PDA

View Full Version : உன் தேவையை அறிய முடியா



இன்பக்கவி
26-02-2010, 10:44 AM
http://2.bp.blogspot.com/_oKnrU61Wuyc/SWcGWISAZcI/AAAAAAAAAcE/wry6xdWFaro/s400/44228965_crying_eye1.jpg
ஓயாமல் பேசுவாய்
ஓடித் திரிவாய்
ஒரு வார்த்தையும்
பேசாமல் சோர்வில் துவண்டு
ஒரு வாரமாய் ஒரே இடத்தில்
படுத்த படுக்கையாய் நீ..
பார்க்க பார்க்க பதறி
துடிக்குது என் நெஞ்சம்...

உன் மௌன புன்னகையின்
உள் அர்த்தம் புரியாமல்
குழம்பும் நிலை...
வாழ்த்து அட்டைக் கொடுத்து
அழ வைத்தாய்...
உனக்காக பல ஆண்டுகள்
வாழ வேண்டுமா நான்...
சின்ன மனதில் பெரிய சிந்தனை...

என் ஆழந்த தூக்கத்தில்
யாரோ என்னை உற்று நோக்க
கண்விழித்து பார்த்தால்
கண் சிமிட்டி சிரிக்கிறாய்..
என்னவென்று வினவினால்
கட்டிபிடித்து கொஞ்சுகிறாய்
உன் உள் மனது சொல்லும்
சேதி என்ன??
புரியாமல் என் மனம் குழப்பத்தில் ...

சேய்யின் தேவையை தாய்
தான் அறிய முடியுமோ??
ஒருவேளை அவள் இருந்தால்
அறிந்து இருப்பாளோ...
எண்ணி எண்ணி
ஏதோ ஒரு குற்ற உணர்வு என்னுள்...

மெலிதாய் ஒரு புன்னகை...
கண் சுருக்கி நீ சிரிக்கும்
சிரிப்பு எல்லாமே அவளை நினைவூட்ட
என் கண்களுக்கு அவளின் மறு உருவமாய் நீ...
ஆரோக்கியம் இல்லாத போது
அரவணைக்கும் தாயாய்
இருந்தபோதும் ஏதோ ஒரு குறை...
யாரிடம் சொல்ல...

உன் தேவையை அறிய முடியா
பாவியா நான்...
தாயாய் மாறினாலும்
தாயின் இடத்தை நிரப்ப முடியாத
பாவியா நான்...
என் சந்தோஷத்தை புதைத்து
உனக்காக வாழும்
என்னை நீ உணரும் நாளுக்காய்
உயிர் பிடித்து வாழ்ந்து வருகிறேன்...
உனக்காக வாழ விரும்புகிறேன்:traurig001::traurig001:

Akila.R.D
26-02-2010, 11:01 AM
உருக்கம் நிறைந்த கவிதை..

என் சந்தோஷத்தை புதைத்து
உனக்காக வாழும்
என்னை நீ உணரும் நாளுக்காய்
உயிர் பிடித்து வாழ்ந்து வருகிறேன்...

உங்க வீட்டு குட்டிப்பாப்பா உங்களை இப்போதே புரிந்து கொண்டிருக்கும்...

அதற்கு சொல்லத்தெரியாது செயல்களால் உங்களுக்கு உணர்த்திக்கொன்டிருக்கிறது...

சிவா.ஜி
26-02-2010, 11:24 AM
தாயில்லாதக் குழந்தைக்கு தாயாக வாழ்ந்தாலும், தாயின் இடத்தை பூரணமாய் பெறமுடியாத ஒரு பெண்ணின் மனதை அழகாய் சொல்லிவிட்டீர்கள்.

வாழ்த்துகள் இன்பக்கவி.

இன்பக்கவி
26-02-2010, 11:54 AM
உருக்கம் நிறைந்த கவிதை..

என் சந்தோஷத்தை புதைத்து
உனக்காக வாழும்
என்னை நீ உணரும் நாளுக்காய்
உயிர் பிடித்து வாழ்ந்து வருகிறேன்...

உங்க வீட்டு குட்டிப்பாப்பா உங்களை இப்போதே புரிந்து கொண்டிருக்கும்...

அதற்கு சொல்லத்தெரியாது செயல்களால் உங்களுக்கு உணர்த்திக்கொன்டிருக்கிறது...

நன்றிகள் அகிலா..
ம்ம்..புரிந்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையில் தான் என் காலம் போய் கொண்டு இருக்கிறது

இன்பக்கவி
26-02-2010, 11:56 AM
தாயில்லாதக் குழந்தைக்கு தாயாக வாழ்ந்தாலும், தாயின் இடத்தை பூரணமாய் பெறமுடியாத ஒரு பெண்ணின் மனதை அழகாய் சொல்லிவிட்டீர்கள்.

வாழ்த்துகள் இன்பக்கவி.

பெண்ணின் வேதனை என்று சொல்லி இருகின்றீர்கள் அந்த பெண் நான் தான் சிவா..இது என்னோடைய வேதனை குமுறல் தான் :traurig001:

பா.ராஜேஷ்
26-02-2010, 12:21 PM
கவலை வேண்டாம் கவியே
காலங்கள் மாறும்
காயங்கள் ஆறும்

நோயின் பிடியில் மழலை
தாயின் மனதில் கவலை
கவலைகள் நிச்சயம் தீரும்

உங்களை கவலையை
மழலையின் முன் காட்டாதீர்கள்

மழலையின் வேதனையை
விளையாட்டால் தீருங்கள்..

நல்லதையே நினையுங்கள்
நிச்சயம் நல்லது நடக்கும்

பாப்பா நிச்சயம் சீக்கிரம் பூரண குணமடைந்து விடுவாள். உங்களையும் நன்றாக புரிந்து கொள்ளுவாள்.

இன்பக்கவி
26-02-2010, 12:36 PM
கவலை வேண்டாம் கவியே
காலங்கள் மாறும்
காயங்கள் ஆறும்

நோயின் பிடியில் மழலை
தாயின் மனதில் கவலை
கவலைகள் நிச்சயம் தீரும்

உங்களை கவலையை
மழலையின் முன் காட்டாதீர்கள்

மழலையின் வேதனையை
விளையாட்டால் தீருங்கள்..

நல்லதையே நினையுங்கள்
நிச்சயம் நல்லது நடக்கும்

பாப்பா நிச்சயம் சீக்கிரம் பூரண குணமடைந்து விடுவாள். உங்களையும் நன்றாக புரிந்து கொள்ளுவாள்.

நன்றிகள் ராஜேஷ்...
சில குழப்பங்கள், குழந்தையின் மனதில் என்ன இருகின்றது என்ற கவலைகள்..
பாசம் கொட்டி வளர்த்தாலும் ஏதோ ஒரு மனக்குறை...ஒரு வாரமாக பல மனக்குழப்பங்கள்...
இறைவனிடம் விட்டுவிட்டேன்..என் பிள்ளையின் எதிர்காலம் எல்லாமே அவன் கையில் தான்..

balanagesh
26-02-2010, 12:38 PM
@இன்பக்கவி..அழகான கவிதை வரிகள்...
மிக ஆழமான உணர்வுகள்...
வாழ்த்துக்கள்!!!

இன்பக்கவி
26-02-2010, 12:41 PM
@இன்பக்கவி..அழகான கவிதை வரிகள்...
மிக ஆழமான உணர்வுகள்...
வாழ்த்துக்கள்!!!

நன்றிகள் பாலகணேஷ் :)

balanagesh
26-02-2010, 12:57 PM
ஒரு சின்ன திருத்தும் இன்பக்கவி...
பாலகணேஷ் இல்லை.. பால நகேஷ்.. :)

இன்பக்கவி
26-02-2010, 01:12 PM
ஒரு சின்ன திருத்தும் இன்பக்கவி...
பாலகணேஷ் இல்லை.. பால நகேஷ்.. :)

ஐயையோ ...இது சின்ன திருத்தும் இல்லை...:confused:
பெரிய திருத்தும்... :D
மன்னிசிடுங்கள்...கவனிகல..:traurig001:
அது என்னமோ பாலா என்ற பெயருக்கு பின் கணேஷ் பார்த்தே பழக்கம் அது தான் அப்டி சொல்லிட்டேன் :icon_b:

balanagesh
26-02-2010, 01:14 PM
@இன்பக்கவி...ஹா ஹா ஹா...
பரவாயில்லை... விட்டு தள்ளுங்க...
இத மாதிரி பல பேர் பல தடவை பண்ணிருக்காங்க...

இன்பக்கவி
26-02-2010, 01:17 PM
ஹா ஹா அப்போ சரி..
கணேஷ் க்கும் நாகேஷ் க்கும் எழுத்துக்கள் தான் கொஞ்சம் இடம் மாறி இருக்கு.. அது தான் குழப்பம்:D:D

அக்னி
08-03-2010, 06:05 PM
பிள்ளையின் தேவையை
அறிய முடியாப்
பாவியல்ல நீங்கள்...

பிள்ளையின் தவிப்பை
அறிந்து தவிக்கும்
தாய்மையின் மகத்துவம் நீங்கள்...

கருவுறாமலே தாயாகியதால்
தாய்மைக்குட் சிறந்த பெண்மை நீங்கள்...

சொல்லத் தெரியாத குழந்தைக்கு
மெல்லப்புரியும் காலம் வரும்...
அப்போதும் உங்கள் பாசம் சொல்ல
வார்த்தையின்றித் தவிக்கும்...

ஒன்றில் மட்டும் நீங்கள் மாறவேண்டும்...

குழந்தைக்காக உங்கள் சந்தோஷங்களைப்
புதைக்காதீர்கள்.
அது நாளை அந்தக் குழந்தைக்குக்
குற்றவுணர்வாய் உறுத்தி
உச்சவேதனையைத்தான் கொடுத்திடலாம்.

பாசம் நிறைவாய்க் கொடுங்கள் போதும்...

உங்கள் வாழ்வு, தாய்மைக்கு உயர்ந்த வரைவிலக்கணம்...

govindh
08-03-2010, 08:07 PM
இன்பக்கவியின் இக்கவி...மனதை...பலமாக..இடிக்கிறது..
இயல்பாகவே..குழந்தை விரைவில்..உணரும் நாள்..வரும்...!

இளசு
08-03-2010, 08:31 PM
உணர்வுகளைப் பரிமாறுவதில் கவிதை வெற்றி...

அக்னியின் பின்னூட்டமே என் கருத்தாகவும்..


நம்பிக்கையுடன் புன்னகை செய்ய வாழ்த்துகிறேன் இன்பக்கவி..