PDA

View Full Version : முதன்மை!

குணமதி
20-02-2010, 12:18 PM
முதன்மை!

தத்தி நடந்து

உருண்டு புரண்டு

ஓடி ஆடி

அயர்ச்சியுற்ற குழந்தை

அன்னையை நாடிச் சென்றது.

ஏற்ற இறக்கமாய்

மென்மையாகவும் வன்மையாகவும்

ஒலித்துப் பலுக்கி

ஆங்கிலம் நடத்திய ஆசிரியர்

நெஞ்சு வலியில்

'அம்மா' என்றலறினார்!

தாயே முதன்மை !

கலையரசி
20-02-2010, 12:31 PM
நாம் எந்த மொழியில் புலமை பெற்றிருந்தாலும் ஆபத்து சமயத்தில் நம்மையறியாமல் நம் வாயிலிருந்து தாய்மொழியில் தான் வார்த்தைகள் வெளிவரும்.
குழந்தை எவ்வளவு தான் காயப்படுத்தினாலும் அலட்சியப்படுத்தினாலும் தம் குழந்தைக்கு ஓர் ஆபத்தென்றால் ஓடி வரும் தாய் போல உதவும் மொழி என்பதால் தான் தாய்மொழி என்றார்களோ?
நன்றாயிருக்கிறது. பாராட்டு குணமதி அவர்களே.

சிவா.ஜி
20-02-2010, 03:31 PM
தாயைப்போன்றதுதான் தாய்மொழியும் என்று அழகாய் குழந்தையைக் கொண்டு சொன்னவிதம் அருமை.

ஆனால் இப்போதெல்லாம் நிறையபேர் தாய்க்கு ஜீன்ஸ் மாட்டிப் பார்க்க ஆசைப்படுகிறார்கள். என்ன செய்வது...!!!

வாழ்த்துகள் குணமதி.

இளசு
20-02-2010, 03:40 PM
இந்த யுத்தியை வைத்து நான் அவனில்லை படத்தில் துப்பறியப் பார்ப்பார்கள்.

தாய்மொழி ஆணிவேர்.
ஆதாரம் அது.
ஆழம் அதிகமானது..

பாராட்டுகள்..

aren
20-02-2010, 03:49 PM
கவிதை நன்றாக உள்ளது.

ஆபத்து சமயத்தில் உதவுவது தாய்மொழி என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். பாராட்டுக்கள்.

குணமதி
21-02-2010, 10:09 AM
நாம் எந்த மொழியில் புலமை பெற்றிருந்தாலும் ஆபத்து சமயத்தில் நம்மையறியாமல் நம் வாயிலிருந்து தாய்மொழியில் தான் வார்த்தைகள் வெளிவரும்.
குழந்தை எவ்வளவு தான் காயப்படுத்தினாலும் அலட்சியப்படுத்தினாலும் தம் குழந்தைக்கு ஓர் ஆபத்தென்றால் ஓடி வரும் தாய் போல உதவும் மொழி என்பதால் தான் தாய்மொழி என்றார்களோ?
நன்றாயிருக்கிறது. பாராட்டு குணமதி அவர்களே.

நல்ல விளக்கம் தந்தீர்கள்.

மிக்க நன்றி.

குணமதி
21-02-2010, 10:09 AM
தாயைப்போன்றதுதான் தாய்மொழியும் என்று அழகாய் குழந்தையைக் கொண்டு சொன்னவிதம் அருமை.

ஆனால் இப்போதெல்லாம் நிறையபேர் தாய்க்கு ஜீன்ஸ் மாட்டிப் பார்க்க ஆசைப்படுகிறார்கள். என்ன செய்வது...!!!

வாழ்த்துகள் குணமதி.

நன்றி சிவா.

குணமதி
21-02-2010, 10:12 AM
இந்த யுத்தியை வைத்து நான் அவனில்லை படத்தில் துப்பறியப் பார்ப்பார்கள்.

தாய்மொழி ஆணிவேர்.
ஆதாரம் அது.
ஆழம் அதிகமானது..

பாராட்டுகள்..

சரியாக விளக்கினீர்கள்.

பாராட்டுக்கு நன்றி.

குணமதி
21-02-2010, 10:13 AM
கவிதை நன்றாக உள்ளது.

ஆபத்து சமயத்தில் உதவுவது தாய்மொழி என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். பாராட்டுக்கள்.

மிக்க நன்றி.

அமரன்
21-02-2010, 09:28 PM
கவிதையும் கருத்துரைகளும் கவர்கின்றன.

என்னதான் நண்பனாக இருந்தாலும் அன்னையிடமோ தந்தையிடமோ சொந்தத்திடமோ பந்தத்திடமோ சந்தோசத்தையும் துக்கத்தையும் பகிர்ந்துக்கும் சுகானுபவம் யதார்த்தமானது.

கொழும்பில் இருக்கும் போது சரளமாகச் சிங்களம் கதைக்கக் கூடிய என் நண்பன் தமிழ் மருத்துவர்களிடமே அலைந்து தேடிப் போவான். ஏனெனக் கேட்டால், தாய் மொழியில் வருத்தத்தைச் சொல்வதும் மருந்துவ ஆதூரம் பெறுவதும் சுகமானது என்பான்.

உச்சரித்தல்... பலுத்தல்....
வேறுபாடறிந்து பயன்படுத்திய விதம் அருமை குணமதி!

பாராட்டு.

குணமதி
22-02-2010, 03:44 AM

அருமையான விளக்கம்.

உங்கள் நண்பர் உணர்ந்து சொல்லியிருக்கிறார்.

நன்றி அமரன்.

இன்பக்கவி
23-02-2010, 01:33 AM
நல்ல கவிதை வாழ்த்துக்கள்...
அமரன் அவர்கள் சொல்வது போல நம் உணர்வுகளை நம் மொழியை தவிர வேறு எதில் சொல்லி மற்றவருக்கு புரிய வைக்க முடியும் :icon_b:

குணமதி
23-02-2010, 02:30 AM
நல்ல கவிதை வாழ்த்துக்கள்...
அமரன் அவர்கள் சொல்வது போல நம் உணர்வுகளை நம் மொழியை தவிர வேறு எதில் சொல்லி மற்றவருக்கு புரிய வைக்க முடியும் :icon_b:

நன்றி.

அக்னி
09-03-2010, 11:34 AM
தாய்மொழியைத்
தேவைக்குத் தவிர்ப்பது
மற்ற மொழிகளின் மீதான புலமையால்...
தவிர்ப்பதே தேவையாவது
மற்ற மொழிகளின் மீதான மோகத்தால்...

கவிதையும் பின்னூட்டங்களும் தாய்மொழியின் முக்கியம் உணர்த்துகின்றன.
அனைவருக்கும் பாராட்டுக்கள்...

என் மனதில் என்ன தோன்றியதோ அதுவே அமரனின் பதிவில்...

வலியானாலும் மகிழ்வானாலும்
என் தாய்மொழியிற் பகிர்ந்திடும்
சந்தோஷமும் நிறைவும்,
மோக மொழிகளிற் கிட்டிடுமோ...

govindh
09-03-2010, 12:54 PM
தாய் மொழி தான் தலை சிறந்தது...!
முதன்மை...கவிதை - முத்தாய்ப்பாய் இருந்தது..!
வாழ்த்துக்கள்..!

சரோசா
09-03-2010, 01:03 PM
தாய் மொழியை பற்றி எல்லோர் விளக்கங்களும் பார்த்து மிகவும் சந்தோசப்பட்டேன்.
நல்ல கவிதை வாழ்த்துக்கள்.

ஜனகன்
09-03-2010, 01:52 PM
தமிழ் மொழியின் மகிமையே மகிமை....
எல்லோர் பின் ஊட்டங்களும் பார்த்தேன்.
மகத்துவம் கண்டு மகிழ்ந்தேன்.
கவிதை தந்த குணமதிக்கு வாழ்த்துக்கள்.

குணமதி
09-03-2010, 03:27 PM
**************
வலியானாலும் மகிழ்வானாலும்
என் தாய்மொழியிற் பகிர்ந்திடும்
சந்தோஷமும் நிறைவும்,
மோக மொழிகளிற் கிட்டிடுமோ?
*************************
சரயான வினா!

நன்றி.

குணமதி
09-03-2010, 03:28 PM
தாய் மொழி தான் தலை சிறந்தது...!
முதன்மை...கவிதை - முத்தாய்ப்பாய் இருந்தது..!
வாழ்த்துக்கள்..!

மிக்க நன்றி.

குணமதி
09-03-2010, 03:28 PM
தாய் மொழியை பற்றி எல்லோர் விளக்கங்களும் பார்த்து மிகவும் சந்தோசப்பட்டேன்.
நல்ல கவிதை வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி.

குணமதி
09-03-2010, 03:29 PM
தமிழ் மொழியின் மகிமையே மகிமை....
எல்லோர் பின் ஊட்டங்களும் பார்த்தேன்.
மகத்துவம் கண்டு மகிழ்ந்தேன்.
கவிதை தந்த குணமதிக்கு வாழ்த்துக்கள்.

நன்றி நண்பரே.