PDA

View Full Version : மிதி வண்டியில் அமர்ந்து.....



Ravee
20-02-2010, 01:48 AM
மிதி வண்டியில் அமர்ந்து.....

http://us.123rf.com/400wm/400/400/Petrichuk/Petrichuk0701/Petrichuk070100017/697686.jpg

மிதி வண்டியில் அமர்ந்து

இறக்கத்தில் இறங்கும் போது

மிதிக்கவில்லை இலகுவாக போனது

மெல்ல மெல்ல இறங்கி போனது வாழ்க்கை

சறுக்கி போனது சாலை மட்டும் இல்லை

என் வாழ்க்கையுமே

மக்கிப் போய் மண்ணோடு மண்ணாய் வாழ்வதை விட

வானை தொட்ட இறகாக பறக்க துணிந்தேன்

பள்ளம் கடந்த பின் நிமிர்ந்து பார்த்தேன்

உச்சத்தில் நந்தவனம்

ஒரு முடிவாய் நிமிர்ந்து

இரு தொடைகள் வலிக்க

ஏறி மிதித்தேன்

இதோ அடைந்து விட்டேன் என்று எண்ணி

முழுமூச்சாய் முயற்சி செய்ய

அடைந்து விட்டேன்

வாய்ப்பு கனிகள் தொங்கும் என் நந்தவனத்தை.

( நல்ல கவிதை படைக்க ஒரு கரு தந்ததற்கு நன்றி குணமதி )

ஓவியன்
20-02-2010, 07:52 AM
ஏற்றமும் இறக்கமும் வாழ்க்கையில் சகஜம் தான்,
நாம் தான் இறங்கத்தில் இறங்கி,
உறங்கிப் போகாமல்
ஏறி மிதித்து ஏற்றங்களை அடையணும்....

நல்லதோர் கவிதைக்கு மனதார்ந்த வாழ்துகள் ரவீ அவர்களே..!! :)

சிவா.ஜி
20-02-2010, 11:27 AM
பள்ளத்தில் சுலபமாய், கஷ்டமின்றி போகிறதே....ஓட்டுவது சுலபம் என்று நினைத்தால்.....அடுத்து வருகிறது மேடு...அழுத்து....இன்னும் அழுத்து....அடைந்தாய் இலக்கை...

நீதி....கஷ்டப்படாமல் எதுவுமே கிடைக்காது. கிடைத்தால்...அது நிலைக்காது. உற்சாகமூட்டும் கவிதைக்கு வாழ்த்துகள் ரவி.

Ravee
20-02-2010, 11:51 AM
ஒரு குட்டு, அடுத்தே தோளில் செல்லமாய் ஒரு தட்டு. நன்றி சிவா அண்ணா

செல்வா
20-02-2010, 11:58 AM
பள்ளம் மேடுள்ள பாதையிலே
பார்த்து போகணும் காளைகளே...

வீழ்வது பலவீனம்
வீழ்ந்து கிடப்பதோ மதியீனம்...

ஏறி இறங்குவதை விடவும்
ஏற்றமாகவே இருந்து விட்டால்...
பலரையும் ஏற்றிவிடலாமே?

இனிய கவிதைக்கு
வாழ்த்துக்கள்....!

Ravee
20-02-2010, 12:05 PM
நன்றி செல்வா .என்னை ஏற்றி செல்ல பல பேர் இருக்க , நானும் விரைவில் தயார் ஆகிவிடுவேன் .