PDA

View Full Version : ஒருநிமிடக் கதை_நல்லாசிரியர்



சிவா.ஜி
01-03-2010, 11:23 AM
சுந்தரவடிவேலு அவர்களுக்கு அன்று பள்ளியில் பாராட்டுவிழா. இந்தவருட நல்லாசிரியர் விருது பெற்றமைக்காக. பத்தாம் வகுப்புவரை உள்ள ஒரு அரசுப்பள்ளி அது. அதிகம் வளர்ச்சியடையாத பிரதேசம். கடந்த மூன்று வருடங்களாக பத்தாம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி பெற்றதால், அந்தப்பள்ளியில் தலைமையாசிரியரான சுந்தரவடிவேலு அவர்களுக்கு அந்த விருது கொடுக்கப்பட்டிருக்கிறது.

மாவட்டக் கல்வி அதிகாரி, மற்றும் சக ஆசிரியர்களின் பாராட்டுப் பேச்சுக்களுக்குப் பிறகு, கழுத்தில் மாலையோடு மேடையிறங்கி வந்தவரிடம், ஒரு தினப்பத்திரிக்கை நிருபர்,

"வாழ்த்துகள் ஐயா."

"மிக்க நன்றிங்க"

"ஐயா, இந்த நல்லாசிரியர் விருது எந்த அடிப்படையில் உங்களுக்குக் கிடைத்தது என்பதை சொல்ல முடியுமா?"

"ஏன் அனைவருக்கும் தெரிந்ததுதானே...எங்கள் பள்ளி அரசுப்பள்ளியாயிருந்தும், தனியார் பள்ளிகளைப் போலவே கல்வித்தரத்தை உயர்த்தி, பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில், கடந்த மூன்று வருடங்களாக அனைவரையும் தேர்ச்சி பெற வைக்கிறோம். அது மட்டுமல்ல, எங்கள் பள்ளியில் செயல்முறை சோதனைச் சாலையில் அனைத்து வசதிகளும் செய்திருக்கிறோம். இதையெல்லாம் நான் தலைமைஆசிரியராகப் பதவி உயர்வுப் பெற்ற இந்த மூன்று ஆண்டுகளில் செய்திருக்கிறேன். இந்தத் தகுதி போதாதா?"

"அப்படியானால், இங்குக் கல்வித்தரம் தனியார்ப் பள்ளிகளிலிருந்து எந்தவிதத்திலும் குறையாமல் இருக்கிறதா?"

"நிச்சயமாக. அதிலென்ன சந்தேகம்?"

"எனக்கு சந்தேகமில்லை....ஆனால் உங்களுக்குத் தான் இன்னும் நம்பிக்கை வரவில்லை என நினைக்கிறேன்"

"என்ன சொல்கிறீர்கள். என் பள்ளியைப் பற்றி எனக்கு நம்பிக்கை இல்லையா?"

"நிச்சயமாய் இல்லை. சரி...உங்கள் பிள்ளைகள் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள்?"

இந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்பாராத சுந்தரவடிவேலு ஒரு நிமிடம் தடுமாறிவிட்டார்.

"சொல்லுங்க ஐயா...இதேப் பள்ளியிலா படிக்கிறார்கள்?"

"இல்லை....வேறு தனியார் பள்ளியில்"

"ஏன் ...தனியார் பள்ளிக்கு சற்றும் குறைவில்லாத உயர்ந்த கல்வித்தரத்தையுடையதாக நீங்கள் சொல்லும் இந்தப் பள்ளியில், இலவசமாய் படிக்க வைக்காமல், பெரும் செலவு செய்து ஏன் தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறீர்கள்? உங்களுக்கே இந்தப் பள்ளியின் தரத்தைக் குறித்து நம்பிக்கை இல்லை என்பதைத் தானே இது காட்டுகிறது."

தலைகுனிந்தார் தலைமையாசிரியர்.

"மன்னித்துக் கொள்ளுங்கள் ஐயா...நீங்கள் மட்டுமல்ல, 90 சதவீத அரசுப்பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளின் பிள்ளைகள் தனியார் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். முன்னுதாரணமாய் இருக்க வேண்டிய நீங்களே உங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் படிக்கவைக்கவில்லையென்றால், மற்றவர்கள் எப்படி படிக்க வைப்பார்கள்?"

நல்லாசிரியர்...பதில் சொல்ல இயலாமல் அங்கிருந்து நகர்ந்தார்.

aren
01-03-2010, 11:27 AM
நெத்தியடி மாதிரி பாவம் இப்படி அடிச்சிட்டீங்களே.

தமிழ் தமிழ் என்று சொல்லும் பல அரசியல்வாதிகளின் குழந்தைகள் கான்வெண்ட் பள்ளியில்தானே படிக்கிறார்கள். இதுதான் இன்றைய உலகம்.

கதை நல்லா வந்திருக்கு, ஆனா மக்கள் மாறுவார்களா.

இன்னும் எழுதுங்கள்.

Akila.R.D
01-03-2010, 11:35 AM
மிகவும் அருமை சிவா.ஜி அவர்களே...

அன்றாடம் வாழ்க்கையில் நடப்பதை கருவாகக் கொண்டு அருமையான கதைகளை படைக்கிறீர்கள்...

வாழ்த்துக்கள்...

எனக்கு எங்கள் பள்ளி ஞாபகம் வந்துவிட்டது...
அரசு பள்ளி இல்லை என்றாலும் நான் படித்தது அரசு உதவி பெறும் பள்ளியில்...
எங்கள் பள்ளியில் 90% ஆசிரியர்களின் குழந்தைகள் அப்பள்ளியிலேயே பயின்றனர்...
இன்றும் இது தொடர்கிறது...
எங்கள் தலைமை ஆசிரியரும் நல்லாசிரியர் விருது பெற்றவர் தான்..
எங்கள் பள்ளியை நினைத்து பெருமைப்படுகிறேன்...

சிவா.ஜி
01-03-2010, 11:42 AM
ஆமாம் ஆரென். அந்தத் தலைவர்களை விடுங்கள் அவர்கள் பச்சோந்திகள். ஆனால் அரசுப்பள்ளியாசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அதே பள்ளியில் படிக்க வைத்தால், அவர்களுக்காகவாவது கல்வித் தரத்தை உயர்த்துவார்கள். மற்ரவர்களும் கொஞ்சமாவது மாறுவார்கள்.

நன்றி ஆரென்.

பாரதி
01-03-2010, 11:55 AM
இக்கதையைப்படித்த பின்னர் ஒருவராவது திருந்தினால் அதுவே மிகப்பெரிய பரிசாகும்.
சுளீர் கதையை தந்த சிவாவிற்கு பாராட்டு!

கலையரசி
01-03-2010, 01:20 PM
என் தந்தையும் ஆசிரியர் தாம். எங்கள் ஊரில் புகழ் பெற்ற தனியார் பள்ளியிருந்தும் எங்களை அரசுப் பள்ளியிலேயே படிக்க வைத்தார். ஆனால் இப்போது நீங்கள் எழுதியிருப்பது போல் தான் நடக்கிறது.
அருமையான, யதார்த்தமான கதையைப் படைத்த உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

சிவா.ஜி
01-03-2010, 01:37 PM
ஆமாம் பாரதி. எங்கேனும் ஏதேனும் ஒரு மாற்றம் இதனால் விளையுமென்றால் அதைவிட சந்தோஷம் என்ன இருக்கிறது.

நன்றி பாரதி.

சிவா.ஜி
01-03-2010, 01:39 PM
உங்கள் தந்தையைப்போன்ற மிக மிக நல்ல ஆசிரியர்களை நாம் கொண்டிருந்தோம் கலையரசி அவர்களே. ஆனால் நிலைமை இப்போது வேறுவிதமாக இருக்கிறது.

தங்களை ஆசிரியராக நினைக்காமல், வெறும் அரசு ஊழியர்களாக நினைப்பதால்தான் இந்த நிலை. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

சிவா.ஜி
01-03-2010, 01:42 PM
எனக்கு எங்கள் பள்ளி ஞாபகம் வந்துவிட்டது...
அரசு பள்ளி இல்லை என்றாலும் நான் படித்தது அரசு உதவி பெறும் பள்ளியில்...
எங்கள் பள்ளியில் 90% ஆசிரியர்களின் குழந்தைகள் அப்பள்ளியிலேயே பயின்றனர்...
இன்றும் இது தொடர்கிறது...
எங்கள் தலைமை ஆசிரியரும் நல்லாசிரியர் விருது பெற்றவர் தான்..
எங்கள் பள்ளியை நினைத்து பெருமைப்படுகிறேன்...

உங்கள் பள்ளியை நினைத்தும், அந்த ஆசிரிய பெருமக்களை நினைத்தும் நானும் பெருமிதப்படுகிறேன் அகிலா. தமிழ்நாட்டில் மட்டுமல்ல....எல்லா மாநிலங்களிலும் இப்படித்தான் நடக்கிறது. பெரும்பாலான அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் தனியார் பள்ளியில்தான் படிக்கிறார்கள்.

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

பென்ஸ்
01-03-2010, 08:08 PM
நச்..
சொல்ல வந்தது மிக மிக அழகாக, கச்சிதமாக.... சூப்பரப்பு....

நல்லாசிரியர் விருதுக்கு தகுதியில்லாதவர்தான்...
அனா அவருக்கு நல்ல தந்தை விருது கொடுக்கலாமா...!!!

இளசு
01-03-2010, 08:24 PM
இனிய பென்ஸ் வந்ததால் என் வேலை மிச்சம் சிவா..

நான் சொல்லவந்ததை நச்சென சொல்லிய பென்ஸூக்கு நன்றிபா!

------------------------

செவுளில் அறைஞ்சதுபோல் என்பார்களே, அப்படி ஒரு கேள்வி இக்கதையில்..
பாராட்டுகள் சிவா...

அரசு மருத்துவமனையில் பணி..
அவர் குழந்தைக்கு மருத்துவம்?

கல்வியும் மருத்துவமும் இக்கதை விழையும் வகையில் அமையும் நாளே
நாம் உண்மையில் வல்லரசாகும் நாள்..

அமரன்
01-03-2010, 08:35 PM
ஊருக்கு உபதேசம்... உனக்கல்லடி பெண்ணே....!

சபாஷ்.. சரியான அடி என்று சொல்லத் தோன்றுகிறது.

காசு கொடுக்கிறம் படிக்கப் போடா என்று கலைக்கிற பெற்றோரையும்..
கஷ்டப்பட்டுப் படிக்க வைக்கிறாங்க என்று பொறுப்புடன் படிக்கும் பிள்ளைகளையும் பாத்திருக்கேன்..

சிவா.ஜி
02-03-2010, 08:05 AM
வாங்க பென்ஸ்.....மாமாங்கம் ஆச்சு பாத்து. சுகமா இருக்கீயளா?

ஆமாங்க நீங்க சொன்ன மாதிரி...நல்ல தந்தை விருது கொடுக்கலாம்.(இதான் பென்ஸ் டச்....)

நன்றி பென்ஸ்.

சிவா.ஜி
02-03-2010, 08:07 AM
உண்மைதான் இளசு. கல்வியும், மருத்துவமும் நீங்கள் சொன்ன வகையில் மாற வேண்டும்.

மிக்க நன்றி.

அன்புரசிகன்
02-03-2010, 08:17 AM
நமக்கு இப்படி ஏதும் நடக்கல. ஏன்னா நம்மூரில தனியார் பாடசாலையிலும் திறமையாக கல்விதரும் ஒழுக்கம் தரும் பாடசாலைகள் பல உள்ளன...

அழகாக சாத்தியிருக்கிறீர்கள் அந்த வாத்தியாருக்கு...

சிவா.ஜி
02-03-2010, 08:19 AM
ஆமாம் அமரன். பொறுப்பை உணர்ந்து படிக்கும் பிள்ளைகளும் இருக்கிறார்கள். எந்தப் பள்ளி என்பது பிள்ளைகளின் விருப்பமாவது பெரிய வகுப்புக்கு வந்த பிறகுதான். ஆனால் பள்ளியில் சேர்க்கும்போதே அரசுப்பள்ளியில் சேர்த்தால், படிக்கிற பிள்ளை எங்கிருந்தாலும் படிக்கும்.

நன்றி அமரன்.

சிவா.ஜி
02-03-2010, 08:24 AM
அன்பு சொல்றது மாதிரி பள்ளிகள் இருந்தால்....கல்வி இன்றைக்கு வியாபாரம் ஆகியிருக்காது, தனியார் பள்ளி மோகமும் இருந்திருக்காது.

நாங்கள் படிக்கும் காலத்தில் பணம் கொழுத்தவர்களுக்கு மட்டுமே கான்வென்ட்....மற்ற அனைவருக்கும் அரசுப் பள்ளிகளே. ஆனால் உண்மையான ஆசிரியர்களால் நிறைந்திருந்தன. ஒழுக்கமும், கல்வித்தரமும் உச்சத்திலிருந்தன.

இப்போது எல்லாமே தலைகீழ். என்ன செய்வது...!!

நன்றி அன்பு.

Ravee
05-03-2010, 07:34 PM
ஆரேன் அண்ணா தலையில் இருந்து ஆரம்பித்து நெத்தியடி என்று சொல்லி இருந்தார்கள் , ஆனால் நானோ பாதம் வரை இறங்கி போய் விட்டேன் . பின்னர் என்னதான் அவர் ஒரு சுயநலவாதி என்றாலும் ஆசிரியர் என்ற மரியாதையில் அந்த வார்த்தையை பதிக்காமல் வந்து விட்டேன் .
அருமை சிவா அண்ணா .

மதி
06-03-2010, 02:20 AM
அடடா.. நச்சுன்னு ஒரு கதை..!! எங்கிருந்து புடிக்கறீங்க இந்த மாதிரி கருவை.. நானும் தான் ஏதாச்சும் எழுதலாம்னு பாக்கறேன்.. அந்த எழுத்து தான்.. இந்த வார்த்தை மட்டும்.. முட்டிகிட்டு... ஹிஹி... சரக்கில்லீங்கோ.. :)

வாழ்த்துகள்

சிவா.ஜி
06-03-2010, 05:03 AM
உண்மைதான் ரவி...என்னதான் இருந்தாலும் அவர் தன் பள்ளியின் கல்வித்தரத்தை உயர்த்தியவர். அதனால்தான் அந்த நிருபர் ஆதங்கத்துடன் கேட்பதாய் சொன்னேன்.

நன்றி ரவீ.

சிவா.ஜி
06-03-2010, 05:06 AM
என்ன மதி....இது! உங்ககிட்டயாவது சரக்கு இல்லாமப் போறதாவது....சரியா நேரம் அமைய மாட்டேங்குது அவ்ளோதான். இல்லன்னா..பட்டையைக் கிளப்பிட மாட்டீங்க....

நேரம் கிடச்சு, நீங்களும் சூப்பரான கதை எழுதி நாங்களும் படிப்போமில்ல....

நன்றி மதி.

அக்னி
06-03-2010, 08:21 AM
நாம் சமைப்பது எவ்வளவு சுவையானதாக இருந்தாலும்,
வேறொருவர் சமைப்பது அதைவிட ஒருபடி மேலாக்ச் சுவைப்பதும்,
அதிகமாக உண்ணப்படுவதும் வழமைதானே...

ஏன்...
நாம் செய்த உணவின் சிறுகுறைகள் எமக்குத் தெரியும் என்பதா...
இல்லையென்றால், மற்றைய உணவில் தெரியவில்லை என்பதா...

இரண்டாவதைத்தான் நான் தெரிவு செய்வேன்.

ஒன்றைக் கருத்திற் கொள்ள மறந்துவிடுகின்றோம் இக்கதையின் தலைமையாசிரியர் போலவே...

அவருக்குக் கொடுக்கப்பட்ட விருது அவர் தனது பாடசாலையை முன்னேற்ற எடுத்த முயற்சிக்கான விருது.
ஒரு குறிப்பிடத்தக்களவு முன்னேற்றமேனும் இல்லாவிட்டால், அந்தவிருது அவருக்குக் கிடைத்திருக்குமா...
அவரது பள்ளியைவிடவும் சிறந்த பள்ளியெனக் கருதித் தனது பிள்ளைகளைப் படிக்க வைத்த மற்றைய பள்ளித் தலைமையாசிரியருக்கல்லவா விருது கிடைத்திருக்க வேண்டும்...???

கண்ணுக்குத் தெரியும் சிறுகுறைகளை நிவர்த்தி செய்வது,
குறைகள் தெரியாத நிறைகளை நம்புவதிலும் மேலானது...

சிவா.ஜி க்கு, ‘நச்’ கதைக்குப் பாராட்டு...

சிவா.ஜி
06-03-2010, 09:08 AM
"கண்ணுக்குத் தெரியும் சிறுகுறைகளை நிவர்த்தி செய்வது,
குறைகள் தெரியாத நிறைகளை நம்புவதிலும் மேலானது..."


அருமையான கருத்து அக்னி.

மற்ற*வரின் சமையலை தனது சமையலைவிட தரமானதாய் நினைப்பவர், தன் தரத்துக்காகக் கொடுக்கப்பட்ட பரிசை எப்படி வாங்கலாம்? நியாயமாய்த்தான் கேட்டிருக்கிறீர்கள்.

பெரும்பாலான அரசுப்பள்ளி ஆசிரியர்கள், தங்கள் பிள்ளைகளை, அரசுப்பள்ளியில் படிக்க வைப்பதில்லை என்ற ஆதங்கத்தில் எழுதிய கதை. உண்மையிலேயே அப்படி நிகழ்ந்தால், தரம் தானாய் உயரும். தம் பிள்ளைகள் படிக்கிறார்களே என்ற எண்ணத்திலாவது தரத்தை உயர்ந்த நினைப்பார்கள்.

நன்றி அக்னி.