PDA

View Full Version : மிதிவண்டிப் பாடம்!

குணமதி
18-02-2010, 02:03 PM
மிதிவண்டிப் படிப்பினை!

மேலே அமர்ந்து

மிதித்துச் சழற்றினால்

ஒரு சக்கரம் சுழல்கிறது!

அட, அப்படியே -

அடுத்துள்ள சக்கரமும் சுழல்கிறது.

அப்படித்தான்...

முறையாக முயன்றால்

முனைப்பின் விளைவாய்...

துணை தானே வருமாம்!

மிதிவண்டிப் படிப்பினை!

சிவா.ஜி
18-02-2010, 02:40 PM
நல்ல படிப்பினைதான். ஒரு சின்ன சக்கரம்.....இரு பெரிய சக்கரத்தை இயக்குகிறது. வாழ்க்கைச் சக்கரத்தையும் நம் சின்ன மூளைதான் இயக்குகிறது.

அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் குணமதி. வாழ்த்துகள்.

சரண்யா
18-02-2010, 02:57 PM
வித்தியாசமான சிந்தனைங்க..வாழ்த்துகள்.

கலையரசி
18-02-2010, 04:30 PM
முனைப்புடன் முறையாக முயலும் போது நினைத்த காரியம் கை கூடும் என்ற படிப்பினையை மிதிவண்டி சக்கர இயக்கத்தின் மூலம் சொல்லியிருக்கும் விதம் புதுமை.
பாராட்டு குணமதி அவர்களே.

இளசு
18-02-2010, 06:24 PM
உழைப்பு ஊற்றை ஆற்றுப்பெருக்காக்கும் சங்கிலி போல்
ஊக்க இணைப்பும் தேவை அல்லவா?

பாராட்டுகள் குணமதி!

குணமதி
19-02-2010, 02:43 AM
நல்ல படிப்பினைதான். ஒரு சின்ன சக்கரம்.....இரு பெரிய சக்கரத்தை இயக்குகிறது. வாழ்க்கைச் சக்கரத்தையும் நம் சின்ன மூளைதான் இயக்குகிறது.

அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் குணமதி. வாழ்த்துகள்.

நன்றி சிவா.

குணமதி
19-02-2010, 02:44 AM
வித்தியாசமான சிந்தனைங்க..வாழ்த்துகள்.

மிக்க நன்றி.

குணமதி
19-02-2010, 02:45 AM
முனைப்புடன் முறையாக முயலும் போது நினைத்த காரியம் கை கூடும் என்ற படிப்பினையை மிதிவண்டி சக்கர இயக்கத்தின் மூலம் சொல்லியிருக்கும் விதம் புதுமை.
பாராட்டு குணமதி அவர்களே.

மிகவும் நன்றி.

குணமதி
19-02-2010, 02:45 AM
உழைப்பு ஊற்றை ஆற்றுப்பெருக்காக்கும் சங்கிலி போல்
ஊக்க இணைப்பும் தேவை அல்லவா?

பாராட்டுகள் குணமதி!

மிக்க நன்றி.

muthuvel
19-02-2010, 07:03 AM
மிக்க நன்றி.

வாழ்க்கை ஒரு சக்கரம் ,
தோல்வியும் வெற்றியும்
மேலும் கீழுமாக

கீதம்
19-02-2010, 09:51 PM
மிதிவண்டி பயிலவும் ஒரு லாவகம் தேவைதான். முதலில் கற்கும் குழந்தைகள் ஒரே சமயத்தில் இரு கால்களிலும் அழுத்தம் கொடுத்து வண்டியை இயங்கச் செய்ய இயலாமல் தவிப்பார்களே, கவனித்ததுண்டா?

ஆனால் கூடியவிரைவில் நுணுக்கம் கற்றுத் தேர்ந்துவிடுவார்கள். நம் வாழ்க்கையும் அப்படித்தான். நுணுக்கம் கற்றுவிட்டால் எல்லாமே எளிதாகும்.

நல்லதொரு சிந்தனைக்கு பாராட்டுகள் குணமதி அவர்களே.

குணமதி
20-02-2010, 12:09 PM
நன்றி முத்துவேல்.

நன்றி கீதம்.

Ravee
20-02-2010, 12:28 PM
இங்கே தனித்து இயங்க எந்த சக்தியால் முடியும் . ஒன்றை ஒன்று சார்ந்தே பயணப்பட வேண்டியுள்ளது ..

குணமதி
20-02-2010, 12:33 PM
இங்கே தனித்து இயங்க எந்த சக்தியால் முடியும் . ஒன்றை ஒன்று சார்ந்தே பயணப்பட வேண்டியுள்ளது ..

ஆம்.

ஒன்றை ஒன்று சார்ந்தே வாழ்க்கை நடக்கிறது.

சிலபோது நம் இயக்கத்தைப் பொறுத்து, தானே துணை கிடைக்கிறது.

கருத்துரைக்கு மிக்க நன்றி ரவி.

இன்பக்கவி
23-02-2010, 01:38 AM
நீங்கள் பார்க்கும் பொருளை எல்லாம் பற்றி கவி பாடும் திறன் படைத்தவர்...
வாழ்த்துக்கள் :icon_b::icon_b:

குணமதி
23-02-2010, 02:32 AM
நீங்கள் பார்க்கும் பொருளை எல்லாம் பற்றி கவி பாடும் திறன் படைத்தவர்...
வாழ்த்துக்கள் :icon_b::icon_b:

பாராட்டுக்கு மிக்க நன்றி.

Akila.R.D
23-02-2010, 04:41 AM
வாழ்த்துக்கள் குணமதி...

குணமதி
23-02-2010, 07:12 AM
வாழ்த்துக்கள் குணமதி...

மிக்க நன்றி.

அக்னி
23-02-2010, 01:11 PM
மிதிவண்டியிலும் வாழ்க்கைப் பாடம் சொல்லும்,
குணமதி அவர்களுக்குப் பாராட்டுக்கள்...

சக்தி பெற ஓர் சக்கரம்...
திசை நோக்க ஓர் சக்கரம்...
மனிதன்
கொடுப்பதிலும் செலுத்துவதிலும்தான்
சரியான பயணம் அமையும்...

*****
அனேகம் பேர் இப்படித்தான்..,
ஸ்டாண்டப் போட்டுட்டுப்
பெடல்ல மிதிச்சுட்டுச்
சைக்கிள் ஓடல்லேங்கிறாங்க...
:auto003: (அவசரத்துக்குச் சைக்கிள் கிடைக்கல, அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க...)

குணமதி
24-02-2010, 02:39 AM
*************
கொடுப்பதிலும் செலுத்துவதிலும்தான்
சரியான பயணம் அமையும்...
******************
நன்றாகச் சொன்னீர்கள்.

நன்றி அக்னி.