PDA

View Full Version : உபுண்டு 10.04 வெளியீடு



பாரதி
26-02-2010, 11:05 AM
நண்பர்களே,

வெற்றிகரமான உபுண்டு 9.10 ஐ அடுத்து உபுண்டு 10.04 லூசிட் ஆல்ஃபா - 3 நேற்று வெளியிடப்பட்டுள்ளது. உபுண்டு 10.04 -ன் முழுமை பெற்ற வெளியீடு ஏப்ரல் -29 ஆம் தேதி வெளியிடப்படும்.

அதற்கு முன்னதாக 10.04ஐ பார்க்க, பரிசோதிக்க விரும்புவோர்
http://cdimage.ubuntu.com/releases/lucid/alpha-3/
முகவரியிலிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம்.

முன்பே லினக்ஸ் நிறுவி இருப்பவர்கள் இற்றைப்படுத்த
Alt+ F2 விசைகளை அழுத்தவும். வரும் திரையில்
“update-manager -d” என்பதை மேற்கோள் குறிகள் இன்றி தட்டச்சவும். பின்னர் வரும் அப்டேட் மேனேஜரில் "Upgrade" தேர்வினை அழுத்துங்கள். அதன் பின்னர் கணினித்திரையில் வரும் வழிமுறையை பின்பற்றி நிறுவுங்கள்.

இந்த வெளியீடு சோதனைக்காக வெளியிடப்படுவதால் முக்கியமான கணினிகளில் நிறுவ வேண்டாம். முழுமையான வெளியீட்டிற்கு பின்னர் நிறுவிக்கொள்ளலாம்.

பாரதி
30-04-2010, 03:41 PM
நண்பர்களே,
முன்பே கூறி இருந்ததைப் போல உபுண்டு 10.04 வெளியிடப்பட்டு விட்டது. ஆனாலும் அதில் தற்போதைக்கு "மெமரி லீக்" பிரச்சினை இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது சரி செய்யப்பட்ட பின்னர் புதிதாக நிறுவவோ, மேம்படுத்தவோ செய்யலாம்.

வியாசன்
30-04-2010, 04:53 PM
நன்றி பாரதி காத்திருப்போம் சில காலம்

praveen
01-05-2010, 06:48 AM
இது தவிர உபுண்டுவில் இண்டல் ஐ கோர் புராசசர் உள்ளடங்கிய மதர்போர்டுடன் உடைய இண்டல் சிப்செட் கிராபிக்ஸ் கார்டு உள்ளதில் பதிக்க முற்பட்டாலும் வெண்மையான ஸ்கிரினே தோன்றுகிறது என்று கண்டறிந்தேன். இதற்கு தற்காலிக தீர்வாக விஜிஏ வை சேப் விஜிஏ என்ற மோடில் வைத்து பதிந்து, பின் கூடுதலாக ஸ்கிரின் ரெஸ்சல்யூசனை குறைவாக வைத்தால் ஒழிய இயக்க முடியவில்லை. ஒரு ஏசர் புதிய வரவான மடிக்கனினியில் இதனை பதியும் போது ஏற்பட்ட சிரமத்தால், இனையத்தில் தேடி இந்தப்பிரச்சினையை சரி செய்தேன். பின்னர் புதிய கெர்ணல் அப்டேட் செய்த பின் இந்த பிரச்சினை சரியானது. ஆனால் புதுக்கெர்ணல் பதிய முதலில் உபுண்டுவை பதிக்க வேண்டுமே :).


விரைவில் அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பார்கள்.

பாரதி
01-05-2010, 08:22 AM
கூடுதல் தகவல்களுக்கு மிக்க நன்றி பிரவீண்.