PDA

View Full Version : !!இன்றோடு ஒரு வருடம்!!



இன்பக்கவி
27-02-2010, 05:59 AM
http://farm5.static.flickr.com/4033/4391771140_e74611abcc_o.jpg
இன்றோடு ஒரு வருடம்...
எதையோத் தேடி
எங்கோ அலைய
கண்ணில் பட்டத் தளம்
கவிதைகள் மீது தீராத காதல்
கவிதை வாசிக்க வந்த வாசகி நான்...

வாசிக்க அனுமதியில்லை
பயனாளராக பதிவு செய்து
வாசிக்க தொடங்கி
மலைத்து போய்...
எனக்குள் கவி எழுத ஆசை எழ
சிறு தயக்கம்..

கவிஞர்களும் கவிதாயினிகளும்
கலக்கி கொண்டு இருக்கும்
இணணயத்தில் கத்துக்குட்டி
கவியை ஏற்பர்களோ...
எனக்கு தெரிந்த எளிய
தமிழில் கவிதை பதிந்த போது
உற்சாகம் தந்து
ஊக்கப் படுத்தின சில உறவுகள்....

கவிதை மட்டுமே பதிந்து விட்டு
பாராட்டை கூட எதிர்பார்க்காமல்
வந்து வந்து போனவள்...
பின்னோட்டம் இட பயந்தவள்..
எல்லா பிரிவுகளிலும்
தடம் பதிக்க ஆசை இருந்தபோதும் ..
ஏனோ சிறு தயக்கம் இன்றுவரை..

இங்கு வராமல் போனால்
நம்மை தேட யாரும் இல்லையென்ற
என் எண்ணத்தை கூட
பொய்யாய் மாற்றின சில உறவுகள்..
சொல்ல முடியா சந்தோசம்..

சில பின்னோடங்களால்
சோர்வடைந்து வராமல் இருந்த போது
எனக்கு தோள்கொடுத்து
வர வைத்த உள்ளங்களை
இன்றுவரை மறந்ததில்லை...

தோல்வியின் விளிம்பில்
சிறு மூலையை கையில் பற்றி
சோகத்தை மட்டுமே நெஞ்சில் சுமந்து
சுமையாய் வாழ்க்கை இருப்பினும்
என்னை கொல்லும் நேரத்தை கொல்ல
எனக்குள் மாற்றம் வேண்டி
என் எண்ணங்களை மாற்றி
சந்தோஷமாய் வலம் வரும் தளம் இது..
என் வாழ்நாள் வரை இணைந்து இருப்பேன்..
என் கண்ணீர் மட்டுமே காணிக்கை...
என் உறவுகளுக்கு இது சமர்ப்பணம்...

தமிழனாய் பிறந்தது பெருமை
தமிழில் வாழ்வது முழுமை...:icon_b::icon_b:
நன்றிகள்....



நம்பிக்கை அளித்த உறவுகளுக்கு நன்றிகள்..
பின்னோட்டம் இட்டு என் கவிதை பாதையை
செம்மை படுத்திய உறவுகளுக்கு நன்றிகள்..
படித்து விட்டு பதில் போட விரும்பாத உள்ளங்களுக்கும்
உங்களுக்கும் பிடித்த வகையில் இனிவரும்
காலங்களில் கவிதை எழுத வேண்டும் என்ற முயற்சியை
உருவாக்கும் உங்களுக்கும் என் இனிய நன்றிகள்...:icon_b::icon_b::icon_b:

aren
27-02-2010, 06:21 AM
வாழ்த்துக்கள் கவிதா. நீங்கள் இன்னும் பல்லாயிரம் பதிவுகள் செய்திட வாழ்த்துக்கள்

இன்பக்கவி
27-02-2010, 06:27 AM
முதல் வாழ்த்துக்கு நன்றிகள் ஆரேன் அவர்களே..
இன்னும் நிறைய பதிவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது..
நன்றிகள்:)

சிவா.ஜி
27-02-2010, 08:12 AM
நம் மன்றம் என்பது மற்ர தளங்களிலிருந்து மிக வேறுபட்டது. இங்கு அனைவரும் ஒரு குடும்பமாய் இருக்கிறோம். ஒவ்வொருவருக்குள்ளும் பலவித சிந்தனைகள் எழும், அதை எழுத்தாக்க இயலாதவர்கள் சிலர், எழுத்தாக்கினாலும் எங்கு பதிப்பது எனத் தெரியாமல் இருந்தவர்களுக்கு நமது தளம் நல்லதொரு களம்.

ஒரு வருடத்தைக் கடந்த நீங்கள் என்றென்றும் எல்லோருடனும் இணைந்திருங்கள். மனக்கவலைகள் மறக்க...மனதில் தோன்றுவதைப் பதியுங்கள். உங்களுக்கு உறவென்று சொல்ல நாங்கள் அனைவரும் இருக்கிறோம்.

வாழ்த்துகள் இன்பக்கவி.

வசீகரன்
27-02-2010, 09:10 AM
வாழ்த்துக்கள் தொடர்க உங்கள் இன்பக்கவிகளை....!

இன்பக்கவி
27-02-2010, 09:22 AM
நம் மன்றம் என்பது மற்ர தளங்களிலிருந்து மிக வேறுபட்டது. இங்கு அனைவரும் ஒரு குடும்பமாய் இருக்கிறோம். ஒவ்வொருவருக்குள்ளும் பலவித சிந்தனைகள் எழும், அதை எழுத்தாக்க இயலாதவர்கள் சிலர், எழுத்தாக்கினாலும் எங்கு பதிப்பது எனத் தெரியாமல் இருந்தவர்களுக்கு நமது தளம் நல்லதொரு களம்.

ஒரு வருடத்தைக் கடந்த நீங்கள் என்றென்றும் எல்லோருடனும் இணைந்திருங்கள். மனக்கவலைகள் மறக்க...மனதில் தோன்றுவதைப் பதியுங்கள். உங்களுக்கு உறவென்று சொல்ல நாங்கள் அனைவரும் இருக்கிறோம்.

வாழ்த்துகள் இன்பக்கவி.

முகம் அறியா உறவாக இருப்பினும்
முகம் சுளிக்காது பொறுமையாய்
தவறுகள் இருப்பின் சுட்டி காட்டி
சோர்ந்த உள்ளத்திற்கு
தெம்பை தரும்
உறவுகளை இங்கு கண்டேன்
சந்தோசம் அடைந்தேன்...
என்றென்றும் தொடர்வேன்
மன்றத்தை...

நன்றிகள் சிவா...:icon_b:

இன்பக்கவி
27-02-2010, 09:24 AM
வாழ்த்துக்கள் தொடர்க உங்கள் இன்பக்கவிகளை....!

நன்றிகள் வசீகரன்
ம் என்றென்றும் தொடர்வேன் ...:icon_b::icon_b:

ஆர்.ஈஸ்வரன்
27-02-2010, 09:36 AM
[QUOTE=இன்பக்கவி;457199]http://farm5.static.flickr.com/4033/4391771140_e74611abcc_o.jpg
[B][SIZE="4"][COLOR="DarkRed"]இன்றோடு ஒரு வருடம்...

தோல்வியின் விளிம்பில்
சிறு மூலையை கையில் பற்றி
சோகத்தை மட்டுமே நெஞ்சில் சுமந்து
சுமையாய் வாழ்க்கை இருப்பினும்
என்னை கொல்லும் நேரத்தை கொல்ல
எனக்குள் மாற்றம் வேண்டி
என் எண்ணங்களை மாற்றி
சந்தோஷமாய் வலம் வரும் தளம் இது..
என் வாழ்நாள் வரை இணைந்து இருப்பேன்..
என் கண்ணீர் மட்டுமே காணிக்கை...
என் உறவுகளுக்கு இது சமர்ப்பணம்...

நல்ல கவிதை வரிகள். ஒரு வருட சாதனைக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள். உங்கள் முயற்சி அற்புதமானது. இதைப்படிப்பவர்களும் சாதனை புரிவார்கள். நல்ல முயற்சி.

இன்பக்கவி
27-02-2010, 10:10 AM
நன்றிகள் ஈஸ்வரன் அவர்களே...
சாதனை படைக்க என்னும் உள்ளங்களுக்கு நம் மன்றம் ஒரு ஏணிப்படி....
நன்றிகள் :)

கீதம்
27-02-2010, 10:12 AM
உணர்வுகளை அழகாய்ப் படம்பிடித்த கவிதை. தொடர்ந்து பங்களிக்க என் வாழ்த்துகள்.

இன்பக்கவி
27-02-2010, 11:16 AM
உணர்வுகளை அழகாய்ப் படம்பிடித்த கவிதை. தொடர்ந்து பங்களிக்க என் வாழ்த்துகள்.

நன்றிகள் கீதம்
நன்றிகள்:icon_b:

அக்னி
27-02-2010, 11:43 AM
கவிதைக்குப் பொய் அழகு என்பதால்,
பொய்யாய்க் கவிதாவும்...

எப்படியென்பதைச் சில பின்னூட்டங்களின் பின்னர் சொல்கின்றேன்.
அதற்குள் கண்டுபிடிக்க முயல்வோர் முயலலாம்.

கவி தா என மன்றம் வந்து,
இன்பக்கவி தந்துகொண்டிருக்கும்
உங்களுக்கு என் வாழ்த்துகள்...

பொய்கையில் மழை பெய்கையில்
அதிகரிக்கும் அழகு...

மன்றப்பொய்கையில்
கவிதாவின் தமிழ் பெய்கையிலும்
அவ்வாறே...

பலரும் வந்து செல்லும் இடம் நம் மன்றம்.
வேண்டாத சிலர் இருக்கலாம்.
அதற்காக,
வேண்டிநிற்கும் பலரை வெறுக்கலாகா.

என்றும் மன்றத்தோடு இணைந்திருங்கள்...

வாழ்த்துகள்... பாராட்டுகள்... நன்றிகள்...

இன்பக்கவி
27-02-2010, 01:21 PM
கவிதைக்குப் பொய் அழகு என்பதால்,
பொய்யாய்க் கவிதாவும்...:traurig001::traurig001::traurig001:

இது என்ன???
ஐயோ என்னை என்னமோ திட்ட போறீங்களோ....

நன்றிகள் அக்னி அவர்களே...
பயத்தோட காத்திருக்கிறேன் விளக்கத்துக்காக..:traurig001:

செல்வா
27-02-2010, 01:42 PM
ஒராண்டைக் கடந்த நீங்கள்...

பல்லாண்டு இணைந்திருந்து

பல்லாயிரம் பாயிரம் படைக்க வாழ்த்துக்கள்...!

இன்பக்கவி
27-02-2010, 02:12 PM
ஒராண்டைக் கடந்த நீங்கள்...

பல்லாண்டு இணைந்திருந்து

பல்லாயிரம் பாயிரம் படைக்க வாழ்த்துக்கள்...!

நன்றிகள் செல்வா அவர்களே...
நன்றிகள் :icon_b:

கலையரசி
27-02-2010, 02:12 PM
அனுபவங்களை, உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள மன்றம் எப்போதும் உங்களுக்கு உதவியாய் இருக்கும்.
ஓராண்டைக் கடந்த உங்களுக்கு வாழ்த்து சொல்லி என்றென்றும் எங்களோடு இணைந்திருக்க வாழ்த்துகிறேன்.
உணர்வுகளைச் சிறப்பான முறையில் வெளிப்படுத்தும் நல்ல கவிதை.

இன்பக்கவி
27-02-2010, 02:17 PM
நன்றிகள் கலையரசி அவர்களே
என்றும் இணைந்து இருப்பேன்..:icon_b:

அக்னி
27-02-2010, 03:13 PM
கவிதைக்குப் பொய் அழகு என்பதால்,
பொய்யாய்க் கவிதாவும்...

எப்படியென்பதைச் சில பின்னூட்டங்களின் பின்னர் சொல்கின்றேன்.
அதற்குள் கண்டுபிடிக்க முயல்வோர் முயலலாம்.

இப்படி நான் சொன்னதிற் குழம்பியது,


ஒராண்டைக் கடந்த நீங்கள்...


இதைப் பார்த்தும் தெளியவில்லை என்பது,
இந்தப் பதிவுக்கு,


நன்றிகள் அக்னி அவர்களே...
நன்றிகள் :icon_b:
இப்படி நீங்கள் பதிவிட்டதிலிருந்து,
புரிகின்றது.

இன்பக்கவி
27-02-2010, 03:29 PM
இப்படி நான் சொன்னதிற் குழம்பியது,


இதைப் பார்த்தும் தெளியவில்லை என்பது,
இந்தப் பதிவுக்கு,


இப்படி நீங்கள் பதிவிட்டதிலிருந்து,
புரிகின்றது.

:lachen001::lachen001::D:D:D:D:D:D:D:D
புரிந்து விட்டது......
டியுப் லைட் நான்...:lachen001:
:Dகாப்பி பேஸ்ட் செய்து பெயர் மாற்றம் செய்யாமல் விட்டு விட்டேன் ...இதற்கு நான் தட்டசுவை உபயோகித்து இருக்கலாம் :rolleyes::D

பா.ராஜேஷ்
27-02-2010, 09:31 PM
ஓராண்டோடு முடிந்து விடாமல் மேலும் பல்லாண்டு சுகமாய் கடக்க வாழ்த்துக்கள். மேலும் பல கதை, கவிதை, கட்டுரைகளை பதித்து சிறக்க, மன்றத்தை சிறப்பிக்க இறைவன் உங்களுடன் துணை இருக்கட்டும்.

அமரன்
27-02-2010, 10:07 PM
சோகம் சுமந்து கருமேகமாய் வந்து சுகந்தரும் தமிழ்மழை பொழிந்து மன்றத்தின் செழிப்பில் பங்கெடுக்கும் கவிதாவின் மன்றப் பிறந்தநாளில் வாழ்த்துவதில் மகிழ்ச்சி.

என்றும் உங்களுடன் மன்றம் இருக்கும்!

இன்பக்கவி
28-02-2010, 03:29 AM
ஓராண்டோடு முடிந்து விடாமல் மேலும் பல்லாண்டு சுகமாய் கடக்க வாழ்த்துக்கள். மேலும் பல கதை, கவிதை, கட்டுரைகளை பதித்து சிறக்க, மன்றத்தை சிறப்பிக்க இறைவன் உங்களுடன் துணை இருக்கட்டும்.

நன்றிகள் ராஜேஷ்...
உங்கள் வாழ்த்துபடி முயற்சிக்கிறேன்...
உங்கள் உதவிகளை மறக்க மாட்டேன் நன்றிகள்..:icon_b::icon_b:

இன்பக்கவி
28-02-2010, 03:31 AM
சோகம் சுமந்து கருமேகமாய் வந்து சுகந்தரும் தமிழ்மழை பொழிந்து மன்றத்தின் செழிப்பில் பங்கெடுக்கும் கவிதாவின் மன்றப் பிறந்தநாளில் வாழ்த்துவதில் மகிழ்ச்சி.

என்றும் உங்களுடன் மன்றம் இருக்கும்!

நன்றிகள் அமரன் அவர்களே...
சோகம் மறக்கவைக்கும் தளம் நம் மன்றம்..
சோகத்தை புரிந்து ஆறுதல் தரும் தளம்...
நன்றிகள் மன்றத்திற்கும் அனைத்து நிர்வாகிகளுக்கும்...:icon_b:

Mano.G.
28-02-2010, 09:44 AM
முதல் அடி பல அடிகளுக்கு வித்து,
அது போல , முதல் வருடம் பல வருடங்களுக்கான தொடக்கம்,

முகமறியா உறவுகள்,
குரல் கேட்டறியா நட்புகள்
அங்கீகாரத்திற்கும், ஊக்கத்திற்கும்,
தன்னம்பிக்கைக்கும், இங்கு பஞ்சமில்லை இங்கு

உன் வளர்ச்சி மேலும் உலகம் எங்கும் பரவ வாழ்த்துக்கள்

மனோ.ஜி

சூரியன்
28-02-2010, 09:53 AM
வாழ்த்துக்கள் கவிதா அக்கா.

Akila.R.D
01-03-2010, 03:26 AM
வாழ்த்துக்கள் கவிதா...