PDA

View Full Version : கணினியை ஒரே வினாடியில் ஷட்டவுன் (SHUTDOWN) செய்ய.....



சரண்யா
01-03-2010, 12:55 AM
http://www.free-animations.co.uk/office/computers/images/computer_64.gif

பொதுவாக கணினியில் உள்ள ஷட்டவுன் வசதியை பயன்படுத்தி அணைக்கும் பொழுது "Saving your settings" , "Windows is Shutting down" போன்ற செய்திகள் வரும்.

சில நிமிடங்களுக்கு பின்னர் தான் கணினி அணைக்கப்படும்.

இதெல்லாம் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்யும் கண்கவர் வித்தைகள் தான் . கணினியை அணைக்க சில வினாடியே போதுமானது . இந்த கண்கவர் வித்தைகளை பார்க்க விரும்பாதவர்கள் கீழ்க்கண்ட முறையை பயன்படுத்தி ஒரு சில வினாடியில் கணினியை அணைக்கலாம் . எந்த சேதமும் ஏற்படாது.

உங்கள் கணினியின் Task Manager ரை திறந்து கொள்ளுங்கள். ( Ctrl + Alt + Delete விசைகளை சேர்த்து அழுத்தினால் Task Manager திரைக்கு வரும் )

இந்த Task Manager ல் உள்ள மெனுவில் Shut Down ல் உள்ள Turn Off என்பதை Ctrl கீயை அழுத்திக்கொண்டே கிளிக் செய்யுங்கள் .

வினாடியில் கணினி அணைந்து விடும்.
நன்றி..http://kmenan.blogspot.com/

rajarajacholan
01-03-2010, 03:40 AM
இதனால டேட்டா லாஸ் ஆவாதா?

reader
01-03-2010, 11:41 AM
அடுத்த வினாடியில் சட்டவுன் ஆகிறது ஆனால் எதாவது பிரபலம் வருமா

rajarajacholan
04-03-2010, 12:09 PM
என்ன யாருமே சொல்லமாட்டேங்கராங்க

சரண்யா
05-03-2010, 12:43 AM
கணினி துறையில் உள்ளவர்கள் வருவார்கள்....
வாங்க ப்ரவீன் அவர்கள்,வியாசன் அவர்கள்,பாரதி அவர்கள்,அன்புரசிகன் அவர்கள்....இங்க பதில் சொல்லுங்க...

sunson
30-06-2010, 08:25 AM
நானும் இந்த முறையைத் தான் சில காலமாக செய்து வருகின்றேன். எந்த வித இழப்புகளும் நேர்ந்ததாக தெரியவில்லை. இதைப் பற்றி அறிஞர் பெருமக்கள் தான் விளக்க வேண்டும்.

kavinele
04-07-2010, 08:03 AM
மிக்க நன்றி இதைப் பற்றி அறிஞர் பெருமக்கள் தான் விளக்க வேண்டும்.

xavier_raja
05-07-2010, 09:58 AM
அந்த ஒரு சில வினாடிகளில் என்ன பெரியதாக சாதித்துவிட போகிறீர்கள்.. பேசாமல் ப்ரோபர் shutdown முறை தான் சரி..

ஷண்முகம்
06-07-2010, 09:30 PM
சரண்யா சாதிக்கிறாரா? அல்லது சரண் அடைகிறாரா?

தமிழ் மைந்தன்
07-07-2010, 06:02 PM
உங்கள் ஆலோசனைப்படி ஷேட்டௌன் செய்தேன் இருப்பினும் DATA போய்விடுமோ என்ற பயம் உள்ளது.

rajesh2008
29-08-2010, 03:58 PM
அருமையான தகவல், நண்பர்கள் எதிர்பார்ப்பைப் போல கணினி வித்தகர்கள் வந்து மேலும் விளக்கம் தந்தால் அனைவரும் பயன் படுத்துவோம்

பிரேம்
31-08-2010, 08:47 AM
* டாஸ்க் மேனேஜர்-ல் turn off என்பதனை ctrl அழுத்த தேவை இல்லை...
* கண்டிப்பாக data lose ஆகும்..

kalaiselvan2
01-09-2010, 04:07 PM
நானும் உபயோகித்து பார்த்தேன். நன்றாக உள்ளது. ஆனால் டேட்டா லாஸ் ஆகிறது. மின்சாரம் சென்ற பிறகு யு.பி.எஸ்சில் சிஸ்டம் உபயோகிக்கும் போது ஆவசர காலத்தில் இந்த குறுக்குவழியினை பின்பற்றலாம். இதே போல் சிஸ்டத்தில் நொடியில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் லோட் ஆக கீ ஏதேனும் இருந்தால் நன்றாக இருக்கும்.

leem762
02-09-2010, 06:24 AM
:lachen001:

leem762
02-09-2010, 06:25 AM
கொஞ்ச நேரம் பொறுமையா இருந்து ஷட்டவூன் செஞசா என்னவாம்?

அவ்வளவு வேகமா என்னதான் சாதிக்க போராங்களோ தெரியளீங்க?:lachen001::lachen001:

நாஞ்சில் த.க.ஜெய்
17-11-2010, 10:58 AM
டாஸ்க் மேனேஜர் ல் சென்று செய்யும் எந்தவொரு விளைவுக்கும் தகவல் பாதிப்பு என்பது நிச்சயம் உண்டு .ஆனால் அது பெரிதளவில் பாதிக்காது.மின்சாரம் பாதிப்பு ஏற்படும் அவசர காலங்களில் இந்த வழி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

என்றும் அன்புடன்
த.க.ஜெய்

mrsalemkk
17-11-2010, 12:11 PM
thank you