PDA

View Full Version : பின்மதிய வேளையில்



umakarthick
26-02-2010, 07:48 AM
1

பாம்புகள் பிண்ணி பிணைந்துக் கொண்டிருந்த
அந்த பின்மதிய வேளையில் தான் ஜெயாக்காவுக்கு வலிகண்டது

பிறவி ஊமையான அவளின் ஓலம்
அமானுஷ்யம் கலந்ததாயிருந்தது


குழந்தை வெளிவந்து நஞ்சு சிக்கி
ஜெயக்கா இறந்து போது
பெருங்குரலெடுத்து அழுத பூத்தாயிக்கிழவியின் அலறலில்
பாம்புகள் விருட்டென பிரிந்து புதருக்குள் புகுந்தன




2

அவன் அசிங்கத்தை மிதித்து விட்டான்
யாரும் கவனிக்க வில்லை என்று உறுதிப்படுத்திய பின்
காலை உதற ஆரம்பித்தான்

கீதம்
28-02-2010, 05:13 AM
செவியில்லாப் பாம்புகளையும் கேட்கச் செய்த அலறலின் வீரியத்தை உணரமுடிகிறது உங்கள் வரிகளில். மிக அருமை. பாராட்டுகள் உமாகார்த்திக் அவர்களே.

umakarthick
28-02-2010, 06:37 AM
செவியில்லாப் பாம்புகளையும் கேட்கச் செய்த அலறலின் வீரியத்தை உணரமுடிகிறது உங்கள் வரிகளில். மிக அருமை. பாராட்டுகள் உமாகார்த்திக் அவர்களே.

நன்றி நண்பரே

அமரன்
28-02-2010, 10:26 AM
அக்கம் பக்க அரவம்
மறந்த நிலையில் அரவம்...
அழிவு வழங்கிய
ஆத்தாவின் அலறில் மயக்கம் கலைத்து..

அருமை.

பாம்புகளைக் குறியீடாகக் கொண்டு, கிராமப்பக்கம் சென்று வந்தால் பல்லர்த்தம் பகிரும் உணர்வுப் பூங்கா இந்தக் கவிதை.

இரண்டாவது... நிதர்சனம்! வெட்கம்..!

umakarthick
01-03-2010, 01:45 PM
அக்கம் பக்க அரவம்
மறந்த நிலையில் அரவம்...
அழிவு வழங்கிய
ஆத்தாவின் அலறில் மயக்கம் கலைத்து..

அருமை.

பாம்புகளைக் குறியீடாகக் கொண்டு, கிராமப்பக்கம் சென்று வந்தால் பல்லர்த்தம் பகிரும் உணர்வுப் பூங்கா இந்தக் கவிதை.

இரண்டாவது... நிதர்சனம்! வெட்கம்..!

ரசித்தமைக்கு நன்றி

அக்னி
02-03-2010, 04:52 PM
1.
நிலமதிரவைக்கும் அலறல்...
விளங்கியது சரிதானா உமாகார்த்திக்...???

2.
ஓரிடத்தில் இருந்த அசிங்கம்,
பல இடங்களுக்குக்கும் உதறப்படும்,
சுத்திகரிப்பு...

இம்மாதிரிக் கவிதைகளில் ஈடுபாடு உண்டெனிலும்,
புரிந்தேனா என்பது புரியாத சந்தேகமாய்...