PDA

View Full Version : உன் கல்லறை(யருகில்)

sofi
22-02-2010, 11:30 PM
http://lh4.ggpht.com/_E7uVT_yYgTs/S4MgFEE4-9I/AAAAAAAABds/4kKaVMRjzo8/Fantas45%20copy.jpg

அறியாத வயது ..புரியாத பருவம்
காதலின் அர்த்தம் புரியா சிறு சிசு
உன் கண்கள் பேசிய..
உன் உதடுகள் சொன்ன...
காதல் மொழி தெரிய வில்லை ...!!:frown:

அன்னையே என் உலகம் ஆனதால்
அவர் சொல்லை மீறவில்லை
பெரியோரின் தவறுக்கு சிறு பிள்ளை
எனக்கு தண்டனை கொடுத்து விட்டாய் ..
விளையாட்டு பிள்ளை போல அன்று ..
இன்று விதி விளையாட்டின் கை பொம்மை நான்:traurig001:

நீங்காத உன் நினைவுகள் ...
சுட்டெரிக்கும் பல இரவுகள்
இவைகளுக்கிடையே என் இதய விம்மல்கள்
உன் நினைவுகள் தூண்டும் ஒவ்வொரு
கண பொழுதும் என் வாழ்வில் மரண காயங்களே ..
உன்னை மறக்கும் கணமே
மரணம் என் கை சேரட்டும் ..!!!:mad:

நீ என்னோடு வாழ நினைத்த போது
வாழ்க்கை என் கையில் இல்லை ..
நான் உன்னோடு வாழ நினைத்த போது
நீ என்னோடு இல்லை ..
என்னை நீ தேடிய போது நான் உன்னருகில்
உன்னை நான் தேடுகிறேன் நீயோ கல்லறையில்:traurig001:

வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே ..
இல்லையே மண்ணோடு என்றாய் ..
சொன்னதை செய்து முடித்த புனிதன் நீஆனாய்
உன்னருகில் வாழத்தான் எனக்கு வாய்ப்பில்லை
உன் கல்லறை அருகில் உறங்கயேனும்
இடம் கொடுத்து விடு..!!:frown:

இன்பக்கவி
23-02-2010, 12:51 AM
சோபி அக்கா..
இதன் முழு அர்த்தம் நான் அறிவேன்..
நல்லா இருக்கு என்று சொல்ல மனம் வரவில்லை...
நடந்ததை நினைத்துக்கொண்டு வருந்தாதே..
வரிகளில் ஆழமான வலியை உணர்கிறேன்...

குணமதி
23-02-2010, 02:49 AM
**************
நீ என்னோடு வாழ நினைத்த போது
வாழ்க்கை என் கையில் இல்லை ..
நான் உன்னோடு வாழ நினைத்த போது
நீ என்னோடு இல்லை ..
என்னை நீ தேடிய போது நான் உன்னருகில்
உன்னை நான் தேடுகிறேன் நீயோ கல்லறையில்
********************
உருக்கம்.

சிவா.ஜி
23-02-2010, 04:26 AM
வலி மிகுந்த வரிகள். காதலனையோ, காதலியையோ இழந்தவர்கள் அனைவரும் கல்லறை நாடினால்...உலகம் முழுவதும் கல்லறைகளே மிஞ்சும். காலத்தின் விளையாட்டில் கலந்து கொண்டு எதையும் எதிர்நோக்கும் உறுதியோடு வாழ வேண்டும்.

வாழ்த்துகள் சோஃபி அவர்களே.

நேசம்
23-02-2010, 06:25 AM
மறக்க இயலாது.காதலின் பிரிவை.ஆனால் நினைக்க மறந்து வாழ்க்கயை எதிர்கொள்ள வேண்டும்.ஏனென்றால் கல்லறை முடிவு இல்லை. உருக்கமான கவிதை

அக்னி
23-02-2010, 08:59 AM
கவிதா சொன்னதுபோல,
இந்தக் கவிதையில் உண்மையான ஏதேனும் உள்ளர்த்தம் இருப்பின்,
இதற்காக வருந்தியே வாழத் தேவையில்லை.
குற்றவுணர்வு தேவையேயில்லை.

வாழ வைத்துப் பார்ப்பதுதான்
காதல்...
வருந்தி வாழ வைப்பது
காதலாகா....

மரணத்திற் காதலை
வெளிப்படுத்துவோரிடம்,
பரிதாபம் இருக்கட்டும்..,
அனுதாபம் தேவையில்லை...

மரணித்துச் சொல்வது காதலல்ல;
மனதினைச் சொல்வதுதான் காதல்...
சாவினில் தொடங்குவது காதலல்ல;
வாழ்வினிற் தொடங்குவதுதான் காதல்...

காதலுக்காக உயிரைக் கொடுக்கலாம்;
காதலுக்காக உயிரைக் கொன்று,
காதலித்த உயிரை வருத்தலாமோ...

தன் காதலைச்
சொல்லவும் வெல்லவும் வாழவும்
தெரியாமல்,
மரணத்தைத் தேடுபவர்களுக்கு
மண்ணில் இடம் கொடுத்ததே அதிகம்...
மனதில் இடம் கொடுக்கத் தேவையில்லை...

மனதை உடைத்துப் பார்க்கும் காதலுக்காக,
மனம் உடைந்து வாழத் தேவையில்லை...

இத்தோடு உங்கள் வலிகளுக்கு முடிவுகட்டுங்கள் சோபி...
இல்லாவிட்டால், உங்கள் வாழ்க்கை சோபிக்காமற் போய்விடலாம்...

இதுபோன்ற கல்லறைகளுக்காக,
இதயவறைகளைக் கல்லறையாக்காதீர்கள்...

கவிதைக்குக் கொடுத்துவிட்ட உங்கள் மனதின் வலியை,
கவிதையிடமிருந்து மீளப் பெறாதீர்கள்...

இன்பக்கவி
23-02-2010, 09:56 AM

சொல்ல வார்த்தைகள் இல்லை...
அருமை...
அதை அறிந்து நடந்தால்
கல்லறையை கூட பூந்தோட்டமாக மாற்றி விடலாம்

sofi
23-02-2010, 06:18 PM
சோபி அக்கா..
இதன் முழு அர்த்தம் நான் அறிவேன்..
நல்லா இருக்கு என்று சொல்ல மனம் வரவில்லை...
நடந்ததை நினைத்துக்கொண்டு வருந்தாதே..
வரிகளில் ஆழமான வலியை உணர்கிறேன்...

கவி நன்றி உன்னோட கருத்துக்கு ...!!

sofi
23-02-2010, 06:20 PM
**************
நீ என்னோடு வாழ நினைத்த போது
வாழ்க்கை என் கையில் இல்லை ..
நான் உன்னோடு வாழ நினைத்த போது
நீ என்னோடு இல்லை ..
என்னை நீ தேடிய போது நான் உன்னருகில்
உன்னை நான் தேடுகிறேன் நீயோ கல்லறையில்
********************
உருக்கம்.

நன்றி ..!
உருகும் மெழுகாய் உடலை உருக்கும் நினைவுகள்

sofi
23-02-2010, 06:29 PM
வலி மிகுந்த வரிகள். காதலனையோ, காதலியையோ இழந்தவர்கள் அனைவரும் கல்லறை நாடினால்...உலகம் முழுவதும் கல்லறைகளே மிஞ்சும். காலத்தின் விளையாட்டில் கலந்து கொண்டு எதையும் எதிர்நோக்கும் உறுதியோடு வாழ வேண்டும்.

வாழ்த்துகள் சோஃபி அவர்களே.

நன்றி சிவா ஜி ..!!
உங்கள் கருத்து எங்கள் கண்களில் அது செரியாக தென்படுவதில்லை ..காரணம் காலத்தின் விளிம்பில் இருப்பதினால்

sofi
23-02-2010, 06:38 PM
மறக்க இயலாது.காதலின் பிரிவை.ஆனால் நினைக்க மறந்து வாழ்க்கயை எதிர்கொள்ள வேண்டும்.ஏனென்றால் கல்லறை முடிவு இல்லை. உருக்கமான கவிதை

நன்றி நேசம் ..!
முதல் காதலை என்றும் மறக்க முடியாது ..
நினைவுகளே இன்று வாழ்க்கை ஆனதினால் மறக்க தெரியவில்லை ..

sofi
23-02-2010, 06:59 PM
கவிதா சொன்னதுபோல,
இந்தக் கவிதையில் உண்மையான ஏதேனும் உள்ளர்த்தம் இருப்பின்,
இதற்காக வருந்தியே வாழத் தேவையில்லை.
குற்றவுணர்வு தேவையேயில்லை.

வாழ வைத்துப் பார்ப்பதுதான்
காதல்...
வருந்தி வாழ வைப்பது
காதலாகா....

மரணத்திற் காதலை
வெளிப்படுத்துவோரிடம்,
பரிதாபம் இருக்கட்டும்..,
அனுதாபம் தேவையில்லை...

மரணித்துச் சொல்வது காதலல்ல;
மனதினைச் சொல்வதுதான் காதல்...
சாவினில் தொடங்குவது காதலல்ல;
வாழ்வினிற் தொடங்குவதுதான் காதல்...

காதலுக்காக உயிரைக் கொடுக்கலாம்;
காதலுக்காக உயிரைக் கொன்று,
காதலித்த உயிரை வருத்தலாமோ...

தன் காதலைச்
சொல்லவும் வெல்லவும் வாழவும்
தெரியாமல்,
மரணத்தைத் தேடுபவர்களுக்கு
மண்ணில் இடம் கொடுத்ததே அதிகம்...
மனதில் இடம் கொடுக்கத் தேவையில்லை...

மனதை உடைத்துப் பார்க்கும் காதலுக்காக,
மனம் உடைந்து வாழத் தேவையில்லை...

இத்தோடு உங்கள் வலிகளுக்கு முடிவுகட்டுங்கள் சோபி...
இல்லாவிட்டால், உங்கள் வாழ்க்கை சோபிக்காமற் போய்விடலாம்...

இதுபோன்ற கல்லறைகளுக்காக,
இதயவறைகளைக் கல்லறையாக்காதீர்கள்...

கவிதைக்குக் கொடுத்துவிட்ட உங்கள் மனதின் வலியை,
கவிதையிடமிருந்து மீளப் பெறாதீர்கள்...

நன்றி அக்னி ..!
மனதினுள் வலிகள்
வலிகள் வார்த்தைகளாய்
வார்த்தைகள் கவிதையாய் பிறக்கிறது ..

அவன் கல்லறையே என் இதய கோவில் ஆனதினால்
என் இதயம் கல்லறை ஆவதில்லை ..
364 நாளில் இறைவன் சந்நிதியில் கிடைக்காத வரம்.. சந்தோசம்
அவன் கல்லறையில் 1 நாளில் கிடைத்து விடுகிறது..
அந்த ஒரு நாளில் 364 நாட்கள் வாழ்ந்த சந்தோசம்..!!

ரொம்ப பேசி விட்டேன் தவறு இருப்பின் வருந்து கிறேன்:frown:

Ravee
24-02-2010, 03:57 AM
:traurig001: :traurig001: :traurig001:

balanagesh
24-02-2010, 05:39 AM
@Sofi

"நீங்காத உன் நினைவுகள் ...
சுட்டெரிக்கும் பல இரவுகள்
இவைகளுக்கிடையே என் இதய விம்மல்கள்
உன் நினைவுகள் தூண்டும் ஒவ்வொரு
கண பொழுதும் என் வாழ்வில் மரண காயங்களே ..
உன்னை மறக்கும் கணமே
மரணம் என் கை சேரட்டும் ..!!! "

- எவை வெறும் வார்த்தைகளாக எனக்கு தெரியவில்லை... உயிர் வலியின் பிரதிபலிப்பாகவே எனக்கு தெரிகிறது... வலியாக இருந்தாலும், சாகும் வரை அது வேணும் என்று ஏங்கும் அந்த நெஞ்சத்தை மனமார பாராட்டுகிறேன்....

அக்னி
24-02-2010, 07:25 AM
வலிகள் வார்த்தைகளாய்
வார்த்தைகள் கவிதையாய் பிறக்கிறது ..
கவிதை வார்த்தைகள்,
மீண்டும் வலிகளாக...
எத்தனை காலம் இந்தச் சுழற்சி...???

அவன் கல்லறையே என் இதய கோவில் ஆனதினால்
என் இதயம் கல்லறை ஆவதில்லை ..
364 நாளில் இறைவன் சந்நிதியில் கிடைக்காத வரம்.. சந்தோசம்
அவன் கல்லறையில் 1 நாளில் கிடைத்து விடுகிறது..
அந்த ஒரு நாளில் 364 நாட்கள் வாழ்ந்த சந்தோசம்..!!
உடனே ஆறிப்போகாதுதான் இந்த வலி.
அதற்காகக், காயத்தைப் புதுப்பித்துக்கொண்டேயிருந்தால்,
என்றுமே ஆறிப்போகாது.

உங்களுக்கு இந்த வலி சந்தோஷம் ஆக இருக்கலாம்.
ஆனால், உங்களைச் சேர்ந்தவர்களுக்கு உங்களின் இந்தச் சந்தோஷம்
வலிகளாகிப்போகும் என்பதையும், மனதிற் கொள்ளுங்கள்.

வாழ்க்கை இவ்வளவுதான் என்பதைவிடுத்து,
இதற்கப்பால்... என எட்டிப்பாருங்கள்.

உங்களைப்போல் ஆயிரம்பேர் கல்லறைகளை, இதயக்கோவில்களாக்கிச் சுமக்கக் காத்திருக்கலாம்.
அவர்களில் ஒரு சிலருக்கேனும் உங்கள் சோகம் உத்வேகம் தராதா...

அப்படியானவர்களுக்காக உங்கள் எழுத்துக்களை முடுக்கிவிடுங்கள்...
அவர்கள் விசை பெற, நீங்கள் அமைதி பெறுவீர்கள்...

ரொம்ப பேசி விட்டேன் தவறு இருப்பின் வருந்து கிறேன்:frown:
இதிற் தவறும் இல்லை. வருத்தமும் தேவை இல்லை.

தவறு எங்கே இருக்கின்றது தெரியுமா...

தேவையற்றதற்கெல்லாம் வருந்தும் உங்கள் மனதிடம் இருக்கின்றது.

உங்கள் மனதிடம், இன்னும் வேண்டும் மனோதிடம்...

உங்கள் மனவலிகளுக்கு,
மயிலிறகு மருந்துத் தடவல்களாக,
மன்றம் இருக்கும்...

காலம், உங்கள் காயத்தை ஆற்றட்டும்...

*****
பின்னூட்டங்களில் எழுத்துருவின் நிறத்தையும் அளவையும் கருத்திற்கொள்ளுங்களேன்.
வாசிக்கச் சற்றுச் சிரமமாக இருக்கின்றது.

sofi
25-02-2010, 08:43 AM
:traurig001: :traurig001: :traurig001:

அண்ணா அழ வேண்டிய நானே அழவில்லை ,,:sprachlos020:எதுக்கு இந்த வருத்தம் :confused::D...ஹஹாஹா..:icon_rollout:

sofi
25-02-2010, 08:47 AM
@Sofi

"நீங்காத உன் நினைவுகள் ...
சுட்டெரிக்கும் பல இரவுகள்
இவைகளுக்கிடையே என் இதய விம்மல்கள்
உன் நினைவுகள் தூண்டும் ஒவ்வொரு
கண பொழுதும் என் வாழ்வில் மரண காயங்களே ..
உன்னை மறக்கும் கணமே
மரணம் என் கை சேரட்டும் ..!!! "

- எவை வெறும் வார்த்தைகளாக எனக்கு தெரியவில்லை... உயிர் வலியின் பிரதிபலிப்பாகவே எனக்கு தெரிகிறது... வலியாக இருந்தாலும், சாகும் வரை அது வேணும் என்று ஏங்கும் அந்த நெஞ்சத்தை மனமார பாராட்டுகிறேன்....

பலனாகேஷ் நன்றி ..!!:)
ஆமாம் இது வெறும் வருட நினைவுகள் இல்லை ..பல வருட வேதனைகளும் ..மனதின் வலிகளுமே.

ஆர்.ஈஸ்வரன்
25-02-2010, 09:10 AM
காதல் மட்டுமே வாழ்க்கையில்லை. இன்னும் ஏராளமிருக்கிறது. நம்பிக்கையோடு இருக்கவும்.

அக்னி
25-02-2010, 09:11 AM
பலனாகேஷ் நன்றி ..!!:)

:sprachlos020: :eek:
இல்லீங்க பலனில்லாகேஷ்... :cool:

பாவம் பாலநகேஷ். ஆளாளுக்கு பந்தாடுறாங்க...

sofi
25-02-2010, 09:18 AM
கவிதை வார்த்தைகள்,
மீண்டும் வலிகளாக...
எத்தனை காலம் இந்தச் சுழற்சி...???

உடனே ஆறிப்போகாதுதான் இந்த வலி.
அதற்காகக், காயத்தைப் புதுப்பித்துக்கொண்டேயிருந்தால்,
என்றுமே ஆறிப்போகாது.

உங்களுக்கு இந்த வலி சந்தோஷம் ஆக இருக்கலாம்.
ஆனால், உங்களைச் சேர்ந்தவர்களுக்கு உங்களின் இந்தச் சந்தோஷம்
வலிகளாகிப்போகும் என்பதையும், மனதிற் கொள்ளுங்கள்.

வாழ்க்கை இவ்வளவுதான் என்பதைவிடுத்து,
இதற்கப்பால்... என எட்டிப்பாருங்கள்.

உங்களைப்போல் ஆயிரம்பேர் கல்லறைகளை, இதயக்கோவில்களாக்கிச் சுமக்கக் காத்திருக்கலாம்.
அவர்களில் ஒரு சிலருக்கேனும் உங்கள் சோகம் உத்வேகம் தராதா...

அப்படியானவர்களுக்காக உங்கள் எழுத்துக்களை முடுக்கிவிடுங்கள்...
அவர்கள் விசை பெற, நீங்கள் அமைதி பெறுவீர்கள்...

இதிற் தவறும் இல்லை. வருத்தமும் தேவை இல்லை.

தவறு எங்கே இருக்கின்றது தெரியுமா...

தேவையற்றதற்கெல்லாம் வருந்தும் உங்கள் மனதிடம் இருக்கின்றது.

உங்கள் மனதிடம், இன்னும் வேண்டும் மனோதிடம்...

உங்கள் மனவலிகளுக்கு,
மயிலிறகு மருந்துத் தடவல்களாக,
மன்றம் இருக்கும்...

காலம், உங்கள் காயத்தை ஆற்றட்டும்...

*****
பின்னூட்டங்களில் எழுத்துருவின் நிறத்தையும் அளவையும் கருத்திற்கொள்ளுங்களேன்.
வாசிக்கச் சற்றுச் சிரமமாக இருக்கின்றது.

அக்னி நீங்கள் சொல்லுவது நிஜம் தான் ஆனால் இதன் உண்மை தெரிந்தால் திகைத்து போவீர்கள் ...:)

இது வெறும் வருட நிஜமான நினைவுகள் இல்லை ஈரேழு வருட வலிகள் ...சுமைகள் ..:traurig001:
முதல் தடவை என் வலிகள் கவிதையாக பிரசவித்தது என் நிழலாய் என்னை சுற்றும் நினைவுகளால் தான் ...:traurig001:
என் ஒவ்வொரு ஜெனன தினமும் என்னை இவ்வுலகத்துக்கு அழைத்து செல்கிறது ..:mad:
பல தடவை மறக்க நினைத்து என் நினைவுகளிடம் தோற்றது நான் ..! :frown:
உங்களை போல பல நல்லா உள்ளங்களின் உதவியுடன் முடிந்தால் மறக்க முயற்சி செய்கிறேன் ..!:traurig001:

அக்னி
26-02-2010, 08:27 PM
ஒரு நாள் வலியாக இது இல்லை எனவே நினைத்திருந்தேன்.
ஆனால், பதினான்காண்டுகள் நிலைத்திருக்கும் வலியென்பதை எதிர்பார்க்கவேயில்லை.

வலிகள் இல்லாத வாழ்க்கை எங்குமேயில்லை.
வலிகளோடு வாழ்வது தவிர்க்கவும் முடியாதது.
ஆனால்,
வலிகளோடு மட்டும் வாழ்வதில் அர்த்தமேயில்லை.

இதைத் தவிர வேறேதும் என்னிடம் சொல்வதற்குமில்லை.

செல்வா
27-02-2010, 02:12 PM
வாழ்க்கை -
வாழ் கை
நம் வாழ்வானது நம் கையில் இருக்கிறது என்பதைச் சுட்டத்தான்
வாழ்க்கை என்று சொன்னார்கள்... நம் முன்னோர்.

நம் தாய்தந்தையர் உடல்களில் ஒரு செல்லாக இருந்து
எத்தனையோ அணுக்களைப் போட்டியில்
ஜெயித்து ஜெனித்தவர்கள் நாம்.
ஒவ்வொரு நொடியிலும் நம்
உடலில் நடக்கும் வாழ்வுக்கான போராட்டம் எவ்வளவு தெரியும?
நமக்காக நாம் போராடுவதை விடுங்கள்
நம் ஒருவர் வாழ்வுக்காக
உழைக்கும் போராடும்
எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்களே..

முன்பின் தெரியாத எத்தனையோ பேர்
எத்தனையோ இக்கட்டுகளில்
நம்மைத் தூக்கிவிட்டுள்ளனர்.

மனிதனின் ஒட்டு மொத்த ஆயுளில் ஒரு துளிபருவத்தில்
வரக்கூடியக் காதலுக்காக...

ஒட்டு மொத்த வாழ்வையும் பலியாக்குதல்

மனித குலத்திற்கே அவமானம்.

இதுவரை அவரை வாழவைத்த வாழவைக்க
உழைக்கும் ஒவ்வொருவருக்கும் அவர்கள் கொடுக்கும் விலை மிக அதிகம்.

நாம் அழகான வீடு கட்டியிருக்கிறோம் என்பதற்காக...

நாம் செல்லும் இடமெல்லாம் அதை முதுகில் சுமந்து கொண்டு செல்ல இயலாது

இன்னொரு இடத்தில் போய் இருந்து கொண்டு விட்டு விட்டு வந்த வீட்டிற்காக

ஏங்குவதை விட

இருக்கும் இடத்தை அந்த வீட்டைப் போல்
அழகாக மாற்றக் கற்றுக் கொள்ளுங்கள்...

அது உங்களையும் உங்களைச் சூழ இருப்பவர்களையும்

அழகாக்கும்....

உங்கள் உலகையும் சேர்த்துத் தான்...!

அக்னி
27-02-2010, 03:18 PM
தெளிவாகவும், அழகாகவும் சொல்லிவிட்டாய் செல்வா...

சமகாலத்தில் உன்னோடு(ம்) மன்றத்திலிருப்பதில் எனக்குப் பெருமிதமே...

sofi
02-03-2010, 08:37 AM
பலனாகேஷ் நன்றி ..!!:)
ஆமாம் இது வெறும் வருட நினைவுகள் இல்லை ..பல வருட வேதனைகளும் ..மனதின் வலிகளுமே.

:sprachlos020: :eek:
இல்லீங்க பலனில்லாகேஷ்... :cool:

பாவம் பாலநகேஷ். ஆளாளுக்கு பந்தாடுறாங்க...

balanagesh:frown:
ஆகா ...தெரியாம செய்த தவறுக்கு மன்னிப்பு கோருகிறேன் ..:p:frown::traurig001:

sofi
02-03-2010, 08:39 AM
காதல் மட்டுமே வாழ்க்கையில்லை. இன்னும் ஏராளமிருக்கிறது. நம்பிக்கையோடு இருக்கவும்.

நன்றி உங்கள் கருத்துக்கு ..ஆர்.ஈஸ்வரன்:p

sofi
02-03-2010, 08:44 AM
ஒரு நாள் வலியாக இது இல்லை எனவே நினைத்திருந்தேன்.
ஆனால், பத்னான்காண்டுகள் நிலைத்திருக்கும் வலியென்பதை எதிர்பார்க்கவேயில்லை.

வலிகள் இல்லாத வாழ்க்கை எங்குமேயில்லை.
வலிகளோடு வாழ்வது தவிர்க்கவும் முடியாதது.
ஆனால்,
வலிகளோடு மட்டும் வாழ்வதில் அர்த்தமேயில்லை.

இதைத் தவிர வேறேதும் என்னிடம் சொல்வதற்குமில்லை.

நன்றி அக்னி ..என் கவலைகளை மறக்கவே இணைய தள தேடலில் என் புலன்களை செலுத்துகிறேன் ... முடிந்தவரை முயற்சிக்கிறேன்

sofi
02-03-2010, 09:06 AM
வாழ்க்கை -
வாழ் கை
நம் வாழ்வானது நம் கையில் இருக்கிறது என்பதைச் சுட்டத்தான்
வாழ்க்கை என்று சொன்னார்கள்... நம் முன்னோர்.

நம் தாய்தந்தையர் உடல்களில் ஒரு செல்லாக இருந்து
எத்தனையோ அணுக்களைப் போட்டியில்
ஜெயித்து ஜெனித்தவர்கள் நாம்.
ஒவ்வொரு நொடியிலும் நம்
உடலில் நடக்கும் வாழ்வுக்கான போராட்டம் எவ்வளவு தெரியும?
நமக்காக நாம் போராடுவதை விடுங்கள்
நம் ஒருவர் வாழ்வுக்காக
உழைக்கும் போராடும்
எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்களே..

முன்பின் தெரியாத எத்தனையோ பேர்
எத்தனையோ இக்கட்டுகளில்
நம்மைத் தூக்கிவிட்டுள்ளனர்.

மனிதனின் ஒட்டு மொத்த ஆயுளில் ஒரு துளிபருவத்தில்
வரக்கூடியக் காதலுக்காக...

ஒட்டு மொத்த வாழ்வையும் பலியாக்குதல்

மனித குலத்திற்கே அவமானம்.

இதுவரை அவரை வாழவைத்த வாழவைக்க
உழைக்கும் ஒவ்வொருவருக்கும் அவர்கள் கொடுக்கும் விலை மிக அதிகம்.

நாம் அழகான வீடு கட்டியிருக்கிறோம் என்பதற்காக...

நாம் செல்லும் இடமெல்லாம் அதை முதுகில் சுமந்து கொண்டு செல்ல இயலாது

இன்னொரு இடத்தில் போய் இருந்து கொண்டு விட்டு விட்டு வந்த வீட்டிற்காக

ஏங்குவதை விட

இருக்கும் இடத்தை அந்த வீட்டைப் போல்
அழகாக மாற்றக் கற்றுக் கொள்ளுங்கள்...

அது உங்களையும் உங்களைச் சூழ இருப்பவர்களையும்

அழகாக்கும்....

உங்கள் உலகையும் சேர்த்துத் தான்...!

செல்வா .. உங்கள் கருத்துகளை நான் ஏற்று கொள்கிறேன் ... நன்றி

நாங்கள் பல வெற்றி கண்டு இருந்தாலும் சில தோல்விகள் நம்மை வாழ விடுவதில்லை ..