PDA

View Full Version : மின்னஞ்சல் கதை:11 காதலுக்கு கண்ணில்லை



பாரதி
21-02-2010, 04:21 PM
அவளுக்கு பார்வை இல்லாமல் இருந்தது. உடனிருந்த அவனைத்தவிர அவளுக்கு அனைவரின் மேலும் வெறுப்பாயிருந்தது.

ஒரு நாள் ”எனக்கு மட்டும் கண்ணிருந்தால் உன்னை திருமணம் செய்து கொள்வேன்” என்று அவள் அவனிடம் சொன்னாள்.

சில நாட்களுக்குப்பின் யாரோ அவளுக்கு கண்களை தானமாக வழங்கினார்கள்.

கண் தெரிய ஆரம்பித்ததும் அவள் அவனைப்பார்த்தாள். அவனுக்கு பார்வை இல்லாமல் இருந்ததைக் கண்டு வியப்படைந்தாள்.

”இப்போதுதான் உனக்கு பார்வை வந்து விட்டதே... என்னை திருமணம் செய்து கொள்கிறாயா..?” என்று கேட்டான்.

சிறிது நேரம் மெளனமாக இருந்த அவள் “ மாட்டேன்” என்றாள்.

சற்று மெல்லிய குரலில் “ சரி. என் கண்களை மட்டுமாவது கவனமாக பார்த்துக்கொள்” என்று கூறி விட்டு தட்டுத்தடுமாறி நடக்கத்தொடங்கினான்.

நன்றி: ஆங்கிலத்தில் கதை அனுப்பிய நண்பருக்கு.
மூலம்: தெரியவில்லை.

கீதம்
22-02-2010, 06:14 AM
நாம் செய்யும் தியாகம், சில சமயங்களில் இப்படிதான் விழலுக்கு இறைத்த நீராகிவிடுகிறது. வெள்ளை ரோஜாவும் சிட்டுக்குருவியும் கதையை நினைவுபடுத்திய கதை. பகிர்ந்தமைக்கு நன்றி பாரதி அவர்களே.

சிவா.ஜி
22-02-2010, 09:05 AM
கண்ணில்லாதபோது காதலியாய் இருந்தாள்...கண்கிடைத்ததும் சுயநலவாதியாகிவிட்டாள். அழுக்கு உலகத்தைப் பார்த்ததும் அவளது உள்ளமும் அழுக்காகிவிட்டதோ...

பகிர்வுக்கு நன்றி பாரதி.

aren
22-02-2010, 02:10 PM
வாவ் என்று சொல்லவைக்கும் கதை படிப்பினையை பொறுத்தவரை.

ஆனால் இரண்டு கண்களையும் ஒருவருக்கே வைக்கமாட்டார்கள். அதுபோல உயிரோடு இருக்கும் ஒருவருடைய இரு கண்களையும் எடுக்க மாட்டார்கள் (ஒரு கண்ணையும் எடுக்கமாட்டார்கள்).

கதை நன்றாக இருந்தாலும் கரு கொஞ்சம் உதைக்கிறது.

கலையரசி
23-02-2010, 12:40 PM
நானும் இக்கதையை ஆங்கிலத்தில் படித்தேன். ஆரென் அவர்கள் சொல்வது போல் இரண்டு கண்களையும் உயிருடன் இருப்பவரிடம் இருந்து எடுத்து கண்ணில்லாதவருக்குப் பொருத்த மாட்டார்கள் என்றாலும், 'சூழ்நிலை மாறியதும் பழசை மறப்பவர்களே இந்த உலகில் அதிகம்,' எனும் நல்ல படிப்பினையைத் தரும் கதை.