PDA

View Full Version : சொர்க்கமாய்..



இன்பக்கவி
20-02-2010, 07:30 PM
http://1.bp.blogspot.com/_f34aqewiuok/S393b314WjI/AAAAAAAAAJc/_ElJV2RYFMw/s1600/85919-bigthumbnail.jpg
அழகான நிலவொளியில்
இதமானக் காற்று
நெஞ்சை வருட
மெல்லிய ஒலியில்
அமுதமான பாடல் ஓலிக்க
என் அருகே நீ..

என்னால் ரசிக்க முடியவில்லை
எதையும்..
என் பார்வை முழுவதும்
உன்னில் நிலை கொண்டு இருக்க
நிலவொளி கூட அந்நியமானது...

உன் அணைப்பில்
காற்றின் குளுமை
என்னை அனலாய் சுட்டது

என்ன மாயம் செய்தாய்
இயற்கைக்கு மாறாய்
எல்லாமே எனக்கு மட்டும்..
உன்னால் என்னை
சுற்றி நிகழும் நிகழ்வுகளை
மறக்கின்றேன்
உன்னையே நினைக்கின்றேன்

என்ன சாப்பிட்டாய் என
நீ கேட்கும் போது தான்
உணர்கிறேன்
உன்னால் நான் சாப்பிட மறந்ததை...

உம்ம்ம்மா என்று நீ
வார்த்தையால் கொடுக்கும்
முத்தத்தை பெறவே மீண்டும்
ஒரு ஆயுள் வேண்டுகிறேன்
சத்தம் இல்லாமல்
என்னை கொல்லும்
முத்தமோ??

உன்னால் சிரிக்கிறேன்
உன்னால் அழுகிறேன்
உன்னால் ஆறுதல் அடைகிறேன்
உன்னால் எல்லாம் உன்னால்..
என் மனம் அலைந்து திரிவதும்
உன்னால்....

நரகமாய் சில நேரங்களில்
நினைத்தாலும்..
நரகத்திலும் என்னவன் நீ
என்னோடு இருந்தால்
நரகத்தை கூட ரசிப்பேன்
சொர்க்கமாய்..

வந்து விடு!!!
முள்ளில் தைத்து
ரணமான என் இதயத்தை
முள்ளால் எடுக்காதே
உன் முத்ததால் துடைத்து விடு
போதும்....;):D:icon_ush:

செல்வா
20-02-2010, 08:29 PM
காதல் பித்து அதிகமாகிவிட்டால்
இப்படித்தான்....

வருடுவதும்... வறுபடுவதாகத் தெரியும்
வறுபடுவதும் வருடுவதாகத் தெரியும்...

காதலுக்கும் கவிக்கும்
வாழ்த்துக்கள்......

இன்பக்கவி
20-02-2010, 09:32 PM
ஐயோ
காதல் பித்து எல்லாம் இல்லைங்க ...:confused::confused:
சும்மா ஒரு மாற்றத்துக்கு இப்படியும் ஒரு கவிதை போடலாம் என்று எழுதினேன்..:icon_rollout::icon_rollout:
நன்றிகள் செல்வா :icon_b:

ஜனகன்
20-02-2010, 09:57 PM
காதல் சுகத்தை இதமாக கூறும் கவியின் கவிதை அருமை.

பாராட்டுக்கள்.

குணமதி
21-02-2010, 12:29 AM
தவிப்பு உணர்வு சரியாகத்தான் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது!

இன்பக்கவி
23-02-2010, 01:36 AM
காதல் சுகத்தை இதமாக கூறும் கவியின் கவிதை அருமை.

பாராட்டுக்கள்.


தவிப்பு உணர்வு சரியாகத்தான் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது!

நன்றிகள் ஜனகன், நன்றிகள் குணமதி:)

Akila.R.D
26-02-2010, 04:46 AM
என்ன சாப்பிட்டாய் என
நீ கேட்கும் போது தான்
உணர்கிறேன்
உன்னால் நான் சாப்பிட மறந்ததை

காதல் வந்தா சாப்பிடக்கூடவா மறந்து போகும்...

கவிதை நன்றாக உள்ளது...

வாழ்த்துக்கள் கவி...

இன்பக்கவி
26-02-2010, 04:51 AM
என்ன சாப்பிட்டாய் என
நீ கேட்கும் போது தான்
உணர்கிறேன்
உன்னால் நான் சாப்பிட மறந்ததை

காதல் வந்தா சாப்பிடக்கூடவா மறந்து போகும்...

கவிதை நன்றாக உள்ளது...

வாழ்த்துக்கள் கவி...

நன்றிகள் அகிலா அப்டித்தான் சொல்றாங்கள் எனக்கு தெரியல..

mhmramees
26-02-2010, 05:14 AM
பிரமாதமான கவிதை....

உங்களுக்காவது பரவாயில்லை சாப்பிடத்தான் மறந்தது..........................

இன்பக்கவி
26-02-2010, 06:08 AM
பிரமாதமான கவிதை....

உங்களுக்காவது பரவாயில்லை சாப்பிடத்தான் மறந்தது..........................

ஆஹா ஹா...நீங்கள் என்ன மறந்தீங்கள் சொல்லாம போய்விட்டீர்கள் :lachen001::lachen001:

சிவா.ஜி
26-02-2010, 08:31 AM
காதலில் விழுந்தவர்களின் உன்மத்த நிலையை அழகான வரிகளில் சொல்லியிருக்கிறீர்கள் இன்பக்கவி.

வாழ்த்துகள்.

இன்பக்கவி
26-02-2010, 12:39 PM
காதலில் விழுந்தவர்களின் உன்மத்த நிலையை அழகான வரிகளில் சொல்லியிருக்கிறீர்கள் இன்பக்கவி.

வாழ்த்துகள்.

நன்றிகள் சிவா.ஜி:icon_b:

பா.ராஜேஷ்
26-02-2010, 01:04 PM
நித்தம் நித்தம்
முத்தம் தின்னும்
சித்தம் தெளிய
பித்தம் களைய
அபத்தம் யாதென்ன
அர்த்தம் கொள்.

இன்பக்கவி
26-02-2010, 01:08 PM
நித்தம் நித்தம்
முத்தம் தின்னும்
சித்தம் தெளிய
பித்தம் களைய
அபத்தம் யாதென்ன
அர்த்தம் கொள்.

நன்றிகள் பா.ராஜேஷ்:icon_b:
சரி இப்போ என்ன சொல்லவரீங்கள்..ஒன்னுமே புரியல:confused:

அக்னி
27-02-2010, 10:53 AM
அழகான நிலவொளியில்
இதமானக் காற்று
நெஞ்சை வறுட
மெல்லிய ஒலியில்
அமுதமான பாடல் ஓலிக்க
என் அருகே நீ..

நெஞ்சை வருடும்
உன் அருகாமையில்,
அழகான நிலவும்
இதமான காற்றும்
நெஞ்சை வறுப்பதில்
ஆச்சரியம் இல்லைதான்... ;)



என்னால் ரசிக்க முடியவில்லை
எதையும்..
என் பார்வை முழுவதும்
உன்னில் நிலை கொண்டு இருக்க
நிலவொளி கூட அந்நியமானது...

இருக்காதா...
அழகில் ஒளிரும் நீ
அருகில் இருக்கையில்,
இரவல் வாங்கி ஒளிரும்
நிலவு
எப்படிக் கவர்ந்திடும்...?



உன் அணைப்பில்
காற்றின் குளுமை
என்னை அனலாய் சுட்டது

தீப்பிடித்து எரிவதை
நானும் அணைத்திருக்கின்றேன்...
அணைத்தாலும் தீப்பிடிக்கும்
என்னும் காதல்விதி
எனக்குப் புதிதுதான்...

நன்றாய்த்தான் கற்பிக்கின்றாய்...



என்ன மாயம் செய்தாய்
இயற்கைக்கு மாறாய்
எல்லாமே எனக்கு மட்டும்..
உன்னால் என்னை
சுற்றி நிகழும் நிகழ்வுகளை
மறக்கின்றேன்
உன்னையே நினைக்கின்றேன்

நாமிருக்கும் உலகுக்குள்
நாம் மட்டும் இருக்கும் உலகு...

நமக்கென ஓரு உலகையே
சிருஷ்டித்துக் கொள்ளும்
சிருஷ்டிகர்த்தாக்கள்
நாம்...



என்ன சாப்பிட்டாய் என
நீ கேட்கும் போது தான்
உணர்கிறேன்
உன்னால் நான் சாப்பிட மறந்ததை...

நீ இல்லாத குறை,
உணர்வுகளைக் குறைத்துவிட்டதால்,
பசியை உணரவில்லை...

நீ வந்துவிட்ட பின்,
உணர்வுகள் நிரம்பிவிடுவதனாலும்,
பசியை உணர்ந்தேனில்லை...

புரியாத காதற் சமன்பாடு...



உம்ம்ம்மா என்று நீ
வார்த்தையால் கொடுக்கும்
முத்தத்தை பெறவே மீண்டும்
ஒரு ஆயுள் வேண்டுகிறேன்
சத்தம் இல்லாமல்
என்னை கொல்லும்
முத்தமோ??

காற்றில் வரும் முத்தத்திற்காக,
நீடிக்கவேண்டும் இன்னுமொரு ஆயுள்...

காற்றுப் புகாத முத்தத்துக்காக,
முடியவேண்டாம் இந்த ஆயுள்...



உன்னால் சிரிக்கிறேன்
உன்னால் அழுகிறேன்
உன்னால் ஆறுதல் அடைகிறேன்
உன்னால் எல்லாம் உன்னால்..
என் மனம் அலைந்து திரிவதும்
உன்னால்....

என்னிற் பூக்கள் சொரியுது
உன் வருகை...
என்னில் அமிலம் தெளிக்குது
உன் பிரிகை...



நரகமாய் சில நேரங்களில்
நினைத்தாலும்..
நரகத்திலும் என்னவன் நீ
என்னோடு இருந்தால்
நரகத்தை கூட ரசிப்பேன்
சொர்க்கமாய்..

உன்னைக் காணும்வரைக்கும்
சொர்க்கத்தைக் காணவில்லை...
உன்னைக் கண்டதும்
நரகம் என்பதே எங்குமில்லை...



வந்து விடு!!!
முள்ளில் தைத்து
ரணமான என் இதயத்தை
முள்ளால் எடுக்காதே
உன் முத்ததால் துடைத்து விடு
போதும்....;):D:icon_ush:
கிடைத்தற்கரிய முத்து..,
உன் முத்தம்...

உன்னிடம் முத்தம் கேட்கையில்
என்னிடம் சத்தம் இல்லை.
அதனாற்தான் கேட்கின்றேன்,
உன் முத்ததால் துடைத்துவிடு
என்று...

காதலிக்கும் கவி... :cool:

அக்னி
27-02-2010, 10:56 AM
காதல் பித்து அதிகமாகிவிட்டால்
இப்படித்தான்....

வருடுவதும்... வறுபடுவதாகத் தெரியும்
வறுபடுவதும் வருடுவதாகத் தெரியும்...

அட...
உனக்குத் தெரிந்தது,
எனக்கும் தெரிந்தது... ;)


நித்தம் நித்தம்
முத்தம் தின்னும்
சித்தம் தெளிய
பித்தம் களைய
அபத்தம் யாதென்ன
அர்த்தம் கொள்.
:icon_b:

நல்லாத் ‘தம்’ அடிக்கின்றீர்கள்
என அர்த்தம் கொண்டோம்... சரியோ... :rolleyes:

இன்பக்கவி
27-02-2010, 11:11 AM
நெஞ்சை வருடும்
உன் அருகாமையில்,
அழகான நிலவும்
இதமான காற்றும்
நெஞ்சை வறுப்பதில்
ஆச்சரியம் இல்லைதான்... ;)


இருக்காதா...
அழகில் ஒளிரும் நீ
அருகில் இருக்கையில்,
இரவல் வாங்கி ஒளிரும்
நிலவு
எப்படிக் கவர்ந்திடும்...?


தீப்பிடித்து எரிவதை
நானும் அணைத்திருக்கின்றேன்...
அணைத்தாலும் தீப்பிடிக்கும்
என்னும் காதல்விதி
எனக்குப் புதிதுதான்...

நன்றாய்த்தான் கற்பிக்கின்றாய்...


நாமிருக்கும் உலகுக்குள்
நாம் மட்டும் இருக்கும் உலகு...

நமக்கென ஓரு உலகையே
சிருஷ்டித்துக் கொள்ளும்
சிருஷ்டிகர்த்தாக்கள்
நாம்...


நீ இல்லாத குறை,
உணர்வுகளைக் குறைத்துவிட்டதால்,
பசியை உணரவில்லை...

நீ வந்துவிட்ட பின்,
உணர்வுகள் நிரம்பிவிடுவதனாலும்,
பசியை உணர்ந்தேனில்லை...

புரியாத காதற் சமன்பாடு...


காற்றில் வரும் முத்தத்திற்காக,
நீடிக்கவேண்டும் இன்னுமொரு ஆயுள்...

காற்றுப் புகாத முத்தத்துக்காக,
முடியவேண்டாம் இந்த ஆயுள்...


என்னிற் பூக்கள் சொரியுது
உன் வருகை...
என்னில் அமிலம் தெளிக்குது
உன் பிரிகை...


உன்னைக் காணும்வரைக்கும்
சொர்க்கத்தைக் காணவில்லை...
உன்னைக் கண்டதும்
நரகம் என்பதே எங்குமில்லை...


கிடைத்தற்கரிய முத்து..,
உன் முத்தம்...

உன்னிடம் முத்தம் கேட்கையில்
என்னிடம் சத்தம் இல்லை.
அதனாற்தான் கேட்கின்றேன்,
உன் முத்ததால் துடைத்துவிடு
என்று...

காதலிக்கும் கவி... :cool:

ஐயோ..என்ன இது??
இதுக்கு பெயர் தான் அக்குவேறு ஆணி வேற பிரிப்பதா??:confused:
சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:icon_b::icon_b::icon_b::icon_b::icon_b:
அருமையா இருக்கு...
இந்த கவியை விட உங்க கவி ;);):D

இன்பக்கவி
27-02-2010, 11:14 AM
அட...
உனக்குத் தெரிந்தது,
எனக்கும் தெரிந்தது... ;)


:icon_b:

நல்லாத் ‘தம்’ அடிக்கின்றீர்கள்
என அர்த்தம் கொண்டோம்... சரியோ... :rolleyes:

ஆஹா ஹா...சரியா சொன்னீகள்...
அக்னி அவர்களே...
நன்றிகள்..:icon_b:

ஓவர் தம் உடம்புக்கு ஆகாதாம் ராஜேஷ் அப்டின்னு அக்னி சொல்றார்னு நான் நினைக்குறேன்...
:D:D:eek::D