PDA

View Full Version : தென்னாப்ரிக்காவுடன் தொடர் சமன் !!! இந்தியா முதலிடத்தில்.



ஸ்ரீதர்
19-02-2010, 04:26 AM
நேற்று முடிந்த இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட்டில் இந்தியா திரில்லிங்கான வெற்றி பெற்றது.
ஆம்லாவின் பேட்டிங் பிரமாதமாக இருந்தது. இந்திய வெற்றியை கடைசி நிமிடம் வரை தள்ளிக்கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் தென் ஆப்ரிகா டெஸ்டை டிரா செய்துவிடுமோ என்று நினைத்த போது நம்ம ஹர்பஜன் பந்தில் கடைசி விக்கட் வீழ்ந்தது.

இதன் மூலம் டெஸ்ட் தர வரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளதை தக்க வைத்துக் கொண்டுள்ளது. டெஸ்ட் Championship மற்றும் 175000 அமெரிக்க டாலர்கள் பரிசாக வென்றுள்ளது. இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.

இந்த போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கட்டும் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.

rajarajacholan
19-02-2010, 06:21 AM
நான் நேற்றும் ஆட்டம் பாதியிலேயே நின்னுடுமோன்னு நினைச்சேன். நல்லவேலை அப்படி நடக்கலை. இந்திய அணியனருக்கு என் வாழ்த்துக்கள்.

aren
19-02-2010, 06:28 AM
முதல் டெஸ்டில் சொதப்பினதைப் பத்தியும் கொஞ்சம் எழுதுங்களேன்.

திராவிட், லஷ்மன், யுவராஜ் ஆகியோர் இல்லாதது நன்றாகவே தெரிந்தது முதல் டெஸ்டில்.

இரண்டாவது டெஸ்டில் லஷ்மன் வந்தது நல்லதாகியது.

ஓவியன்
20-02-2010, 03:39 AM
இந்திய அணிக்குத் தேவை நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள், திறமை மிக்க ஷகீர்ஹான் காயமடைந்ததும் இரண்டாவது போட்டியில் இறுதி விக்கெட்டுகளை வீழ்த்த வெகு சிரமப்பட்டார்கள்.

ஒருவர் இல்லையென்றாலும் மற்றையவர் சமாளிப்பாரென்று நம்பும்படியான திறமையான வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கணும்.

ஸ்ரீதர்
20-02-2010, 04:11 AM
இந்திய அணிக்குத் தேவை நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள், திறமை மிக்க ஷகீர்ஹான் காயமடைந்ததும் இரண்டாவது போட்டியில் இறுதி விக்கெட்டுகளை வீழ்த்த வெகு சிரமப்பட்டார்கள்.

ஒருவர் இல்லையென்றாலும் மற்றையவர் சமாளிப்பாரென்று நம்பும்படியான திறமையான வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கணும்.

சிரமப்பட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால் மூன்று பவுலர்களை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு நாள் முழுக்க பந்து வீசி ஜெயித்த முயற்சியை பாராட்ட வேண்டும்.

முதல் டெஸ்ட் இல் இன்னிங்க்ஸ் தோல்வி அடைந்து விட்டு அடுத்த டெஸ்ட் இல் இன்னிங்க்ஸ் வெற்றி அடைந்ததும் பாராட்டுக்குரியது.

இந்திய அணிக்கு இப்போதைய தேவை நல்ல வேகப் பந்து வீச்சாளர் மட்டுமல்ல. நிலையான ஆட்டத்திறனும்தான். (Consistency in Performance)

ஒரு டெஸ்டில் நன்றாக ஆடி மற்றொரு டெஸ்டில் சொதப்புவது முதல் ரேங்க் அணிக்கு அழகல்ல.

aren
20-02-2010, 04:18 AM
ஓவியன் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. இஷாந்த் சர்மா அப்பப்ப கொஞ்சம் நல்லா பவுலிங்க் போடுகிறார், ஆனால் அதையே எப்பொழுது போட ஆரம்பித்தால் மிகவும் சிறந்த பவுலராக வர வாய்ப்பிருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் ஒருவரால் ஆடமுடியவில்லையென்றால் அதற்காக வரும் இன்னொரும் கொளுத்துகிறார். அது எப்படி சாத்தியம் என்று பலமுறை நான் நினைத்திருக்கிறேன். அது மாதிரி வேறு எந்த டீமிலும் ஆடுபவர்கள் கிடையாது.

ஓவியன்
20-02-2010, 04:25 AM
ஆஸ்திரேலியாவில் ஒருவரால் ஆடமுடியவில்லையென்றால் அதற்காக வரும் இன்னொரும் கொளுத்துகிறார்.

அதே, அதே...

அதனை நினைவில் வைத்துக்கொண்டே நான் மேற்படி பதிவினை இட்டேன், இறுதி வரிசை துடுப்பாட்டக்காரர்களை வேகமாக சுருட்ட வேண்டுமென்றால் நல்ல வேகப்பந்து வீச்சு தேவை, அதனை இஷாந்சர்மாவினால் சரியாக கொடுக்க முடியாமல் இருந்தது.

இந்த நிலை மாற வேண்டும்.

aren
22-02-2010, 01:08 AM
தென்னாப்பிரிக்காவுடன் ஆடிய முதல் ஒரு நாள் போட்டியைப் பார்த்தீர்களா, தென்னாப்பிரிக்காவின் வாலை ஒடுக்க முடியாமல் ரொம்பவும் கஷ்டப்பட்டுவிட்டார்கள் நம் இந்திய வீரர்கள்.

இதுதான் ஆஸ்திரேலியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் உள்ள வித்யாசம்.

ஓவியன்
22-02-2010, 03:52 AM
இதுதான் இப்போதைய இந்திய அணியின் பிரச்சினை, வேகமாக வாலை வெட்ட முடியாமல் திணறுகின்றனர்...

நேற்றைய போட்டியில் 48வது ஓவரிலேயே ஸ்ரீசாந்துக்குப் பதிலாக பிரவின் குமாரை பந்து வீச அழைத்திருந்தால் இந்தளவுக்கு திணறியிருக்க வேண்டியதில்லை.

aren
22-02-2010, 04:01 AM
இதுக்குக் காரணம் நம் ஆட்கள் ஒரேமாதிரியாகவே பந்து வீசுகிறார்கள். வெரைட்டியே கிடையாது. ஆடுபவர் இந்த பந்து எப்படி வருமோ என்று தெரியாமல் முழுக்கவேண்டும் அப்பொழுதுதான் பந்து வீசுபவர் விளையாடுபவரை எளிதாக வீழ்த்தமுடியும். ஆனால் நம் மக்கள் ஒரே மாதிரியாக பந்துவீசுவதால் அவர்களுக்கு பந்து எப்படி வரும் என்று நன்றாகவே தெரிகிறது.

பெளலிங் கோச் இன்னும் இதை கவனித்து நிவர்த்தி செய்யவேண்டும்