PDA

View Full Version : கடவுள் இருக்கின்றார்



sakthitvel
18-02-2010, 06:23 AM
கடவுள் இருக்கின்றார்

கண்டதெல்லாம் கடவுள் இல்லை - நாம்
கண்டதிளெல்லாம் கடவுள் இல்லை

காண முடிந்தது கடவுள் இல்லை - நம்
கருத்துக்கு இசைந்தது கடவுள் இல்லை

பிணம் ஆனவன் கடவுள் இல்லை - சிறு
மனம் கொண்டவன் கடவுள் இல்லை

மதம் கொண்டவன் கடவுள் இல்லை - பெரு
சினம் கொண்டவனும் கடவுள் இல்லை

அகமிருப்பது கடவுள் இல்லை - வெறும்
சுகம் தருவது கடவுள் இல்லை

உருகொண்டது கடவுள் இல்லை - யாரும்
உருகொடுப்பது கடவுள் இல்லை

ஓராயிரம் கடவுள் இல்லை - இது
அறியாதவர் சொல் கடவுளே இல்லை

அமரன்
18-02-2010, 07:13 PM
வாங்க சக்திவேல்!

உறுப்பினர் அறிமுகப் பகுதியில் உங்களை அறிமுகப்படுத்தி மன்றத்தை நன்குச் சுற்றிப் பார்த்து கலந்திருங்கள்.

muthuvel
19-02-2010, 02:28 AM
கடவுள் இருக்கின்றார்

கண்டதெல்லாம் கடவுள் இல்லை - நாம்
கண்டதிளெல்லாம் கடவுள் இல்லை

காண முடிந்தது கடவுள் இல்லை - நம்
கருத்துக்கு இசைந்தது கடவுள் இல்லை

பிணம் ஆனவன் கடவுள் இல்லை - சிறு
மனம் கொண்டவன் கடவுள் இல்லை

மதம் கொண்டவன் கடவுள் இல்லை - பெரு
சினம் கொண்டவனும் கடவுள் இல்லை

அகமிருப்பது கடவுள் இல்லை - வெறும்
சுகம் தருவது கடவுள் இல்லை


உருகொண்டது கடவுள் இல்லை - யாரும்
உருகொடுப்பது கடவுள் இல்லை

ஓராயிரம் கடவுள் இல்லை - இது
அறியாதவர் சொல் கடவுளே இல்லை

அருமை , நெஞ்சை தொட்ட வரிகள்

குணமதி
19-02-2010, 02:36 AM
வேறுபாட்டுக்குரிய கருத்தென்றாலும்-

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.


கண்டதிலெல்லாம் - என்று திருத்திவிடுங்கள்.

muthuvel
19-02-2010, 07:00 AM
அரசாங்க மனு ,
முறையிட்டும் ,
பயனில்லை ,
கடவுள் -