PDA

View Full Version : படத்தின் கலரை மாற்றுவது எப்படி ?



தங்கவேல்
24-02-2010, 06:20 AM
படத்தில் இருக்கும் பேனாவின் கலரை வெவ்வேறு விதமான கலரில் மாற்ற வேண்டும். எனக்கு போட்டோஷாப் அந்தளவுக்கு தெரியாது. எப்படி என்று விளக்கினால் செய்து கொள்வேன்.

http://www.tamilmantram.com/vb/photogal/images/1640/large/1_pen.JPG

அன்புரசிகன்
24-02-2010, 07:09 AM
நான் அவ்வளவாக கைதேர்ந்தவன் அல்ல. எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.

பொதுவாக போட்டோஷொப் இல் ஒரே நிறத்திலுள்ள பகுதிகளை தெரிவுசெய்ய magic wand tool என்பதை பயன்படுத்தலாம்.

இந்த magic wand tool ஐ தெரிவுசெய்யுங்கள். (w ஐ அழுத்தினால் ஒரு தடியின் மேல் நட்சத்திரம் போல் தோன்றும்) அதன் மூலம் உங்கள் பேனாவின் கறுப்பு பகுதியை தெரிந்தால் அவை தெரிவுசெய்யப்பட்டுவிடும். பின்னர் அதனை fill colour மூலம் (Edit>fill colour) உங்களுக்கு பிடித்த நிறத்தால் நிரப்பிடலாம்.

தெரிந்த பகுதியை வேறு லேயராக மாற்றி Empose கூட செய்யலாம்...

இந்த பகுதியையும் படியுங்கள்.

http://www.mediacollege.com/adobe/photoshop/tool/magic-wand.html
http://simplephotoshop.com/photoshop_tools/magic_wandf.htm
http://websitetips.com/articles/photoshop/magicwand/

தவிர மன்ற ஜாம்பவான்கள் பலர் உங்களுக்கு இதில் உதவுவார்கள்.

நூர்
24-02-2010, 12:31 PM
http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/uasntitled.jpg

உங்கள் படத்தை ஓப்பன் செய்து தேவையான கலரை தேர்வு செய்யுங்கள்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/as1.jpg

மேஜிக் வான்ட் டுல் தேர்வு செய்து, படத்தில் வெள்ளையாக(ஒயிட்) இருக்கும் இடத்தில் வைத்து கிளிக் செய்யுங்க.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/as2.jpg


செலக்ட்-->இன்வர்ஸ் கிளிக் செய்யுங்க.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/as3.jpg

எடிட்--> பில் கிளிக் செய்து

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/as4.jpg

படத்தில் உள்ளபடி இருந்தால் ஒகே கொடுங்கள்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/ds5.jpg

ம்றுபடியும். செலக்ட்-->டிசெலக்ட் கொடுத்துவிட்டு,சேவ் செய்யுங்க.
அவ்வளவுதான்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/1_pen1.jpghttp://i459.photobucket.com/albums/qq319/edmajeed/1_pen2.jpghttp://i459.photobucket.com/albums/qq319/edmajeed/1_pen4.jpg


கீழ் உள்ள படத்தை எப்படி செய்வது என, அடாப் இமெஜ் ரெடி என்ற திரியில் பதிவிடுகின்றேன். நன்றி.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/pe4.gif

இன்பக்கவி
25-02-2010, 06:28 AM
ஆஹா..பேனாவை மின்ன வைத்து விட்டர்களே...
இமேஜ் ரெடி பற்றி சொல்லி தருவீர்கள் என்று காத்துகொண்டு இருக்கிறேன்:icon_b::icon_b::icon_b:

தங்கவேல்
25-02-2010, 07:45 AM
தமிழ் மன்றம் பற்றி என்ன சொல்வதற்கு இருக்கிறது. உடனடி உதவிக்கு ஓடோடி வரும் நண்பன் அல்லவா. அருமை அருமை... நன்றி நூர். நன்றி அன்பு

ரவிசங்கர்
02-03-2010, 04:42 PM
சூப்பர்.....சூப்பர்......சூப்பர்......நூர் அவர்களுக்கு நன்றி, வாழ்த்துக்கள்.