PDA

View Full Version : ஈடற்றதே!



குணமதி
26-02-2010, 04:23 PM
ஈடற்றதே!


வடமுனை தென்முனை

ஈர்ப்புப் போல்...

பருவத்தில் ஏற்படும் ஈர்ப்புணர்வு.

உடல், உள்ளம், உணர்வு

ஏதோ காரணத்தால்.

இணைந்தாரும்

இணைய இயலாமற் போனாருமாக

இரு நிலைகளிலும் எண்ணற்றோர்.

இணந்தாரிற் பலர்...

இறுதிவரை அன்புணர்வில் இல்லை.

இருந்தாலும் -

ஈடற்றதே, காதல்!

இளசு
26-02-2010, 05:46 PM
பருவம் வந்த அனைவருமே.....
எனக் கவியரசர் சொன்னது நினைவாடலில்..


குறைகள் தென்பட்டாலும்
காதலுக்கு ஈடு இல்லைதான்..

பாராட்டுகள் குணமதி..

ஜனகன்
26-02-2010, 08:47 PM
குறுகிய வரிகளில் பருவ உணர்வுகளை சொல்லும் கவிதை.
வாழ்த்துக்கள் குணமதி.

செல்வா
27-02-2010, 01:56 PM
அண்புணர்வு இல்லாத இடத்தில்
காதல் இல்லை என்பதே எனது கட்சி...

கவிதை அழகு

கருத்தோடு எனக்கு உடன்பாடில்லை....

சிவா.ஜி
27-02-2010, 02:04 PM
ஈர்ப்புணர்வு காதலல்ல....அன்பிலாததும் காதலல்ல....

எனவே காதல் ஈடற்ற*துதான்.

வாழ்த்துகள் குணமதி.

கலையரசி
27-02-2010, 02:09 PM
பருவ வயதில் வரும் ஈர்ப்புணர்ச்சி காதல் அல்ல. அது நீண்ட நாட்கள் நீடிக்காது.

கவியரசரின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால்

"முழுமை பெற்ற காதல் எல்லாம்
முதுமை வரை ஓடி வரும்".

நல்ல கவிதை. பாராட்டு குணமதி அவர்களே!

குணமதி
28-02-2010, 03:54 AM
நன்றி இளசு அவர்களே.

குணமதி
28-02-2010, 03:54 AM
குறுகிய வரிகளில் பருவ உணர்வுகளை சொல்லும் கவிதை.
வாழ்த்துக்கள் குணமதி.

நன்றி நண்பரே.

குணமதி
28-02-2010, 03:56 AM
அண்புணர்வு இல்லாத இடத்தில்
காதல் இல்லை என்பதே எனது கட்சி...

கவிதை அழகு

கருத்தோடு எனக்கு உடன்பாடில்லை....

நடைமுறை வாழ்க்கையில் காண்பதை வைத்தே எழுதினேன்.

பின்னூட்டத்திற்கு - பாராட்டுக்கு - மிக்க நன்றி.

குணமதி
28-02-2010, 03:57 AM
ஈர்ப்புணர்வு காதலல்ல....அன்பிலாததும் காதலல்ல....

எனவே காதல் ஈடற்ற*துதான்.

வாழ்த்துகள் குணமதி.

மிக்க நன்றி.

குணமதி
28-02-2010, 03:58 AM
பருவ வயதில் வரும் ஈர்ப்புணர்ச்சி காதல் அல்ல. அது நீண்ட நாட்கள் நீடிக்காது.

கவியரசரின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால்

"முழுமை பெற்ற காதல் எல்லாம்
முதுமை வரை ஓடி வரும்".

நல்ல கவிதை. பாராட்டு குணமதி அவர்களே!

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

அமரன்
28-02-2010, 10:18 AM
ஆம்..
காதல் ஈடற்றதுதான்..
எந்தக் கடையிலும்
அடகு வைக்க முடியலையே....!

பாராட்டுகள்!

குணமதி
01-03-2010, 12:34 AM
ஆம்..
காதல் ஈடற்றதுதான்..
எந்தக் கடையிலும்
அடகு வைக்க முடியலையே....!

பாராட்டுகள்!

நன்றி அமரன்.

அக்னி
03-03-2010, 07:04 AM
ஈர்ப்பு இருக்கின்றதுதான் உள்ளே.
ஆனால்,
எதிர்த்து நின்றால்
ஒத்த முனைகள் ஒட்டாது...

ஒரு முனை விட்டுத் தந்து
இணைந்து வருவதுதான் காதல்...

ஒரே முனையே எப்போதும் விட்டுத்தந்தால்,
அதுகூடக் காதலல்ல...

இணைப்பு எப்போதும் இருக்க,
முறிந்து ஒட்டிய இடங்கள்
மறந்து போகட்டும்...