PDA

View Full Version : நீண்ட நாள் கழித்து சந்தோசமா இருக்கேன்....

இன்பக்கவி
01-03-2010, 04:33 PM
என் சந்தோஷத்தை துக்கங்களை மன்றத்தோடு பகிர்ந்து வருகிறேன்
நிறைய துக்கங்களை பதிந்த எனக்கு முதல் முறையாக சந்தோசத்தை பகிரும் வாய்ப்பை கடவுள் கொடுத்து இருக்கிறார்...
இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஒரு நல்ல வேலை கிடைத்து இருக்கிறது..
காலையில் இருந்தே ஓயாமல் என் தோழியிடம் இருந்து அழைப்பு வர (ஒரு வாரமாக என்னை தொடர்புக் கொண்டும் நான் அழைப்பை எடுக்கவில்லை) தொல்லை தாங்காமல் அழைப்பை எடுத்தேன்..
உனக்கு வேலை வேணுமா இல்லையா?? நீ ஆசைப்பட்ட கம்பனியிலேயே இப்போ வேலை இருக்கு உடனே புறப்பட்டு வா என்று சொல்ல...
போடி உன்னக்கு வேற வேலை இல்லை..எனக்கு எல்லாமே மறந்து போச்சு..நான் வந்தாலும் என்னால உனக்கு தான் அசிங்கம்...எனக்கு எதுவுமே நினைவுக்கு இல்லை என்று சொல்ல..
அவளோ சும்மா வந்து அட்டென்ட் பண்ணு பார்போம் என்று வலுகட்டையமாக கூப்பிட்டாள்..
நானும் வேறு வழி இல்லாமல் வேண்டா வெறுப்பாக நிச்சயம் இந்த வேலை நமக்கு கிடைக்க போவது இல்லை..அவளுக்காக போய்ட்டு வருவோம் என்று அவசரமாக கிளம்பி இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு செல்லும் போதே பாதியிலே வீட்டுக்கு போகணும் என்றே எனக்கு தோன்ற..சட்டேன்று என் வண்டி அணைந்து விட்டது...
என்ன என்று தெரியாமல், வண்டியை ஓரம் நிறுத்தி பார்த்தல்..பெட்ரோல் இருந்ததற்கான அறிகுறியே இல்லை..
என் கோபம் முழுதும் என் தம்பி மேல் வந்தது (என் வண்டி பெட்ரோலை முழுதுமாக காலி செய்து புண்ணியவான்).. வெயில் ஒரு புறம், இண்டர்வியு மறுபுறம்..பெட்ரோல் இல்லை எல்லாமும் சேர்ந்து வீட்டுக்கே சென்று விடலாம் என்று தோன்ற அதற்கும் வழியில்லை..பெட்ரோல் பங்கு ரொம்ப தொலைவில் இருக்க, என் தம்பிக்கு போன் செய்து, சண்டை இட்டு கதி கூச்சல் போட பதினைந்து நிமிடத்தில் பெட்ரோலோடு வந்து சேர்ந்தான்
ஒரு வழியா போய் சேர்ந்தேன்..
என்னை ஒன்றுமே கேட்காமல் கணினி முன் உட்காரவைத்து பைல் கொடுத்து செய்ய சொல்லிடாங்கள்..
எபோதும் பயப்படும் நான் இன்று ஏதோ தெரியவில்லை முதல் ஐந்து நிமிட பதட்டத்திற்கு பிறகு ஒரு மாதிரி பைல்-ஐ நானே serverரில் தேடி..ஒரு முறை பார்த்துவிட்டு இரண்டு பைல்களை முடித்துவிட்டு ஆறு மணிக்கு வெளியே வந்து விட்டேன்...இண்டர்வியு என்று கூப்பிடு வேலைய இன்னைக்கே செய்ய வட்சுட்டாகள்...(சோறு தண்ணி இல்லாம அவஸ்தை பட்டுட்டேன்)
விண்டோஸ் கீக்கும் அங்க உபயோக படுத்தும் எடிட்டர் கீக்கும் நிறைய வேறுபாடு..அதை எப்படியோ திரும்ப நினைவுக்கு கொண்டு வந்துவிட்டேன்..
ஐயோ இப்போ இதை எழுதி முடிப்பதற்குள் குழப்பம்..
கீ குழப்பம் தான்...:confused::confused:
நீண்ட நாள் கழித்து சந்தோசமா இருக்கேன்....:icon_b::icon_b::icon_b::icon_b:
நன்றிகள்:icon_b::icon_b::icon_b::icon_b:

பாரதி
01-03-2010, 04:39 PM
ஆஹா....!
மிகவும் மகிழ்ச்சியான சேதி!!
பணியில் சிறந்து விளங்கவும், மென்மேலும் உயரவும் வாழ்த்துகிறேன்.
பகிர்ந்தமைக்கு நன்றி.

அக்னி
01-03-2010, 05:01 PM
மிகவும் மகிழ்ச்சியான சேதி...

வேலை என்பதே அருகிவரும் இக்காலத்தில்,
உங்கள் மனம் விரும்பிய வேலை கிடைத்திருப்பது
உங்கள் காத்திருப்புக்குக் கிடைத்த பரிசு...

மற்றவர்களை வாரிவிட்டு ஏறி மிதிக்கும் உலகில்,
உங்கள் நண்பி போன்றவர்கள் மிகவும் மதிப்பிற்குரியவர்கள்...
அவருக்கு, மன்றம் சார்பாக நன்றிகள்...

உங்களுக்கு வாழ்த்துகள்...
உங்கள் உழைப்பு, உங்களுக்கு வளத்தையும் சிறப்பையும் பெற்றுத் தரட்டும்...

அமரன்
01-03-2010, 08:42 PM
மகிழ்வான சேதி!

பணியில் சிறந்து விளங்க வாழ்த்துகள்.

வேலை கிடைச்ச சந்தோசத்தில திவ்யாவுக்கு என்ன குடுத்தீங்க.

இளசு
01-03-2010, 08:57 PM
ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்கு கவிதா அவர்களே..

உயர்வுகள் தொடர மகிழ்ச்சிகள் பெருக வாழ்த்துகள்..

aren
01-03-2010, 11:04 PM
ஆஹா, கேட்பதற்கே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு கவிதா. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்.

இனி உங்கள் காலம் ஆரம்பமாகிவிட்டது, ஜமாய்த்துவிடுங்கள்.

என்னவன் விஜய்
02-03-2010, 12:16 AM
அன்பு கவி நானும் தங்களின் மகிழ்வில் கலந்துக்கொள்கிறேன். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். :icon_b::icon_b:

(எனக்கும் டபல் ப்ரொமொஷன் கிடைத்து :D இன்றுதான் முதல் நாள் :) புன்னகையோட 6 மாத பரிட்சைக்கு படிக்கிறேன்)

இன்பக்கவி
02-03-2010, 01:27 AM
ஆஹா....!
மிகவும் மகிழ்ச்சியான சேதி!!
பணியில் சிறந்து விளங்கவும், மென்மேலும் உயரவும் வாழ்த்துகிறேன்.
பகிர்ந்தமைக்கு நன்றி.

நன்றிகள் பாரதி அவர்களே:icon_b:

இன்பக்கவி
02-03-2010, 01:29 AM
மிகவும் மகிழ்ச்சியான சேதி...

வேலை என்பதே அருகிவரும் இக்காலத்தில்,
உங்கள் மனம் விரும்பிய வேலை கிடைத்திருப்பது
உங்கள் காத்திருப்புக்குக் கிடைத்த பரிசு...

மற்றவர்களை வாரிவிட்டு ஏறி மிதிக்கும் உலகில்,
உங்கள் நண்பி போன்றவர்கள் மிகவும் மதிப்பிற்குரியவர்கள்...
அவருக்கு, மன்றம் சார்பாக நன்றிகள்...

உங்களுக்கு வாழ்த்துகள்...
உங்கள் உழைப்பு, உங்களுக்கு வளத்தையும் சிறப்பையும் பெற்றுத் தரட்டும்...
நன்றிகள் அக்னி அவர்களே:icon_b::icon_b::icon_b:

இன்பக்கவி
02-03-2010, 01:33 AM
மகிழ்வான சேதி!

பணியில் சிறந்து விளங்க வாழ்த்துகள்.

வேலை கிடைச்ச சந்தோசத்தில திவ்யாவுக்கு என்ன குடுத்தீங்க.

:confused::confused::confused:திவ்யா.....
நான் பெயரை குறிப்பிடவே இல்லையே???
நன்றிகள்...:icon_b::icon_b:
ஐயோ யாருன்னு தெரியலையே?:confused::confused:

இன்பக்கவி
02-03-2010, 01:35 AM
ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்கு கவிதா அவர்களே..

உயர்வுகள் தொடர மகிழ்ச்சிகள் பெருக வாழ்த்துகள்..

நன்றிகள் இளசு அவர்களே:icon_b:

கீதம்
02-03-2010, 01:35 AM
இந்த மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.

இன்பக்கவி
02-03-2010, 01:40 AM
ஆஹா, கேட்பதற்கே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு கவிதா. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்.

இனி உங்கள் காலம் ஆரம்பமாகிவிட்டது, ஜமாய்த்துவிடுங்கள்.

நன்றிகள் aren அவர்களே:icon_b:

இன்பக்கவி
02-03-2010, 01:41 AM
அன்பு கவி நானும் தங்களின் மகிழ்வில் கலந்துக்கொள்கிறேன். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். :icon_b::icon_b:

(எனக்கும் டபல் ப்ரொமொஷன் கிடைத்து :D இன்றுதான் முதல் நாள் :) புன்னகையோட 6 மாத பரிட்சைக்கு படிக்கிறேன்)

ஆஹா, நன்றாக படியுங்கள்..
நன்றிகள்:icon_b::icon_b:

இன்பக்கவி
02-03-2010, 01:43 AM
இந்த மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.

நன்றிகள் கீதம் அவர்களே:icon_b:

குணமதி
02-03-2010, 02:30 AM
இனிய நல் வாழ்த்து.

சிவா.ஜி
02-03-2010, 04:26 AM
சந்தோஷமான செய்திங்க. காத்திருப்புக்கு நல்ல பலன் கிடைச்சிருக்கு. உங்க தோழியைப்போல இருப்பவர்கள் நல்ல நட்புக்கு அடையாளமாக இருக்காங்க.

மென்மேலும் உங்க வாழ்க்கையில எப்போதும் சந்தோஷமே நிலைத்திருக்க வாழ்த்துகள்.

மதி
02-03-2010, 04:45 AM
மிக சந்தோஷமான செய்தி கவிதா.. மென்மேலும் உங்கள் வாழ்வில் உயர வாழ்த்துகள்..!!

அமரன்
02-03-2010, 05:32 AM
:confused::confused::confused:திவ்யா.....
நான் பெயரை குறிப்பிடவே இல்லையே???
நன்றிகள்...:icon_b::icon_b:
ஐயோ யாருன்னு தெரியலையே?:confused::confused:

ஹி....ஹி....
இந்தமாதிரித்தானிருக்கும்னு குத்து மதிச்சேன்னும் சமாளிக்கலாம்..
தீக்சிதா திவ்யாவாகிட்டான்னும் உண்மையைச் சொல்லலாம்.

அன்புரசிகன்
02-03-2010, 06:59 AM
அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளீர்கள்... கலக்குங்கள்...

Akila.R.D
02-03-2010, 07:02 AM
வாழ்த்துக்கள் கவிதா..

Mano.G.
02-03-2010, 08:22 AM
முதல்ல வாழ்த்துக்கள்
புதிய பணியில அதுவும் மனதுக்கு பிடித்த
அதோடு பணி செய்தால் இந்த நிறுவத்தில் தான்
பணிபுரிய வேண்டும் என நினைத்த நிறுவனத்தில்
பணியில் அமர்ந்த உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

கஷ்டம் என்பது தொடர்கதையல்ல
அவ்வப்போது அது வந்து போகும்,
அது வரும் போது மனம் தளராமல்
நிமிர்ந்து நின்று சவால் விடுங்கள்
சங்கடங்கள் கஷ்டங்கள் தானே மறைந்து விடும்

மனோ..ஜி

ஆர்.ஈஸ்வரன்
02-03-2010, 08:56 AM
கஷ்டம் என்பது தொடர்கதையல்ல
அவ்வப்போது அது வந்து போகும்,
அது வரும் போது மனம் தளராமல்
நிமிர்ந்து நின்று சவால் விடுங்கள்
சங்கடங்கள் கஷ்டங்கள் தானே மறைந்து விடும்

மனோ..ஜி

நல்ல கருத்துக்கள்

sofi
02-03-2010, 10:00 AM
என் சந்தோஷத்தை துக்கங்களை மன்றத்தோடு பகிர்ந்து வருகிறேன்
நிறைய துக்கங்களை பதிந்த எனக்கு முதல் முறையாக சந்தோசத்தை பகிரும் வாய்ப்பை கடவுள் கொடுத்து இருக்கிறார்...
இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஒரு நல்ல வேலை கிடைத்து இருக்கிறது..
காலையில் இருந்தே ஓயாமல் என் தோழியிடம் இருந்து அழைப்பு வர (ஒரு வாரமாக என்னை தொடர்புக் கொண்டும் நான் அழைப்பை எடுக்கவில்லை) தொல்லை தாங்காமல் அழைப்பை எடுத்தேன்..
உனக்கு வேலை வேணுமா இல்லையா?? நீ ஆசைப்பட்ட கம்பனியிலேயே இப்போ வேலை இருக்கு உடனே புறப்பட்டு வா என்று சொல்ல...
போடி உன்னக்கு வேற வேலை இல்லை..எனக்கு எல்லாமே மறந்து போச்சு..நான் வந்தாலும் என்னால உனக்கு தான் அசிங்கம்...எனக்கு எதுவுமே நினைவுக்கு இல்லை என்று சொல்ல..
அவளோ சும்மா வந்து அட்டென்ட் பண்ணு பார்போம் என்று வலுகட்டையமாக கூப்பிட்டாள்..
நானும் வேறு வழி இல்லாமல் வேண்டா வெறுப்பாக நிச்சயம் இந்த வேலை நமக்கு கிடைக்க போவது இல்லை..அவளுக்காக போய்ட்டு வருவோம் என்று அவசரமாக கிளம்பி இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு செல்லும் போதே பாதியிலே வீட்டுக்கு போகணும் என்றே எனக்கு தோன்ற..சட்டேன்று என் வண்டி அணைந்து விட்டது...
என்ன என்று தெரியாமல், வண்டியை ஓரம் நிறுத்தி பார்த்தல்..பெட்ரோல் இருந்ததற்கான அறிகுறியே இல்லை..
என் கோபம் முழுதும் என் தம்பி மேல் வந்தது (என் வண்டி பெட்ரோலை முழுதுமாக காலி செய்து புண்ணியவான்).. வெயில் ஒரு புறம், இண்டர்வியு மறுபுறம்..பெட்ரோல் இல்லை எல்லாமும் சேர்ந்து வீட்டுக்கே சென்று விடலாம் என்று தோன்ற அதற்கும் வழியில்லை..பெட்ரோல் பங்கு ரொம்ப தொலைவில் இருக்க, என் தம்பிக்கு போன் செய்து, சண்டை இட்டு கதி கூச்சல் போட பதினைந்து நிமிடத்தில் பெட்ரோலோடு வந்து சேர்ந்தான்
ஒரு வழியா போய் சேர்ந்தேன்..
என்னை ஒன்றுமே கேட்காமல் கணினி முன் உட்காரவைத்து பைல் கொடுத்து செய்ய சொல்லிடாங்கள்..
எபோதும் பயப்படும் நான் இன்று ஏதோ தெரியவில்லை முதல் ஐந்து நிமிட பதட்டத்திற்கு பிறகு ஒரு மாதிரி பைல்-ஐ நானே serverரில் தேடி..ஒரு முறை பார்த்துவிட்டு இரண்டு பைல்களை முடித்துவிட்டு ஆறு மணிக்கு வெளியே வந்து விட்டேன்...இண்டர்வியு என்று கூப்பிடு வேலைய இன்னைக்கே செய்ய வட்சுட்டாகள்...(சோறு தண்ணி இல்லாம அவஸ்தை பட்டுட்டேன்)
விண்டோஸ் கீக்கும் அங்க உபயோக படுத்தும் எடிட்டர் கீக்கும் நிறைய வேறுபாடு..அதை எப்படியோ திரும்ப நினைவுக்கு கொண்டு வந்துவிட்டேன்..
ஐயோ இப்போ இதை எழுதி முடிப்பதற்குள் குழப்பம்..
கீ குழப்பம் தான்...:confused::confused:
நீண்ட நாள் கழித்து சந்தோசமா இருக்கேன்....:icon_b::icon_b::icon_b::icon_b:
நன்றிகள்:icon_b::icon_b::icon_b::icon_b:

வாழ்த்துக்கள் கவி ... இது போல வாழ்வில் இன்னும் பல வெற்றிகளை அடைய என்னோட வாழ்த்துக்கள் என்றும் உன்னோடு..:p

உன் குறுஞ்ச்செய்தி பார்த்ததும் வார்த்தையில் அடக்க முடியா சந்தோசம் ...ஆனால் அவை என் மனசோடு ..
உனக்கு நல்லதோர் வேலை கிடைக்கா வேண்டும் ..வேலைக்கு போ என்று தொல்லை கொடுத்தவர்களில் நானும் ஒருத்தி ... உன்னை தொல்லை படுத்தும் சந்தர்பங்களில் என் மனசில் சஞ்சலங்கள் ...இருந்தும் உரிமையோடு சண்டை போட்டேன் வேலைக்கு போக சொல்லி ...அப்போது எல்லாம் கிடைக்காத வேலை இப்ப கிடைத்து இருக்கு ..ரொம்ப சந்தோசம் ...அதிர்ஷ்டம் உன்னை எப்படியோ அழைத்து இருக்கு ..அதை தகுந்த முறையில் உபயோகித்து கொள்ளு.. நல்லதோர் வாழ்வை அமைத்து கொள்ளு ...எதற்காகவும் எதையும் இழந்து விடாதே.. மனசில் ஏற்பட்ட சில கசப்பு ..சில சஞ்சலம் ... பல கோவம் ...இதனால் நான் 3 நாட்கள் கனனி அருகில் வரவில்லை.. இன்று தான் வரும் சந்தர்ப்பம் கிடைத்தது ...சிலரின் புரிந்துணர்வு பார்த்ததும் அதுவும் சந்தோசமாய் அமைய வில்லை.. வந்ததை நினைத்து வருந்தும் நிலைக்கு உள்ளானேன் .. முடிந்த வரை உன்னோடு தொழிலில் முழு கவனத்தை செலுத்து ...நன்றி

ஆதி
02-03-2010, 10:48 AM
இந்த மகிழ்ச்சி என்றும் நிலையாகட்டும் இன்பகவி.. வாழ்த்துக்கள்..

இன்பக்கவி
02-03-2010, 02:46 PM
ஹி....ஹி....
இந்தமாதிரித்தானிருக்கும்னு குத்து மதிச்சேன்னும் சமாளிக்கலாம்..
தீக்சிதா திவ்யாவாகிட்டான்னும் உண்மையைச் சொல்லலாம்.

:traurig001::traurig001::traurig001::traurig001:ஒண்ணுமே புரியல... என்னவோ சமாளிக்குரீங்கள்

இன்பக்கவி
02-03-2010, 02:52 PM
குணமதி, ஆதன், sofi, ஆர்.ஈஸ்வரன், Mano.G., Akila.R.D, அன்புரசிகன், மதி

நன்றிகள் அனைவருக்கும் நன்றிகள்...இருபது நாள் போனபிறகுதான் தெரியும் என் சந்தோசம் நிலைக்குமா என்று பார்க்கலாம்....:traurig001:

jayashankar
02-03-2010, 02:57 PM
வாழ்த்துகள் கவி அவர்களே

நேசம்
03-03-2010, 12:11 PM
நல்ல நMபர்கள் அமைந்தால் மனம் விரும்பியது போல் எல்லாம் நடக்கும். வாழ்த்துகள் சகோதரி

ஜனகன்
03-03-2010, 03:38 PM
வாழ்த்துக்கள் கவி . புது வேலை தொடக்கி உள்ளீர்கள்.உங்கள் வேலையைப்பற்றி ஒரு கவிதை எழுதுங்களன்.

கா.ரமேஷ்
04-03-2010, 11:30 AM
வாழ்த்துக்கள் கவி...

பா.ராஜேஷ்
04-03-2010, 06:47 PM
ஆஹா! மிக நல்ல சேதிதான். உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களால் முடியும். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். இனி எல்லாம் நீங்கள் விரும்பிய படி நடக்கட்டும் ...

வாழ்த்துக்கள் விஜய் அவர்களே. மேலும் பல படிகள் எளிதாய் முன்னேற வேண்டுகிறேன்.

சரண்யா
05-03-2010, 01:21 AM
http://t2.gstatic.com/images?q=tbn:tWp-lUbu3V9RTM:http://www.iowaworkforce.org/region14/keybd2.jpg
http://www.oig.biz/oig/images/2007/12/21/congratulations_red_gold_glitter.gif
http://1.bp.blogspot.com/_yPOtgnKFpOM/SRgZhCkiydI/AAAAAAAAAGc/L4YlPn6KXmw/s400/all+da+best.gif

வானதிதேவி
05-03-2010, 02:41 PM
வாழ்த்துக்கள் சகோதரி.

இன்பக்கவி
07-03-2010, 03:30 AM
http://t2.gstatic.com/images?q=tbn:tWp-lUbu3V9RTM:http://www.iowaworkforce.org/region14/keybd2.jpg
http://www.oig.biz/oig/images/2007/12/21/congratulations_red_gold_glitter.gif
http://1.bp.blogspot.com/_yPOtgnKFpOM/SRgZhCkiydI/AAAAAAAAAGc/L4YlPn6KXmw/s400/all+da+best.gif

நன்றிகள் சரண்யா...
ரொம்ப சந்தோசம்...
அழகா இருக்கு உங்கள் வாழ்த்து...
நன்றிகள்

இன்பக்கவி
07-03-2010, 03:33 AM
இனிய நல் வாழ்த்து.

சந்தோஷமான செய்திங்க. காத்திருப்புக்கு நல்ல பலன் கிடைச்சிருக்கு. உங்க தோழியைப்போல இருப்பவர்கள் நல்ல நட்புக்கு அடையாளமாக இருக்காங்க.

மென்மேலும் உங்க வாழ்க்கையில எப்போதும் சந்தோஷமே நிலைத்திருக்க வாழ்த்துகள்.

மிக சந்தோஷமான செய்தி கவிதா.. மென்மேலும் உங்கள் வாழ்வில் உயர வாழ்த்துகள்..!!

வாழ்த்துக்கள் கவிதா..

இந்த மகிழ்ச்சி என்றும் நிலையாகட்டும் இன்பகவி.. வாழ்த்துக்கள்..

வாழ்த்துகள் கவி அவர்களே

வாழ்த்துக்கள் கவி . புது வேலை தொடக்கி உள்ளீர்கள்.உங்கள் வேலையைப்பற்றி ஒரு கவிதை எழுதுங்களன்.

வாழ்த்துக்கள் கவி...

ஆஹா! மிக நல்ல சேதிதான். உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களால் முடியும். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். இனி எல்லாம் நீங்கள் விரும்பிய படி நடக்கட்டும் ...

வாழ்த்துக்கள் விஜய் அவர்களே. மேலும் பல படிகள் எளிதாய் முன்னேற வேண்டுகிறேன்.
நன்றிகள் எல்லோருக்கும்..
என்ன சொல்வது...
உங்கள் அன்பும் ஆசியும் மேலும் என்னை மேன்படுத்தும்
நன்றிகள்

இன்பக்கவி
07-03-2010, 03:36 AM
சோபி அக்கா..
வேலை கிடைத்ததும் நான் சந்தோசத்தை பகிர தேடிய முதல் ஆள் நீ தான்..
போன் எடுக்காமல் என்னை அழ வைத்திட..
நன்றிகள் ..:traurig001:

விகடன்
12-04-2010, 04:58 AM
வாழ்த்துக்கள் இன்பக்கவி.
விரும்பிய வேலை கிடைக்காதோர் என பலர் இருக்கும்போது உங்களுக்கு கிடைத்திருப்பது ஓர் அதிஷ்ட்டமே. பணியில் திறமைகளை காண்பித்து மென்மேலும் உயர்ந்திட வாழ்த்துக்கள்

மயூ
14-04-2010, 03:08 PM
மிக்க மகிழ்ச்சியான செய்தி அன்பரே. வாழ்க, மேலும் நீங்கள் சிறப்படைய மனமார வாழ்த்துகின்றேன்.