PDA

View Full Version : நல்ல பாடல்கள் வரும் காலம்



இன்பக்கவி
25-02-2010, 02:40 PM
மனதில் ஏதோ ஒரு சோர்வு
எங்கோ மெலிதாக
இனிதான பாடல் ஒலிக்க
எந்த அலைவரிசையோ
தொலைகாட்சி பெட்டியிலோ
எங்கே அந்த பாடல்
எந்த அலைவரிசையிலும்
தென்படவில்லை...
இசை அலைவரிசையில்
ஏதேதோ பல பாடல்கள்
ஒலிக்க எதுவுமே பிடிக்கவில்லை...
கதாநாயகன்
கண்ணாடி கட்டிடங்களுக்கு
முன்பு ஏனோதானோ ஆட்டம் போட
கலர் கலராய் உடை அணிந்த
வெள்ளை அழகிகள்
புரியாத பாஷையை
புரிந்தது போல
உதட்டசைக்க...
வார்த்தைக்கும், உணர்வுக்கும்
என்ன பொருத்தமே விளங்கவில்லை
வெளிநாட்டு மோகம்
பாடல் வரை வந்துவிட்டதே:confused:
கதாநாயகி அரைகுறையாய்
ஓடிவந்து வெள்ளை அழகிகளுடன்
ஆட்டம் போட..
உடை பற்றாக்குறையோ
நினைக்க தோன்றும் ஒரு கணம்....:cool:
ஆடம்பரம் என்ற பெயரில்
அலங்கோலம்...
வெளிநாட்டுத் தெருவிளக்கு
கம்பங்களை கட்டி அணைத்து ஆட
பல லட்சம் செலவோ...
கருப்பு வெள்ளைக்காலத்தில்
உடை, பூக்களின் நிறம்..
தெரியாதிருந்தபோதும்
கலை நுட்பத்தால்
உருவாக்கிய அரங்கத்துள்
ஆர்பாட்டம் இல்லாமல்
அழகாய் உருவாகிய பாடல்
இன்றுவரை அழியவில்லை...
தொழில் நுட்ப முன்னேற்றம்
தொழிலை வளர்க்காமல்
அழித்துக் கொண்டு இருக்கிறதே..
நல்ல பாடல்கள் வரும் காலம் எப்போது...:traurig001:

சிவா.ஜி
25-02-2010, 02:46 PM
ஒரு கட்டுரையை மடக்கிப்போட்டதைப் போல தோன்றுகிறது இன்பக்கவி. நல்ல கரு. ஆனால் சொல்லியவிதம்....மன்னிச்சுக்குங்க...

கம்பாசிட்டர் கவிதை.

இன்பக்கவி
25-02-2010, 03:13 PM
நன்றிகள் சிவா..
இதில் எதுக்கு மன்னிப்பு எல்லாம்...??
எழுதும் போதே சில பிரச்சனைகள்..
சரியான மன நிலையில்
சரியான சுழலில் எழுதல...
திருத்தும் கூட செய்யாமல் போட்டுவிட்டேன்...
நன்றிகள்...:)
(சொல்ல முடியாத சூழல் தற்போது.. மாறும் நிலை எப்போது??.. கவனசிதறல்... நான் தான் மன்னிப்பு கேட்கணும்:traurig001:)