PDA

View Full Version : என் தமிழ்ச் சொல் எங்கே??



இன்பக்கவி
24-02-2010, 10:01 AM
காலையில் உதித்தது
ஒரு கவிதை...
நினைத்தவுடன் எழுதாவிடின்
என் மறதியால்
மரித்துப் போகும் அக்கவிதை..
நினைத்து, மறந்து,
மரித்த கவிதைகள்
கணக்கில் அடங்கா..

வேகமாய் கணினி முன்
தட்டச்சுவை திறக்க
காலையிலேயே
கணினி முன்பாயென
என் அம்மா திட்ட
எழுதியே தீர வேண்டும் என
தலைப்பு வைத்து கவிதையை
தொடங்க பட்டென்று இருள்..
என் எண்ணங்களில் அல்ல
என் அறையில்...

மாதம் ஒரு நாள் மின் துண்டிப்பு..
அந் நன்னாள் இந்நாள் என
என் அம்மா சிரிக்க
ஐயோ என் கவிதை என
என் மனம் கூப்பாடு போட
நீண்ட நாட்களுக்கு பிறகு
பேனாவை தேடியது என் கண்கள்...

பேனாவையும் வெள்ளைத்தாளும்
ஒருவழியாய் இருளில் தேடிப் பிடித்து
எழுதிய முதல் வார்த்தை "நான்"..
ஒரு நொடியில் பெரிய அதிர்ச்சி...
என்னவாயிற்று என் தமிழுக்கு??
என்னவாயிற்று என் கையெழுத்து??
சிறு குழப்பம்...

கைபேசியிலும் கணினியிலும்
ஜாலம் செய்யும் விரல்கள்
இன்று பேனா பிடிக்கையில்
ஆரம்பக்கல்வி குழந்தையாய்
கிறுக்கி கொண்டு செல்ல
நான் எழுதிய வார்த்தை கண்டு
குழம்பி போனது மனது...
ஐயோ என் தமிழ் சொல் எங்கே??

கைபேசி குறுஞ் செய்தியிலும்
கணினியிலும் ஆங்கிலத்தில்
தமிழை எழுதியதால் வந்த வினையோ?
என் மனம் துடித்தது...
"நான்" என்று ஆங்கிலத்தில்
எழுதி இருப்பதாய் பார்த்து
என் கண்களே நம்ப மறுத்தது...
கை எழுத்துக்கூட காணமல்
போயிற்று கணினியால்...
நான் தமிழை ஆங்கிலத்தில் வளர்த்தேனோ??
தமிழை மறந்தேனோ???:traurig001::traurig001:

balanagesh
24-02-2010, 10:29 AM
மிக மிக மிக அற்புதமான கவிதை தந்ததற்கு மிக மிக மிக நன்றி இன்பக்கவி... அழகான கவிதை வரிகள்... முற்றிலும் ஆழமான உண்மை...

கணினி பல பேர் தலை எழுத்தை மாற்றியுள்ளது இவ்வுலகம் அறியும்... ஆனால் அது பல பேர் தாய்மொழியின் கையெழுத்தையும் மாற்றியுள்ளது என்பதை அற்புதமாக சொல்லியுள்ளீர்கள்... என் பாராட்டுக்கள்...

தொடர்ந்து எழுதுங்கள்... எங்களுக்காக...

சிவா.ஜி
24-02-2010, 11:02 AM
உண்மையான உண்மை.....நான் என்பதையே ஆங்கிலத்தில் எழுதுமளவுக்குத்தான் போய்விட்டது நம் நிலைமை.

சாலையில் செல்லும்போது, சாலையோரப் பள்ளியில், சப்பனனாங்கால் போட்டுக்கொண்டு, சிலேட்டில், முத்து, முத்தாய்...அ, ஆ எழுதும் அரசுப்பள்ளிக் குழந்தைகளைக் கண்டால்...ஆசையாய் இருக்கிறது...அதே சமயம் அதிர்ச்சியாயும் இருக்கிறது. என் தமிழ் எழுத்து எங்கே...?

அருமையான கவிதை கிடைத்திட உதவிய ஆற்காட்டாருக்கு நன்றி.(மின்சாரத்துறை அமைச்சருங்கோ)

வாழ்த்துகள்+பாராட்டுக்கள் இன்பக்கவி.

Akila.R.D
24-02-2010, 11:08 AM
உண்மை உண்மை உண்மை...
இதில் உண்மையைத்தவிர வேறேதும் இல்லை...

நாளை என் குழந்தைக்கு சொல்லித்தர எனக்கு க ங ச எழுத வருமா என்று தெரியவில்லை...

கவிதை மிகவும் அருமை கவி...

வாழ்த்துக்கள்...

ஜனகன்
24-02-2010, 11:59 AM
மிக சரியாக சொன்னீர்கள் கவிதா.
இந்த நவீன காலத்திலே டெலிபோனிலும், இமெயிலிலும் எல்லாம் முடிந்து விடுகின்றது.நான் எனது (தாய் நாட்டுக்கு) அப்பா அம்மாவுக்கு கடிதம் எழுதியே பலவருடமாச்சு.
இப்போது தமிழ் எழுத்தே எழுத வரமாடேன் என அடம் பிடிக்கின்றது. என்பாடே இப்படி என்றால்
என் பிள்ளைகளின் கெதி, எதிர்காலம்........
இங்கு எல்லா பெற்றோர் நிலையம் இப்படித்தான்.

என் மனதை தொட்ட கவிதை வாழ்த்துக்கள் கவிதா.

கலையரசி
24-02-2010, 12:11 PM
கடிதம் எழுதுவது ஒரு கலை. இப்போது அது அநேகமாய் மறைந்தே போய்விட்டது.
ஆங்கிலத்திலும், தமிங்கிலிஷிலும் தட்டச்சு செய்து செய்து தமிழில் காகிதத்தில் எழுதுவது பெருமளவில் குறைந்து விட்டது.
அருமையான கவிதை. பாராட்டுகிறேன் இன்பக்கவி அவர்களே!

இன்பக்கவி
24-02-2010, 12:33 PM
மிக மிக மிக அற்புதமான கவிதை தந்ததற்கு மிக மிக மிக நன்றி இன்பக்கவி... அழகான கவிதை வரிகள்... முற்றிலும் ஆழமான உண்மை...

கணினி பல பேர் தலை எழுத்தை மாற்றியுள்ளது இவ்வுலகம் அறியும்... ஆனால் அது பல பேர் தாய்மொழியின் கையெழுத்தையும் மாற்றியுள்ளது என்பதை அற்புதமாக சொல்லியுள்ளீர்கள்... என் பாராட்டுக்கள்...

தொடர்ந்து எழுதுங்கள்... எங்களுக்காக...

நன்றிகள் பாலகணேஷ்...
இன்று எனக்கு நடந்தது சோதனை..
நான் கணினியில் எல்லாம் தெரிந்துக் கொள்ளவேண்டும் என்று நினைப்பேன்...
அது நல்ல விஷயமாக இருந்தாலும் நம்மையும் அறியாமல் நாம் பல விஷயங்களை மறக்கிறோம்..
பேனாவை கையில் எடுத்த பல மாதம் ஆயிற்று.
இன்று பிடித்தது போது தான் தெரிந்தது என் நிலை...
நன்றிகள்:)

இன்பக்கவி
24-02-2010, 12:52 PM
உண்மையான உண்மை.....நான் என்பதையே ஆங்கிலத்தில் எழுதுமளவுக்குத்தான் போய்விட்டது நம் நிலைமை.

சாலையில் செல்லும்போது, சாலையோரப் பள்ளியில், சப்பனனாங்கால் போட்டுக்கொண்டு, சிலேட்டில், முத்து, முத்தாய்...அ, ஆ எழுதும் அரசுப்பள்ளிக் குழந்தைகளைக் கண்டால்...ஆசையாய் இருக்கிறது...அதே சமயம் அதிர்ச்சியாயும் இருக்கிறது. என் தமிழ் எழுத்து எங்கே...?

அருமையான கவிதை கிடைத்திட உதவிய ஆற்காட்டாருக்கு நன்றி.(மின்சாரத்துறை அமைச்சருங்கோ)

வாழ்த்துகள்+பாராட்டுக்கள் இன்பக்கவி.

நன்றிகள் சிவா...
நிஜமாய் நான் ஒரு நிமிடம் திகைத்து போனேன்...
நானா இப்படி எழுதினேன் என்று எனக்கே தெரியல..
படக்கவிதைகள் எழுதுகையில் தமிழ் எழுத்துரு பயன்படுத்துகிறேன் இருப்பினும் பேனாவில் எழுதி ரொம்ப நாள் ஆயிற்று...
இன்று எழுத நினைத்த கவிதை வேறு எழுதிய கவிதை வேறு...
நினைத்த கவிதையை எழுத மறந்தே போனது அதிர்ச்சியில்...
மின்சார அமைச்சரை நீங்கள் பாராட்டியதை அவர் அறிந்தால் அவருக்கு அதிர்ச்சி தான்...அவரை பாராட்டிய முதல் ஆள் நீங்களாகத்தான் இருக்கும்:D

இன்பக்கவி
24-02-2010, 12:55 PM
உண்மை உண்மை உண்மை...
இதில் உண்மையைத்தவிர வேறேதும் இல்லை...

நாளை என் குழந்தைக்கு சொல்லித்தர எனக்கு க ங ச எழுத வருமா என்று தெரியவில்லை...

கவிதை மிகவும் அருமை கவி...

வாழ்த்துக்கள்...

நன்றி அகிலா...
நிஜம் தான்...ஆனால் இதற்க்கு மாற்று வழி இல்லையே..
நாம் தான் நம் மீது அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும்..
பேப்பரும் பேனாவும் தொட்டு அடிக்கடி ஏதாவது எழுதணும்..

இன்பக்கவி
24-02-2010, 12:59 PM
மிக சரியாக சொன்னீர்கள் கவிதா.
இந்த நவீன காலத்திலே டெலிபோனிலும், இமெயிலிலும் எல்லாம் முடிந்து விடுகின்றது.நான் எனது (தாய் நாட்டுக்கு) அப்பா அம்மாவுக்கு கடிதம் எழுதியே பலவருடமாச்சு.
இப்போது தமிழ் எழுத்தே எழுத வரமாடேன் என அடம் பிடிக்கின்றது. என்பாடே இப்படி என்றால்
என் பிள்ளைகளின் கெதி, எதிர்காலம்........
இங்கு எல்லா பெற்றோர் நிலையம் இப்படித்தான்.

என் மனதை தொட்ட கவிதை வாழ்த்துக்கள் கவிதா.

நன்றிகள் ஜனகன்,..
முன்பு எல்லாம் எனக்கு டைரி எழுதும் பழக்கம் இருந்தது...
இப்போது எல்லாம் அதை நான் மறந்தே விட்டேன்..
கடிதம் எழுதி பல வருடம் ஆகிற்று கைபேசியின் வரவினால்...
ஒண்ணுமே புரியல எனக்கு இது தான் நிஜம்...:confused:

இன்பக்கவி
24-02-2010, 01:05 PM
கடிதம் எழுதுவது ஒரு கலை. இப்போது அது அநேகமாய் மறைந்தே போய்விட்டது.
ஆங்கிலத்திலும், தமிங்கிலிஷிலும் தட்டச்சு செய்து செய்து தமிழில் காகிதத்தில் எழுதுவது பெருமளவில் குறைந்து விட்டது.
அருமையான கவிதை. பாராட்டுகிறேன் இன்பக்கவி அவர்களே!

நன்றிகள் கலையரசி...
ஆம் கடிதம் எழுதணும் என்ற ஏனோ பிடிப்பதில்லை...
தொலைபேசி எண் வாங்கவாவது கடிதம் போடணும் என்றுதான் தோணும்...
அதுக்கூட நம் நம்பரை தந்து தொடர்பு கொள்ளுங்கள் என்று இந்த அளவிலே பல கடிதங்களை எழுதி இருக்கிறேன்...
இ மெயில் விலாசதிற்காகவும், தொலைபேசி எண்ணுக்காகவுமே கடிதம் எழுதி இருக்கிறேன்...
இனி வரும் காலங்களில் நம் நிலை என்ன??

சரண்யா
24-02-2010, 02:46 PM
ஆமாம் என்றே ஒத்து கொள்ளக்கூடிய வரிகள்..
இன்பக்கவி அவர்களே...

இன்பக்கவி
24-02-2010, 03:04 PM
ஆமாம் என்றே ஒத்து கொள்ளக்கூடிய வரிகள்..
இன்பக்கவி அவர்களே...

நன்றிகள் சரண்யா:icon_b:

குணமதி
24-02-2010, 03:18 PM
உண்மையிலேயே கவலை தரும் செய்தி.

பலருக்கு இப்போது தமிழில் எழுதுவதே மறந்துபோய்விட்டது!

உணர்த்தியதற்கு நன்றி.

இன்பக்கவி
24-02-2010, 03:39 PM
உண்மையிலேயே கவலை தரும் செய்தி.

பலருக்கு இப்போது தமிழில் எழுதுவதே மறந்துபோய்விட்டது!

உணர்த்தியதற்கு நன்றி.

நன்றிகள் குணமதி..:)
நானே இன்றுதான் உணர்ந்தேன் :confused:

கீதம்
25-02-2010, 12:16 AM
உங்கள் கவிதை கண்டு எனக்கு அதிர்ச்சி. ஏனெனில் நான் இன்றும் கதைகளையும், கவிதைகளையும் தமிழில் காகிதத்திலோ. நோட்டுப்புத்தகத்திலோ எழுதிவைத்துக் கொண்டு, பலமுறை வாசித்து, தேவையெனில் திருத்தங்கள் செய்து திருப்தி வரும்போதுதான் தட்டச்சு செய்யவே விழைகிறேன். அதனால் எல்லோரும் என்னைப் போலவே இருப்பார்கள் என்று எண்ணிவிட்டேன்.

நீங்கள் சொல்வதை பலரும் ஆமோதிப்பதைப் பார்த்தபிறகுதான் உண்மை நிலவரம் உணர்கிறேன். நல்லவேளை. இப்போதாவது அறிந்தீர்களே. தினமும் கொஞ்சநேரம் எதையாவது எழுதிப் பழகினால் தமிழ் தானே வந்துவிடும்.

சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்கள். இப்போது செந்தமிழும் கைப்பழக்கம் என்றுதான் சொல்லவேண்டியுள்ளது. சிவா.ஜி அவர்கள் சொன்னதுபோல் மின்சாரத்துறை அமைச்சருக்கு ஒரு நன்றி, இப்படி ஒரு விழிப்புணர்வுக் கவிதையைப் படைக்க உங்களைத் தூண்டியதற்கு.

பாராட்டுகள் இன்பக்கவி அவர்களே.

இன்பக்கவி
25-02-2010, 12:27 AM
உங்கள் கவிதை கண்டு எனக்கு அதிர்ச்சி. ஏனெனில் நான் இன்றும் கதைகளையும், கவிதைகளையும் தமிழில் காகிதத்திலோ. நோட்டுப்புத்தகத்திலோ எழுதிவைத்துக் கொண்டு, பலமுறை வாசித்து, தேவையெனில் திருத்தங்கள் செய்து திருப்தி வரும்போதுதான் தட்டச்சு செய்யவே விழைகிறேன். அதனால் எல்லோரும் என்னைப் போலவே இருப்பார்கள் என்று எண்ணிவிட்டேன்.

நீங்கள் சொல்வதை பலரும் ஆமோதிப்பதைப் பார்த்தபிறகுதான் உண்மை நிலவரம் உணர்கிறேன். நல்லவேளை. இப்போதாவது அறிந்தீர்களே. தினமும் கொஞ்சநேரம் எதையாவது எழுதிப் பழகினால் தமிழ் தானே வந்துவிடும்.

சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்கள். இப்போது செந்தமிழும் கைப்பழக்கம் என்றுதான் சொல்லவேண்டியுள்ளது. சிவா.ஜி அவர்கள் சொன்னதுபோல் மின்சாரத்துறை அமைச்சருக்கு ஒரு நன்றி, இப்படி ஒரு விழிப்புணர்வுக் கவிதையைப் படைக்க உங்களைத் தூண்டியதற்கு.

பாராட்டுகள் இன்பக்கவி அவர்களே.
கீதம் நன்றிகள்..
உங்களை போல நான் ஒரு நாளும் செய்தது இல்லை..
பேப்பர் பேனாவுக்கான தேவை இருப்பது இல்லை..வங்கிக்கும் செல்வது இல்லை..ATM கொண்டே பண மரிமாற்றம். ஆன்லைன் என்று எல்லாமே கணினியிலே முடிதி விடுவதால் என் கைபையில் பேனாக்கூட இல்லை...இதை நினைத்து வருந்துகிறேன்:traurig001:...எங்க பாப்பா இல்லை என்றால் நோட்டு புத்தகம் கூட காண முடியாது போல இருக்கு..நான் பேனாவை கூட எங்க பாப்பா பையில் இருந்து தான் எடுத்தேன்..:traurig001:
என் கை எழுத்து முத்து முத்தாக இருக்கும் என்று சொல்லுவங்கள்..ஆனால் இப்போது சொல்ல முடியவில்லை..:confused:
இனி பேப்பர் பேனாவில் தான் எழுதி வைக்கவேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன்...:icon_b:
நன்றிகள் கீதம்:icon_b:

பா.ராஜேஷ்
26-02-2010, 12:56 PM
எல்லோருக்கும் உள்ள நிலைதான். இப்படியாவது தமிழ் வருகிறதே என்று நினைத்து ஆறுதல் கொள்ள தோணுகிறது. :D

இன்பக்கவி
26-02-2010, 01:05 PM
எல்லோருக்கும் உள்ள நிலைதான். இப்படியாவது தமிழ் வருகிறதே என்று நினைத்து ஆறுதல் கொள்ள தோணுகிறது. :D

இதெல்லாம் ஓவர்???:rolleyes:
என்ன இது நாங்களே எவ்வளவு மனசு நொந்து போய் இருக்கோம் :traurig001:
நீங்கள் கூல் -ஆ வந்து சிரிகிறீங்கள்...:cool:
இனியாச்சும் நீங்களும் பேனா பேப்பர் எடுத்து அடிக்கடி தமிழ் எழுத்துகள் எழுதி பாருங்கள்..:D:D:D:icon_rollout:

அக்னி
02-03-2010, 11:32 AM
மறைமுக மொழிச் சீரழிவை, அநாயாசமாகச் சொல்லும் கவிதை...

இணையத்திற் தமிழை வளர்ப்பது
காலத்தின் தேவைதான்...
அதற்காக,
இணையத்தில் மட்டுமே தமிழ் வளர்வது,
நல்லதல்ல...

கணினிக்குள் தமிழெழுத்து
முன்னேற்றம்தான்...
ஆனால்,
காகிதத்திற் தமிழெழுத்து
அவசியமானதன்றோ...

எழுத்தைத் தொலைத்துவிட்டு,
மொழியை வளர்ப்பது,
மொழியையே தொலைத்துவிடும்.

சுதாகரிக்கவேண்டிய நேரமிது...
இல்லையென்றால்,
தமிழ் தன் தனித்துவத்தை இழந்துவிடும்...

காகிதத்தில் தமிழ் எழுத்து உருவாய்
வாழும்வரைக்கும்தான்,
கணினிக்குட் தமிழெழுத்துருக்கள்
வகைவகையாய் அழகழகாய் இருக்கும்.

தமிழில் விரைவாகத் தட்டச்சிடுவேன்,
எந்த எழுத்துருவானாலும் சமாளித்திடுவேன்
எனப் பெருமிதப்படும் என்போன்றோருக்குச் சரியான சாட்டையடி இந்தக் கவிதை.
இப்போதேனும் சுதாகரிக்காவிட்டால், நம் தாய்மொழியின் அழிவுக்கு
நானும்தான் ஒரு காரணம்...

இது, வெளித்தெரியாது உருக்குலைக்கும் வியாதி.
தமிழுக்குப் பீடித்தது நம் கவனயீனமே...

நம் மொழியைப் பிடித்த வியாதிக்கு
மருத்துவர் நாமே...
மருந்தும் நம்மிடமே...
தினம் ஓர் வார்த்தையேனும் தமிழிற் காகிதத்திற் கட்டாயம் எழுத உறுதி கொள்வோம்.

சரியான தருணத்தில் வந்த கவிதை இது.
அவசியம் அனைவரும் வாசிக்க வேண்டிய கவிதை.
ஆதலால்,
இதனை ‘ஒட்டி’ வைக்கப் பரிந்துரைக்கின்றேன்.

விழிப்பைத் தந்த கவிதாவுக்கு நன்றி.
விழிக்க வைத்த கவிதைக்குப் பாராட்டு.

இன்பக்கவி
07-03-2010, 11:43 AM
நன்றிகள் அக்னி அவர்களே..
முன்பு எல்லாம் நேரடியாக தட்டச்சு செய்து பதிவிடுவேன்..
நானும் இபோதெல்லாம் கவிதைகளை
டைரியில் எழுதும் பழக்கம் வைத்து விட்டேன்..
ஆபிஸ் வேலையால் நேரமின்மையும் இருப்பதால்
தோன்றுவதை உடனே டைரியில் எழுதிவருகிறேன்...:icon_b::icon_b::icon_b:

simariba
09-03-2010, 12:35 AM
நினைத்து மறந்து
மரித்த கவிதைகள்
ஏராளம்
---எவ்வளவு உண்மை.
உங்கள் கவிதை அழகு
நிறைய எழுதுங்கள்.:)

Ravee
14-03-2010, 03:25 AM
எனக்கு பல முறை நடக்கும் வழக்கமான குழப்பம்
நான் எழுத நினைத்ததை எழுதிவிட்டாய்

வசீகரன்
23-03-2010, 09:10 AM
உண்மை.. உண்மை.. கணினி மொபைல்
போன்ற சாதனங்களை வசதியாக பழகிவிட்ட பிறகு நாம் இப்போது
நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களில் இருந்தும் நமது பண்பாடுகளிலிருந்தும் ரொம்பவே வெளியே வந்து விட்டோம்...

எப்படி இப்போதெல்லாம் நேரமின்மையால் உடனடி இட்லி தோசை மாவு வாங்கி உடனடியாக சமைத்து சாப்பிட்டு கொள்கிறோமோ அதுபோல ஆகிவிட்டது...

முன்பு இருந்த எனது நோட்டு புத்தக கிறுக்கல்களும் புத்தகங்களை படிக்கும் ஆர்வமும் எங்கே போனது என்ற தெரியவில்லை...

அதிர்ச்சியும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது இந்த கவிதை

நன்றி கவிதா...!

simariba
14-04-2010, 01:46 AM
உண்மை தான், தமிழில் தாளில் எழுதும் போது கூட சில சமயம் ஆங்கில எழுத்துக்கள் இடையே (பெரிய ண் எழுத காப்பிடல் எழுத்து) கூட வருகிறது.
பாராட்டுக்கள்.

பூமகள்
30-04-2010, 04:19 AM
இன்பக் கவி,

தமிழ் தட்டச்சின் பலன்களுக்கு இழந்து கொண்டிருக்கும் என் கையெழுத்துகளின் கதறலாகவே இக்கவிதையைக் காண்கிறேன்..

அக்னி அண்ணா சொன்னது போல், கண்ணை மூடிக் கொண்டு வேகமாகத் தட்டச்ச இயலும் என்ற இறுமாப்புகளுக்கு நடுவே இடியாக விழுகிறது இந்த இழப்பு...

கண்ணுக்குத் தெரியாமலேயே ஒரு மரணம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது எம்மால்..

பாராட்ட வார்த்தைகள் இல்லை.. ஒட்டி சிறப்பித்த நிர்வாகக் குழுவுக்கு பாராட்டுகள்..

வாழ்த்துகள் இன்பக் கவி.. இன்னும் கவி கொடுங்க. :)

அமரன்
01-05-2010, 01:55 PM
நியாயம்தான்.. நிஜம்தான்..


பாமினி முறைத் தட்டச்சில் நான் எப்படி...
யுனிக்கோட் முறையில் நான் எப்படி..
ஒலிவழித் தட்டச்சில் நான் எப்படி..

இந்த மூன்றில் யுனிக்கோட் பலரிடம் பழகாதது.

பாமினி... யில் தட்டச்சும்போது கவியின் தமிழ் மறந்த நிலை ஏற்படவில்லை.

ஒலிவழியில் நிலை மாற்றம்..அதுக்கும் தீர்வு கண்டுள்ளார்கள். சென்ற ஆண்டு நடுப்பகுதியில் எனக்கு வந்த அழைப்பிதழ் ஒன்றின் சிறு பகுதியை இங்கே இணைக்கிறேன்.


இவ்வாறான இடர்களில் இருந்து தமிழினை மீட்டெகுக்கும் நோக்கில் பொன்பேனா, பொன்மொழி, பொன்விழி என மூன்று பிரதானமான மென்பொருள்களையும் பொன்மாற்றி எனும் உதவி மென்பொருள் ஒன்றினையும் ‘புலம்பெயர் தமிழர் உலகம்’ (NRT World) என்ற நிறுவனத்தினர் வெளியிடவுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு http://pontamil.com/help.php

இனி...

என்னிடத்தில் ஒலிவழி தமிழ் எழுத்துருக் குலைப்பு வேலையைக் காட்டவில்லை. பாமினி முறையை மட்டும் சிறிது சிதைத்துள்ளது.

நானும் இதுவரை எந்தப் படைப்பையும் தாளில் எழுதவில்லை. கணினியில் தட்டி உடனடியாகப் பதிந்து விடுவேன்.

ஏன் எனில், காகிதம் எடுத்தால் ஔவை சொன்ன எழுத்து கரைபுரளும். ஆனால் எண் தகராறு பண்ணும்..

ஒலிவழியில் எண்ணும் எழுத்தும் தண்ணீராய்ப் பாயும்.

கண உணர் நிலையை தத்ரூபமாக கவிதையாக்கி உள்ளீர்கள் இன்பக்கவி. ஆங்காங்கே தொங்கும் சில ஊளைச் சதைகளை அறுத்து விட்டால் கவிதை இன்னும் அழகாகும்.

தமிழ் மைந்தன்
13-07-2010, 06:02 PM
ஆஹா என்ன அருமையான கவிதை!
உங்கள் தமிழ்பற்று தெரிகிறது இக்கவியிலே !!

பகிர்ந்தமைக்கு நன்றி

SureshAMI
26-10-2010, 04:21 AM
அருமையா

CEN Mark
29-12-2010, 07:34 AM
[QUOTE=இன்பக்கவி;456435]


இக்கவி பலருக்கும் பாடம். எழுதுவதை விட நேரடியாகவே தட்டச்சு செய்துவிடுவதில் பல சௌகரியங்கள் இருப்பதாக உணர்ந்தேன். இப்படி ஒரு சிக்கல் இருப்பதாக உணரவில்லை. பாராட்டுக்கள் நண்பரே!..!..!

ந.க
30-10-2012, 08:29 PM
ஏட்டில் இருந்து எழுத்து காகிதத்திற்கு மாறிய போது இருந்த வலிதான் இதுவும், எழுது கோலுக்கு பதில் பேனா பின்னர் ..விரல் நுனி, நாக்கு ......இனிமேல் சிந்தனை அதிர்வு கூட ..பேனாக்கள் சேகரிக்கும் பழக்கம் இப்போதும் உண்டு - எனது எழுத்து பேனாவில் இன்னமும் தொலையவில்லை. எதிர்காலத்தில் எப்படியோ ஒரு ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது, இது எல்லா மொழிக்கும் பொருந்தும். ஆயினும் எமது விரல் பேனாவினை வளைத்து சித்திரமாய் எம் எழுத்தை வரையும் போது /கிறுக்கும் போது வருகின்ற வடிவம். கணனித் திரைகயில் வரும் விம்பத்திற்கு இல்லைத்தான்.

எம் மொழியை காகிதத்தில் வரைதல்( எம் கையெழுத்து, எம் எழுத்து) மெய் மொழியின் ஒரு அங்கம். எம் உணர்வோட்டத்தின் வெளிப்பாடு. கையெழுத்துக் கொண்டு ஒருவரின் குண நலன்களைச் சொல்ல முடியும்.

ஆதங்கம் எல்லோருக்கும் உண்டு. இங்கே சொல்லப்பட்டவை நம் எழுத்தை ஆங்கில எழுத்துக்களில் தட்டப்படும்- எழுத்து 'இடம் பெயர்வின்' இடைக்கால நியாயமான தாக்கத்தின் வரிகள். தமிழை தமிழாய்த் தட்ட 'தமிழ் விசைப் பலகை' உண்டு.

ஆயினும் உடல் மொழியினை-எழுதுகோல் வரைவு இடம் பெயர்த்த தமிழ் தட்டச்சு இயந்திரம் எம்மிடையே பல ஆண்டுகளாய் பழக்கத்தில் உள்ளதே. இப்போது அதுவும் அருகிவிட்டது, காகிதப் பழக்கமும் அருகிவிட்டது.

நடைத் தடம் போல் நாம் பதித்த ஆறாம் விரல் தடம் இனி நிலைக்குமா?
சிந்திக்கவைத்த வரிகள்...பாராட்டுக்கள்.

ந.க
03-11-2012, 10:51 AM
தமிழிலில் எழுதி அதையே சேமிக்கலாமே எழுத்திலும் ஒலிவடிவத்திலும்- 'The Echo smartpen from Livescribe records everything you hear, say and write, and links your audio recordings to your notes...,' ஆங்கில இடைச் செருகலுக்கு மன்னிக்கவும், இது அந்த ஸ்மார்ட் பேனாவின் விளம்பரத்தின் நகல்- பதிவு. ஸ்மார்ட் பேனா, இதைப் பாவிப்பதால் இங்கே எங்கள் கையே வரி வடிவத்தை வரைகின்றது என்ற திருப்தி நிலைக்கும்.

குணமதி
03-11-2012, 03:26 PM
அப்பட்டமான, மிகக் கசப்பான உண்மை!

பின்னூட்டமிட்டவர்களும் உண்மை என்பதை வலியுறுத்துவதைக் காண்கிறோம்.

எதிர்காலத்தில், வழக்கில் தமிழ் தன் வரிவடிவத்தை இழந்துவிடுமோ என்ற அச்சம் எழுகிறது.

அது, முதற் படியாக அமைந்து, படிப்படியாக மொழியே அழிந்து போகுமோ என்ற கவலை அழுத்தமாக எழுகிறது.

உண்மையை எழுத்தாக்கித் தந்ததற்குப் பாராட்டு.

Priya Kaneshalingam
03-11-2012, 06:22 PM
மிக மிக மிக அற்புதமான கவிதை :)
நன்றிகள் இன்பக்கவி