PDA

View Full Version : கடன் வாங்கிய காட்சிப்பாக்கள்



இளசு
19-10-2003, 07:17 AM
கருத்துகள் என்றோ ஆங்கிலத்தில் படித்தவை..கடன்!
தமிழ்... என் தாய் தந்த கடன்!
கடன்பட்டு வடித்த காட்சிப்பாக்கள்.....

மழையில் நனைந்து
தொண்டை கர..கர..
தவளைகள்!
**********

எண்ணம் சேர்ந்தது ஆயிரம் மைல்
அசையாமல் சிலையாய் உடல்
கணினி முன் நான்
*******************

ஞாயிறு காலை வாக்கிங்!
ஆளற்ற பாதையில் ராமு..ஜிம்மி..
ஒதுங்க ஆளுக்கொரு மரம்!

*************************

puppy
19-10-2003, 07:52 AM
குப்பை தொட்டியில்
ஆண் குழுந்தை
சிவப்புவிளக்கு பகுதி

இளசு
19-10-2003, 07:55 AM
நண்பன் சொன்னது சரிதான்...
"திடுக்"கிட வைக்கும் சிறுகவிதைக்கு
பப்பி!

நான்கு வரிகளில், ஒரு 'திடுக்' வைத்து கவிதை எழுதுபவர் ஆயிற்றே!

இங்கும் ஒரு 'திடுக்' கருத்தைச் சொல்வார்...........

இங்கே மூன்று வரிகளில்...
பாராட்டுகள் பப்பி!

மீனலோஷனி
19-10-2003, 08:03 AM
அற்புதமான முயற்சி ஒன்று இளசே.

பாராட்டுக்கள்.

இளசு
19-10-2003, 09:52 AM
ஊக்கத்திற்கு நன்றி மீனா!

chezhian
19-10-2003, 03:07 PM
இன்னும் கடன் வாங்குங்கள் இளசே.

இளசு
19-10-2003, 08:47 PM
நண்பன் செழியனுக்கு நன்றி!

முத்து
19-10-2003, 09:01 PM
அருமையான ஹைகூ கவிதைகள் ... நன்றி .. இளசு அண்ணா ....

இளசு
19-10-2003, 09:02 PM
என் அன்புத்தம்பிக்கு செல்லமாய் நன்றி!

இளசு
19-10-2003, 10:43 PM
மெத்தென்ற பாதம்
கத்தி போல் நகம் - இரண்டும்
உணர்ந்தது எலி!

sOliyan/சோழியான்
20-10-2003, 03:09 AM
என் முகமூடிகள் வசை பாடுகின்றன
மீண்டும் அணியவில்லை
என்பதற்காக!!

இளசு
20-10-2003, 06:27 AM
வாங்க வாங்க சோழியான்!
நீண்ட நாள் இடைவெளிக்குப்பின் சந்திக்கிறோம்.
அன்றாடம் நாம் போடும் வேடங்களைப் பற்றிச் சிந்திக்க
ஒரு ஹைக்கூ....
பாராட்டுகள்!

Nanban
20-10-2003, 09:39 AM
[quote]மெத்தென்ற பாதம்
கத்தி போல் நகம் - இரண்டும்
உணர்ந்தது எலி!

இதைத் தான் கவிதை என்று சொல்ல வேண்டும். எத்தனை வலிமையான உணர்வுகள்!!!

இந்த எலியைப் போலத்தான் இன்று பல மனிதர்களும். மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல் என்று சொல்வார்களே - அது, இதைத் தான் போலும்......

TOM & JERRY பார்த்தது போல ஒரு திருப்தி............

இளசு
20-10-2003, 09:20 PM
இந்த எலியைப் போலத்தான் இன்று பல மனிதர்களும். மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல் என்று சொல்வார்களே - அது, இதைத் தான் போலும்......

TOM & JERRY பார்த்தது போல ஒரு திருப்தி............

நண்பனுக்கு நன்றி...
டாம்& ஜெரியிஸம் உலகளாவிய ஒன்று!

கவுண்டமணி - செந்தில்
கோவை சரளா - வடிவேலு
எனப் பல அவதாரங்கள் எடுத்த
உளவியல் கீற்று அது!

இளசு
20-10-2003, 09:24 PM
அண்மையில் உன் பிறந்தநாள்
அலைந்து வாங்கினேன் பரிசு
மீண்டும் ஆஷ்-டிரே!

puppy
20-10-2003, 09:29 PM
படுக்கையை உதறினேன்
நொறுங்கி விழுந்தன
கனவுகள்

இளசு
20-10-2003, 09:35 PM
படுக்கையை உதறினேன்
நொறுங்கி விழுந்தன
கனவுகள்

பப்பி அவர்களே
உணர்வுகளை
பிச்சு உதறுகின்றன
இவ்வரிகள்...
பாராட்டுகள்.

puppy
20-10-2003, 09:51 PM
வண்ணத்துப் பூச்சி
அடம் பிடிக்கும் குழுந்தை
வேறு பக்கம் பறக்கமாட்டாயா ?

இளசு
20-10-2003, 09:57 PM
வண்ணத்துப் பூச்சி
அடம் பிடிக்கும் குழுந்தை
வேறு பக்கம் பறக்கமாட்டாயா ?

பப்பி அவர்களே

அப்பூச்சியிடம் பாவமில்லை - கவர்வதால்
அழும் குழந்தையிடம் குற்றமில்லை - கேட்பதால்
இடையில் இருக்கும் இதயத்தின் வேதனை...ஓஓ!
அழகாய் வடிக்குது கவிதை!
அடடா..இதுதான் கவிதை!!

பாராட்டுகள்!

puppy
20-10-2003, 09:58 PM
பூமி தேவதையின்
பாதத்தை தேடும் படலம்
வேர்கள்

இளசு
20-10-2003, 10:06 PM
பூமி தேவதையின்
பாதத்தை தேடும் படலம்
வேர்கள்

தேடுதல் வளர்ச்சி
என்று பச்சையாய்
எழுதிய பாடங்கள்

chezhian
21-10-2003, 12:34 PM
[quote]¢ 󾿡
š â
-ʧ!


..? ʧ????????

karavai paranee
21-10-2003, 01:04 PM
வணக்கம்

எங்கு தொலைந்தேன்
இங்கு இதை காணமுடியாமல்

கடன்வாங்கியதாய் சொல்லிக்கொண்டே
கடன்தர மறுக்கின்றார்களே !

வாழ்த்துக்கள்
அருமையான கைக்கூக்கள்

இன்னமும் தாருங்கள்

இளசு
21-10-2003, 10:04 PM
பப்பி,, என் சார்பில்
எமைக் கவர்ந்த கவி கரவையின்
பாராட்டுக்கு நன்றி.


கலைந்தது கல்யாணக்கூட்டம்...
காலியானது மண்டபம்...
காத்திருக்குது ஒற்றைச் செருப்பு !

முத்து
21-10-2003, 10:09 PM
அருமையான ஹைக்கூகள் ...
நன்றி நண்பர்களுக்கு ....

lavanya
21-10-2003, 10:14 PM
கடன் வாங்கியதாக இருந்தாலும் நல்ல கவிதைகள் இளசுவிடமிருந்து....
அழுத்தமாய் பப்பி சொன்ன கவிதைகளில் ஆழமாய் இருந்தன கருத்துக்கள்...
பாராட்டுக்கள்

இளசு
21-10-2003, 10:19 PM
கடன் வாங்கியதாக இருந்தாலும் நல்ல கவிதைகள் இளசுவிடமிருந்து....
அழுத்தமாய் பப்பி சொன்ன கவிதைகளில் ஆழமாய் இருந்தன கருத்துக்கள்...
பாராட்டுக்கள்

கரிசனக் கருத்து சொன்ன நண்பன் செழியனுக்கும்
கவிதை தந்த அனைவரையும் பாராட்டிய தம்பி முத்துவுக்கும்
நன்றி...

லாவண்யா
காட்சிப்பா என்ற சொல்லே கடன்வாங்கியதுதான்...
உங்களிடமிருந்து...

நிலா
22-10-2003, 12:04 AM
அனைவருக்கும் பாராட்டுகள்!

Nanban
22-10-2003, 06:16 AM
படுக்கையை உதறினேன்
நொறுங்கி விழுந்தன
கனவுகள்

நொறுங்கிய கனவுகளை
கண்ணாடிப் புட்டியில் அடைத்தனர் -
சோதனைச் சாலையில் நான்.

Nanban
22-10-2003, 06:22 AM
[quote]அண்மையில் உன் பிறந்தநாள்
அலைந்து வாங்கினேன் பரிசு
மீண்டும் ஆஷ்-டிரே!

எரிந்தது உன் புகைப்படம்
உற்றவர்கள் எல்லாம் களிப்பில் -
சோகங்கள் ஆஷ்-டிரேயில்.

இளசு
22-10-2003, 06:28 AM
[quote]அண்மையில் உன் பிறந்தநாள்
அலைந்து வாங்கினேன் பரிசு
மீண்டும் ஆஷ்-டிரே!

எரிந்தது உன் புகைப்படம்
உற்றவர்கள் எல்லாம் களிப்பில் -
சோகங்கள் ஆஷ்-டிரேயில்.

என் இனிய நண்பனே
தலைப்பை மீறியது ஆஷ்டிரே கவிதை
கடன் வாங்கியதல்ல.....
சொந்தமாய் வாங்கிய க(வி)தை!
உங்கள் எரிந்த புகைப்படம் போல...

Nanban
22-10-2003, 07:04 AM
தலைப்பு மட்டும் தான் கடன் வாங்கியது என்று அறிவேன்....... பின்னர் பப்பி கவிதைகள் வரத் தொடங்கியதுமே, கடன் மட்டுமல்ல, சொந்த படைப்புகளும் வரலாம் என்றாகிப் போன பொழுதில், நானும் எனக்குத் தோன்றிய கவிதை வரிகளை எழுதி வைத்தேன்....... இன்னொரு தனித் தலைப்பில் தொடங்குவதை விட, இதுவே போதும். தலைப்பை மற்றும் - காட்சிப்பாக்கள் - கடனும், சொந்தமும் என்று மாற்றி விடுங்கள் - இதே தலைப்பில் தொடரலாம்........

(சொந்தமாக - தோன்றுவது, inspiration ஆகி தோன்றுவது......... )

inspirational காட்சிப்பாக்களை மட்டும் இங்கே ஆக்கி விடலாம்........

chezhian
22-10-2003, 12:20 PM
நண்பன்..
கண்ணாடிப்புட்டியில் அடைக்கபட்ட கனவுகள்
எரீந்த புகைப்படம்
இரண்டும் அருமை
தொடருங்கள் எல்லோரும்.பாராட்டுக்கள்+வாழ்த்துக்கள்.

puppy
22-10-2003, 04:53 PM
விண்மீன் வழிதவறியது
ஹோ
அவள் மொட்டைமாடியில்!!!!!!!!!!

தமிழ் தாட்சாயிணி
22-10-2003, 05:08 PM
சேலை வியாபாரிகள்
சிகப்பு விளக்கு பகுதியில்
சேலை அவிழ்ப்பவர்கள்

இளசு
22-10-2003, 10:51 PM
பப்பி தந்தது பரவசக் காட்சி
தமிழ்தாட்சாயிணி தந்தது அவலக்காட்சி...

காட்சிகள் தொடரட்டும்...
பாராட்டுகள்.

chezhian
23-10-2003, 12:38 PM
தூறல் ஓய்ந்தபின்தான்
சடசட துளிகள்
காற்றில் அசையும் மரம்

puppy
23-10-2003, 03:59 PM
மறுஜென்மமோ
இடுகாட்டில்
பூக்கள்

puppy
23-10-2003, 04:06 PM
இயற்கைக்கு மனிதனின்
செய்ல்களில் கோபமோ
புயல்

Chiru_Thuli
23-10-2003, 04:14 PM
கணிணியில் மழை
மன்றத்து கவிகளின்
காட்சிப் பாக்கள்.

puppy
23-10-2003, 04:28 PM
தூரத்தில் இடி
காதலர்க்ளின்
குட்-பை முத்தமோ

puppy
23-10-2003, 09:03 PM
ஒருவிதமான பதற்றம்
திணிக்கும் சிரிப்புகள்,சின்ன பேச்சுகள்
உறவுகள் சந்திப்பு

puppy
24-10-2003, 10:19 PM
எழுத நினைத்தேன்
மறந்து போயிற்று
இளசுவின் செல்லகுட்டூஸ்

அசன் பசர்
25-10-2003, 05:20 AM
குப்பை தொட்டியில்
ஆண் குழுந்தை
சிவப்புவிளக்கு பகுதி

இந்த நூற்றாண்டின்
மிகச்சிறந்த
அய்..கூ வாக
இதை அறிவிக்கிறேன்

இளசு
25-10-2003, 06:17 AM
செழியன், பப்பி (* 5 ), சிறுதுளி...
உங்களால் இந்தப்பக்கத்தின் சிறப்பு கூடிக்கொண்டே............

karikaalan
25-10-2003, 09:13 AM
குறும்பா ஒவ்வொன்றும் அருமை; ஒன்று சிரிக்க வைத்தால், மற்றது சிந்திக்க வைக்கிறது. வேறு சில மனதைத் தாக்குகின்றன.

வாழ்த்துக்கள் இத்தொடர் மேலும் வளர.

===கரிகாலன்

Nanban
27-10-2003, 01:36 PM
படித்துக் கொண்டிருந்தான்
நடுச்சாமம் கழிந்த பின்பும் -
நித்திரை கொள்வதெப்படி?

Chiru_Thuli
27-10-2003, 04:44 PM
புள்ள குட்டிக்கு
கஞ்சி ஊத்த மரம் வெட்டினான்

இரை தேடச் சென்ற
தாய்க்காக கூட்டில் குஞ்சுகள்!

Nanban
27-10-2003, 04:48 PM
புள்ள குட்டிக்கு
கஞ்சி ஊத்த மரம் வெட்டினான்

இரை தேடச் சென்ற
தாய்க்காக கூட்டில் குஞ்சுகள்!

அற்புதம், சிறுதுளி அவர்களே........

பாராட்டுகளும், வாழ்த்துகளும்.........

puppy
27-10-2003, 06:50 PM
சிறு துளி அருமை..ஆனால் இப்படி இருந்தால் இன்னும் அபாரம்
புள்ளகுட்டிக்கு
கஞ்சி ஊத்த மரம் வெட்டினான்
மரத்தில் குஞ்சுகள்

இளசு
27-10-2003, 07:49 PM
நண்பனும் சிறுதுளியும்
தந்த காட்சிகள் அருமை...

இத்தொடர் தொடரட்டும்.....
இன்னும் காட்சிகள் மலரட்டும்...

puppy
27-10-2003, 07:56 PM
நகரத்துக்குள்
சிறு சிறு மலைகள்
தர்பூசணி சீசன்

(கோடைகாலத்தில் சென்னை போய் இருந்தேன்)

இளசு
27-10-2003, 08:21 PM
பச்சை மலைகளைப்
பற்றிய பப்பியின் காட்சிப்பா
இனிப்பு..குளிர்ச்சி..
நன்றி...

முத்து
28-10-2003, 01:53 PM
பப்பி அவர்களின் ஹைகூ அருமை.... இதை வைத்து இன்னொன்று .... ( ஆழ்வார்கள் என்னை மன்னிப்பார்களாக... :wink: )

ஒரு பச்சைமாமலை
அதில் சில பவளவாய்கள்
தர்பூசணிக்குவியல் .....

இளசு
28-10-2003, 04:35 PM
அருமை முத்து... பாராட்டுகள்.

**************************************************************************

கணினியில் உன் கடிதமில்லை - மரணம்..
நாட்காட்டி படபடக்க....
நாளையை எண்ணி மீண்டும் ஜனனம்!


*************************************************************************

madhuraikumaran
28-10-2003, 04:41 PM
வீட்டைக் கூட்டினேன்.
குப்பையானது
தெரு.


- இதுவும் கடன் வாங்கியது தான். எனைப் பாதித்த முதல் ஹைகூ.

இளசு
28-10-2003, 04:47 PM
வீட்டைக் கூட்டினேன்.
குப்பையானது
தெரு.


- இதுவும் கடன் வாங்கியது தான். எனைப் பாதித்த முதல் ஹைகூ.


வாங்க வாங்க நண்பரே
கடனைத் தாண்டி,
நண்பன், பப்பி சொந்தக்காட்சிகளை எப்பவோ பதிக்க ஆரம்பிச்சுட்டாங்க...
அதைப்பார்த்து நான் கூட.....................!!!!!!!!! (வான்கோழி ஆயிட்டேன்...)

கல்யாண்ஜி வேற மாதிரியில்ல எழுதி இருப்பார் கணையாழியில்..
(இப்படியே இருக்கட்டும்..சைவமாய்...நல்லாவே இருக்கு..)
அந்த இதழில் வந்த ஆயிரம் கவிதைகளில்
எனக்குப்புரிந்த ஒரு சிலதில் இதுவும் ஒன்று..

Nanban
29-10-2003, 03:02 PM
பக்தி.........

ஆலய உண்டியலில்
வேடிக்கைக் கூட்டம் காசிட்டது -
சாமிப்படம் வீதியில்...

பாரதி
29-10-2003, 07:08 PM
பக்தி.........

ஆலய உண்டியலில்
வேடிக்கைக் கூட்டம் காசிட்டது -
சாமிப்படம் வீதியில்...
_________________


சினிமா திரையரங்கில்
வேடிக்கைக் கூட்டம் காசிட்டது -
"சாமி"ப் படம்.

நண்பா.. மன்னிக்க... :wink:

Nanban
30-10-2003, 03:01 AM
சினிமா திரையரங்கில்
வேடிக்கைக் கூட்டம் காசிட்டது -
"சாமி"ப் படம்.

நண்பா.. மன்னிக்க... :wink:

பிரமாதம், பாரதி அவர்களே, ஆலய உண்டியலை விட, சினிமா உண்டியல் என்பது தான் பொருத்தமானது.

நன்றாக உள்ளது.................

இளசு
30-10-2003, 03:58 AM
நண்பனும் பாரதியும் பின்னுகிறார்கள்.
நான் பார்த்த வேடிக்கை எல்லாம்
அம்மன் திரைப்பட அரங்கில் வேப்பிலைப்பாடல் வரும்போது
ரசிக அம்மணிகளுக்கு அருள் வருவதும், உடனே தற்காலிக நடமாடும் பூசாரி
பிரசன்னமாகி விபூதி தருவதும், இதைப்பயன்படுத்தி தியேட்டரின் உள்ளேயே
திடீர் கோயில் பெரிய உண்டியலுடன் முளைப்பதும்.......

இரட்டிப்பு வசூல்!

puppy
30-10-2003, 04:52 AM
நட்சத்திரம் பார்த்து
ஆறுதலாய் அவள்
அடகுகடையில் மூக்குத்தி

இளசு
30-10-2003, 04:55 AM
மீண்டும் பப்பி அவர்களின் மூன்று வரி அணுகுண்டு....

puppy
30-10-2003, 05:21 AM
வார்த்தைகள் வந்ததும்
உதடுகள் உறைந்தது
பனிகாற்று

இளசு
30-10-2003, 05:22 AM
உதடுகள் உறைந்தாலும்
உண்மையைப் பேசிவிட்டது
புன்னகை

puppy
30-10-2003, 05:29 AM
உண்மை பேசினாலும்
சந்தோஷம் இல்லை
கோபம்

puppy
30-10-2003, 05:32 AM
தீண்டதகாதவன் தண்ணீர் ஊற்றுகிறான்
தீட்டு பார்க்கமால் குடிக்கிறான்
இளநீர்

puppy
30-10-2003, 05:41 AM
கொசு கடித்தது
தாயை எழுப்பிய
சின்ன கொலுசு

இளசு
30-10-2003, 05:42 AM
உண்மை பேசினாலும்
சந்தோஷம் இல்லை
கோபம்

பல முறை படித்தும்
புரிந்ததே இல்லை
பெண் -அகராதி..

இளசு
30-10-2003, 05:44 AM
தீண்டத்தகாதவன் தண்ணீர் ஊற்றுகிறான்
தீட்டு பார்க்கமால் குடிக்கிறான்
இளநீர்

தாகம் எடுக்கும்போது மட்டும்
தீண்டாமையைத்
தீண்டமாட்டேன்!

இளசு
30-10-2003, 05:45 AM
கொசு கடித்தது
தாயை எழுப்பிய
சின்ன கொலுசு

திருடன் வந்தபோதும் தூங்கினாள்..
சிறுநீர் ஈரத்தில் துடித்தெழுந்தாள்..
தாய்!

puppy
30-10-2003, 05:51 AM
ஆம் தாய்.......தாயால் மட்டுமே அது முடியும்......பாராட்ட தகுதி இல்லை....
இளசே.....வணங்குகிறேன்

இளசு
30-10-2003, 06:06 AM
ஆம் தாய்.......தாயால் மட்டுமே அது முடியும்......பாராட்ட தகுதி இல்லை....
இளசே.....வணங்குகிறேன்

மருத்துவ ஏட்டில் படித்த உண்மை
மன்றத்தில் பதித்தது மட்டுமே என் பணி..
உங்கள் பாராட்டு..
Samson & Wright's PHYSIOLOGY Textbook யே சாரும். :)

சேரன்கயல்
30-10-2003, 06:10 AM
தாயைப் பற்றி எழுதிய அந்த மருத்துவ ஏட்டின் ஆசிரியருக்கும் உங்களுக்கும் நன்றிகள் இளசு...
தாய் என்பவள் ஒரு அதிசயம், அற்புதம், ஆச்சரியம்....

puppy
30-10-2003, 07:05 AM
அனுமதி இலவசம்
போக மட்டும் பயம்
மரணம்

இளசு
30-10-2003, 07:07 AM
அனுமதி இலவசம்
போக மட்டும் பயம்
மரணம்

அருமை அருமை பப்பி அவர்களே...

பயணம் கட்டாயம்..
என்றா... தெரியாது
இன்று இவர்.. நாளை நீ!

chezhian
30-10-2003, 12:53 PM
**************************************************************************

கணினியில் உன் கடிதமில்லை - மரணம்..
நாட்காட்டி படபடக்க....
நாளையை எண்ணி மீண்டும் ஜனனம்!


*************************************************************************

அன்னம் விடும் தூது அக்காலம்
தோழி போன தூது கடந்தகாலம்
தபால் காரர் தெய்வமானது வைரமுத்து காலம்
கணணி அம்மன் தூது "இளசு"களின் தற்காலம்.
நானும் தினமும் அம்மன் அருள் தேடி வருபவனே
பாராட்டுக்கள்+வாழ்த்துக்கள் இனிய இளசு.

பப்பி தந்த கவிதைகள் அனைத்தும் அருமை. தாய் பற்றி நண்பர்கள் சொன்னது நெஞ்சைத் தொட்டது. தொடருங்கள் நண்பர்களே

Chiru_Thuli
30-10-2003, 03:27 PM
[glow=red:2dbb863d24]ரேகைகள்[/glow:2dbb863d24]
ஜோதிடக் காரரிடம்
கை காட்டினான்
முகத்தில் கவலை ரேகைகள்

இளசு
30-10-2003, 11:54 PM
கைரேகையைப் பார்க்குமுன்னே
காட்டிக்கொடுத்த கவலைரேகைகள்..

அருமை சிறுதுளி..
அடிக்கடி காட்சிப்பா தாங்க..
பாராட்டுகள்.

Nanban
31-10-2003, 05:24 AM
மரணம் பற்றிய பப்பியின் கவிதை நயம்.

சிறுதுளி, பெருவெள்ளமாய் உருவெடுக்கிறார்.

இருவருக்கும் வாழ்த்துகள்.

chezhian
31-10-2003, 11:52 AM
பாராட்டுக்கள் சிறுதுளி. அருமையாய் கொடுத்தீர்கள்.

Chiru_Thuli
31-10-2003, 05:22 PM
பாராட்டிய மனங்களுக்கு நன்றி!

[glow=red:bf8ae5f2d3]????[/glow:bf8ae5f2d3]
இரப்பர் மரங்களுக்கிடையே
பால் எடுக்க......
காலில் செருப்பில்லாமல்.

இளசு
31-10-2003, 05:28 PM
மீண்டும் ஒரு முகத்தில் அறையும் முரண் காட்சி..
என் மனமார்ந்த பாராட்டுகள் சிறுதுளி...

நீங்கள் பார்த்த காட்சிகளைப் பதித்துக்கொண்டே இருங்கள்..
நாங்கள் இரசித்து பாராட்டிக்கொண்டே இருக்கிறோம்..

poo
31-10-2003, 06:20 PM
சிறுதுளி... = சிறு உளி!!!

முத்து
31-10-2003, 06:37 PM
அருமை சிறுதுளி ... பாராட்டுக்கள் ...மற்றும் நன்றிகள் ...

puppy
31-10-2003, 07:07 PM
வயல் மீன்களுக்கு
தினமும் பாடல்
அறுவடை காலம்

இளசு
31-10-2003, 09:26 PM
இக்காட்சி எனக்கு புரியவில்லை பப்பி அவர்களே

puppy
31-10-2003, 09:31 PM
அறுவடை காலம் ஆரம்பிக்கும் போது எல்லோரும்
சேர்ந்து பாட்டு பாடிட்டே வேலை செய்வாங்க இல்லையா..
அப்போ இருக்கிற மீன்களுக்கு பாடல் தினமும்
பாட்டு கேக்கும் இல்லையா..அதுதான் ......

madhuraikumaran
31-10-2003, 09:35 PM
எனக்குத் தெரிந்தவரை அறுவடை காலத்தில் வயலில் நீர் இருப்பதில்லை. ஒருவேளை பக்கத்திலிருக்கும் வாய்க்காலின் மீன்களோ ?!!!

இருந்தாலும் நல்ல கற்பனை !

இளசு
31-10-2003, 09:35 PM
நன்றி பப்பி அவர்களே
நான் ஒரு புத்தூஸ்..
அறுவடை முடிஞ்சா வயல் காய்ஞ்சி
அழகு மீன்களுக்கு ஆபத்தாச்சேன்னு
வேற மாதிரி "ரோசனை" பண்ணிக் குழம்பிட்டேன்...

puppy
31-10-2003, 09:36 PM
ஆமாம் வயல் காஞ்சா வீட்டில் மீன் குழும்பு வைக்கலாம்ன்னு
யோசிச்சீங்களா........

puppy
31-10-2003, 10:05 PM
யார் வீட்டுக் குழந்தையோ
அழுதது.விழித்த தாய்க்கு
பாதி நிலா.

இளசு
31-10-2003, 10:16 PM
இந்தத் தாய்க்கு என்ன சோகம்? விளக்கம் ப்ளீஸ்...

puppy
31-10-2003, 10:18 PM
சோகம் இல்லை...இளசு...இது ஒரு நிகழ்வு.....எங்கோ குழுந்தை
அழ இன்னொரு தாய் விழித்து பார்க்க அவளுக்கு தெரிந்த
பாதி நிலவு.......அவ்வளவே.....

இளசு
31-10-2003, 10:22 PM
வர வர கவிஞர்கள் சொல்ல வர்றதைவிட
ஓவரா யோசிச்சு என்னையே வாரிக்கிறேன்னு நினைக்கிறேன்...

நன்றி பப்பி அவர்களே..

puppy
31-10-2003, 10:25 PM
எதாச்சும் அதில் கருத்து இருக்கணும்னு அவசியம் இல்லை....காட்சி இருந்தாலே போதுமானது..எல்லா காட்சிகளும் எல்லாராலயும் பார்க்க முடியாது இல்லையா.....

முத்து
31-10-2003, 10:52 PM
நல்லாயிருக்கு பப்பி அவர்களே ...

முத்து
31-10-2003, 10:57 PM
சுட்டு விரலில்
உலகைக் கொண்டுவரும்
மவுஸ்...

Chiru_Thuli
01-11-2003, 02:57 PM
[glow=red:0f89fdf097]அலை[/glow:0f89fdf097]
கடல் அலையை ரசிக்கும் குழந்தை
அலையின் நடுவே ஆடும் படகில்
அவளது மீனவத் தந்தை.


( நண்பர்களே, இக்கவிதையின் முதல் வரி கடற்கரையில் நின்றிருக்கும் வேறொருவரின் பார்வை. அவருக்கு அக்குழந்தை அலையை ரசிப்பதாகவே படுகிறது. இரண்டாம் வரி அக்குழந்தையின் பார்வை. அவள் ரசிப்பது அலையல்ல, அவள் அப்பாவின் வருகையை. கவிதையில் முழுவதாக சொன்னேனா எனத் தெரியவில்லை. எனவே தான் விளக்கம்..)

இளசு
01-11-2003, 05:27 PM
காட்சிப்பா அருமை சிறுதுளி...

ஒரு "செம்மீன்" காட்சி இது. நன்றியும் பாராட்டும்!

இளசு
01-11-2003, 06:57 PM
சுட்டு விரலில்
உலகைக் கொண்டுவரும்
மவுஸ்...

அருமை முத்து...

பெற்றவரைச் சுற்றி
உலகமென்றவர் அமர்வதும்
மவுஸ்..!

puppy
01-11-2003, 07:03 PM
மார்கழி கருக்கல்
வாசலில் தண்ணீர்
தெளிக்க..கோலம்போட்டது
நிலா

இளசு
01-11-2003, 07:07 PM
மார்கழி கருக்கல்
வாசலில் நீர் தெளிக்க..
கோலம்போட்டது நிலா

கண்ணுக்கும் நெஞ்சுக்கும் இதமான கூதல் தரும் காட்சி இது!
ஒரு புகைப்படத்தின் பாதிப்பு இவ்வரிகளில்...
நன்றி பப்பி அவர்களே....

puppy
01-11-2003, 07:21 PM
திங்கள் காலை
அலாரம் அடிக்க
இன்னும் சனிக்கிழமை
கனவுகளில்...

puppy
01-11-2003, 07:34 PM
காலையில் மேஜையில்
செய்தித்தாளும், காபியும்
நான் கலக்கு கலக்கு என......

முத்து
01-11-2003, 07:47 PM
பெற்றவரைச் சுற்றி
உலகமென்றவர் அமர்வதும்
மவுஸ்..!

இளசு அண்ணா ... இதுவும் நல்லாயிருக்கு .. புரிய சிலநிமிடங்கள் ஆனது .... :D

முத்து
01-11-2003, 07:48 PM
திங்கள் காலை
அலாரம் அடிக்க
இன்னும் சனிகிழமை
கனவுகளில்...

நல்லாயிருக்கு பப்பி அவர்களே ...
இது ஒவ்வொரு வாரமும் வழக்கமான நிகழ்வு எனக்கு .... :)

puppy
01-11-2003, 08:06 PM
உயிரோடு எடுக்கப்பட்டது
புகைப்படத்தில் வண்ணங்கள்
மங்கி....

இளசு
01-11-2003, 08:18 PM
உயிரோடு எடுக்கப்பட்டது
புகைப்படத்தில் வண்ணங்கள்
மங்கி....

மங்கியது [fade:23353cf807]வ மட்டுமே

எண்ணங்கள் அல்ல...

சேரன்கயல்
02-11-2003, 07:04 AM
பப்பி அழகாய் எழுதுகிறீர்கள்...
பாராட்டுக்கள்...
மார்கழிக் கோலம் அசத்தல்...

poo
02-11-2003, 12:59 PM
பப்பி அவர்களே...

கலைநயம்..கவிநயம்..

எங்கும் பாராட்டுமயம்!!

வாழ்த்துக்கள்.. தொடருங்கள்!!!

Nanban
03-11-2003, 04:29 PM
உயிரோடு எடுக்கப்பட்டது
புகைப்படத்தில் வண்ணங்கள்
மங்கி....

புகைப்படம்...........

பழுப்பாக நினைவுகள்
வீட்டுச் சுவற்றில் தொங்குகிறது -
நிஜங்கள் கல்லறையில்....

இளசு
05-11-2003, 07:24 PM
நண்பனின் காட்சிப்பா... அருமை. பாராட்டுகள் நண்பனே.

puppy
15-11-2003, 06:52 AM
தலைமுறை கோபம்
இடிவிழ இடிவிழ
அதிரும் பாறை

இளசு
17-11-2003, 04:39 PM
அருமை பப்பி அவர்களே...பாராட்டுகள்.

அடுத்த காட்சி?

puppy
17-11-2003, 05:00 PM
பறவைகள் பறந்துவிட்டன
உணவை தேடி
சத்தமில்லா மரம்

இளசு
17-11-2003, 05:02 PM
மனக் காட்சிப்பா.... அருமை பப்பி அவர்களே...

குளத்தில் கல் எறிந்தேன்
பரவியது அலை...
இன்னொருவனும் எறியும்வரை..

puppy
25-11-2003, 10:30 PM
95வது பிறந்தநாள்
எரியும் மெழுகுவர்த்திகள்
அவரால் ஊதி அணைக்கமுடியவில்லை

இளசு
25-11-2003, 10:46 PM
காட்சிகளை வார்த்தைகளில் வரைகிறீர்கள் பப்பி அவர்களே...
பாராட்டுகள்.

puppy
25-11-2003, 10:57 PM
மஞ்சள் இலைகள்
டென்னிஸ் பந்தை
தேடினான்.

இளசு
25-11-2003, 11:01 PM
படத்துக்குக் கவிதை போல்
உங்கள் கவிதைகளுக்குள் படம்
தேடவேண்டாம்...
படிக்கும்போதே மனதால் காணலாம்..

வியக்கவைக்கும் பப்பி அவர்களுக்கு பாராட்டுகள்.

puppy
25-11-2003, 11:04 PM
மருத்துவமனையில்
நர்ஸ்கள் எல்லாம் சற்றே வெளியே
முழுநிலா பிரகாசமாக

முத்து
25-11-2003, 11:07 PM
மருத்துவமனையில்
நர்ஸ்கள் எல்லாம் சற்றே வெளியே
முழுநிலா பிரகாசமாக


பப்பி அவர்களே ..
புரியலையே ...

( அவங்க எல்லாரும் முழு நிலா மாதிரி அழகா இருக்காங்க .. ? அப்படியா ..? )

இளசு
25-11-2003, 11:09 PM
பரிச்சயமில்லாக் காட்சி.. :lol:
கற்பனையில் காணும்போது....

ஓ..
ஒரே வண்ணத்தில்
எத்தனை பட்டாம்பூச்சி..

puppy
25-11-2003, 11:09 PM
இளசு சொல்வாரு ....இல்லைனா நான் சொல்றேன் முத்து

puppy
25-11-2003, 11:24 PM
மாலை தென்றலில்
நிலா அதிருகிறது
குளத்தில்

இளசு
25-11-2003, 11:28 PM
அருமை பப்பி அவர்களே..

அதிர்வைத் தடுத்து
அணைக்க நினைத்து
நனைந்து நடுங்கும் கரங்கள்..

முத்து
25-11-2003, 11:33 PM
பரிச்சயமில்லாக் காட்சி..


அண்ணா ...
அப்படியா என்ன .. ? :wink:

puppy
26-11-2003, 12:14 AM
கையில் இருக்கும் காசை
எண்ணி..மறுபடியும் எண்ணி
மிட்டாய் கடைமுன் சிறுவன்

இளசு
26-11-2003, 12:16 AM
பின் இலட்சம் இலட்சமாய்
பணம் வந்தாலும்
தீர்க்க முடியுமா அந்த ஏக்கங்களை..????

அருமை பப்பி அவர்களே..

puppy
26-11-2003, 12:21 AM
மெல்ல மெல்ல
நடந்து வெளியேறினர்
வகுப்பு தேர்வு
கட்

இளசு
26-11-2003, 12:23 AM
அழியாத கோலங்களின்
அணிவகுப்பா இன்று...

தொடருங்கள் பப்பி.

puppy
26-11-2003, 12:25 AM
தண்ணி பார்ட்டி
மில் அதிபரின்
அடையாள அட்டை
தலை கீழாய்

முத்து
26-11-2003, 12:27 AM
கையில் இருக்கும் காசை
எண்ணி..மறுபடியும் எண்ணி
மிட்டாய் கடைமுன் சிறுவன்

அருமை .. அற்புதம் ...

முத்து
26-11-2003, 12:28 AM
பின் இலட்சம் இலட்சமாய்
பணம் வந்தாலும்
தீர்க்க முடியுமா அந்த ஏக்கங்களை..????

அருமை பப்பி அவர்களே..

எவ்வளவு பெரிய உண்மை ....
அவையெல்லாம்
திரும்பி வராத இன்பங்கள் ...

poo
26-11-2003, 06:42 AM
பப்பி அவர்களின் சங்கீதங்கள் இனிமை!!

வாழ்த்துக்கள்!!

Nanban
26-11-2003, 07:30 AM
கையில் இருக்கும் காசை
எண்ணி..மறுபடியும் எண்ணி
மிட்டாய் கடைமுன் சிறுவன்

அற்புதமான உணர்ச்சி படைப்பு........

இன்று மிட்டாய் கடைகளே பார்த்திராத சாக்லேட் குழந்தைகள் நாளை, எங்களுக்கு இது மாதிரி பின்னாளில் நினைத்துப் பார்க்கும் ஏக்கங்கள் ஏதும் வைக்கவில்லையே என்ற குறை சொல்லுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது......

பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது - இந்த ஏக்கங்கள்.........

puppy
26-11-2003, 05:10 PM
காற்று செய்தித்தாளை
புரட்டிப் படிக்க....
அவன் நல்ல தூக்கத்தில்
பூங்கா

இளசு
26-11-2003, 05:14 PM
பலமுறை பார்த்த காட்சி
நூலகத்தில் நானே தோன்றும் காட்சி..

பார்ப்பது , பங்கேற்பது பலர்..
பாவாய் வடிப்பது சிலர்...

பப்பி அந்த சிலரில் ஒருவர்.
பாராட்டுகள்.

puppy
26-11-2003, 05:29 PM
திடீர் மழை
மலரும் மொட்டுக்குள்
வண்டு அடைக்கலம்

முத்து
26-11-2003, 05:34 PM
திடிர் மழை
மலரும் மொட்டுக்குள்
வண்டு அடைக்கலம்

பப்பி அவர்களே ..
இதமான காட்சி ...

இளசு
26-11-2003, 05:38 PM
மழையின் சிலிர்ப்பு
உங்கள் காட்சிப்பாவிலும்..
தமிழுக்குள் அமிழ்ந்துவிட்டேன்!

puppy
26-11-2003, 05:44 PM
ஒளிந்துகொள்ளவானு பார்த்தேன் இப்போ தான்
அதுக்குள்ளே அமிழ்ந்துவிட்டேன்னு....என்னமோ
நடக்குது

இளசு
26-11-2003, 06:10 PM
உங்கள் பதிவுக்குமுன் எடிட் செய்ததால்
சாட்சி இன்றி மாற்றம் செய்தேன்..
மாற்றியதை ஒப்புக்கொள்ளும் ஒரு சாட்சி..
என் மனசாட்சி...

maduraiveera
26-11-2003, 06:26 PM
பண்ணைபுரம்
கோடையின் உச்சி வெயில்
குடையின் நிழலில் பண்ணையார்
அவருக்குக் குடை பிடித்து
அவரின் நிழலில் பண்ணையாள்

இளசு
26-11-2003, 06:34 PM
காட்சிப்பா - முரண்காட்சிப்பா
இரண்டுக்கும் பொருந்தும் பா..
பாராட்டுகள் ம.வீ.

ம.வீ = மன்ற (செயல்)வீரர்.

puppy
26-11-2003, 06:40 PM
ம.வீ...அருமை....பார்த்து பண்ணையாருக்கு தெரிஞ்சா அவர் நிழலில் இருந்ததுக்கு தனியா வட்டி போட போறார்

puppy
26-11-2003, 06:49 PM
விடுகதை
ஆனந்த அதிர்ச்சியில்
சரியான விடை சொன்ன
இளசு மயக்கம்

maduraiveera
26-11-2003, 06:51 PM
காட்சிப்பா - முரண்காட்சிப்பா
இரண்டுக்கும் பொருந்தும் பா..
பாராட்டுகள் ம.வீ.

ம.வீ = மன்ற (செயல்)வீரர்.
இப்போது தான் சற்று செயல்பட ஆரம்பித்திருக்கிறேன்
அதற்குள் செயல் வீரனாக்கி விட்டீர்கள்.


ம.வீ...அருமை....பார்த்து பண்ணையாருக்கு தெரிஞ்சா அவர் நிழலில் இருந்ததுக்கு தனியா வட்டி போட போறார்
உண்மையிலேயே நீங்கள் சொன்னதை நினைத்துக் கொண்டே தான் இதனைப் பதித்தேன்.
இதில் ஒரு சிலேடையும் உண்டு
அவரின் நிழலில் - பண்ணையார் நிற்கும் போது விழும் நிழலில்
அவரின் நிழலில் - பண்ணையார் வழங்கும் ஊதியத்தின் தயவில்

இளசு
26-11-2003, 06:53 PM
விடுகதை
ஆனந்த அதிர்ச்சியில்
சரியான விடை சொன்ன
இளசு மயக்கம்

கவிமழை கண்டு
பாதியில் கலைந்தது
அந்த மயக்கம்...

முத்து
26-11-2003, 06:55 PM
சிச்சுவேசன் கவிதை
மிக அருமை ..

maduraiveera
26-11-2003, 07:15 PM
பச்சைப் புல்வெளியைப்
பார்த்து கொண்டே
வந்தான் வழங்கப்பட்ட
சிவப்பைக் காணாமல்
வந்தது விபத்து.

முத்து
26-11-2003, 07:16 PM
மதுரைவீரா ..
அசத்தலான காட்சி ..
நன்றிகள் ...

puppy
26-11-2003, 11:11 PM
சாலை எங்கும் குழிகள்
மழை நீரை சேமிக்கவோ
சென்னை

இளசு
26-11-2003, 11:25 PM
சிங்காரச் சென்னை முயற்சி
அரசியல் விளையாட்டில்
அந்தரத்தில் நிற்க..
ஒரு "அ" முன்னால் ஒட்டிக்கிடுச்சோ...?

puppy
27-11-2003, 12:24 AM
வேலியின் இடையே
பக்கத்து வீட்டுக்காரர்கள்
நாளைக்கு மழை வருமா....

இளசு
27-11-2003, 12:37 AM
புழக்கடை வேலி..
வானிலை முதல் கிசுகிசுவரை
பலதும் பதிக்கப்படும்
பல்சுவை நாளிதழ்..

இளசு
27-11-2003, 01:07 AM
நாட்டியம் முடிந்த பின்னே
தாமதமாய் நட்டுவாங்கம்..
மின்னல் - இடி.!

முத்து
27-11-2003, 05:08 AM
புழக்கடை வேலி காட்சிகள் அருமை ...
நன்றி .. .. பப்ப அண்ணா

poo
27-11-2003, 10:42 AM
எல்லோரும் அசத்தறீங்க...பாராட்டுக்கள்!!

மன்மதன்
01-12-2003, 09:22 AM
இந்த வளைதலத்திற்கு போய் பாருங்கள்.

வார்த்தை ஜாலத்தில் விதவிதமா ஹைக்கூ கிடைக்கும்.

http://www.lsi.usp.br/usp/rod/poet/haicreate.html

noveltv
01-12-2003, 09:37 AM
ஹைக்கூ ஒரு சிலருக்குத்தான்
கைக்கூ டும்.
நல்ல அருமையான கவிதைகள்.

மன்மதன்
01-12-2003, 09:54 AM
ஹைகூ என்பது வார்த்தைகளை பிடித்து தேடிகொண்டிருக்காமல்
கண் முன்னே தெரியும் காட்சிகளை
அப்படியே 3 வரிகளுக்குள் கொண்டு வர வேண்டும்.

ஹைகூ சிலருக்குத்தான் கைக்கூ டும் என்றில்லை . யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்பது என் கருத்து அண்ணா.

poo
01-12-2003, 12:19 PM
நண்பர் மதன் அவர்களே.. சுட்டிகளை இங்கே தரவேண்டாம் என நினைக்கிறேன்!!

எனினும் நன்றி!!

மன்மதன்
01-12-2003, 12:27 PM
புரியவில்லை நண்பரே..

poo
01-12-2003, 03:11 PM
மன்னிக்கவும்..நண்பரே

சிறுசுட்டிதானே.. இருந்துவிட்டு போகட்டும்!!


வலைதளம் சென்று பாருங்கள் என இங்கே சொல்லவேண்டாம் ..அதற்கென இருக்கும் (தமிழும்,இணையமும் )பக்கத்தில் கொடுத்தால் பட்டியலில் இணையும் என நினைத்து சொன்னேன்..

Nanban
02-12-2003, 02:35 PM
சூர்யன் விழும் கடலினுள் -
எடைக்கு எடையாக கிளம்பும்
கடல்மடியின் இருட்டு

Nanban
12-01-2004, 08:54 AM
எல்லோருக்கும் மறந்து விட்டது போலும் ஹைகூ எழுத........

Nanban
12-01-2004, 08:55 AM
எருமைகள் வெளியேற
நிலவு வந்தமர்ந்தது
குளத்தில்....

இளசு
18-01-2004, 08:33 PM
மேகமுட்டம் என வானிலை அறிக்கை
எனக்கு மட்டும் இளஞ்சூரிய வெளிச்சம்
உன் புன்னகை

பைத்தியகாரன்
19-01-2004, 03:09 PM
முதன்முறையாக இப்பக்கம் வந்தேன் வியந்தேன்.........................

நமக்கு தெரியாதவிஷயம் என்பதால்{கழுத..........தெரியுமா........}இதுவரை வந்ததில்லை.........................

கவிதைகள் அருமை................

சிறு சந்தேகம் கவிதைகள் படித்தவுடன் சிறு வருத்தத்தையே உணருகிறேன் ............படித்தவுடன் சந்தொசம் பொங்கும் கவிதைகள் உண்டா நண்பர்களே....................


இளசு தங்கள் கவிதைகள் பூக்கள்................வாழ்த்துக்க்கள்

இளசு
19-01-2004, 10:55 PM
நன்றி நண்பரே


நடையின் கவர்ச்சி எனக்கு
பிழைப்புக் கவலை அவளுக்கு
தலைச் சுமை..

பைத்தியகாரன்
21-01-2004, 07:12 AM
அருமை

Iniyan
26-01-2004, 02:47 PM
ஹைக்கூ ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம்.

தொல் இலக்கிய தமிழை துள்ளலாய் மாற்றி பாமரனுக்கும் தமிழ் சேர்த்த புதுக்கவிதைக்கு அடுத்து, சுருங்கச் சொல்லி நெற்றி சுருங்க யோசிக்க வைக்கும் ஜப்பானியரின் ஹைகூ வடிவத்தை தமிழுக்கு கொணர்ந்த சிற்பிகளுக்கு என் வணக்கங்கள்.

puppy
15-02-2004, 07:42 PM
மழைக்கால சூரியன்
மின்னஞ்சல் பெட்டி சூடாக
நண்பியின் கடிதம்

இளசு
15-02-2004, 07:46 PM
கதிர் அறுத்த வயலில்
கல் அறுத்தார்கள்..
வயலின்று செங்கல் சூளை!

puppy
15-02-2004, 07:46 PM
மழைக்கால சாரல்
அவளின் குடை
காற்றோடு நாட்டியம்

இளசு
15-02-2004, 07:50 PM
மரபு வேலி தாண்டியது
காட்டு மான்
புதுக்கவிதை!

இளசு
16-03-2004, 10:36 PM
என்னருகில் நீ இருந்தால்
என் வலது கையில் பத்து விரல்
இல்லாத பொழுதுகளில்
இருக்கும் ஆறு விரல்...

நிலா
16-03-2004, 10:48 PM
என்னருகில் நீ இருந்தால்
என் வலது கையில் பத்து விரல்
இல்லாத பொழுதுகளில்
இருக்கும் ஆறு விரல்...


சத்தியமா எனக்குப்புரியலை தலை! :(

இளசு
16-03-2004, 10:50 PM
கையும் கையும் சேர்ந்த
காதல் பொழுதுகள் = 10 விரல்...


சிகரெட் புகையும்
தனிமை வேதல்கள்=
6 விரல்..!

நிலா
16-03-2004, 10:51 PM
சிகரெட் புகையும்
தனிமை வேதல்கள்=
6 விரல்..!



ஆஹாஆஆஆ!அந்தப்பழக்கம் இல்லாததால சட்டுனு தோணலை! :D
சூப்பர் தலை!புரியுது!சீக்கிரம் வலக்கை 10விரல்கள் கொள்ளட்டும்! :wink:

இளசு
16-03-2004, 10:57 PM
ஆண்களின் பிரத்தியேக
அட்டூழியம் 6 விரல்...


கவிக்கோவுக்கு மட்டுந்தானே அது
கவிதை எழுதும் பேனா

இளசு
13-04-2004, 09:52 PM
குளக்காட்சிப்பா

[b]மிதக்கும் தாமரைத் தண்டு
அதன் மேல் கரும் பருந்து--
மேக ஊர்வலம்

இளசு
14-04-2004, 11:11 PM
பனிக்குடங்கள் சிதறி தெறிக்க
செக்கச்செவேல் பிரசவம் -
அதிகாலை

இளசு
15-04-2004, 11:25 PM
சிதில மாளிகை
மூடிய கதவு தட்டும் விருந்தினர் -
மூடுபனி

இளசு
18-04-2004, 10:16 PM
<span style='color:#0000ff'>பிறவி ஊமைப்பெண்கள்..
கையில் கைப்"பேசி"கள்..
எஸ். எம். எஸ்.!</span>

(காட்சி கண்டது - தினமலர் அந்துமணி --பா.கே.ப.)

இளசு
25-04-2004, 10:15 AM
குடிசை முழுக்க
வெள்ளிக்காசுகள் -
பௌர்ணமி இரவு

(சங்கன் - திசைகள் மின்னிதழ்)

இளசு
05-05-2004, 10:56 PM
கோடை மழை

வரவின் மகிழ்ச்சி
இன்னும் அழியாமல் -
மிதியடியில் ஈரம்

இக்பால்
06-05-2004, 02:47 PM
உற்சாகம் குறையாமல்
அழகான பாக்களை
அயராது கொண்டுவரும்
இளசு அவர்களுக்கு
நன்றியுடன் பாராட்டுகள். :)

kavitha
19-05-2004, 04:16 AM
இளசு அண்ணா மற்றவர் பாக்களை ஒரே பார்வையில் புரிந்து கொள்ளமுடிகிறது... உங்கள் பாக்களை இரண்டு மூன்று முறை!
அத்தனையும் தேனிலிட்ட பலா! ஊற ஊற(படிக்க படிக்க) சுவை அதிகம்!

இளசு
26-05-2004, 12:21 AM
நன்றி இக்பால்க்கும்....


கருப்பு நந்தவனம்..
மின்மினிப்பூச்சிகள்...
அமாவாசை வானம்...

kavitha
26-05-2004, 04:15 AM
மலை உச்சியில் இருந்து நகரத்தை பார்க்கும்போது கூட இப்படிதான் தோன்றும்!
கண்முன் நிறுத்திவிட்டீர்கள்!
"கருப்பு நந்தவனம்"... மிக அழகான உவமை!

இளசு
26-05-2004, 10:44 PM
மலை உச்சியில் இருந்து நகரத்தை பார்க்கும்போது

இதுதான் இன்னும் பொருத்தமா இருக்கு கவீ.. அருமை..

kavitha
27-05-2004, 03:18 AM
உங்கள் கற்பனை என் கற்பனையை நீட்டியது அவ்வளவே! நன்றி அண்ணா!:)

இளசு
02-06-2004, 08:06 PM
கடலோரம் ஒதுங்கிய
மரக்கட்டை...
ஒரு முனை எரிந்த கரியாய்..

kavitha
03-06-2004, 03:53 AM
கடலோரம் ஒதுங்கிய
மரக்கட்டை...
ஒரு முனை எரிந்த கரியாய்..
புரியவில்லையே அண்ணா! கொள்ளிவைத்தார்களோ?

இளசு
03-06-2004, 09:18 PM
கவீ...

சுவர்க்கோழி, கரையோரம் ஒதுங்கிய மரம்..

இவை இயற்கையில் காணக்கிடைத்த காட்சிகள்.. அவ்வளவே..
ஹைக்கூ அதைத்தாண்டி எதையும் சொல்ல முற்படுவதில்லை...
(என்னிடம் வேறு விளக்கமில்லைன்றதைதான் அப்படி சொல்ல வரேன்.. :) )

அதே வகை அனுபவத்தை வாசிக்கும் மனக்கண் முன் நிறுத்தினால்..
அது காட்சிப்பாதானே...

கூடுதல் எண்ணங்கள் கிளர்ந்தால் அது போனஸ்...
என்ன தோன்றுகிறது என எழுதுங்கள்...

நன்றி - தொடர் வாசிப்புக்கும், ஊக்கத்துக்கும்..


இனி இன்னொரு காட்சிப்பா..

இருகையால் அணை கொடுத்தும்
இதழ்கள் உதிர்ந்தபடி...
காற்றில் ரோஜா

இளசு
05-06-2004, 09:40 PM
குவித்து..விரித்து...
ஆடி மாத அபிநயக் கைகள்..
விதை நெல் வீசியபடி

kavitha
07-06-2004, 04:18 AM
ஹைக்கூ அதைத்தாண்டி எதையும் சொல்ல முற்படுவதில்லை...

இதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது அண்ணா.. ஒரு ஹைக்கூ விற்கு ஒன்பது பக்க விளக்கம் தரலாம் அண்ணா. ஒரு பெரிய காப்பியம் சொல்வதை அது சொல்லிவிடும்...
உங்கள் ஹைக்கூவும் அப்படித்தான். நீங்கள் இங்கே தருவதை உற்று
நோக்கும் போது நிறைய சிந்தனை பெருக்கெடுக்கும்.. அதற்கான விளக்கங்களை இங்கே அளித்தால் இத்தொடர்வரிசை திசைதிருப்பப்படுமோ என்று தான் தரவில்லை..
அதை சந்தர்ப்பம் வாய்க்கும்போது தனி பதிவாக தருகிறேன்.


இருகையால் அணை கொடுத்தும்
இதழ்கள் உதிர்ந்தபடி...
காற்றில் ரோஜா


குவித்து..விரித்து...
ஆடி மாத அபிநயக் கைகள்..
விதை நெல் வீசியபடி



இரண்டும் அழகிய கற்பனை!
முன்னது முரண்காட்சி பா போல் உள்ளது!

இளசு
10-06-2004, 10:42 PM
தொடர் வாசிப்புக்கும் ஊக்கத்துக்கும் நன்றி கவீ..
(விளக்கங்களை , எண்ணங்களை ஆவலுடன் வரவேற்கிறேன்..)


பாசிக்குளத்தில்
பாலே நடனம்..
அல்லித்தண்டில் குருவி

kavitha
11-06-2004, 06:00 AM
பாசிக்குளத்தில்
பாலே நடனம்..
அல்லித்தண்டில் குருவி


ஒற்றைக்கால்
அல்லித்தண்டில்
ஒற்றைக்காலில்
பாலே நடனம்!

கற்பனை அழகு!

இளசு
15-06-2004, 10:16 PM
நன்றி கவீ..

____________________

ஜன்னல் வழி பார்த்த
ரோஜா
குக்கர் விசில்...........

இளசு
16-06-2004, 09:37 PM
பனிக்காலை
முகம் பார்க்க
ஜன்னல் கண்ணாடி

இளசு
21-06-2004, 10:59 PM
மார்கழிக்காலை
பேசியபடி நடை...
மெல்லக் கைகள் உரசும்.

kavitha
22-06-2004, 04:41 AM
:)

kavitha
25-06-2004, 05:05 AM
பனிக்காலை
முகம் பார்க்க
ஜன்னல் கண்ணாடி
பனிக்காலையில் கண்ணாடிகள் நீர்த்திவலைகளுடன் அல்லவா இருக்கும்... முகம் பார்க்க முடியுமா?

இளசு
25-06-2004, 10:56 PM
ஹிஹி...

உதகை, கொடை, டார்ஜீலிங், குலுமனாலி இப்படி லொக்கேஷனில் போய்ப்
பார்க்கவேண்டிய காட்சிப்பான்னு வச்சிக்கலாம் கவீ....

(உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. யப்பாடி..)



________________________________________


மழைக்கம்பிகள்..
ஊடாய் நனையாமல்
பறக்கும் தும்பிகள்..

kavitha
26-06-2004, 05:18 AM
(உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. யப்பாடி..)
நீங்களும் நாரதரின் கல்லூரியில் தான் படித்தீர்களா? (இருக்கமுடியாதே!.... :idea:)



மழைக்கம்பிகள்..
ஊடாய் நனையாமல்
பறக்கும் தும்பிகள்..

இறக்கைகளினால் நனையவிடாமலும் ...
நனையாமல் பறக்க மழைச்சறுக்கம் தெரிந்திருக்குமோ?

இளசு
01-07-2004, 10:53 PM
நன்றி கவீ..

____________________________


[b]வீசிய மண்ணால் வருத்தமில்லை..
சூட்டிய பூவால் மகிழ்ச்சியில்லை..
கல்லறைக்குள் நான்..

இளசு
03-07-2004, 12:20 PM
_____________

கடும் கோடை..
மொட்டைப்பாறையில் ஈரக்கோடு ---
நத்தை சென்ற பாதை..
___________________

kavitha
03-07-2004, 12:21 PM
வீசிய மண்ணால் வருத்தமில்லை..
சூட்டிய பூவால் மகிழ்ச்சியில்லை..
கல்லறைக்குள் நான்..
_________________
உயிரோடு இருக்கும்போதும் கூட சிலசமயம் இப்படி இருந்துதான் ஆகவேண்டும் அண்ணா.. "போற்றுவார் போற்றலும்.. தூற்றுவார் தூற்றலும்.. "
நினைவுறுத்திய வரிகள்.. நன்றி!

இளசு
03-07-2004, 06:54 PM
உண்மை கவீ..
பேய்கள் உரசும்போது
பிணமாய் நடித்தல் நலம்.. :wink:


_____________________________

[b]நீலக்கடல்..
திமிங்கிலத்தின் கூக்குரல்..
செங்கடல்..

kavitha
05-07-2004, 11:33 AM
பிணமாய் நடித்தல் நலம்.
:D



மொட்டைப்பாறையில் ஈரக்கோடு ---
ஆனால் இதை 'சுட்டாலும் சங்கு வெண்மை தரும்' என்று ஏற்றுக்கொள்ளமுடியாது!! :(



நீலக்கடல்..
திமிங்கிலத்தின் கூக்குரல்..
செங்கடல்..

'செங்கடலில்' பொருத்தமாக இருக்குமோ?

மன்மதன்
04-08-2004, 01:49 PM
ஒரு சந்தேகம்.. இங்கே கொடுப்பது எல்லாம் கடன் வாங்கியதா. இளசு அண்ணாவின் சொந்த சரக்கு மாதிரி பளிச்சுடுகிறது..

அன்புடன்
மன்மதன்

விகடன்
19-07-2008, 01:39 PM
"கடன் வாங்கிய காட்சிப்பாக்கள்" என்ற பெயரில் ஆரம்பித்த திரி தன் விறுவிறுப்பில் சொந்த ஆக்கங்களும் வருகிறதே...

என்றோ ஆரம்பித்துவைத்த இந்த திரி எழுத்துரு காரணமாக தீண்டாமலேயே பல காலம் உறங்கிக்கொண்டிருந்துவிட்டதே..
இப்படிப்பட்ட திரியை இனியும் தூங்க அனுமதிப்பது சரியா? அதுட்தான் தட்டி எழுப்பிவிட்டேன்.

எங்கே நண்பர்களே....
விரைந்து வாருங்கள்!
இனிமேலும் துங்காது விளித்திருக்க வைத்திடுவோம் :D

பாரதி
19-07-2008, 02:02 PM
காட்சிப்பாவை மீண்டும் காட்சிக்கு கொண்டு வந்ததற்கு நன்றி விராடன். மீண்டும் அண்ணனின் கைவண்ணத்தில் காட்சிகள் மிளிரப்போகும் அழகை காண காத்திருக்கிறேன்.

விகடன்
19-07-2008, 02:07 PM
காட்சிப்பாவை மீண்டும் காட்சிக்கு கொண்டு வந்ததற்கு நன்றி விராடன். இராமருக்கு அணில் உதவியதைப்போல என்னால் இளசு அண்ணாவிற்கு செய்ய முடிந்தது.

பென்ஸ்
19-07-2008, 06:09 PM
இளசு...

ஒற்றை மூச்சில் வாசித்து முடித்து...
அதிசயித்து போகிறேன்...

இப்போது பணி பளுவோ..!!!!

இளசு
20-07-2008, 03:12 PM
இனிய கவீ..

நத்தையின் மென்மேனி சுட்டாலும் ---? மேன்மை தரும்
உன் பின்னூட்டம் புதிய வீச்சு..


நீலக்கடல்..
திமிங்கல வேட்டை
அதன் குருதி பொங்கியதால்
அப்பகுதி - செங்கடல்!

(நான் கண்ட திரைக்காட்சி இது..)

-------------------------------------------

அன்பு மன்மதன்..

கருத்துகள், காட்சிகள் - எதையும் நாம் உருவாக்குவதில்லை..
கண்டதைக் கேட்டதை படித்ததை
மன்றத்தமிழ் பூசி மறுசுற்றுக்கு அனுப்புவது மட்டுமே செய்கிறோம்..


நம் ராம்பால் கேட்டார் ஒரு முறை -
எந்த வார்த்தை உன் சொந்த வார்த்தை?

என்னைப் பொருத்தவரை - நாம் கருத்துக் கடத்திகள், கொணர்விகள்..

-----------------------------------------------

இந்த நீண்ட திரியை ஒருங்குறியாக்கிய அரும்பணிக்கு
விராடனைப் பாராட்டுகிறேன்..

என்றும் உடன் வந்து ஊக்கும் தம்பி பாரதிக்கு என் அன்பு..

----------------------------------

இனிய பென்ஸ்..

இந்தத் திரியை நானும் நேற்று வாசித்தேன்..

என் பங்கு ஒரு தூண்டுகோல் அளவு மட்டுமே..

பப்பியும், நண்பனும், சிறுதுளியும், முத்துவும், மதுரைவீரனும் என பலப்பல
நெய் வார்த்த கைகள் உடன் வந்த காலம் அது..

அப்படி ஒரு ஒத்த அதிர்வுக் குழு தன்னால் அமைந்தால்
பணிப்பளுவைத் தாண்டியும் இதுபோல் பல திரிகள் ஒளிரும்..