PDA

View Full Version : உபுண்டு 9.10 - சினிகுட்டி ஆடியோ வீடியோ எடிட்டர்



பாரதி
26-02-2010, 12:30 PM
அன்பு நண்பர்களே,

விண்டோஸில் பலவிதமான ஆடியோ வீடியோ எடிட்டர்களை பயன்படுத்தி இருப்பீர்கள். லினக்ஸிலும் அவ்விதமான பயன்பாட்டிற்கு பல எடிட்டர்கள் இருக்கின்றன. இன்று இணைய உலா வருகையில் சினிகுட்டி ! (Cinecutie) என்ற மென்பொருளைக் குறித்து அறிய நேர்ந்தது. நண்பர்கள் யாருக்கேனும் பயன்படக்கூடும் என்பதால் அதை நிறுவும் வழிகளை இங்கே தருகிறேன். இதை செய்யும் போது கணினி இணைய இணைப்பு பெற்றிருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்க:

Applications -- accessories -- Terminal...க்கு செல்லுங்கள்.
அங்கு கீழ்க்கண்ட கட்டளையை தட்டுங்கள்.

wget -c http://akirad.cinelerra.org/pool/addakirad.deb

Enter விசையை அழுத்துங்கள்.

பின்னர் திரையில்
sudo dpkg -i addakirad.deb
என்று தட்டச்சி எண்டர் விசையை அழுத்துங்கள். கடவுச்சொல் கேட்குமெனில் கடவுச்சொல்லைத் தாருங்கள்.

பின்னர்
sudo apt-get update
என்று தட்டச்சி எண்டர் விசையை அழுத்துங்கள்.

தேவையான கோப்புகள் இற்றைப்படுத்தப்படும்.

பின்னர் கீழ்க்கண்ட சுட்டியை அழுத்துங்கள்.
apt://cinecutie
திரையில் வரும் வழிமுறையைக் கையாளுங்கள்.

சினிகுட்டி (சினிக்யூட்?!) நிறுவப்படும் வரை காத்திருங்கள்.

நிறுவி முடித்ததும் மென்பொருளை இயக்கிப்பார்க்க Applications --- Sound & Video --- Cinecutie வைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்திப் பாருங்கள்.

உங்கள் பார்வைக்காக சில படங்கள் :

http://www.ubuntugeek.com/wp-content/uploads/2010/02/pan1.png

http://www.ubuntugeek.com/wp-content/uploads/2010/02/det.png

ஆதி
11-03-2010, 06:49 AM
wget -c http://akirad.cinelerra.org/pool/addakirad.deb

இந்த கட்டளையை பயன்படுத்தும் போது, நீங்கள் எந்த path-ல் இருக்குறீர்களோ அங்கே இந்த கோப்பு தரவிறக்கமாகும்..

அண்ணா சொன்ன படி நீங்கள் டெர்மினல் சென்றால் உங்களுடைய path
/home/<username> அதாவது /home/adhi என்று இருக்கும்..

ஒரு வேலை இந்த கோப்பை நீங்கள் desktop-ல் இருந்து தேட நினைத்தால், browser-ஐ திறந்து /home/adhi என்று தட்டச்சினால் நேராக அங்கு சென்றுவிடலாம்..


கீழுள்ள சுட்டியில் இருந்து நீங்கள் நேரடியாகவும்(browser வழியாகவும்)
http://akirad.cinelerra.org/pool/addakirad.deb

மென்பொருளை தரவிறக்கி கொள்ளலாம்.. அப்படி browser வழியாக செய்யும் போது அது உங்களுடைய desktop-ல் தரவிறக்கம் செய்யப்படும்.. பின் வழக்கம் போல் விண்டோஸில் செய்வது போல் இருமுறை அதனை க்ளிக் செய்து, நிறுவிக் கொள்ளலாம்.. அப்படி க்ளிக் செய்யும் போது அட்மின் கடவுச்சொல் கேட்கும், உங்கள் கடவுச்சொல்லைக் கொடுக்கவும்..

பாரதி
11-03-2010, 08:36 AM
நன்றி ஆதன். உங்கள் குறிப்புகள் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
டேபியன் கோப்புகளை தரவிறக்கினால் உபுண்டுவில் விண்டோஸைப் போல நிறுவ முடியும் என்பதை நான் பின்னரே கண்டு கொண்டேன்.