PDA

View Full Version : விதியின் சதியா?!?!



balanagesh
24-02-2010, 06:01 AM
நான் எழுத முயன்ற… எழுதி முடித்த… முதல் கவிதை …


குளிர் தென்றலாய் வந்த உன்னை

என் வாழ்வில் நிலை வானமாக வைத்திட நினைத்தேன்…

ஆனால் நம் விதி செய்த சதி !!

கரைந்து மறையும் மேகமாக உன்னை மாற்றி…

உன் நினைவெனும் மழையில் என்னை நனைந்திட வைத்ததே !!

Narathar
24-02-2010, 06:06 AM
வாழ்த்துக்கள் கணேஷ்!

நன்றாகத்தான்(என்னைவிட) எழுதியிருக்கின்றீர்கள்!!!!

தொடர்ந்து எழுதுங்கள்...........
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

Akila.R.D
24-02-2010, 06:06 AM
கவிதை அழகாக உள்ளது...

முதல் கவிதையே காதல் தோல்வி கவிதையா?...

தன்னம்பிக்கை பற்றிய கவிதைகளை முயற்சி செய்யுங்களேன்..

balanagesh
24-02-2010, 06:44 AM
@Narathar

பாராட்டுகளுக்கு மிக்க நன்றி நாரதரே!!!

balanagesh
24-02-2010, 06:46 AM
@Akila

காதல் கவிதை எழுதுவது கொஞ்சம் எளிது என்பதால் முதல் கவிதையை இப்படி யோசித்தேன்... கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்...

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அகிலா!!!

சிவா.ஜி
24-02-2010, 06:49 AM
முதல் கவிதைக்கு வாழ்த்துகள். மேகமாக மாறி மழைகொடுத்த காதலி அந்த மழையைக் கண்ணில் கொடுத்துவிட்டாளோ...?

இன்னும் எழுதுங்க....எழுத எழுத எல்லாம் சுலபமாகும்.

aren
24-02-2010, 06:54 AM
முதல் கவிதை நன்றாக வந்திருக்கிறது.

எத்தனை காதலில் தோற்றாலும் அந்த காதலியை மட்டும் நாம் மறப்பதேயில்லை, இப்போ நீங்க கவிதை வழியாக அவளை இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.

இன்னும் நிறைய எழுதுங்கள்.

அக்னி
24-02-2010, 06:56 AM
இந்தவகை நினைவு மழைகள்,
நெருப்பாய்ப் பொழியும்...

விதி செய்த சதி என்றால்,
மனதில் எரியும்...
மதி செய்த பிழை என்றால்,
மனமே பற்றியெரியும்...

பாராட்டுக்கள் பாலா அவர்களே...
இன்னுமின்னும் எழுதுங்கள். எழுத எழுதக் கவிதை உங்கள் வசப்பட்டுக்கொண்டேயிருக்கும்.

ஆதி
24-02-2010, 07:06 AM
சோக உணர்ச்சி சொட்டும் கவிதை என்றாலும்
அழகுணர்ச்சிக்கு ஒன்றும் தட்டுப்பாடு இல்லை..

நிலையான வானமாய் இருப்பாய் என நினைத்தேன்
கலைகிற மேகமாய் கண்மறைந்து போனாயே..

//குளிர் தென்றலாய் வந்த உன்னை

என் வாழ்வில் நிலை வானமாக வைத்திட நினைத்தேன்…

ஆனால் நம் விதி செய்த சதி !!

கரைந்து மறையும் மேகமாக உன்னை மாற்றி…

உன் நினைவெனும் மழையில் என்னை நனைந்திட வைத்ததே !! //

உவமைகளை அழகாக கையாண்டிருக்கீங்க..


//உன் நினைவெனும் மழையில்
என்னை நனைந்திட வைத்ததே !! //

அழகான கற்பனை.. வார்த்தைகளை கூராக்க ஆக்க, கவிதையும் சீராகும்..

தொடருங்கள் வாழ்த்துக்கள்..

Narathar
24-02-2010, 07:19 AM
கவிதை அழகாக உள்ளது...

முதல் கவிதையே காதல் தோல்வி கவிதையா?...

தன்னம்பிக்கை பற்றிய கவிதைகளை முயற்சி செய்யுங்களேன்..

காதல் செய்யும் போது அல்லது
காதலில் தோற்ற போதுதான்
நம்மில் பலர் கவிஞராகின்றார்கள்...............

காதல் தோல்விகவிதைகளை தொடர்ந்து எழுதினால்
தன்னம்பிக்கை கவிதைகள் வருமோ என்னவோ?????

சொல்லுங்க கணேஷ்..............

நாராயணா!!!!!

ஓவியன்
24-02-2010, 07:31 AM
நல்ல உவமைகளை அழகாகக் கையாண்டிருப்பதில் உங்கள் முதல் கவிதை வெற்றியீட்டியிருக்கின்றது பாலா...

தொடருங்கள், தொடர்ந்தும் உங்கள் கவி மழை இங்கே பொழியட்டும்..!! :icon_b:

balanagesh
24-02-2010, 08:14 AM
@சிவா.ஜி

உங்கள் கருத்துக்கள் கூட கவிதையாய் இருக்கிறது...
மிக்க நன்றி!!!

balanagesh
24-02-2010, 08:15 AM
@அக்னி

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...
கண்டிப்பாக நிறைய எழுத முயற்சி செய்கிறேன்...

balanagesh
24-02-2010, 08:17 AM
@ஆதன்

உங்கள் கருத்துக்களுக்கும், வழிகாட்டுதலுக்கும் மிக மிக நன்றி நண்பரே!!!

balanagesh
24-02-2010, 08:21 AM
@Narathar

நாரதரே... உங்கள் வேலையை ஆரம்பித்துவிட்டீர்கள் போலிருக்கு?!?!

ஒரு சின்ன திருத்தம்... கணேஷ் இல்லை... நகேஷ்...

balanagesh
24-02-2010, 08:28 AM
@ஓவியன்

மிக்க நன்றி நண்பரே...
கண்டிப்பாக நிறைய எழுத முயற்சிக்கிறேன்...

balanagesh
24-02-2010, 08:30 AM
@Aren

அன்பரே... இது வெறும் கற்பனையே... இது நிஜமல்ல... வெறும் கவிதையே....
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...

ஜனகன்
24-02-2010, 11:42 AM
முத்தான முதல் கவிதைக்கு ஒரு வாழ்த்து

கவிதை எழுத்த முயன்றமைக்கு இன்னொரு வாழ்த்து.

Narathar
25-02-2010, 04:19 AM
@Narathar

நாரதரே... உங்கள் வேலையை ஆரம்பித்துவிட்டீர்கள் போலிருக்கு?!?!

ஒரு சின்ன திருத்தம்... கணேஷ் இல்லை... நகேஷ்...

வயது ஆக ஆக கண்பார்வை மங்கிப்போகின்றது................ :)

மன்னிக்கவும்! பாலகணேஷனை அழைத்து அழைத்து............... உங்களையும் அப்படியே அழைத்துவிட்டேன்

balanagesh
26-02-2010, 12:32 PM
@ஜனகன்

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக மிக நன்றி ஜனகன்!!!

balanagesh
26-02-2010, 12:33 PM
@Narathar

பரவாயில்லை நாரதரே!!!

இன்பக்கவி
26-02-2010, 12:45 PM
நன்றாக இருக்கு...
இன்னும் நிறைய கவிதை எழுத வாழ்த்துகிறேன் :icon_b:

balanagesh
26-02-2010, 12:54 PM
@இன்பக்கவி...

ரொம்ப நன்றி இன்பக்கவி...
கண்டிப்பாக முயற்சிக்கிறேன்...