PDA

View Full Version : உபுண்டு9.10-ஐ உடனே நிறுத்த



பாரதி
24-02-2010, 01:34 AM
நண்பர்களே,

உபுண்டு 9.10.ஐ நிறுத்தும் போது பொதுவாக 60 விநாடிகளில் கணினியின் இயக்கத்தை நிறுத்தவா என்ற கேள்வியுடன் ஒரு திரை காட்சியளிக்கும்.

இப்படி வேண்டாம்... உடனே கணினியின் இயக்கத்தை நிறுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கான குறிப்பு:

முதலில் Alt+F2 விசைகளை அழுத்தவும்.

வரும் திரையில் gconf-editor என்று தட்டச்சி "ரன்" பொத்தானை அழுத்தவும்.

http://ubuntuguide.net/wp-content/uploads/2009/11/60_delay.png

பின்னர் தோன்றும் திரையில் apps->indicator-session என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

வலது புறத்தில் இருக்கும் suppress_logout_restart_shutdown_என்ற வாக்கியத்தின் இறுதியில் இருக்கும் கட்டத்தை தேர்வு (டிக்) செய்யவும்.

http://ubuntuguide.net/wp-content/uploads/2009/11/61_delay-458x360.png

இனிமேல் இயக்கத்தை நிறுத்தும் தேர்வின் போது உடனே கணினி நிற்கும்,

aren
24-02-2010, 02:16 AM
உபுண்டு விண்டோஸைவிட நன்றாக இருப்பதாக என்னுடைய இந்திய நண்பர் ஒருவர் சொன்னார். அதையும் அவர் கணிணியில் காட்டினார். நன்றாக இருந்தது.

பழைய கணிணியில் இதை இன்ஸ்டால் செய்தால் இதன் வேகம் புதிய கணிணியில் விண்டோஸை இன்ஸ்டால் செய்து இயக்கும் வேகத்தைவிட அதிகமாக இருப்பதாக அவர் சொன்னார்.

பாரதி
24-02-2010, 07:33 AM
கருத்துக்கு நன்றி ஆரென்.
உங்கள் நண்பர் கூறி இருப்பது முற்றிலும் உண்மை.

எனது கணினியில் நிறுவி அதன் பயனை நான் உணர்ந்திருக்கிறேன். மன்ற உறவுகளும் லினக்ஸை நிறுவ முன் வர வேண்டும் என்ற நோக்கில் லைனக்ஸ் திரியின் பயணம் இருக்கும்.

நான் லினக்ஸுக்கு மாறிட்டேன். அப்ப நீங்க.... என்று விளம்பரம் வரும் காலமும் வரக்கூடும்.

aren
25-02-2010, 03:34 PM
நான் லினக்ஸுக்கு மாறிட்டேன். அப்ப நீங்க.... என்று விளம்பரம் வரும் காலமும் வரக்கூடும்.

நான் உஜாலாவுக்கு மாறிட்டேன் என்று சொல்வது போல்தானே, சொல்வார்கள் சொல்வார்கள்.

ஒரே பிரச்சனை என்னவென்றால் சப்போர்ட். சப்பார்ட்டுக்கு வேறு ஆளை லோக்கலில் புடிக்கவேண்டும், அதுக்கு அதிக பணம் செலவாகும். அதுதான் பிரச்சனை.

பாரதி
25-02-2010, 03:55 PM
நான் உஜாலாவுக்கு மாறிட்டேன் என்று சொல்வது போல்தானே, சொல்வார்கள் சொல்வார்கள்.

ஒரே பிரச்சனை என்னவென்றால் சப்போர்ட். சப்பார்ட்டுக்கு வேறு ஆளை லோக்கலில் புடிக்கவேண்டும், அதுக்கு அதிக பணம் செலவாகும். அதுதான் பிரச்சனை.

அன்பு ஆரென்...

உபுண்டுவைப் பொறுத்த மட்டில் லினக்ஸிலேயே பெரிய பயனாளர்கள் குழுமத்தைக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து பயனாளிகளுக்கு ஏற்படும் ஐயங்களும், அதற்கான தீர்வுகளும் அனைவரும் அறியும் வகையில் நல்ல முறையில் இணையத்தில் இடம் பெற்றுள்ளன.

லினக்ஸின் அடிப்படையே அனைவருக்கும் இலவசமாக இந்த வசதி சென்று சேர வேண்டும் என்பதுதானே! லினக்ஸைப் பொறுத்த வரை கணினியையும் இணைய இணைப்பையும் தவிர்த்து மற்ற அனைத்தையும் எளிதாக, சட்டபூர்வமாக, இலவசமாக பெறலாம்.

இத்தனைக்காலம் இருந்த லினக்ஸைக்குறித்த தயக்கத்தை நாம் அனைவரும் தூக்கி எறிய வேண்டிய காலம் வந்து விட்டது.

லினக்ஸை நிறுவியதில் இருந்து இதுவரை நான் மிக மிக மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்.

மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கலாம். அல்லது
https://shipit.ubuntu.com தளத்தில் பதிவு செய்தால் எந்த செலவுமின்றி லினக்ஸ் குறுந்தகடு உங்கள் வீடு வந்து சேரும்.(6-8 வாரங்கள் ஆகக்கூடும்.) நிறுவுவதிலும் அதிக சிரமம் ஏதும் இல்லை.

இனிமேல் "உபுண்டுவுக்கு நான் கியாரண்டி" என்று சொல்லவும் ஒரு கூட்டம் இருக்கும்!

வியாசன்
26-02-2010, 09:24 AM
இளைய தம்பி பாரதி பயனான ஒரு குறிப்பை தந்துள்ளீர்கள். அத்துடன் ஆரெனுக்கு நீங்கள் கொடுத்த விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது.
ஒரு காலத்தில் வீட்டில் கணனி இல்லையென்றால் வெட்கப்படவேண்டியிருந்தது. பின் இணைய இணைப்பு இல்லையென்றால் வெட்கமாக இருந்தது.
என் கணனியில் லினுக்ஸ் இல்லை எனக்கு லினுக்ஸ் பற்றி தெரியாது என்று சொல்வதற்கு வெட்கப்படவேண்டிய காலம் வரும். மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கி பாயும்.