் .

’நச்’ ரவீ..!! :icon_b::icon_b::icon_b:

ஸ்ரீதர்
06-03-2010, 05:49 AM
நெத்தியடி பதிவு ரிச்சர்ட்.....

rajarajacholan
06-03-2010, 12:12 PM
நானும் நெனச்சேன், என்னாடா, ஆப்ட்ரால் மனுசன்.. பாவம் குமுதம்


( தணிக்கை செய்யப்பட்டது - இளசு)

இதை ஏன் தனிக்கை செய்திருக்கீங்கனு தெரிஞ்சுகலாமா?

பால்ராஜ்
07-03-2010, 04:44 AM
இந்த வார பூச்செண்டு ..'குமுதம்' பத்திரிக்கைக்கு...!
எதுவுமே நடக்காதது போல்... அடுத்த அத்தியாயம்..

தூசு போல் தட்டி விட்டு தொடரும் அந்தப் பக்குவத்துக்கு வாழ்த்துக்கள்!!

பின்னர் சேர்த்தது....
130ஆம் பக்கத்தில் பேச்சு வாக்கில் ஒரே ஒரு வாக்கியம்.. "பிரதமரே ஜொள்ளு விடும்போது சாமியார்கள் அப்படி இப்படி இருக்கக் கூடாதான்னு இனிமே தைரியமாக் கேக்கலாம்" என்று வருகிறது.. பிரதமர் என்று குறிப்பிடுவது இத்தாலியைப் பற்றி...:lachen001:

govindh
07-03-2010, 01:50 PM
கதவைத் திறந்தார் சாமியார்...
கரன்சி வந்து நின்றது..
காமமும் வந்து கொன்றது..!

அமரன்
07-03-2010, 09:17 PM
இந்தப் பூவுலகில் வாழ்கின்ற கற்பிழந்தவர்களில் ஒருவர் நித்தியானந்தா அவர்கள். அவ்வளவே...! அவரை நம்பியோர் அதிகமானதால் விடயம் பெரிதாக்கப்பட்டு விட்டதாக உணர்கிறேன்...

என்னவன் விஜய்
07-03-2010, 09:50 PM
பல நாட்களின் ஹீரோ, ஒரே நாளில் ஜீரோ

ஆனாலும் ஒரு தனி மனிதனின் அந்தரங்கத்தை கொஞ்சம் ஓவராகவே படம்ப்பிடித்து விட்டார்கள் என்றுதான் மனம் வருந்துகிறது.

இந்த இளம் வயதிலே அவர் போதிக்கும் பாடங்களையும், அவரிடம் குடிக்கொண்டு விட்ட அந்த ஆன்மீக ஞானத்தையும் யார் என்ன செய்ய முடியும்!!!

இனி அவர் ஒரு தெளிந்த ஞானியாகலாம்.

xavier_raja
08-03-2010, 10:00 AM
கதவை திற கற்று வரட்டும் என்ற தொடர்கதை "குமுதத்தில்" வந்ததில்லை. அது தொடராக வந்தது "ஆனந்த விகடனில் "

ஜனகன்
08-03-2010, 04:57 PM
நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பதாக கூறப்படும் நபர் நான் இல்லை நித்தியானந்தா மறுப்பு
நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது போன்று வெளியாகியுள்ள வீடியோவில் இடம் பெற்றிருப்பது சுவாமி நித்தியானந்தா இல்லை என்று அவரது மடம் கூறியுள்ளது.
http://www.tamilmantram.com/vb/photogal/images/7388/large/1_nithi.jpg

இது எந்தளவுக்கு உண்மையென்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இளசு
08-03-2010, 05:45 PM
இதை ஏன் தணிக்கை செய்திருக்கீங்கனு தெரிஞ்சுகலாமா?

நண்பர் ராஜராஜசோழன் அவர்களே..

உங்கள் பதிவில் இரண்டு, மூன்று சொற்கள் குறித்து சில உறுப்பினர்கள் கவனம் ஈர்த்தனர். எனவே அந்த சொற்கள் அகற்றப்பட்டன.

உங்கள் புரிதல், ஒத்துழைப்புக்கு நன்றி.

rajarajacholan
09-03-2010, 06:05 AM
நண்பர் ராஜராஜசோழன் அவர்களே..

உங்கள் பதிவில் இரண்டு, மூன்று சொற்கள் குறித்து சில உறுப்பினர்கள் கவனம் ஈர்த்தனர். எனவே அந்த சொற்கள் அகற்றப்பட்டன.

உங்கள் புரிதல், ஒத்துழைப்புக்கு நன்றி.

ஓ அப்பாடியா நன்றி. ஆனா அப்படி ஏதும் தப்பா நான் எழுதிடலன்னு நினைக்கிறேன்.

பால்ராஜ்
09-03-2010, 11:18 AM
கதவை திற கற்று வரட்டும் என்ற தொடர்கதை "குமுதத்தில்" வந்ததில்லை. அது தொடராக வந்தது "ஆனந்த விகடனில் "

அது தொடர் கதை அல்ல.. ஒரு விதமான அறிவுரைத் தொடர் என்றுதான் கூற வேண்டும். குமுதத்தில் தான் வந்துகொண்டிருக்கிறது

கடைசி குமுதத்திலும் உள்ளது. இனி வருமா என்பது சற்று கேள்விக்குறியே!

ஓவியன்
09-03-2010, 11:23 AM
கடைசி குமுதத்திலும் உள்ளது. இனி வருமா என்பது சற்று கேள்விக்குறியே!

ஹா, ஹா..!!

குமுதம் விட்டாலும் நம்ம பா.ரா இந்த திரியினை விடுற மாதிரித் தெரியலையே..!! :D:D:D

ஆதி
09-03-2010, 11:24 AM
அது தொடர் கதை அல்ல.. ஒரு விதமான அறிவுரைத் தொடர் என்றுதான் கூற வேண்டும். குமுதத்தில் தான் வந்துகொண்டிருக்கிறது

கடைசி குமுதத்திலும் உள்ளது. இனி வருமா என்பது சற்று கேள்விக்குறியே!

குமுதம் ரிப்போட்டரில் சாரு தொடர்கிறார்.. அதை பற்றி.. :D :D :D

xavier_raja
10-03-2010, 12:21 PM
குமுதம் ரிப்போட்டரில் சாரு தொடர்கிறார்.. அதை பற்றி.. :D :D :D


சாரு அந்த தொடரை எழுதுவதை விட்டுவிட்டார், இப்பொழுது அவரின் blogil நித்யானந்தாவை கிழிகிழி என்று கிழிக்கிறார்.

cmn_raj
11-03-2010, 03:59 AM
சாருவின் ப்ளாக் எது என்று சொல்லுங்களேன்

இன்பா
14-03-2010, 05:26 PM
எல்லோரைப் போல நாமும் யோசிக்க கூடாது,

நித்தியானந்தா ஒரு மகானும் அல்ல, அவதார புருஷனும் அல்ல, அவரும் சாதரண மனித உணர்சிகளால் சூழப்பட்ட மனிதர் தான்.

இந்த விடயத்தில் ஆதனுடன் உடன் படுகிறேன்.

பூஜை அரையில் வைத்து கும்பிடுவதும், நடுரோட்டில் வைத்து நாயைப் போல அடிக்க வேண்டும் என்று இரண்டு விளிம்பிற்கே சென்று யோசிக்கும் மக்களுக்கு இன்னும் கொஞ்சம் பக்குவம் வேண்டும்.

வேடிக்கையான இன்னொரு விசயம், அவரது சீடர்கள் அடிக்கியே வாசிக்கிறார்கள், ஆனால் இதுவரை அவர் யார் என்ன செய்திருக்கிறார் என்று கூட தெரியாமல் இருந்தவர்கள் டெலிவிசனை பாராட்டியும், நித்தியானந்தாவை இகழ்ந்து தள்ளுகிறார்கள்.

தவறு என்றால் எல்லாம் தவறு தான்? நான் யோக்கியவானா? என்று நம்மில் எத்தனை பேர் யோசித்திருப்போம், நிலைமை இப்படியிருக்க ஒரே நாளில் நித்தியானந்தா குற்றவாளியாகவும், அவரை சாடி பேசியவர்கள் விவேகர் என்று மாறியிருப்பது தான் நகைப்பிற்குறியது. இதை யாரேனும் மறுத்தால் அதில் அவரின் எழுத்துத் திறமை மட்டும் தெரியுமே தவிர உண்மை இருக்காது.

இவர்களை நினைத்தால், "தான் உடைத்தால் மண் சட்டி, மருமகள் உடைத்தால் தங்க சட்டி" இந்த முதுமொழி தான் நினைவுக்கு வருக்கிறது.

தன்னிடம் உள்ள திறமைகளால் நித்தியானந்தா பிசினஸ் செய்தார், என்றால் அவர் வளர்ச்சியை கண்டு மாட்டிவிட்டவர் நோக்கம் உயர்ந்ததோ சிறந்ததோ இல்லை. மீடியா செய்தது தவறு தான் என்றாலும் இந்த உண்மை வெளிவர காரணமாக அமைந்தது பாராட்டப் பட வேண்டியது தானே என்று கூறுபவர்களுக்கு, "ஏன் அவர் சொத்தும், சுகபோகங்களை மட்டுமா அனுபவித்தார்", அவரும் நல்ல விசயங்கள் செய்திருக்கிறாரே என்ற கோணத்தில் யோசிக்க வேண்டும் என்ற பக்குவம் சிறிதாவது வேண்டாமா?

கீழ் கண்ட பதிவை எப்படி எடுத்துக் கொள்வது தனிமனித அந்தாங்கத்தை விமர்சிக்க கூடாது, ஆனால் துறவி என்ற சொல்பவர் அதற்கேற்றார் போல் ந்டந்துக்கொள்ள வேண்டும்.

எவ்வளவு முறன்பாடுகள், ஒழுக்கம் என்பது எல்லோருக்கும் ஒன்றே, அது துறவியானாலும் சாதாரண மனிதனானாலும்.

சாட வேண்டும் என்பது எனது குறிக்கோள் அல்ல, புரிந்துக் கொள்ளவோம் என்ற ஆதங்கம்.


ஒரு தனி மனிதனின் அந்தரங்கத்தை விமர்சிக்க நமக்கு அனுமதி இல்லை...

ஆனால் தன்னை ஒரு ப்ரம்மச்சாரி என்றும் சன்னியாசி என்றும் கூறிக்கொண்டு,
தனக்கு கீழ் இருப்பவர்களையும் துறவறம் ஏற்க சொல்லி இருப்பவர் இவ்வாறு செய்வதுதான் தவறு....

ஒரு சிந்தனையாளர் தன்னை ப்ரம்மச்சாரி என்று சொல்லிக்கொண்டுதான் ஆன்மீகத்தை பற்றி பேச வேண்டும் என்ற அவசியம் இல்லையே...
இல்லற வாழ்வில் இருப்பவர் பகவத்கீதை கருத்தை கூறினாலும் நாம் ஏற்போம் அல்லவா?..

அவர் ஆன்மீகதை பற்றி பேசுவதும் தவறு இல்லை... நடிகையுடன் இருந்ததும் தவறு இல்லை...

தன்னை சன்னியாசி, சாமியார், ப்ரம்மச்சாரி என்று மக்களிடம் சொல்லிக்கொண்டு இவ்வாறு நடந்து கொண்டதுதான் தவறு...

விக்ரம்
14-03-2010, 05:58 PM
எல்லோரைப் போல நாமும் யோசிக்க கூடாது,

நித்தியானந்தா ஒரு மகானும் அல்ல, அவதார புருஷனும் அல்ல, அவரும் சாதரண மனித உணர்சிகளால் சூழப்பட்ட மனிதர் தான்.

இந்த விடயத்தில் ஆதனுடன் உடன் படுகிறேன்.


நானும் உங்களிருவருடன் உடன்படுகிறேன்.

but ஒரு வித்தியாசமான உடன்படுதல், இனிமே நித்தியா "நான் ஒரு அவதார புருஷன்" என்றோ (அ) "பிரம்மாச்சாரி" என்றோ எங்காவது புரடா விட்டுத் திரிந்தால், அவன்(ர்)-ஐ செருப்பைக் கழட்டி அடிக்க வேண்டும் என்று மனதில் திட்டிக் கொண்டு உடன்படுகிறேன்.

இவ்வாறு, ஒவ்வொருவரும் உடன்பட்டால், அரசியல் போன்று ஆன்மீகமும் ஆகிவிடும் என்பதையும் புரிந்து கொண்டு உடன்படுகிறேன்.

முப்பது வருடங்களுக்கு முன்னர், தவறு செய்த அரசியல் வாதியைக் கண்டால் வெறுப்பு தோன்றும், ஆனால் இப்போது லஞ்சமும், களவாணித் தனமும் அரசியல்வாதியின் முக்கிய அம்சமாகிவிட்டது.

அதுபோல், இப்போது சாமியார்களை கண்டும் காணாமல் போய்விட்டால், இருபது வருடங்கள் கழிந்தால் ஆன்மீகமும் தற்போதைய அரசியல் போல சாக்கடையாகிவிடும்.

எல்லாப் புகழும் ஒருவனுக்கே....
அதுவும் நித்தியாவுக்கே...

அமரன்
14-03-2010, 09:40 PM
வாங்க விக்ரம்!

உங்கள் கருத்தையும் இங்கே மிகவும் எதிர்பார்த்தேன்.

திருவாளர் நித்தியானந்தா செய்தது தவறா சரியா என்பது ஒரு புறம் இருக்கட்டும்.

அவரால் சமூகத்தில் ஏற்பட்ட நல்லது கெட்டவைப் பட்டியலிடுவோம்.

எது அதிகமாக உள்ளதோ அதை இந்த ஒளிவீச்சு எந்த அளவில் பாதிச்சிருக்கு என்பதையும் ஆய்வு செய்வோம்.

சமூகத்தில் இவரை விட மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை பொருந்திய துறைசார் நெறி பிறழ்ந்தவர்கள் எத்தனை பேருள்ளனர் என்பதையும் அவதானிப்போம்.

கடைசியாக எதுக்கு முக்கியத்துவம் குடுக்க வேணும் என்று முடிவு செய்வோம்.

தூயவன்
15-03-2010, 03:36 AM
பாவம் ஐயா அந்த மனிதர் விட்டுவிடுங்கள்.

(இப்படி பல இடங்களில் அவரை பற்றி பேசி google Search இல் மனிதரை முதல் இடத்தில கொண்டு வந்து விட்டோம்) :aetsch013::aetsch013:

இன்பா
15-03-2010, 03:51 AM
அது தான் தவறு விக்கி,

ஒருவர் தான் ஒரு அவதார புருஷர் என்று சொல்லிக்கொண்டால், நம்பிவிடும் நாம் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தான் சொல்ல வருகிறேன். சந்தையில் வாங்காத பொருள் விலை குறைந்து அழுகிவிடுவது போல அவர் என்ன தான் விளம்பரம் செய்துக்கொண்டாலும் அவரால் பிசினஸ் செய்ய முடியுமா?.

சட் என்று எந்த முடிவுக்கும் வந்துவிடாதீர்கள், ப்ரம்மசரியம் என்பது கற்பு அல்ல, இழந்துவிட்டால் அந்தப் பட்டம் போய்விடுவதற்கு, இனிமேலும் பிரம்மச்சரியத்தை கடைபிடித்தால் அவர் பிரம்மச்சாரிதான். இனிமேல் உண்மையான துறவியாக அவர் வாழ முடிவெடுத்து வாழ்ந்தால் அவர் துறவிதான்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் நமக்குள்ளாக எதையும் முடிவு செய்துவிட முடியாது, உண்மை என்பது ஒன்றே ஒன்று தான், அதை என்ன என்று ஆராய்ந்தே நமது கடமை. என்று கருதுகிறேன்.

அமரன் அண்ணா சொல்வதுப் போல எது சரி எது தவறு என்று முடிவு வருவதற்கு முன், அவரால் சமூகத்து என்ன நல்லது என்ன கெட்டது விளைந்திருக்கிறது என்று பட்டியலிடுவோம்.


நானும் உங்களிருவருடன் உடன்படுகிறேன்.

but ஒரு வித்தியாசமான உடன்படுதல், இனிமே நித்தியா "நான் ஒரு அவதார புருஷன்" என்றோ (அ) "பிரம்மாச்சாரி" என்றோ எங்காவது புரடா விட்டுத் திரிந்தால், அவன்(ர்)-ஐ செருப்பைக் கழட்டி அடிக்க வேண்டும் என்று மனதில் திட்டிக் கொண்டு உடன்படுகிறேன்.

இவ்வாறு, ஒவ்வொருவரும் உடன்பட்டால், அரசியல் போன்று ஆன்மீகமும் ஆகிவிடும் என்பதையும் புரிந்து கொண்டு உடன்படுகிறேன்.

முப்பது வருடங்களுக்கு முன்னர், தவறு செய்த அரசியல் வாதியைக் கண்டால் வெறுப்பு தோன்றும், ஆனால் இப்போது லஞ்சமும், களவாணித் தனமும் அரசியல்வாதியின் முக்கிய அம்சமாகிவிட்டது.

அதுபோல், இப்போது சாமியார்களை கண்டும் காணாமல் போய்விட்டால், இருபது வருடங்கள் கழிந்தால் ஆன்மீகமும் தற்போதைய அரசியல் போல சாக்கடையாகிவிடும்.

எல்லாப் புகழும் ஒருவனுக்கே....
அதுவும் நித்தியாவுக்கே...

ஆதி
15-03-2010, 07:39 AM
சாருவுடைய வரிகளை அப்படியே வெட்டி ஒட்டுகிறேன்..

//இப்போது நித்யானந்தரை விமர்சிக்கும் எல்லோரும் ஒரு விஷயத்தை விட்டு விடுகிறார்கள். அல்லது, அதைக் காணத் தவறுகிறார்கள். நித்யானந்தரிடம் ஒரு பெரும் சக்தி இருக்கிறது. அவரால் புற்றுநோயை குணப்படுத்திக் கொண்டவர்கள் பலரை நான் நேரில் சந்தித்திருக்கிறேன். தன்னுடைய அளப்பரிய சக்தியை வைத்துக் கொண்டுதான் அவர் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார். அவர் உருவாக்கிய நித்ய தியான் என்ற தியானத்தைச் செய்தால் நமக்கு எந்த ஆரோக்கியக் குறைவும் ஏற்படாது. அதற்குக் காரணம், அவர் அதையெல்லாம் உருவாக்கியது பதஞ்சலியின் யோக சூத்திரத்திலிருந்துதான்//

இதே கருத்தை முன்வைத்தே என் முதல் பதிவின் ஆரம்ப வரி இருக்கும்.. ஆனால் தெளிவாக நான் எழுதவில்லை...

விக்ரம்
15-03-2010, 02:58 PM
வாங்க விக்ரம்!

உங்கள் கருத்தையும் இங்கே மிகவும் எதிர்பார்த்தேன்.
எப்போது ஒருவன், தான் ஒரு கடவுள் என்றோ (அ) கடவுளின் பிரதிநிதி என்று சொல்கிறானோ அப்பவே அவன் புருடா விடுறான், "இன்னும் எத்தன பேருடா கிளம்புவீங்க"னு தான் யோசிப்பேன்.

ஆனா தான் ஒரு கடவுள் என்று சொல்பவரே, "பலான, பலான மேட்டர்.." செய்யும் போது தான், அவர் பின்னால் போன (அ) போகிற அப்பாவி ஜனங்களை நினைத்து வருத்தப் படத் தோணுது.

என்னைப் பொருத்த வரையில், நித்தியா ஒரு சாதாரண மனிதர் தான், எனக்குள்ள ஆசா, பாசங்கள் அனைத்தும் "அவருக்குள்ளும் இருக்கு".

அவர் செய்தது எல்லாம் சட்டப்படி தப்பே இல்லீங்கோ... ஆனா தர்மப்படி தப்பு தானுங்களே..

ஆனால், அவரை நம்பி அவர் பின்னால் போன ஆத்மாக்களின் நிலை தான் இப்போது கேள்விக்குறி... அவர்களுக்கும் என்ன, இன்னிக்கு நித்தியா போனாருனா, நாளைக்கு ஒரு சத்தியாவோ (அ) வெற்றியாவோ வருவாரு..

நம்ம யாருக்காக காட்டுக் கத்து கத்துவோமோ, அவங்களே மீண்டும், மீண்டும் புதைக் குழிக்குள் சென்று படுத்துக் கொள்ளும் நிலை இருக்கும் போது, கத்துறவனின் நிலைமையும் கேள்விக்குறியாகிடும், அதனால் தான் இதுவரை கருத்துக் கூறவில்லை.


திருவாளர் நித்தியானந்தா செய்தது தவறா சரியா என்பது ஒரு புறம் இருக்கட்டும்.

அவரால் சமூகத்தில் ஏற்பட்ட நல்லது கெட்டவைப் பட்டியலிடுவோம்.
ஒரு பக்கெட் நிறைய பால் ஊத்தி, அதுல கொஞ்சம் விஷம் கலந்திடுச்சுனா, அதை தூர வீசுவோமா (அ) கெட்டுப் போன பாலில் டீ காய்ச்சி குடிப்பமானு யோசிக்கனும் அமரன்.


சமூகத்தில் இவரை விட மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை பொருந்திய துறைசார் நெறி பிறழ்ந்தவர்கள் எத்தனை பேருள்ளனர் என்பதையும் அவதானிப்போம்.

கடைசியாக எதுக்கு முக்கியத்துவம் குடுக்க வேணும் என்று முடிவு செய்வோம்.
நான் யாரையும் ஏமாத்தமாட்டேன், யாரிடமும் ஏமாறவும் மாட்டேன். "எவனோ எப்படியோ போனா நமக்கென்ன"னு போகிற பத்துப் பேர்வழிகளில் நானும் ஒருவன் தான்.

நித்தியாவை எதிர்த்து கருத்து பதிந்தவர்கள், அனைவரும் டைம் பாசுக்கு எழுதுபவர்கள் தான். இணையத்தைப் பொருத்தவரை கருத்தோ, செய்தியோ முக்கியமில்லை.


அவர் உருவாக்கிய நித்ய தியான் என்ற தியானத்தைச் செய்தால் நமக்கு எந்த ஆரோக்கியக் குறைவும் ஏற்படாது. அதற்குக் காரணம், அவர் அதையெல்லாம் உருவாக்கியது பதஞ்சலியின் யோக சூத்திரத்திலிருந்துதான்
நித்ய தியான் மூலம் நித்தியாவுக்கே பயனில்லை, அவரே "உரலுக்குள் சிக்கிய எலி ஊசலாடுகிற நிலைமை"யில் இருக்கும் போது, மக்களுக்கு எப்படி பயன்படும் என்ற சாதாரண விஷயம் கூட சாருக்குத் தெரியலையே, ஆதன்.

நம்பிக்கை ஒரு மருந்து தான், அதுவே மாமருந்தில்லை. எப்படியாயினும், அடுத்தவர்களின் நம்பிக்கையை கிண்டல் பண்ணி எள்ளி நகையாடக் கூடாது, என்பதில் கவனமாய் இருக்கிறேன், ஆதன்.

சாருவும், நித்தியாவும் ஒரே ரகம் தான். இங்கே சாருவைப் பற்றி பேசி நேரத்தை வீணாக்கவோ, திரியை திசை திருப்பவோ முயலவில்லை.

உண்மை என்பது ஒன்றே ஒன்று தான், அதை என்ன என்று ஆராய்ந்தே நமது கடமை. என்று கருதுகிறேன்.

சர்சைக்குரிய வீடீயோ பொய்யாகவும் இருக்கலாம் என்று இன்னமும் நம்புகிறீர்களா இன்பா??

இன்பா
15-03-2010, 05:49 PM
நான் ஒரு ufo பார்த்தேன், அது மெக்சிகோவின் மேல் பறந்து சென்றது. :D


சர்சைக்குரிய வீடீயோ பொய்யாகவும் இருக்கலாம் என்று இன்னமும் நம்புகிறீர்களா இன்பா??

பால்ராஜ்
16-03-2010, 08:05 AM
சர்சைக்குரிய வீடீயோ பொய்யாகவும் இருக்கலாம் என்று இன்னமும் நம்புகிறீர்களா இன்பா??

இன்பா நம்புகிறாரோ இல்லையோ.. எனது கண்ணோட்டதில் அது பொய்யாக இருக்கலாம் என்ற ஆழ்ந்த ஐயம் எழுந்து கொண்டே இருக்கிறது.. அதற்குக் காரணத்தை 'அங்கே' சொல்லலாம் என்று நினைந்துக் கொண்டிருந்தேன்.. ஆனால் பூட்டுனர்கள் முந்திக் கொண்டார்கள்.

ஆங்கில சானல் ஒன்றில் நம்ம நித்ஸ் பேட்டி கண்டேன்.. ஓரளவு சரளமாக 'சாமி இங்கிலிஷ்கூட பேசுதுங்க.." அவர் கூற்றில் சில நியாயங்கள் கூட இருக்கலாம்.

விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியைக் கண்டேன்.. ஒரு சீடரை அவர் தந்தை தேடுவதாகவும், பின்னர் அந்த் சீடர் பங்களூரில் இருந்து கொண்டு எடுத்த பேட்டி.. அவர் தந்தையை முந்தைய தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி ஊருக்கு வருவதாகச் சொன்னதாகவும் தன்னைக் கடத்தி வைத்திருப்பது சுத்த அபத்தமானச் செய்தி.. எக்செட்ரா எக்செட்ரா... அசப்பில் அந்த சீடர் நித்ஸ் மாதிரி கூடத் தெரிந்தார். இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தில் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்..!!

நித்ஸ் செய்தது நியாயமோ இல்லையோ.. இன்று ஊடகங்களுக்குக் கொண்டாட்டம்..

ஒரு சின்ன கதை நினைவுக்கு வருகிறது
ஒரு படு அயோக்கியன் தன்னைச் சுற்றிலும் இருக்கிற சக படு அயோக்கியர்களைக் கண்டு கொள்ளாமல், எங்கோ சம்பந்தமில்லாத ஒரு அயோக்கியனைப் படம் பிடித்து "கண்டு பிடித்து விட்டேன்" என்று கொக்கரித்தானாம். அந்த அயோக்க்கியனைப் பின் தொடரும் ஏமாளிகள் பலரும் தலையைச் சொரிந்து கொண்டு இருக்க வேறு சில அயோக்கியர்கள் சுற்றும் உள்ள எல்லாவற்றையும் உடைத்து மிகவும் சமூக சேவை செய்தார்களாம். எல்லாவற்றையும் அமைதியாகப் பார்க்கும் மிஸ்டர் பொதுஜனம்.. இதை எல்லாம் பார்த்து ரொம்ப ரசித்துக் கொண்டிருக்கிறாராம்..:D:D

"சர்வம் போலி மயம்.."
ஒருவனை குற்றம் சாட்டி விரல் காட்டும்போது மற்ற மூன்று விரல்களும் நம்மை நோக்கியே காட்டுகின்றன என்பதை யாரும் மறக்காமல் இருந்தால் நல்லது..

இன்பா
16-03-2010, 10:01 AM
பால்ராஜ் அவர்களே,

இந்த கதையின் உள் அர்த்தம் என்ன என்பது எனக்கு தெரியும், இது தெரியாமல் பொதுஜனமாகிய நாம் ரசித்துக் கொண்டிருக்கிறோம். பாவம் அவர்கள் ஆத்மா சாந்தியடையட்டும். நித்தியானந்தர் மேல் எனக்கு எந்த கரிசனமும் இல்லை, சிலரின் சதியும் அவர்களின் கொடுரமான எண்ணங்களும், அடக்குமுறைகளாலும் தான் கொதித்துப் போயுள்ளேன். என் கொந்தளிப்பை இப்படி தானே காண்பிக்க முடிகிறது.


ஒரு படு அயோக்கியன் தன்னைச் சுற்றிலும் இருக்கிற சக படு அயோக்கியர்களைக் கண்டு கொள்ளாமல், எங்கோ சம்பந்தமில்லாத ஒரு அயோக்கியனைப் படம் பிடித்து "கண்டு பிடித்து விட்டேன்" என்று கொக்கரித்தானாம். அந்த அயோக்க்கியனைப் பின் தொடரும் ஏமாளிகள் பலரும் தலையைச் சொரிந்து கொண்டு இருக்க வேறு சில அயோக்கியர்கள் சுற்றும் உள்ள எல்லாவற்றையும் உடைத்து மிகவும் சமூக சேவை செய்தார்களாம். எல்லாவற்றையும் அமைதியாகப் பார்க்கும் மிஸ்டர் பொதுஜனம்.. இதை எல்லாம் பார்த்து ரொம்ப ரசித்துக் கொண்டிருக்கிறாராம்..

சர்சைக்குறிய அந்த வீடியோவை உண்மையானது என்று எங்களால் ப்ரூவ் செய்ய முடியாது என்று சமூக அக்கரை மிக்க அந்த தொலைக்காட்சியே அறிவித்துவிட்டது விக்கி.

விஜய் டீவி ஒரு தடவியல் வல்லுரடம் அந்த வீடியோ காட்சியை பரிசோதித்ததை காட்டியது. அவர் கொடுத்த விளக்கள் பார்த்தவர்களுக்கு தெரியும்.

காஷ்மீர் அழகியின் நீலப்படம் ஒன்று வெளிவந்து அவரை போலிஸ் அரெஸ்ட் செய்தார்களாம், பின்பு சோதனை செய்யும் போது அது போலி என்று தெரிந்ததாம். கால் பாதங்களை வைத்து தான் கண்டுபிடித்தார்களாம். அதை பார்த்து எனக்கு சிரிப்பை அடக்க முடியாமல் நாம் பட்ட பாடு இருக்கிறதே....!

அந்த வீடியோவில் இடைச்சொருகல் நிறைய இருப்பதை எளிதில் அனுமானிக்கலாம்.