PDA

View Full Version : தேர்வு எழுதும் மாணவர்களுக்கு

muthuvel
01-03-2010, 06:08 AM
தொல்லை தரும் தொலைக்காட்சி தொலைவில் இருக்கட்டும் ,

இரவு பொழுது , பகலில் உறங்கும் முன் உன்னை எழுப்பட்டும்,

உறங்கும் இரவில் உன் கனவுகள் உயர்வாக எண்ணட்டும்,

கடந்த கால தோல்விகள் உன்னை தட்டி எழுப்பட்டும் ,

படித்தவைகள் அனைத்தும் பசுமரத்தாணி போல மனதில் பதியட்டும் ,

உன் பதற்றங்கள் அனைத்தும் தவிடுபொடியாகட்டும்,

உன்னை சுமந்த வயிற்றில் ,உன்னால் இந்த தேர்வின் வெற்றி ,பாலை வார்கட்டும் ,

ஐந்தில் ,உனக்காக வளைந்த உன் தகப்பனின் முதுகுகள் உன்னால் நிமிரட்டும்

இதை நீ கேட்க மறுத்தால் ,
நாளை இந்த உலகம் உன்னை மறுக்கட்டும் ,

அக்னி
01-03-2010, 07:01 AM
அறிவுறுத்தல் என்று சொல்வதைவிடவும்,
அருமையான ஆசி வழங்கல்
எனலாம்.

நாளைப் படிக்கலாம், தேர்வுக்கு முன் படிக்கலாம்
எனத் தள்ளிப்போட்டாலதன் பின்விளைவுகள்,
மாணவப்பருவம் முடிந்தபின் மோசமாக இருக்கும்.

நானும் அனுபவித்து வருந்தும் ஒருவன்தான்.

இதனை மற்றோர் சொல்லியபோது, அந்தப் பருவம் அதனைக் கேட்க மறுத்துவிட்டது.
இப்போதும் அப்பருவத்தார் கேட்க மறுக்கலாம்.

ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற வரி...
“கஸ்ரப்பட்டுப் படிக்காதீர்கள்.., இஸ்ரப்பட்டுப் படியுங்கள்...”
நிதர்சனமான, இந்த வரியை நாம்தான் மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

முத்துவேல் அவர்களுக்குப் பாராட்டுகள்...

muthuvel
01-03-2010, 10:56 AM

நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும்

Akila.R.D
01-03-2010, 11:02 AM
நல்ல கவிதை முத்துவேல்...

வாழ்த்துக்கள்...

(எழுத்துப்பிழைகளை சரி செய்யலாமே...
தலைப்பிலேயே பிழை பண்ணிரெண்டாம் அல்ல..
பன்னிரெண்டாம் என்பதே சரி...
திருத்திக்கொள்ளவும்)

muthuvel
01-03-2010, 11:36 AM
நன்றி அகிலா

govindh
16-03-2010, 06:23 PM
ஐந்தில் ,உனக்காக வளைந்த உன் தகப்பனின் முதுகுகள் உன்னால் நிமிரட்டும்
நல்ல அறிவூட்டம்...
பாராட்டுக்கள்...

சரோசா
16-03-2010, 06:32 PM
முத்துவேல் அவர்களுக்குப் பாராட்டுகள் வாழ்த்துக்கள்...

ஜனகன்
16-03-2010, 08:19 PM
ஆகா..........அருமையான தகவலுடன் வந்த கவிதை.
பாராட்டுக்கள் நண்பரே.

muthuvel
18-03-2010, 10:14 AM
ஆகா..........அருமையான தகவலுடன் வந்த கவிதை.
பாராட்டுக்கள் நண்பரே.

தலைப்பை மாற்றிவிட வேண்டியதுதான் ,
ஏனென்றால் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிந்துவிட்டது

ஆர்.ஈஸ்வரன்
18-03-2010, 10:24 AM
நல்ல கவிதைத் தேர்வு. நல்வாழ்த்துக்கள்

muthuvel
18-03-2010, 12:00 PM
உங்கள் கவிதையும் நன்றாக உள்ளது