PDA

View Full Version : குறிஞ்சி மன்றம் பற்றி



mhmramees
26-02-2010, 05:59 AM
புதிய member களுக்கு குறிஞ்சி மன்றத்தினுள் காலெடுத்து வைக்க முடிவதில்லை அதற்கான காரணத்தை சொல்ல முடியுமா நண்பர்களே?????

அக்னி
26-02-2010, 07:41 AM
குறிஞ்சி மன்றத்தினுள் நுழையப் ‘பண்பட்டவர்’ தகைமை இருத்தல் வேண்டும்.
உங்கள் தொடர் பங்களிப்புக்களில், பதிவுகள் இருபத்தியைந்தைத் தாண்டப், பதிவுகளின் தரத்தைக் கணக்கிற் கொண்டு அத்தகைமை உங்களைத் தானே தேடி வரும்.
இது புதியப் பதிவர்களுக்கு மன்றம் மீதான ஆர்வத்தைத் தூண்டிவிடவும், இணையத் திருடர்களிடமிருந்து மின்னூல்களைப் பாதுகாக்கவுமென ஏற்படுத்தப்பட்ட சிறியதொரு ஊக்குவிக்கும் கட்டுப்பாடு.
பங்களிப்பைத் தொடருங்கள். மன்றத்தோடு இணைந்திருந்து மகிழுங்கள்.

அன்புரசிகன்
26-02-2010, 07:42 AM
வணக்கம் நண்பரே...

குறிஞ்சி மன்றம் என்பது சிறப்பு அனுமதி அதாவது பண்பட்டவர் அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே.. பண்பட்டவர் தகமை என்பதன் விளக்கம் மன்ற வழிகாட்டியில் (மன்றம் குறித்த சந்தேகங்கள் பகுதியில்) உள்ளது. அதாவது உங்களுக்கு இந்த மன்றம் ஓரளவு பரீச்சியம் வரும்வரை அந்த அனுமதி கிட்டாது.

நீங்களும் மன்றத்தில் நன்று உலாவந்து மற்றவர்களின் பதிவுகளுக்கு உங்களின் ஊக்கங்களை அளித்து உங்களின் ஆக்கங்களை மன்றில் பதிந்து மன்றினை சிறப்பித்தால் அது தானாகவே உங்களை வந்தடையும்.

உங்களைப்பற்றிய சிறு அறிமுகத்தினை அறிமுகப்பகுதியில் சேர்த்திடுங்கள். நீங்கள் இலங்கையிலிருந்து வரும் ஒரு உத்தியோகஸ்தர் + மாணவன் என்பதை தவிர வேறு எதுவும் தெரியாதே...
விரைவில் அனுமதி கிடைக்க வாழ்த்துக்கள்.

aren
26-02-2010, 07:44 AM
நீங்கள் எங்கெல்லாம் செல்ல முடியுமோ அங்கெல்லாம் சென்று உங்கள் சிறப்பான பங்களிப்பை அங்கே அளித்திடுங்கள், பண்பட்டவர் உறுப்பினர் பதவி தானாகவே உங்களை வந்தடையும். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.