PDA

View Full Version : லினக்ஸ் மிண்டை நீக்கி விட்டு உபுண்டுவை நிறுவ...



பாரதி
23-02-2010, 05:18 PM
அன்பு நண்பர்களே,

எந்த வகை லினக்ஸ் நல்லது என அறிய ஒரு கணினியில் முழுமையாக விண்டோஸ் எக்ஸ்-பியை நீக்கி விட்டு உபுண்டு 9.10 நிறுவினேன்.

இன்னொரு கணினியில் விண்டோஸ் எக்ஸ்பி இருந்த வன் தகட்டில் அத்துடன் லினக்ஸ் மிண்டை நிறுவினேன். ஒரு தின சோதனைக்கு பிறகு மிண்டை நீக்கி விட்டு அதற்கு பதிலாக உபுண்டுவை நிறுவ எண்ணினேன்.

எனக்கு விண்டோஸ் எக்ஸ்பி வேண்டும். அது எந்த காரணத்தாலும் பாதிக்கப்படக்கூடாது. அத்துடன் உபுண்டு தேவை. எனவே லினக்ஸ் மிண்டை மட்டும் எப்படி நீக்க என்று தேடியதில் பல வழிகள் இணையத்தில் கிடைத்தன. ஆனால் பலவும் சுற்றுவழிகளாகவே இருந்தன. ஆகவே அவற்றை கையாள எனக்கு தயக்கமாக இருந்தது.

இந்த நிலையில் மிக எளிதான ஒரு வழிமுறை ஒரு குழுவில் இடம் பெற்றிருந்தது. அதை யாரும் பொருட்படுத்தியாக தெரியவில்லை. ஏன் அந்த முறையை கையாளக்கூடாது என்ற எண்ணம் எனக்கு வந்தது. துணிந்து அந்த முறையில் செய்தேன். வெகு எளிதாக வேலை முடிந்தது.

ஏதேனும் ஒரு சமயத்தில் யாருக்கேனும் அது உதவக்கூடும் என்பதால் இங்கு தருகிறேன்.

உபுண்டுவை லின்கஸ் மிண்ட்டின் மேலேயே நிறுவி விடலாம். (எனினும் முன்னெச்சரியாக பேக்-அப் செய்ய வேண்டிய கோப்புகளை கவனமாக சேகரித்து வைத்துக்கொள்வது மிகவும் நன்று.)

உபுண்டு குறுவட்டை லைவ் சிடியாக இயக்கவும்.

லைவ் சிடியில் இருந்து உபுண்டுவை நிறுவ வேண்டிய தேரவினை அழுத்தவும்.

உபுண்டு நிறுவ ஆரம்பிக்கும். நிறுவும் போது எங்கு நிறுவ என்ற தேர்வை நாம் செய்ய வேண்டியதிருக்கும் . அப்போது லினக்ஸ் மிண்ட் நிறுவி இருக்கும் பகுதியை தேர்ந்தெடுத்து அதில் கீழ்க்கண்ட வழி முறையை கையாள வேண்டும்.

Prepare Disc Space -----> Specify partitions manually -------> Forward
Select Linux Mint partition -----> Change
Edit Partition --------> Use as: > Ext4 -----> select "Format the partition:"
கீழிருக்கும் பெட்டியில்
box -----> Mount point: -----> "/" ------> OK ------> Forward
என்று பயன்படுத்தியதும், லினக்ஸ் மிண்ட் மறைந்தது; உபுண்டு நிறுவப்பட்ட்டது. எக்ஸ்-பிக்கு எதுவும் ஆகவில்லை!

இப்போது இந்த திரி உபுண்டுவில் இருக்கும் ஃபயர் ஃபாக்ஸ் மூலமாக பார்வையிட்டு தமிழில் தட்டச்சி பதிக்கிறேன்.

உபுண்டு இருக்க விண்டோஸ் ஏன்? என்ற கேள்வி விரைவில் கேட்கப்படலாம் என்று எனக்குத்தோன்றுகிறது.