PDA

View Full Version : விண்டோஸ் எக்ஸ்-பியைப் போல லினக்ஸ்!



பாரதி
25-02-2010, 02:40 PM
அன்பு நண்பர்களே,

லினக்ஸ் குறித்து இன்னும் பலருக்கு பலவிதமான ஐயங்கள் இருக்கின்றன. நிறுவிய பின்னர் பயன்பாட்டிற்கு எவ்விதம் இருக்குமோ... அல்லது விண்டோஸைப் போன்று எளிதாக இருக்காதோ என்ற அச்சம் இருக்கக்கூடும். அவர்களுக்கான செய்திதான் இது.

YLMF open source operating system (Ylmf OS) என்ற ஒய்.எல்.எம்.எஃப் இயங்குதளம் அந்த அச்சத்தை போக்கும் வகையில் அமைந்திருக்கிறது. விண்டோஸ் எக்ஸ்-பி இயங்குதளத்தை எப்படி நாம் பயன்படுத்துகிறோமோ அதே வகையில் இதையும் பயன்படுத்தலாம்.

கிட்டத்தட்ட விண்டோஸ் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறதோ அதே போன்றே இதுவும் இருக்கிறது. முதலில் சீன மொழியில் வெளியிடப்பட்ட இந்த இயங்குதளம் தற்போது ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. உபுண்டு 9.10-ஐ அடிப்படையாகக்கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.

முழுக்க திற மூல மென்பொருட்களை மட்டுமே பயன்படுத்தி நாம் கணினியை இயக்க முடியும் என்றாலும் விண்டோஸிற்காக தயாரிக்கப்பட்ட மென்பொருட்களையும் "வைன்" [ Wine] மூலமாக நிறுவி பயன்படுத்தலாம்.

இதை வேகம் குறைந்த பழைய கணினிகளிலும் நிறுவ முடியும்.

ஒய்.எல்.எம்.எஃப் இயங்குதளம் எப்படி இருக்கும் என்று நினைப்பவர்களுக்காக சில படங்கள் :

http://www.ylmf.org/en/images/snaps/YlmfOS-0.jpg


http://www.ylmf.org/en/images/snaps/YlmfOS-1.jpg

http://www.ylmf.org/en/images/snaps/YlmfOS-12.jpg

விண்டோஸைப் போன்றே லினக்ஸையும் அனைவரும் பயன்படுத்த முடியும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இதை வாய்ப்பிருப்போர் பயன்படுத்திப் பாருங்கள்.

மேற்கொண்டு இதைப் பற்றி அறிய விரும்புவோரும், பதிவிறக்க விரும்புவோரும் தட்டச்ச வேண்டிய முகவரி:
http://www.ylmf.org/en/download.html

குறிப்பு:
நண்பர்களே... நான் நேரடியாக உபுண்டு 9.10வைத்தான் நிறுவி பயன்படுத்தி வருகிறேன். இந்த இயங்குதளத்தை பதிவிறக்கும் முயற்சியில் இருக்கிறேன்.

praveen
26-02-2010, 12:49 PM
நன்றாக உள்ளது உங்கள் தகவல் விரைவில் இதனை சோதித்து பின்னர் பதில் பதிக்கிறேன்.

பாரதி
26-02-2010, 12:55 PM
நல்லது பிரவீண். அப்படியே செய்யுங்கள். உபுண்டு 9.10 சாலச்சிறந்தது எனினும், நண்பர்கள் தயக்கத்தை நீக்க இது உதவும் என்றே எண்ணுகிறேன்.

வியாசன்
27-02-2010, 06:35 AM
நன்றி பாரதி நாங்கள் தரவிறக்கம் செய்துவிட்டமில்ல. கணனியில் பதித்துவிட்டு சொல்கின்றேன்.

ஆதி
01-03-2010, 07:23 AM
லிண்டோஸ்-இன் வகைகளில் ஒன்று இதுவும்..

லினக்ஸ் + விண்டோஸ் = லிண்டோஸ் என்று அழைத்தார்கள்..

இன்னும் நிறைய இது போல் இருக்கு..

ரௌட்டர் பற்றி பலர் அறிவோம்..

சிஸ்கோ ரௌட்டர்கள் எல்லா வற்றிலும் சிறந்தது என்பதையும் அறிவோம் ஒரு லினக்ஸ் சிஸ்டமை சிஸ்கோ ரௌட்டருக்கு இணையான ஒரு ரௌட்டராக பயன்படுத்த முடியும்..

லினக்ஸை வைத்து என்ன செய்ய முடியும் என்று கேட்டால், என்ன வேண்டுமானாலும் என்று பதில் சொல்லலாம்..

பாரதி
09-03-2010, 07:17 AM
நன்றி ஆதன்.

லிண்டோஸ் என பெயர் வைத்து அழைக்கக்கூடாது என வழக்கு தொடுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம், வழக்கு வெற்றி பெறாத நிலையில் மிகப்பெரிய தொகையை அளித்து பெயரை மாற்றிக்கொள்ள வேண்டியது. லிண்டோஸ் லின்ஸ்பயர் ஆனது! சில நேரம் இது போன்ற கதைகளைப்படித்தாலும் மிகவும் வியப்பாகத்தான் இருக்கிறது.

praveen
09-03-2010, 01:13 PM
நன்றாக உள்ளது உங்கள் தகவல் விரைவில் இதனை சோதித்து பின்னர் பதில் பதிக்கிறேன்.

முதன் முதலாக லினக்ஸ் உபயோகப்படுத்துவர்களுக்கு மிகவும் பிடித்தது இந்த பதிப்பே ஆகும், நான் கடந்த சில நாட்களாக பாரதி அண்ணா அவர்களின் அறிவுரைப்படி :), லினக்ஸ்-ஐ பற்பலருக்கு பதிந்து தந்ததில், வெகுசிலரே தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள் அதில் முதலிடம் இருப்பது, இந்த திரியில் சொன்ன YLMF லினக்ஸே அடுத்து சிறப்பாக உள்ளது மிண்ட் லினக்ஸ் அடுத்து தான் உபண்டு (ஆனால் எல்லாமே உபண்டு தான்).

கடைசியாக ஒரு நண்பருக்கு பப்பி லினக்ஸ் போட்டு தந்தேன். அவர் விடாமல் தொடர்ந்து உபயோகித்து வருகிறார்.

பாரதி அண்ணா முயற்சிக்கு பாராட்டுக்கள்.


////

நான் இந்த வின் லினஸ்க்ஸை 10 வருடத்திற்கு முன்னரே பயன்படுத்தியிருக்கிறேன். அது பேட்32ல் கூட சமத்தாக இயங்கும் தனி பார்டீசன் தேவையில்லாதது குறிப்பிடத்தக்கது. ஆனால் சாய்ச்சு புட்டாய்ங்க (வேற யாரு மைக்ரோ சாப்ட் தான், கேஸ் நிக்கலை என்று தெரிந்தது, காசு கொடுத்து வளைச்சுட்டாங்க).

பாரதி
09-03-2010, 01:58 PM
சொன்னபடி நிறுவிப்பார்த்தது மட்டுமின்றி, நண்பர்கள் பலருக்கும் நிறுவித்தந்திருக்கும் அன்பு பிரவீணைப் பாராட்டுவதில் உள்ளபடியே எனக்கு மிக்க மகிழ்ச்சி. பயனாளர்கள் அதிகரிக்கும் போதுதான் லினக்ஸின் சிறப்பு நம்மிடையே பரவும்.

ஒவ்வொரு தினமும் ஏதாவது கற்றுக்கொள்ளும் வகையில் லினக்ஸ் அமைந்திருக்கிறது. மன்ற நண்பர்கள் அனைவரும் லினக்ஸை நிறுவி பயன்படுத்தும் காலம் விரைவில் வரட்டும்.

மிக்க நன்றி பிரவீண்.

எந்திரன்
21-07-2010, 12:58 PM
விண்டோசைப் போலவே காட்சியளிக்கும் இந்த ஆபரேட்டிங் சிஸ்டத்தை பதிவிறக்கி இயக்கி பார்க்கிறேன். பயனுள்ள தகவல்களுக்கு நன்றி.

nambi
21-07-2010, 04:12 PM
லினக்ஸ் பற்றி விளக்கமாக அறிய தந்தமைக்கு நன்றி!

பால்ராஜ்
30-07-2010, 07:28 AM
இதில் எம் எஸ் வேர்ட் எக்செல் எல்லாம் செயல்படுமா??

பாலகன்
30-07-2010, 02:22 PM
Ylmf OS 1.0 மற்றும் Latest Version 3.0 என இரண்டு உள்ளதே இதில் எதை இறக்கி பயன்படுத்துவது...

மேலும் இதை இறக்கிய பின் எங்கிருந்து நிறுவது... விண்டோசில் இருந்தே நிறுவலாமா? அல்லது டாஸ் மோடில் போய் நிறுவவேன்டுமா?... என்று விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.

பாரதி
09-08-2010, 07:12 AM
கருத்துக்களுக்கு நன்றி எந்திரன், நம்பி, பால்ராஜ்,மகாபிரபு.

அன்பு பால்ராஜ்,
நீங்கள் கூறிய மைக்ரோசாஃப்ட் மென்பொருட்களை லினக்ஸில் பயன்படுத்த வேண்டுமெனில் வைன் போன்ற மென்பொருட்களின் ஊடாக லினக்ஸில் நிறுவி பயன்படுத்த இயலும். ஆனாலும் ஓபன் ஆபிஸ் போன்ற சிறந்த இலவச தொகுப்பு மென்பொருட்கள் கிடைப்பதால் அதையே லினக்ஸில் நேரடியாக பயன்படுத்துதல் சிறப்பு.

அன்பு மகாபிரபு,
வெளியீடு3.0 ஐ-யே நீங்கள் நிறுவலாம். நீங்கள் பதிவிறக்கிய மென்பொருளை நீரோ போன்ற மென்பொருட்கள் மூலம் சி.டி.யில் பதிந்து கொள்ளுங்கள். சி.டி.டிரைவில் இட்டு கணினியை மீள இயக்குங்கள். உதவிக்கு கீழிருக்கும் சுட்டியில் இருக்கும் பொத்தகத்தை பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=23750

வியாசன்
09-08-2010, 08:08 AM
நன்றி பாரதி

mojahun
14-08-2010, 12:06 AM
இந்த இயங்குதளத்தைப் பற்றிய செய்தி எனக்குப் புதியது. தரவிறக்கம் செய்து கொண்டிருக்கிறேன். நன்றி

peru.raja
20-06-2011, 11:27 AM
ஒயின் வைத்து போட்டாசாப் பணன்படுத்துகையில் பல ஷாட்கட் கீகள் வேலை செய்யவில்லை - உதவி தேவை....
அதே போல் உபுண்டு-வில் பாமினி பாண்டுபோல் யூனி கோடில் தட்டச்சு செய்ய உதவி தேவை...
NHM Writer Install செய்தும் பலனில்லை....
Ubuntu வில் தமிழ் யூனிகோடு லேஅவுட் மட்டுமே உள்ளது... இது பாமிணியிலிருந்து பல கீ வித்தியாச மாக உள்ளதால்....
இந்த 2 பிரட்சனைக்கும் உதவிதேவை....

sun
23-06-2011, 03:53 PM
நான் எக்ஸ் பி பயன்படுத்துகிறேன்.இதனுடன் எப்படி லினக்ஸை நிறுவுவது.பார்டீஷன் பண்ணணுமா.அது எப்படி என சொல்லவும்.நன்றி.

வியாசன்
25-06-2011, 09:10 PM
நான் எக்ஸ் பி பயன்படுத்துகிறேன்.இதனுடன் எப்படி லினக்ஸை நிறுவுவது.பார்டீஷன் பண்ணணுமா.அது எப்படி என சொல்லவும்.நன்றி.

அது ஒன்றும் சிரமமில்லை. நீங்கள் உபுண்டு சீடியை போட்டு பதிவு செய்யும்போது எல்லாம் நடைபெறும் பார்ட்டிசன் உங்கள் விருப்பப்படி தேவையான அளவு செய்து கொள்ள முடியும்.

jeeva.p
13-08-2011, 03:59 PM
தகவலுக்கு நன்றி. பதிவிறக்கம் செய்து கொண்டிருக்கிறேன்