PDA

View Full Version : ஆசை, பேராசை!



குணமதி
23-02-2010, 03:01 AM
ஆசை, பேராசை!


வெள்ளிக் கிழமையாயிற்றா....

வீதியின் எதிர்ச்சாரியில் இரண்டு வீடு தள்ளியிருந்த

அந்த அம்மா

தவறாது வருவார்!

உருக உருகவும்

மகிழமகிழவும்

சுவைக்கச்சுவைக்கவும்

ஏதாவது... உண்மையோ இல்லையோ...

பேசிச்சிரித்து...

அது இல்லை... இது இல்லை... கொஞ்சம் கொடேன்...

இல்லையென்றால்...

ஒட்டடைக் குச்சியாவது

கடன் கொடேன் என்று -

எதையாவது வாங்காமல் போகமாட்டார்!

திருமகளை (இலட்சுமியை) அவர் வீட்டிற்குக்

கடத்திச் செல்கிறாராம்!

எல்லாரையும் ஏய்க்க எண்ணும் -

ஆசை, பேராசை!

இன்பக்கவி
26-02-2010, 06:10 AM
இப்படியும் சிலர் இருக்கதானே செய்யுறாங்கள் என்ன செய்வது..:confused:
நன்றிகள் :icon_b:

அக்னி
26-02-2010, 07:01 AM
இதனை என்னவென்று சொல்வது...

தமிழருக்கு
‘வெள்ளி’ சிறப்புநாள்.

சிலர் நினைப்பர் வெள்ளியன்று,
எதனையும் எவரிடமிருந்தும் இரவலாகவோ இலவசமாகவோ எதிர்பார்க்ககூடாதென்று...

சிலர் அன்று மட்டும் புரவலராக இருப்பர்...

அன்று வீட்டிற்கு எதனையேனும் கொண்டு சென்றால்,
திருமகளை அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக
எண்ணும் சிலர் இப்படியும்...

வாரம் முழுவதும் உழைத்த,
நம் உழைப்பின் பயனைக் கொண்டு செல்வதை
முன்னோர்கள் வாழ்ந்து காட்டியிருக்கலாம்.

அதற்கு இப்படியொரு அர்த்தம் கொண்டு
வாழும் இப்படியானவர்களை என்னவென்பது...
மூடநம்பிக்கை முட்டாள்கள்...

இந்தக் கவிதையில் இன்னமும் கொஞ்சம் அழுத்தம் சேர்த்துச் சொல்லியிருந்தால்,
விளாசல் பலமாக இருந்திருக்கும்.

பாராட்டுக்கள் குணமதி அவர்களுக்கு...

பா.ராஜேஷ்
26-02-2010, 01:11 PM
திருமகளை கடத்தி செல்வது இயலாது என்பதை அவர்கள் உணரும் காலம் எப்போது? காரியத்தில் கண்ணிருந்தால் அவளே தானே வருவாள்.
நன்றி குணமதி

குணமதி
26-02-2010, 03:42 PM
பின்னூட்டத்திற்கு நன்றி இன்பக்கவி அவர்களே.

குணமதி
26-02-2010, 03:50 PM
இப்படியானவர்களை என்னவென்பது...
மூடநம்பிக்கை முட்டாள்கள்...

சரியாகச் சொன்னீர்கள் அக்னி.

நன்றி.


நீங்கள் கருதியதைப் போல் இன்னும் அழுத்தம் கொடுத்து எழுதவே எண்ணினேன்.

ஆனாலும் தயங்கி நிறுத்திக் கொண்டேன்.

மன்றத்தில் எண்ணியவாறு எழுத இன்னமும் தயக்கமாகவே இருக்கிறது.

குணமதி
26-02-2010, 03:53 PM
திருமகளை கடத்தி செல்வது இயலாது என்பதை அவர்கள் உணரும் காலம் எப்போது? காரியத்தில் கண்ணிருந்தால் அவளே தானே வருவாள்.
நன்றி குணமதி

ஆம். அவர்கள் உண்மையை உணரவேண்டும்.

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நண்பரே.

இளசு
26-02-2010, 06:15 PM
நல்ல கரு. பாராட்டுகள் குணமதி.

அக்னி
உன் பின்னூட்டம் படித்து சிலிர்த்-தேன்!

அக்னி
26-02-2010, 07:59 PM
ஆனாலும் தயங்கி நிறுத்திக் கொண்டேன்.

மன்றத்தில் எண்ணியவாறு எழுத இன்னமும் தயக்கமாகவே இருக்கிறது.
ஏன் இந்தத் தேவையற்றத் தயக்கம்?

உங்களுக்கு நீங்களே தணிக்கை செய்து எழுதினால்,
மற்றவர் எப்படியறிவார்...
மற்றவர் கருத்தை நீங்கள் எப்படியறிவீர்கள்...

நான் இப்படிச் சிந்தித்ததுகூட இல்லை.
நான் ரசித்தவையையும், விளங்கியவையையும், சொல்ல நினைத்தவையையும் பதிவுகளாக்கிவிடுவேன்.
அவை சரியா தவறா என்பதை அதற்குப் பின்வரும் பதிவுகளிலிருந்து கண்டுகொள்வேன்.

நம் மன்றத்தில்,
வெறுமனே பாராட்டுப்பத்திரம் மட்டும் வாசித்துவிட்டுச் செல்வதில்லை.
தீர அலசிக், குறை நிறை சொல்லித் தருபவர்களே அதிகம்.

அதனால், உங்கள் தயக்கம் வீணானது.
சொல்லப்போனால்,
அது உங்கள் கவிப்பிரசவங்களைக் குறைப்பிரவங்களாக்கிவிடலாம்.

தயக்கம் களைந்து, படைப்புக்களைப் பூரணமாகப் படையுங்கள்...

தங்கள் புரிதலை அன்புடன், உரிமையுடன் எதிர்பார்க்கின்றேன்.

அக்னி
26-02-2010, 08:07 PM
நல்ல கரு. பாராட்டுகள் குணமதி.

அக்னி
உன் பின்னூட்டம் படித்து சிலிர்த்-தேன்!
உங்கள் பாராட்டுக்கு நன்றி அண்ணா...

குணமதி அவர்களே...
இதற்கு முந்தைய என் பதிவை, தொடருந்தில் இருந்தபோது எழுதியிருந்தேன். இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டதால் பதிவை மன்றத்தில் முழுமையாக்க முடியாமற் போய்விட்டது. ஆனால், இளசு அண்ணாவின் இந்தப் பின்னூட்டம் அதற்குள் பதிவாகியது, எனது பதிவில் நான் மன்றத்தைப் பற்றிக் கூறியதை நிதர்சனமாக்கிவிட்டது.

படைப்புக்கள் மட்டுமன்றிப், பின்னூட்டங்களும்கூட மன்ற உறவுகளால் ரசிக்கப்படுவது,
நம் மன்றத்திற்கேயுரியத் தனித்துவம்.

செல்வா
27-02-2010, 02:16 PM
அக்னியின் பின்னூட்டத்திற்குப் பிறகும்

பின்னூட்டமிட என் விரல்களுக்கு வேலையில்லை...

வாழ்த்துக்கள் குணமதி.

குணமதி
28-02-2010, 03:51 AM
பாராட்டுக்கு நன்றி இளசு அவர்களே.

குணமதி
28-02-2010, 03:52 AM
உங்கள் பாராட்டுக்கு நன்றி அண்ணா...

குணமதி அவர்களே...
இதற்கு முந்தைய என் பதிவை, தொடருந்தில் இருந்தபோது எழுதியிருந்தேன். இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டதால் பதிவை மன்றத்தில் முழுமையாக்க முடியாமற் போய்விட்டது. ஆனால், இளசு அண்ணாவின் இந்தப் பின்னூட்டம் அதற்குள் பதிவாகியது, எனது பதிவில் நான் மன்றத்தைப் பற்றிக் கூறியதை நிதர்சனமாக்கிவிட்டது.

படைப்புக்கள் மட்டுமன்றிப், பின்னூட்டங்களும்கூட மன்ற உறவுகளால் ரசிக்கப்படுவது,
நம் மன்றத்திற்கேயுரியத் தனித்துவம்.


நன்றி அக்னி அவர்களே.

அமரன்
28-02-2010, 10:48 AM
சாட்டைகளுக்கு வேலை கொடுப்பதே மூட நம்பிக்கைகளின் வேலையாகிப் போவிட்டது.

சுழன்றிருக்கும் உங்கள் சொற்கள் அக்னி சொல்வதைப் போன்று இன்னும் வலுவாகச் சுழன்றிருக்கலாம்.

பாராட்டுகள்.

குணமதி
28-02-2010, 02:04 PM
சாட்டைகளுக்கு வேலை கொடுப்பதே மூட நம்பிக்கைகளின் வேலையாகிப் போவிட்டது.

சுழன்றிருக்கும் உங்கள் சொற்கள் அக்னி சொல்வதைப் போன்று இன்னும் வலுவாகச் சுழன்றிருக்கலாம்.

பாராட்டுகள்.

நன்றி அமரன்.