PDA

View Full Version : பூமிக்கடியில்...அறிவியல் தொடர்கதை (இறுதி பாகம்)மதுரை மைந்தன்
02-03-2010, 12:55 AM
குரும்பூர் கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ள ஒரு குக்கிராமம். குரும்பூரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள் இந்த கதையை படிக்கும் வரை. கதையின் முடிவில் நீங்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் அறியப்போகிறது இந்த கிராமதைப்பற்றி.

குரும்பூரை சேர்ந்த வேலன் என்ற ஆட்டிடையன் இந்த கதையை ஆரம்பித்து வைக்கிறான். பெரியகருப்பனின் ஆட்டு மந்தையிலிருந்து ஆடுகளை மேய்வதற்கு காலையில் கூட்டி சென்று மாலையில் வீடு திரும்புவான் வேலன். அலுமினிய தூக்குச் சட்டியில் அம்மா கொடுதப்பனுப்பும் தண்ணீர் விட்ட சோற்றை பச்சை மிளகாய் வெங்காயம் இவற்றுடன் சாப்பிட்டு விடுவான். ஆடுகளை மலையடிவாரத்தில் மேய விட்டு ஒரு மேடான மரத்தடியில் அமர்ந்து பக்கத்து தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை நோட்டம் விடுவான். ஆடுகளை ஓட்ட அவன் கையில் ஒரு சின்ன கம்பு வைதிதிருந்தான். வேல மரத்து கிளையை ஒடித்து அதிலிருந்த இலைகளை நீக்கிவிட்டு பெரிய கருப்பன் அவனிடம் கொடுத்திருந்தான் அந்த கம்பை. தோளில் சோத்து மூட்டையும் கையில் கம்பையும் வைத்து நாடோடி மன்னன் எம்.ஜி.ஆரைப்போல நிற்பான். கம்பை சுழற்றிக் கொண்டிருப்பது, மணலில் கம்பின் நுனியைக் கொண்டு சித்திரங்கள் வரைவது அவனது பொழுதுபோக்கு.

மதிய நேரங்களில் அவனைப் போன்ற சில ஆட்டிடையர்கள் அங்கு வந்து அவனிடம் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களின் பேச்சு முழுவதும் பக்கத்து டூரிங் டாக்கீஸில் நடக்கும் சினிமா படத்தைப் பற்றித்தான் இருக்கும். அன்று அங்கு வந்திருந்த சிறுவர்களில் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த முருகன் கையில் வழக்கமான கம்பு இல்லை. அவன் கையில் இருந்த கம்பு கருப்பாக நுனியில் பூண் வைத்திருந்தது. முருகன் அவனது பாட்டனார் இறந்து விட்டதாகவும் அவர் வைத்திருந்த இந்த கம்பை அவன் எடுத்துக் கொண்டதாகவும் சொன்னான். எல்லோரும் அந்த கம்பை வாங்கி ஆவலுடன் பார்த்தார்கள்.

மாலை சாய மற்ற சிற்வர்கள் சென்றதும் தான் வேலனுக்கு பெரிய கருப்பன் ஆடுகள் அனைத்தையும் ஒன்று விடாமல் பத்திக் கொண்டு வர வேண்டும் என்று கடுமையாக சொன்னது நினைவுக்கு வந்தது. ஆடுகளை ஒன்று திர*ட்டி எண்ணத் தொடங்கினான். எண்ணிக்கைகு தனது கை விரல்களோடு கால் விரல்களையும் சேர்த்துக் கொண்டான். திரும்ப திரும்ப எண்ணியதில் ஒரு ஆடு குறைவதைக் கண்டு பதறினான். செய்வதறியாமல் ஆடுகளை பெரிய கருப்பனின் பண்டில் சேர்த்தான். அவனது நல்ல வேளை பெரிய கருப்பன் அங்கு இல்லை. பன்டின் கதவை மூடி விட்டு ஓட்டமாக திரும்ப மலையடிவாரத்திற்கு வந்தான். அங்கிருந்த புதர்கள், பள்ளங்கள் இவற்றில் தேடினான். தேடிக்கொண்டே மலை மீது சிறிது ஏறத் தொடங்கினான். துவக்கத்தில் ஒரு குகை இருந்தது. கிராமத்தில் அந்த குகையில் கொள்ளிவாய் பிசாசு இருப்பதாகவும் பகல் நேரத்தில் கூட அங்கிருந்து நெருப்பு தெரிகிறது என்றும் பேசிக்கொண்டது வேலனின் நினைவுக்கு வந்தது. பயந்து கொண்டெ குகையை நெருங்கினான். மே என்று ஆடுகளின் குரலைக் கொடுத்துப் பார்த்தான். குகையின் உள்ளே இருட்டாக* இருந்தது. கையிலிருந்த கம்பைக் கொண்டு துழாவினான். கம்பின் நுனி குகையின் சேற்றுப்பகுதியில் சிக்கிக் கொண்டது. தன் பலம் அனைத்தையும் திரட்டி இழுத்தான். வேகமாக விடுபட்டு கம்பு வெளி வர வேலன் கீழே விழுந்தான். தன்னை சமாளித்துக் கொண்டு மெதுவாக எழுந்த கம்பின் நுனியில் ஒரு குழம்பு போல ஒன்று ஒட்டிக் கொண்டிருப்பதை கவனித்தான். இருள் வேகமாக பரவ வீட்டை நோக்கி நடந்தான் வேலன். கொஞ்ச தூரம் நடந்த பின் தன் பின்னால் யாரோ வருவதைபோல உணர்ந்து திரும்பி பார்த்தான். அவனுக்கு ஒரே வியப்பு. அவன் கண் முன்னால் கானாமல் போன ஆடு நின்று கொண்டிருந்தது. உற்சாகமாக ஆட்டைத் தூக்கி தோளில் சாய்த்து நடந்தான்.

ஆட்டை பெரிய கருப்பனின் பண்டில் அடைத்து விட்டு வீடு திரும்பினவனுக்கு கம்பின் நினியில் ஒட்டிக் கொண்டிருந்த குழம்பு மற்ந்து விட்டது. மறு நாள் காலை ஆடுகளை மேய்க்க கிளம்பியவனுக்கு கம்பின் நுனியில் இறுகிப் போய் ஒரு பூண் மாதிரி இருந்த உலோகத்தைபார்த்து மகிழ்ச்சி பிடிபடவில்லை. ஏதோ அரசன் கையில் செங்கோலைப் பிடித்திருந்ததை மாதிரி கம்பை பிடித்துக் கொண்டு நடனமாடினான். வழககம் போல ஆடுகளை மேய விட்டு நெடுஞ்சாலையை பராக் பார்த்துக் கொண்டிருந்தவன், சாலையில் வேகமாக வந்த ஜீப் ஒன்று திடீரென்று நின்றதைப்பார்து மெல்ல அதன் அருகில் சென்றான். ஜீப்பில் அமர்ந்திருந்த இரண்டு கனவான்கள் ட்ரைவரிடம் " என்னய்யா என்னாச்சு" என்று வினவ ட்ரைவர் " எஞ்சின்ல கோளாறு சார்" என்று சொல்லிவிட்டு பானரைத் திறந்து உள்ளே நோட்டம் விடலானார்.

தன்னிடமிருந்த பூண் வைத்த கம்பை அவர்களிடம் கொடுத்து காசு வாங்கலாம் என் நினைத்து வேலன் அவர்களை நெருங்கினான். " நல்ல கம்புய்யா அருமையான பூண் வைச்சது. வாங்கிகிரீங்களா" என்று கேட்டவாறு கம்பை உயர்த்தி வேலன் காட்ட ஜீப்பில் இருந்த ஒரு கருவியிலிருந்து அபாய ஒலி கேட்க துவங்கியது.

தொடரும்...

அக்னி
02-03-2010, 06:45 AM
ஆகா...
மீண்டும் ஒரு அறிவியற் கதையா...
கற்கண்டு தின்னக் கசக்குமா...
சிறப்பாகத் தொடர்ந்து முடித்திட என் வாழ்த்து...

ஆக, அந்தக் குகையும், அந்த உலோகமும்,
கதையிற் பிரதான பாத்திரங்களை வகிக்கப் போவதைக் கோடிட்டுக் காட்டிவிட்டீர்கள்.

சன் தலைப்புச் செய்திகளில்,
குரும்பூரிற் பரபரப்பு... ஆட்டிடையன் வேலனால்...................................

இடைவெளியிற் தொடரப்போவது என்ன..?

ஆவலுடன் அடுத்த பாகத்திற்காகக் காத்திருக்கின்றேன்.

பாரதி
02-03-2010, 07:35 AM
நல்ல துவக்கம்!

கதையின் முதல் பாகத்திலேயே பரபரப்பு தொற்றிக்கொண்டு விட்டதே!

எழுதுங்க நண்பரே.

அன்புரசிகன்
02-03-2010, 08:23 AM
எரிமலையின் ஆரம்பமோ... தொடருங்கள். படிக்கும் ஆவல் மிகுகிறது.

சிவா.ஜி
02-03-2010, 08:48 AM
ம்....அடுத்த அறிவியல் அட்டகாசம் தொடங்கிவிட்டதா.....குகைக்குள் என்ன இருக்கிறது?....பூண் ஏன் சத்தம் போட்டது....தெரிந்துகொள்ள ஆவல் மிகுக்கிறது. தொடருங்கள் நண்பரே.

மதுரை மைந்தன்
02-03-2010, 10:12 AM
ஆகா...
மீண்டும் ஒரு அறிவியற் கதையா...
கற்கண்டு தின்னக் கசக்குமா...
சிறப்பாகத் தொடர்ந்து முடித்திட என் வாழ்த்து...

ஆக, அந்தக் குகையும், அந்த உலோகமும்,
கதையிற் பிரதான பாத்திரங்களை வகிக்கப் போவதைக் கோடிட்டுக் காட்டிவிட்டீர்கள்.

சன் தலைப்புச் செய்திகளில்,
குரும்பூரிற் பரபரப்பு... ஆட்டிடையன் வேலனால்...................................

இடைவெளியிற் தொடரப்போவது என்ன..?

ஆவலுடன் அடுத்த பாகத்திற்காகக் காத்திருக்கின்றேன்.

ஆகா அறிவியல் கதைக்கு இத்தனை வரவேற்பா. எனக்கு உற்சாகமாக இருக்கு. மிக்க நன்றி அக்னி அவர்களே

மதுரை மைந்தன்
02-03-2010, 10:14 AM
நல்ல துவக்கம்!

கதையின் முதல் பாகத்திலேயே பரபரப்பு தொற்றிக்கொண்டு விட்டதே!

எழுதுங்க நண்பரே.


பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பர் பாரதி

மதுரை மைந்தன்
02-03-2010, 10:16 AM
எரிமலையின் ஆரம்பமோ... தொடருங்கள். படிக்கும் ஆவல் மிகுகிறது.


உங்களது ஆவலுக்கு மிக்க நன்றி

மதுரை மைந்தன்
02-03-2010, 10:18 AM
ம்....அடுத்த அறிவியல் அட்டகாசம் தொடங்கிவிட்டதா.....குகைக்குள் என்ன இருக்கிறது?....பூண் ஏன் சத்தம் போட்டது....தெரிந்துகொள்ள ஆவல் மிகுக்கிறது. தொடருங்கள் நண்பரே.

அன்பான உங்களுடைய பின்னூட்டதிற்கு மிக்க நன்றி சிவாஜி அய்யா

மதுரை மைந்தன்
02-03-2010, 10:24 AM
பாகம் 2

அணுசக்தி துறையின் யுரேனிய தாதுப் பொருளை கண்டறியும் பிரிவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தான் ஜீப்பில் வந்த கனவான்கள். அவர்களில் கிருஷ்ணன் சற்றே வயதான அனுபவசாலி. அவரின் சீடன் நடராஜன் ஒரு இளைஞன். அவர்களின் தலைமை செயலகம் பெங்களூரில் இருந்தது. சில நாட்களுக்கு முன்பாக அவர்களின் பிரிவில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக சென்று யுரேனிய படிமங்களை கண்டறிய சென்ற்போது குரும்பூருக்கருகில் அவர்களுக்கு துப்பு கிடைத்ததால் அவர்கள் ஜீப்பில் அந்த வழியாக யுரேனிய தாதுப் பொருளைக் கண்டறியும் கருவியுடன் சர்வே நடத்தினர்.

வேலனின் பூண் வைத்த கம்பு ஜீப்பின் அருகில் வந்ததும் அந்த கருவியிலிருந்து அபாய ஒலி ஆரம்ப்மாகியது. கருவியிலிருந்த ஸ்பீக்கரை நிறுத்தி விட்டு " இந்த பூண் எங்கு கிடைத்தது" என்று வேலனிடம் கேட்டார் கிருஷ்ணன். ஜீப்பிலிருந்த கருவியின் அபாய ஒலியைக் கேட்டு அரண்டு போயிருந்தான் வேலன். " எனக்கு தெரியாதுங்க" என்று பொய் சொன்னான். " பயப்படாம சொல்லு. நாங்க உன்னை ஒண்ணும் செய்ய மாட்டோம்" என்று சொல்லிவிட்டு வேலனின் கைகளில் ஒரு நூறு ரூபாய் தாளை தந்தார் கிருஷ்ணன். அவ்வளவு பெரிய தொகையை அது வரை பார்த்திராத வேலன் அதை நடுங்கும் கைகளால் வாங்கிக் கொண்டான். பணம் கிடைத்த மகிழ்ச்சியில் " வாஙக சார். எனக்கு இந்த பூண் ஒரு குகைல கிடைச்சது. அங்கே கூட்டி போறேன்" என்று தான் மேய்க்க விட்டுடுகொண்டு வந்த ஆடுகளை மறந்து கிளம்பினான்.

" கொஞ்சம் இருப்பா. நாங்க அங்கே வறதுக்கு எங்களை தயார் பண்ணிக்கணும்" என்று சொல்லிவிட்டு கிருஷ்ணனும் நடராஜனும் தலையில் ஹெல்மெட், காலில் தடிமனான பூட்ஸ்கள், டார்ச் லைட் மற்றும் அணுக்கதிர் வீச்சை கண்டறிந்து அளவிடும் கருவி, போட்டோ காமிரா இஅவ்ற்றை எடுதுக் கொண்டு கிளம்பினர் தற்செயலாக அங்கு வந்த பெரிய கருப்பன் " ஏய் வேலா ஆடுகளையெல்லம் அம்போனு விட்டுடு நீ பாட்டுக்கு கிள்ம்பிட்ட" என்றவன் பின்னால் வந்த விஞ்ஞானிகளைக்கண்டதும் தோளில் போட்டுக்கொண்டிருந்த துண்டை எடுத்து கக்கத்தில் வைத்துக் கொண்டு " கும்பிடறேன் சாமி" என்றான்.

" நாங்கள் வேலனுடன் இங்கு மலையடிவாரதிலுள்ள குகையைக் காணச் செல்கிறோம்' என்ரார் கிருஷ்ணன்.

" அய்யய்யோ அந்த குகைப் பக்கம் போகாதீங்க. அங்கே கொள்ளிவாய் பிசாசு இருக்கு. இப்படித்தான் போன் மாசம் போலீஸ் காரங்ககிட்டே இருந்து தப்பிக்க ஒரு திருடன் அந்த குகைக்குள்ள புகுந்துட்டான். கொஞ்ச நாள் கழிச்சு போலீஸ் அவனைத் தேடிகிட்டு அந்த குகைகுள்ளார லைட் போட்டு பார்த்தாங்க. அங்கே அவனோட எலும்புக் கூடு தான் கிடந்துச்சு. இந்த பொடியன் உங்க கிட்ட தப்பா ஏதாவது சொல்லி இருப்பான். நீங்க திரும்பி போயிடுங்க சாமி. உங்களைப் பார்த்தா பிள்ளை குட்டி காரங்க மாதிரி தெரியுது" என்றான் பெரிய கருப்பன்.

" கவலைப்படாதீங்க. எங்க கிட்ட தேவையான பாதுகாப்புகள் இருக்கின்றன" என்று கூறி விட்டு வேலனுடன் குகையை நோக்கி நடந்தார்கள் கிருஷ்ணனும் நடராஜனும். குகையை நெருங்க நெருங்க அவர்களது அணுக்கதிர் வீச்சு அளவு மானியில் கதிர்வீச்சின் அளவு அதிகரிப்பதைக் கண்ட கிருஷ்ணன் மற்றவர்களை தூரத்திலேயே நிறுத்தி விட்டு குகையின் அருகில் இருந்த ஒரு பாறையின் பின்னால் சென்று கையில் வைத்திருந்த டார்ச் லைட்டின் ஒளியை குகைக்குள் செலுத்தினார். பெரிய கருப்பன் கூறிய மாதிரி குகைக்குள் ஒரு எலும்புக்கூடு கிடந்தது. குகையின் மத்தியில் சேறாக இருந்தது. அதிலிருந்து நீர்த்துப் போன நெருப்பும் அதிலிருந்து வந்த புகையும் தெரிந்தன. சற்று யோசனைக்குப் பிறகு நடராஜனிடம் ஜீப்பிலிரும்து தாங்கள் கொண்டு வந்திருந்த நீள்மான இடுக்கியை கொண்டு வரச் சொன்னார். அது வந்ததும் அதை குகைகுள் செலுத்தி அங்கிருந்த காய்ந்த மண்ணை எடுத்து ஒரு பாலிதீன் பையில் இட்டு அதை அந்த இடுக்கியின் மூலமாகவே துக்கிக் கொண்டு ஜீப்பிற்கு சென்று அவர்களிடமிருந்த கதிர்வீச்சு பாதுகாப்பு பெட்டகத்தில் இட்டார்.

ஜீப்பில் ஏறிச் செல்லும் முன் பெரிய கருப்பனிடம் " நாங்கள் அர்சாங்க அலுவலர்கள். இந்த குகையில் மிகுந்த ஆபத்தான பொருட்கள் இருக்கின்றன. நாங்கள் மீன்டும் வந்து இந்த குகையை ஆராயப் போகிறோம். அது வரை யாரும் குகையை நெருங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறி விடை பெற்று சென்றனர்.

ஜீப்பில் நேரடியாக பெங்களூர் செல்ல கிருஷ்ணன் தீர்மானித்தார். நடராஜன் அவரிடம் " சார் அந்த குகைல யுரேனிய தாதுவின் கிடங்கு இருக்கும் என நினைக்கிறீர்களா" என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணன் " நாம் எடுத்துச் செல்லும் அந்த குகையின் மண்ணை ஆராய்ந்தால் தான் தெரியும்" என்றார். பெங்களூர் அடைந்து தனது பரிசோதனை சாலைக்கு சென்று அந்த மண்ணை ஆராயத் தொடங்கினார் கிருஷ்ண்ன். நடராஜனும் அவருக்கு உதவியாளராக இருந்தார். ஆராய்ச்சியின் முடிவில் கிருஷ்ணன் நடராஜனிடம் " என்னால் நம்பவே முடியவில்லை" என்ரார். 'என்ன ஆச்சு சார்" என்று ஆவலாய் கேட்ட நடரஜனிடம் " அந்த குகையில் இருப்பது ஒரு சக்தி வாய்ந்த இயற்கையான அணு உலை" என்றார் கிருஷ்ணன்.

தொடரும்.....

சிவா.ஜி
02-03-2010, 11:26 AM
அடேங்கப்பா....ஏதோ எரிமலைக் குழம்பு என சாதாரணமாக நினைக்க....ஒரு அணு உலையே அதனுள் இருப்பதாகச் சொல்லி ஆவலை மேலும் அதிகரிக்கிறீர்கள். அதுவும் இயற்கையாக உருவான அணு உலை என்பதால், அதனைப் பற்றி இன்னும் என்ன எழுதப்போகிறீர்கள் என ஆர்வமாக இருக்கிறேன்.

தொடருங்கள் ஐயா.

அக்னி
02-03-2010, 10:20 PM
இந்த யுரேனிய இயற்கை அணு உலையினால்,
ஏற்படப்போகின்ற சாதகபாதகங்களைப் பற்றி வரப்போகும் பாகங்களுக்காக,
ஆவலுடன் நானும் காத்திருக்கின்றேன்.

அன்புரசிகன்
03-03-2010, 08:12 AM
இப்படியெல்லாம் இருக்குமா....? பீதிய கிளப்புறீங்களே... ஆர்வம் மேலோங்குகிறது. தொடருங்கள்...

மதுரை மைந்தன்
03-03-2010, 10:56 AM
பாகம் 3

" பூமிக்கடியில் இயற்கையான அணு உலையா? எப்படி சொல்கிறீர்கள்?" நடராஜன் கிருஷ்ண்னிடம் வினவினார்.

" நாம் குகையிலிருந்து கொண்டு வந்த மணலை ஆராய்ந்ததில் அதில் இயற்கையான யுரேனியமும் அணுப்பிளவிற்கு உகந்த யுரேனியம் 235 என்ற ஓரிடத்தான் ( isotope) விகிதம் இயற்கைக்கு சற்று மாறுபட்டு யுரேனியம் 235ன் அளவு குறைந்திருப்பதாலும் அங்கு அணுப்பிளவுகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிகழ்ந்திருக்க வேண்டும். இத்தகைய அணுப்பிளவுகள் அணு உலைகளிலே நடக்கின்ற்ன. ஆப்பிரிக்காவில் ஓக்லோ என்ற இடத்தில் இத்தகைய அணு உலையை கண்டுபிடிதிருக்கிறார்கள். அதைப்பற்றிய விவரங்களை இதில் பார்க்கலாம் என்று ஒரு விஞ்ஞான்ப் பத்திரிகையில் வந்த செய்தியை காட்டினார். அந்த செய்தி இது தான்.

ஓக்லோ என்னும் இடமானது, நடு ஆப்பிரிக்காவில் உள்ள காபோன் நாட்டில், ஓ-ஓகூயே (Haut-Ogooué ) என்னும் மாநிலத்தில் உள்ள பிரான்சிவில் (Franceville) என்னும் ஊரில் உள்ளது. இவ்விடத்தின் தனிச் சிறப்பு எனவென்றால், மாந்தர்களின் துணை ஏதுமில்லாமல் இயற்கையிலேயே தன்நேர்வாக யுரேனியம் அணு உலைகள் (தொடரியக்கமாக அணுக்கரு பிளப்பு நிகழ்ந்து) தொடங்கி மிக மிக நெடுங்காலமாக, அதாவது 600,000 ஆண்டுகள் முதல் 1,500,000 ஆண்டுகள் வரையும், இயங்கி வந்திருக்க வேண்டும் என்று செப்டம்பர் 1972ல் பிரான்சிய அறிவியலாளர்கள் கண்டு பிடித்தனர். பெரு வியப்பூட்டும் இந்நிகழ்வு நடந்த காலத்தில் நில உலகில் உள்ள தரைநிலப் பகுதிகள் யாவும் பல்வேறு கண்டங்களாகப் பிரியாமல் ஒன்றாக இருந்தது. ஏறத்தாழ 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். இந்த அணு உலை இயங்குவதற்கு ஆக்சிசன் தேவைப்பட்டிருக்கும் என்றும், அக்காலத்திற்கு சற்று முன்தான் (ஏறத்தாழ 2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்) உலகில் முதன் முதலாக ஆக்சிசன் வளிமம் வெளியிடும் உயிரிகள் தோன்றியிருந்தன என்றும் அறிகிறார்கள். இவ்வுயிரிகள் ஒளிச்சேர்க்கை வழி ஆக்சிசனை வெளிவிட்டன.


பியர்லாத்தே (Pierrelatte) என்னும் இடத்தில் அமைந்துள்ள பிரான்சிய அணு ஆற்றல் நிறுவனம் ஜூன் 7 1972இல், யுரேனிய ஓரிடத்தான்களின் விகிதத்தில் (U235/U238) சிறு வழக்கமாறுமாடு ஒன்றைக் கண்டனர். U238 ஓரிடத்தானை ஒப்பிடு பொழுது U235 என்னும் யுரேனிய ஓரிடத்தானின் அளவு விகிதம் 0.7202+/- 0.0010 % இருப்பதற்கு மாறாக 0.7171 % ஆகக் குறைந்து இருந்தது. இதற்கான சோதனைப் பொருள் ஓக்லோ என்னும் இடத்தில் இருந்து வந்ததாகக் கண்டறிந்தனர். U235 ஓரிடத்தானின் அளவு இதைவிட மிகக் குறைந்த அளவான 0.440 % ஆக சில இடங்களில் இருப்பதையும் பின்னர் கண்டனர். இப்படி U235 குறைவது தொடர்-விளைவாக அணுபிளப்பு நிகழும் அணு உலை இருந்தால் நிகழும் ஒன்றாகும். U235 என்பது எளிதாக அணுக்கரு பிளப்புக்குட்பட்டு தொடர்-விளைவாக அணுபிளப்புக்கு வழிதரும் ஓர் ஓரிடத்தான். எனவே அதன் அளவு இப்படி வேறு எங்கும் இல்லாத அளவு குறைந்து இருப்பது அணு உலை இயங்கியதற்கு வலுவான சான்றாக உள்ளது.

செய்தியைப்படிது முடித்த நடராஜன் " ஓ அப்படியென்றால் இந்த குரும்பூர் குகை மற்றொரு ஓக்லோ" என்றார்.

" இல்லை. இது ஓக்லோவை விட வித்தியாசமானது. நான் சொல்லப்போவதை நிரூபிக்க நாம் மறுபடியும் அங்கு சென்று இன்னும் கொஞ்சம் மணலை எடுத்து வந்து ஆராய வேண்டியிருக்கும். நான் இந்த மணலை ஆராய்ந்ததில் யுரேனியம் 235 உடன் யுரேனியம் 233 ம் இருக்கிறது. அத்துடன் தோரியம் 232 தாதுப் பொருளும் இருக்கிறது. நமது நாட்டில் உலகிலேயே அதிக அளவில் கேரளாவின் கடற்கரை மணலில் தோரியம் இருப்பதை நமது அணு சக்தி விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நமது அணு சக்தி ஆராய்ச்சியில் இந்த தோரியத்தை பயன்படுத்தி மின் சக்தி உண்டாக்குவது பற்றி முயன்று வருகின்றனர்.

ஓக்லோ இயற்கை அணு உலையில் சுமார் 100 கிலோ வாட் சக்தி உற்பத்தியாகிறது என்று கணக்கிட்டிருக்கிறார்கள். எனது கணிப்பில் இந்த குகை அணு உலையில் அதை விட பல மடங்கு அதிகமான சக்தி உருவாகிறது. இந்த உலை பூமிக்கடியில் எத்தனை ஆழத்தில் இருக்கிறது, அங்கு உருவாகும் சக்தியை நாம் எப்படி பயன் படுதத முடியும் என்பது நமக்கு உள்ள சவால்களாகும். நாம் இதில் வெற்றி கண்டால் அணு மின் சக்தி உற்பத்தியில் நாம் உலகின் முதன்மை இடத்தை அடைவது மட்டுமில்லை அணு சக்தி உற்பத்தியில் வெளி நாடுகளை நம்பியிருக்க வேண்டிய அவசியம் இருக்காது." என்று கிருஷ்ணன் சொல்லி முடித்ததும் " நீங்க சொல்ற*தைக் கேட்டு புல் அரிக்குது சார். என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் ஏன் கையை ஏந்த வேன்டும் வெளி நாட்டில்" என்றார் நடராஜன்.

" நாம் திரும்பவும் குரும்பூர் சென்று குகையை ஆராய்வோம்" என்று கிருஷ்ணனும் நடராஜனும் புறப்பட்டனர். குரும்பூரை நெருங்கிய அவர்களுக்கு குகையை விட்டு சற்று தொலைவில் கிராமத்து மக்கள் ஒன்று திரண்டு நிற்பதைக் கண்டு திகைத்தனர்.

தொடரும்...

அன்புரசிகன்
03-03-2010, 11:01 AM
உண்மையாகவே புல்லரிக்குது... கொள்ளிவாய்ப்பிசாசினால் மின்சாரம். மக்கள் திரண்டிருக்கிறார்கள். வில்லங்கம் வரப்போகுதோ...

பார்க்கலாம். தொடருங்கள்...

சிவா.ஜி
05-03-2010, 05:48 AM
கதைக்குத் தேவையான விவரங்களை பக்காவாகக் கொடுத்து, படிப்பவர்களுக்கு எந்த சந்தேகமும் வராமல் செய்துவிட்டீர்கள் நண்பரே.

சரியான இடத்தில் சஸ்பென்ஸ் வைத்து முடித்திருக்கிறீர்கள்...தொடருங்கள்.

ஆவலுடன் காத்திருக்கிறோம்.

மதுரை மைந்தன்
07-03-2010, 09:53 AM
கதைக்கு பின்னூட்டங்கள் இட்டு என்னை மகிழ்வித்த நண்பர்கள் அன்பு ரசிகன், சிவா.ஜி அவர்களுக்கு என் நன்றிகள்.

மதுரை மைந்தன்
07-03-2010, 09:56 AM
பாகம் 4

கும்பலாய் நின்றிருந்த கிராமத்து மக்களை அணுகியதும் கிருஷ்ண்னும் நடராஜனும் அதிர்ந்தார்கள். அங்கே மக்கள் தங்கள் கைகளில் மண்வெட்டி, கடப்பாறை சகிதம் நின்று கொன்டிருந்தார்கள்.

" இந்த கேடுகெட்ட குகை இன்னும் எத்தனை பேரை பலி வாங்கப் போறதோ. சின்னப் பையன் ஓடியாடி திரிஞ்சிக்கிட்டு இருந்தான். ஆடுகளை தன்னோட குழந்தகளைப் போல தோள்ல தூக்கிப் போட்டுப்பான். சின்னாத்தளுக்கு கறுவேப்பிலை மாதிரி ஒரே பையன். இந்த குகைக்கு பக்கத்தில போனான். இதில இருக்கிற கொள்ளி வாய் பிசாசு அவனை அடிசிசிடுச்சு" என்று அரற்றினார் ஒரு மூதாட்டி.

" வேலனுக்கு என்ன ஆச்சு?' என்று பதை பதைப்போடு கேட்டார் கிருஷ்ணன்.

" நீங்க போனப்புறம் விஷக் காய்ச்சல் வந்து செத்துப் போயிட்டான் இப்போ தான் கொஞ்ச நேரம் முன்னாடி. பாடியைக்கூட எரிக்கலை. எங்க எல்லாருக்கும் ஆத்திரம் இந்த குகை மேல. முதல்ல இதை இடிச்சு மூடிட்டு தான் மறு வேலை".

" நில்லுங்க. அவசரப்படாதீங்க. தயவு செஞ்சு பொறுமையா இருங்க. வேலன் எப்படி இறந்தான்னு பார்க்கணும். அவனோட பாடி எங்கே இருக்கு?" அவர்களிடம் வேன்டினார் கிருஷ்ணன்.

" சரி போய் பார்த்துட்டு வாங்க. நாங்க எப்படியும் இன்னிக்கு இந்த குகையை மூடிட்டு தான் இன்கேயிருந்து கிள்ம்புவோம்" என்றார்கள் சிலர்.

வேலனின் குடிசைக்கு கிருஷ்ணனையும் நடராஜனையும் அழைத்துச் சென்றார்கள். அங்கே கண்ணீரும் கம்பலையுமாய் வேலனின் தாய் சின்னாத்தா அமர்ந்திருந்தார். கிருஷ்ணனின் உடலைச் சுற்றி கம்பளி போர்த்தப்பட்டிருந்ததைப்பார்த்ததும் அதிர்ச்சியுற்றார் கிருஷ்ணன்.

கம்பளியை சற்று விலக்கி அவனது கால்களைப் பார்த்ததும் அவரது சந்தேகம் ஊர்ஜிதமாகியது. காணாமல் போன ஆட்டைத் தேடி புதர்களுக்குள் சென்ற வேலனை ஏதோ விஷ ஜந்து கடித்திருக்கிறது. அதனால் உண்டான காய்ச்சலை கம்பளி சுற்றியதால் அதிகமாகி உயிருக்கு ஆபத்தாகி விட்டது. காய்ச்சல் வந்தால் ஆடைகளை தளர்த்தி காற்றோட்டமாக விட்டு காய்ச்சலைத் தணிக்க ஈரமான துணியை நெற்றியில் பட்டியாகப் போட்டால் காய்ச்சல் குறைந்து பிழைத்திருக்ககூடும். இவற்றை தெரியாத கிராமத்து மக்களின் அறியாமைக் குறித்து வருத்தமுற்றார் கிருஷ்ணன்.

குரும்பூரில் நடக்கும் களேபரங்களை எப்படியோ மோப்பம் பிடித்த பதிரிகையாளர்களும் தொலைக்காட்சி நிறுவனத்தினரும் அங்கு வந்து குமியத் தொடங்கினார்கள். கிருஷ்னனையும் நடராஜனையும் சூழ்ந்து கொண்ட அவர்கள் " நீங்க அணு சக்தி விஞ்ஞானிகள். இந்த குகையில் என்ன மர்மத்தை கன்டுபிடித்தீர்கள்? " என்று கேட்டனர். அவர்களில் ஒருவர் கிராமத்து மக்களிடமிருந்து கிருஷ்னன் ஒரு கருவியை குகைக்கு அருகில் எடுத்துச் செல்ல அதிலிருந்து அபாய ஒலி கேட்டதாக அறிந்ததும் அணுக் கதிர் வீச்சுகளைப் பற்றி ஓரளவு அறிந்திருந்த அவர் " ஆட்டிடயன் வேலன் கதிர் வீச்சின் தாக்கத்தால் தான் இறந்திருக்கிறான். ஆஆகவே அவந்து உடம்பை எரிக்ககூடாது. அப்படி எரித்தால் அதிலிருந்து கெட்ட கதிர் வீச்சு காற்றில் கலந்து சுற்று வட்டாரத்தையே மாசு படுத்தி விடும். ஆகவே, அவனது உடலை புதைக்கத்தான் செய்யணும்" என்று வாதிடலானார்.

ஒரு பத்திரிகையாளர் தனது பதிரிகைக்கு தலைப்பு செய்தியாக இந்த செய்தியை அனுப்பினார்.

" கொடைக்கானல் மலையடிவாரத்தில் குரும்பூரில் அணுக்கதிர் வீச்சின் தாக்கத்தில் சிறுவன் பலி. அணு சக்தி விஞ்ஞானிகள் மவுனம்".


தொடரும்....

Akila.R.D
08-03-2010, 04:27 AM
இப்போதுதான் நாங்கு பாகங்களையும் ஒன்றாக படித்தேன்...கதை நன்றாக போகிறது...

வாழ்த்துக்கள்...

அன்புரசிகன்
08-03-2010, 05:28 AM
அவன் இறந்தது விச ஜந்துவாலா அல்லது அணுக்கதிர்வீச்சினாலா??? குழப்பமாக உள்ளது. அடுத்தபாகத்தில் ஓரளவு தெழியும் என்று நினைக்கிறேன். தொடருங்கள்.

மதுரை மைந்தன்
08-03-2010, 06:54 AM
இப்போதுதான் நாங்கு பாகங்களையும் ஒன்றாக படித்தேன்...கதை நன்றாக போகிறது...

வாழ்த்துக்கள்...

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

மதுரை மைந்தன்
08-03-2010, 06:56 AM
அவன் இறந்தது விச ஜந்துவாலா அல்லது அணுக்கதிர்வீச்சினாலா??? குழப்பமாக உள்ளது. அடுத்தபாகத்தில் ஓரளவு தெழியும் என்று நினைக்கிறேன். தொடருங்கள்.தொடர்ந்து இக்கதைக்கு ஆதரவு தரும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

அக்னி
08-03-2010, 09:59 AM
அன்புவின் குழப்பம் எனக்கும்...

எளிமையான தமிழில், சிரமமான சூட்சுமங்களை, நிஜமான தரவுகளோடு அழகாக விளங்கப்படுத்துகின்றீர்கள்.

இந்த விடயங்களைப்பற்றிச் சற்றேனும் அறியாதவர் கூட, விளங்கிக்கொள்ளத்தக்கவையில்,
கதை நகர்த்தப்படுகின்றது.

ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மை, இந்தக் கதையிலும்...

தொடர்ந்தும் வரக்காத்திருக்கின்றேன்...

பாரதி
09-03-2010, 02:53 PM
பரபரப்பு வேண்டும் என்பதற்காகவே பல செய்தித்தாள்களும் செய்வதை இக்கதையும் சுட்டுகிறது. நானும் தொடர்ந்து படித்து வருகிறேன் நண்பரே. எழுதுங்கள்.

மதுரை மைந்தன்
10-03-2010, 06:32 PM
கதைக்கு பின்னூட்டங்கள் இட்டு என்னை மகிழ்வித்த நண்பர்கள் அக்னி , பாரதி அவர்களுக்கு என் நன்றிகள்

மதுரை மைந்தன்
10-03-2010, 06:34 PM
பாகம் 5

வேலனின் மரணம் கதிர் வீச்சின் தக்கத்தால் அல்ல இயற்கையில் விஷக்கடியினால் வந்த காய்ச்சல் முற்றிப் போய் நிகழ்ந்தது என்பதை கிருஷ்ணனும் நடராஜனும் பத்திரிகை நிருபர்களுக்கு எடுத்துக் கூறி அதை விளக்கும் வண்ணம் வேலனின் குடிசைக்கு அவர்களை கூட்டிச் சென்று அவனது உடலைக் காண்பித்தார்கள்.

" வேலனின் மரணம் கதிர் வீச்சின் தாக்கத்தால் இல்லை என்றால் அவன் அந்த குகைக்கு சென்றதற்கப்புறம் தானே நிகழ்ந்தது. அப்படி அந்த குகையில் என்ன மர்மம் இருக்கிறது?" என்று நிருபர்கள் கிருஷ்ண்னிடம் கேட்டார்கள்.

" நான் இங்கே இபோது சொல்லப் போவது உங்களுக்கு புதிதாக இருக்கும். அந்த குகையின் பூமிக்கடியில் பல்லாயிரக்கணகான வருடங்களாக இயங்கி வந்திருக்கும் ஒரு அணு உலை. இந்த பூமி உருவாகிய சில வருடங்களுக்குள் இந்த அணுப்பிளவுகள் தொடங்கியிருக்க வேண்டும் என்று அணு சக்தி விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதற்கு முன்னோடியாக ஆப்பிரிக்காவில் ஓக்லோ என்ற இடத்தில் முதன் முறையாக இததகைய அணு உலைகள் மொத்தம் 16 இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இங்கு குரும்பூருக்கருகில் உள்ள் குகை அணு உலை அவைகளை விட விசேடமானது என்று எங்களுடைய ஆராய்ச்சியில் தெரிய வருகிறது. அதை நிரூபிக்க வேண்டி குகையின் மணலை எடுத்துச் சென்று எஙளிடமிருக்கும் சக்தி வாய்ந்த உபகரணத்தில் ஆராய உள்ளோம். குரும்பூர் கிராம மக்களுக்கு இந்த உண்மைகளை எடுத்துக் கூறி அவர்களின் ஒத்துழைப்புடன் இந்த ஆராச்சியின் மூலம் நாம் சரித்திரம் படைக்க வாய்ப்பிருக்கிறது" என்றார் கிருஷ்ணன்.

அவர் சொன்னவற்றை கவனமாக கேட்டு அவர் காட்டிய ஓக்லோ அணு உலைப்பற்றிய செய்திகளைப் படித்தபின் நிருபர்கள் அவரிடம் " "எஙகளை மன்னித்துக் கொள்ளுங்கள். உண்மைகளை முழுதும் அறியாமல் தவறான செய்தியை பதிது விட்டோம். அதை மாற்றி நீங்கள் கூறியவைகளை மக்களுக்கு எடுத்து சொல்லி உங்களுடைய ஆராய்ச்சிக்கு ஆதரவு திரட்டுவோம்" என்றார்கள் அவர்கள்.

அவர்களுடைய பேச்சைக் கேட்டு நிம்மதி பெருமூச்சை விட்ட கிருஷ்ணனின் செல் போன் ஒலித்தது. அதைக் காதில் வைத்து அவர் கேட்டதும் அவரது முகத்தில் கவலை தெரிந்தது. செல் போனில் " கிருஷ்ணன் சார் நான் அணு சக்தி இலாகாவின் சேர்மனுடைய அந்தரங்க காரியதரிசி பேசுகிறேன். சேர்மன் உங்களை உடன் மும்பைக்கு வந்து அவரைப் பார்க்குமாறு கூறச் சொன்னார்" என்றார்.

குரும்பூரிலிரிந்து உடன் மதுரைக்கு காரில் சென்று அடுத்த பிளைட்டில் கிருஷ்ணன் மும்பை பயணமானார். மும்பையை அடைந்தவுடன் நேராக சேர்மனின் அலுவலக்த்திற்கு சென்றார்.

அவரை வரவேற்று இருக்கையில் அமர்ச் சொன்னபின் சேர்மன் பேசத் துவங்கினார்.

" டாக்டர் கிருஷ்ணன் உங்களுடைய இயற்கை அணு உலைக் கண்டுபிடிப்பிற்காக எனது பாராட்டுக்கள். ஆனால் உங்களுடைய சில அவசரமான காரியங்களால் நமது இலாக்காவிற்கு சில சோதனைகள் வந்துள்ளன. உங்களுடைய கண்டுபிடிப்பை நீங்கள் பத்திரிகை நிருபர்களிடம் கூறியது மக்களிடையே சில தவறான செய்திகள் போய் சேர்ந்திருக்கிறது. அணு சக்தி என்றாலே அணு ஆயுதததைப் பற்றியே நினைக்கிறார்கள். ஒரு சில பத்திரிகைகள் குரும்பூர் குகையில் சக்தி வாய்ந்த அணு ஆயுதத்தை நாம் மறைத்து வைதிதிருக்ககூடும் என்று எழுதி இருக்கிறார்கள். அணுக் கதிர் வீச்சைப் பற்றி பீதி கிளம்பியிருக்கிறது. இவற்றைப் பற்றி பிரதமர் என்னுடன் தொலைபேசியில் உரையாடினார். இவையெல்லம் போகட்டும். இந்த குகையை எப்படி ஆராயப் போகிறீர்கள்?. ஓக்லோ அணு உலையில் 1000 டன் கழிவுப் பொருள்கள் உற்பத்தியாருப்பதாக கண்டுபிடிதிருக்கிறார்கள். அணு உலையின் இயக்கத்தல் விளையும் கழிவுப் பொருள்கள் பல வருடங்களுக்கு கதிர் வீச்சுகளை வெளியிட்டு சுற்றுப்புற சூழலை மாசு படுத்தக் கூடியவை. அவற்றைப் பாதுகாக்க நாம் ஏற்கனவே நிறைய செலவு செய்கிறோம். இந்த குரும்பூர் அணு உலையின் கழிவுப் பொருளகளை எவ்வாறு வெளியெற்றி பாதுகாக்கப் போகிறோம். என்னுடைய யோசனை என்னவென்றால் இந்த குகையை மூடி அதை சுற்றி வேலி அமைத்து பாதுகாப்பும் செய்வோம். குரும்பூர் மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள். மேற்கொண்டு இதை ஆராய்வதை கைவிடுங்கள்" என்றார் சேர்மன்.

தொடரும்...

அக்னி
11-03-2010, 06:50 AM
இதென்ன புதுத் தலையீடு... தலைவலி வரும் போலிருக்கே... பார்த்துடலாம் சேர்மனுக்கு என்ன பதில் சொல்லப்போகின்றார் என்று...

உண்மையைச் சொல்வதானால் எனக்கும்,
அணுவுலை என்றாலே, அது அணுகுண்டுத் தொழிற்சாலை எனத்தான் எண்ணாமலே நினைவுக்கு வருவதுண்டு.
அதுசரியல்ல எனப் புத்திக்குத் தெரிந்தாலும், மனது தெரிந்து கொள்ள விரும்புதில்லை.

இதுபற்றிக் இன்னும் கொஞ்சம் விளக்கமாகக் கதையிற் கதைக்க வையுங்களேன்.
மனதிற் பதிந்துகொள்ளட்டும்...

இன்னுமொரு கேள்வி...
அந்த ஆபிரிக்க இயற்கை அணுவுலை உண்மையானதுவா...
அப்படி உண்மையானதானால்,
இதுபோன்ற இயற்கை அணுவுலைகளால், கதையிற் பத்திரிகைகள் கூறியதுபோன்று ஏதேனும் பாரதூரமான விளைவுகள் ஏற்படுமா...

அடுத்த பாகத்திற்காகக் காத்திருக்கின்றேன்...

சிவா.ஜி
11-03-2010, 07:56 AM
நிருபர்களை சமாளித்துவிட்டாலும், அவர்களின் செய்தியால் வேறு புதுக்குழப்பம் வந்துவிட்டதே....

சேர்மேன் சொல்வதைப் பார்த்தால், இந்த ஆராய்ச்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் போலிருக்கிறது...

பார்ப்போம்...டாக்டர் கிருஷ்ணனின் ஆராய்ச்சி தொடருமா என்று.

அன்புரசிகன்
11-03-2010, 08:45 AM
பத்திரிக்கைகளின் தவறான செய்தி நோக்கு பாரதூரமான விளைவுகளை உருவாக்கலாம் அக்னி... இவர்களின் ஏறுக்குமாறான செய்திகளால் சர்வதேச நாடுகளின் இராஜதந்திர அழுத்தங்கள் அதிகமாகலாம்...

தொடருங்கள். பலவிடையங்கள் தெளிய இருக்கிறது.. எவ்வாறு இந்த சவாலை கிருஷ்ணன் நகர்த்தவுள்ளார். பார்க்கலாம்.

பா.ராஜேஷ்
11-03-2010, 09:48 AM
அனைத்து பாகங்களையும் இப்பொழுதுதான் ஒன்றாக படித்தேன். மிக நன்றாக எழுதி உள்ளீர்கள். பாராட்டுக்கள் அய்யா. அறிவியல் (விளக்கமாய்) அறிய ஆவலாய் உள்ளோம். தொடருங்கள்

பாரதி
11-03-2010, 03:51 PM
ஒரு அரசியல்வாதியைப் போல அணுசக்தி இலாகாவின் சேர்மன் கூறி இருப்பது சற்றே வியப்பாக இருக்கிறது.

நண்பர்களைப் போன்றே நானும் அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

aren
16-03-2010, 05:00 AM
பாகம் 4


"
"
வேலனின் குடிசைக்கு கிருஷ்ணனையும் நடராஜனையும் அழைத்துச் சென்றார்கள். அங்கே கண்ணீரும் கம்பலையுமாய் வேலனின் தாய் சின்னாத்தா அமர்ந்திருந்தார். கிருஷ்ணனின் உடலைச் சுற்றி கம்பளி போர்த்தப்பட்டிருந்ததைப்பார்த்ததும் அதிர்ச்சியுற்றார் கிருஷ்ணன்.


[COLOR="Blue"]தொடரும்....

கிருஷ்ணன் என்பதற்கு பதில் வேலன் என்று வந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

கதை நன்றாக ஆரம்பித்திருக்கிறது, இன்னும் பல திடுக்கிடும் திருப்பங்கள் இருக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தொடருங்கள்.

aren
16-03-2010, 05:04 AM
ஐந்தாம் பாகம் படித்தால், இதை மூடுவதில் ஏதோ சதி இருப்பதாகத் தெரிகிறது, வெளிநாட்டிற்கு விற்கப்போகிறார்களோ?

மதி
16-03-2010, 07:06 AM
அசத்தலாக போய் கொண்டிருக்கிறது மதுரை மைந்தரே... உங்க கதைகளைப் பார்த்து நானும் அறிவியல் புனைக்கதைகளை எழுதணும் முயற்சி பண்றேன்.. :):)

அணு உலைகளைப்பற்றி அறிந்து கொண்டோம்.. அடுத்து என்னவாகும்னு எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்.

அன்புரசிகன்
09-05-2010, 08:50 AM
அடுத்தபாகம் எப்போது பதிவீர்கள்???

xavier_raja
11-05-2010, 10:10 AM
இது போன்ற கதைகளை எழுத நிறைய ஆதரங்களையும் விவரங்களையும் திரட்ட வேண்டும்.. நீங்கள் மிகவும் மெனகெட்டு இதை செய்திருகிறேர்கள்... பாராட்டுகள்..

அக்னி
11-05-2010, 11:03 AM
மதுரைமைந்தரே,
அடுத்த அத்தியாயம் எப்போது..?

sarcharan
13-05-2010, 12:07 PM
அடுத்த தொடரை எழுத குரும்பூர் சென்று விட்டீர்களா மதுரை மைந்தன்?

மதுரை மைந்தன்
16-05-2010, 11:15 AM
இந்த அறிவியல் கதையை இந்த பாகத்துடன் முடித்துக் கொள்கிறேன் . தாமதத்திற்கு மன்றத்து நண்பர்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

இறுதி பாகம்

அணுசக்தி துறையின் சேர்மன் அவர்கள் கூறியதை பொறுமையாக கேட்டுவிட்டு கிருஷ்ணன் அவரிடம் குரும்பூர் குகையை ஆராய்வதின் முக்கியத்தை விளக்கமாக எடுத்துக் கூறினார். இந்திய அணு சக்தி ஆராய்ச்சி மூன்று கட்டங்களைக் கொண்டதாக டாக்டர் பாபா அவர்கள் வகுத்தமைத்ததை நினைவுறுத்தினார். மூன்றாவது கட்டமாக இந்தியாவின் மிகப் பெரும் வளமான தோரியம் தாதுப் பொருளைக் கொண்டு அணு உலைகளை வடிவமத்தால் இந்தியா அணு மின் சக்தி உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதோடு உலகின் பல நாடுகளுக்கு அணு உலைகளை ஏற்றுமதி செய்து பொருளீட்டி வறுமையில் வாடும் மக்களை வறுமை நீங்கி நல் வாழ்வு வாழ முடியும் என்றார். குரும்பூர் குகையில் உள்ள இயற்கை அணு உலையில் தோரியம் பயன்படுத்தப்பட்டிற்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் குகையை ரோபோ என்ற தானியங்கி இயந்திரங்களின் மூலம் ஆழத் தோண்டி அணு உலையின் வடிவமைப்பைக் கண்டறிந்தால் அதே போல பல அணு உலைகளை நிறுவ முடியும் என்றும் அவர் கூறினார்.

சற்று நேர யோசனைக்குப் பிறகு சேர்மன் அவரிடம் " நீங்கள் தற்சமயம் கூறியவற்றை ஒரு ரிபோர்டாக எழுதித் தாருங்கள். நான் மற்ற சீனியர் விஞ்ஞானிகளிடம் விவாதித்து ஒரு முடிவுக்கு வரலாம்" என்றார். அதைக் கேட்டு மகிழ்ந்த கிருஷ்ணன் அவருக்கு நன்றி கூறி விடை பெற்றார்.

குரும்பூர் இயற்கை அணு உலையைப்பற்றிய செய்திகள் இந்திய மற்றும் வெளி நாட்டு பத்திரிகைகளில் பரபரப்பாக அலசப் பட்டன. அமெரிக்க அறிஞர்கள் குரும்பூர் அணு உலை இந்தியாவுடன் இலங்கை மலேசியா இந்தோனிசியா இவைகளை உள்ளடிக்கிய லமூரிய கண்டத்தில் இருந்திருக்க வேண்டும் என்றும் இத்தகைய இயற்கை அணு உலைகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இயங்கி வந்திருக்கின்றன என்றும் கூறி கிருஷ்ணனின் ஆராய்ச்சியை புகழ்ந்து எழுதினார்கள்.

சில தினங்களுக்குப் பிறகு அணு சக்தி துறயின் சேர்மன் கிருஷ்ணனை அழைத்து " பாராட்டுக்கள். உங்களுடைய ஆராய்ச்சியைத் தொடர அரசாங்கம் அனுமதி அளிதுள்ளது. அமெரிக்க அதிபர் நமது பிரதமரை தொடர்பு கொண்டு இந்த ஆராய்ச்சியில் அமெரிக்காவும் ஆர்வமாக இருப்பதாகவும் ஆராய்ச்சிக்கான செலவுகளில் பங்கேற்கவும் விரும்புவதாக கூறியுள்ளார். உடன் ஆராய்ச்சியை துவக்குங்கள். நமது அணு சக்தி துறையின் எல்லாவித ஆதரவும் உங்களுக்கு உண்டு. ஒரே ஒரு விண்னப்பம். குரும்பூர் மக்களின் ஆதரவையும் பெற்றால் நலமாக இருக்கும் என்றார்". பேச வார்த்தைகள் கிட்டாமல் மகிழ்ச்சி கடலில் திளைத்த கிருஷ்ணன் அவருக்கு நன்றி கூறி விடை பெறறார்.

ஆராய்ச்சியை துவக்குவதற்கு முன்பாக குரும்பூர் மக்களுக்கு அங்கிருந்து சற்று தொலைவில் மாற்றுக் குடியிருப்புகள் அமக்கப்பட்டன. அவர்களுக்கு ஆராய்ச்சி சம்பந்தமான சிறு வேலைகளும் தரப்பட்டன. ஒரு நல்ல நாளில் ஆட்டிடையன் வேலனின் சிலை திறப்பு விழாவுடன் ஆராய்ச்சி துவங்கியது. உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த ஆராய்ச்சி வெற்றி அடைய வேண்டிக் கொள்ளுங்கள்.


முற்றும்.

அன்புரசிகன்
16-05-2010, 11:47 AM
கதை சுபமாக நிறைவுற்றதில் சந்தோசம். ஆனால் இவ்வாறு நடக்குமா??? இதை வைத்து அரசியல் விளையாட பல அரசியல் வாதிகளும் அவர்களுக்கு விலைபோகும் படித்த மேதைகளும் பலர் உள்ளனரே... (மதியின் உன்னை தற்கொலை செய்யவா கதையின் பாதிப்பு...) :D

வாழ்த்துக்கள் மதுரை அண்ணா..

sarcharan
17-05-2010, 09:29 AM
இது என்ன மதுரை மைந்தன், பாரதிராஜா என்னுயிர் தோழன் படத்தை முடிச்சது மாதிரி முடிச்சுட்டீங்க!


அடுத்தபாகம் எப்போது பதிவீர்கள்???


மதுரைமைந்தரே,
அடுத்த அத்தியாயம் எப்போது..?


மன்ற மக்கள் குத்திய ஊசியின் வலியால் கதைக்கு முற்று புள்ளி வைத்து விட்டீர்களோ? :wuerg019:

:D:D:D
எனிவேஸ், வாழ்த்துக்கள் மதுரை அங்கிள் !!!

aren
19-05-2010, 02:46 PM
எழுத ஆரம்பிக்கும்போது இந்த முடிவைத்தான் நீங்கள் நினைத்திருந்தீர்களா. அப்படி நினைத்தீர்கள் என்று எனக்குத் தோன்றவில்லை.

இருந்தாலும் கதையாசியர் நீங்கள்தான், கதை உங்களுடையதுதான், உங்கள் முடிவு எதுவாக இருந்தாலும் எனக்கும் சந்தோஷமே.

உங்களுக்கு மறுபடியும் நேரம் கிடைக்கும்போது இன்னொரு விஞ்ஞானக் கதையை எழுதுங்கள். அதற்கு என் முன் வாழ்த்துக்கள்.