PDA

View Full Version : செத்துக் கொடுத்த சிறப்பாளர்!



குணமதி
25-02-2010, 02:25 PM
செத்துக் கொடுத்த சிறப்பாளர்!


இருந்த போது...

ஒவ்வொரு நாளும்

உதை, அடி!

காது கொள்ளாக் கத்தலும் ஏச்சும்!

கஞ்சிக் கில்லா வறுமையும் துயரமும்!

அவர் இறந்த பின்...

மனைவிக்கு வேலை!

வயிறார மனமார அமைதி வாழ்க்கை!

செத்துக் கொடுத்த -

குடிகாரர்!

சிவா.ஜி
25-02-2010, 02:42 PM
நிதர்சனம்.

வாழ்த்துகள் குணமதி.

aren
25-02-2010, 03:24 PM
செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பார்களே, அது இதுதானா

குணமதி
25-02-2010, 04:27 PM
நிதர்சனம்.

வாழ்த்துகள் குணமதி.

நன்றி சிவா.

குணமதி
25-02-2010, 04:29 PM
செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பார்களே, அது இதுதானா

அவர் வள்ளல்.

இவரோ...!

பின்னூட்டத்திற்கு நன்றி.

பா.ராஜேஷ்
26-02-2010, 01:07 PM
குடி குடியை வாழவும் வைக்கும் போலிருக்கிறதே ;)

குணமதி
26-02-2010, 04:00 PM
குடி குடியை வாழவும் வைக்கும் போலிருக்கிறதே ;)

குடியைக் கெடுத்த குடி மூலமான உயிரைப் பறித்தபின் அக் குடும்பம்
ஓரளவு வாழ்வு பெறுவது, குடி எதிர்ப்பு நல்லுணர்வாளர்களால் அன்றோ?

பின்னூட்டத்திற்கு நன்றி.

அக்னி
02-03-2010, 06:54 AM
கணவன் நல்ல குடிகாரனானால்,
அவர் இறப்பில்
நிம்மதியடைவதும் நிகழலாம்.
வருந்தியே வாழ்வதும் நிகழலாம்.

அது அவர் குடியைப் பொறுத்து...

கவிதையில் வந்த குடியின் இயல்பாளர் என்றால்,
அவர் செத்துப் போனாற்தான் சிறப்பாளராக முடியும்...

குணமதி அவர்களுக்குப் பாராட்டு...

அக்னி
02-03-2010, 06:55 AM
அவர் வள்ளல்.

இவரோ...!
வள்ளலில் சிறு விள்ளலோ... :cool:

ஓவியன்
02-03-2010, 07:23 AM
வாழும் போது,
வாழ விடவில்லை...
வாழ்ந்து முடித்த போது,
வாழ வைக்கிறான்.....!!

ஒரு வகையில்
இரண்டுமே வலிதான்
மனைவிக்கும் மக்களுக்கும்...!!

குணமதி
02-03-2010, 01:13 PM
உண்மைதான், ஓவியன்.

பின்னூட்டத்திற்கு நன்றி.