PDA

View Full Version : என் காதலன் - சச்சின்!!!!!



lenram80
18-02-2010, 12:44 PM
நான் கல்லூரி நட்களில்(1996 - 2000) சச்சினின் காதலன். கொள்ளை பிரியம். என் விடுதி அறையில் நான் ஒட்டி வைத்திருந்த படம் சச்சின் தான். நான் மட்டுமல்ல... எந்த அறைக்குப் போனாலும்... (4 கட்டிடங்கள் ஏறக்குறைய 1000 அறைகள் இருக்கும் ) ஏதாவது ஒரு நடிகையின் படம் (ஸ்ரி தேவி, மதுபாலா, ஐஷ்வர்யா, ஜோதிகா, சிம்ரன்) ஒருபக்கம், மறு பக்கம் சச்சினின் படம் கண்டிப்பாக இருக்கும். அதாவது சச்சின் இல்லாத அறையே இல்லை என்று சொல்லுமளவுக்கு இருக்கும்.

ஒவ்வொரு கட்டிடங்களிலும் ஒரு டிவி அறை இருக்கும். 100 பேர் வரை அமர்ந்து பார்க்கலாம். சச்சின் ஆடுகளத்தில் இருக்கிறாரா இல்லை அவுட் ஆகிவிடாரா என்பதை அங்கே கூடி இருக்கும் கூட்டதை வைத்தே சொல்லலாம்.அறை முழுக்க விசில் சத்தம், சிரிப்புச் சத்தம், கை தட்டல் என்று 250 பேர் வரை முண்டி அடித்துக் கொண்டு நின்றிருந்தால் சச்சின் ஆடு களத்தில் உள்ளார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இரவு உணவு முடித்து விட்டு அறையின் வெளியே நின்று மாங்காய் போடுவோம் (மாங்காய் என்றால் ஆண் நண்பர்கள் கூடி எல்லாவற்றையும் பேசுவது). அந்த இரவுகளில் சச்சினைப் பற்றி பேசாத இரவுகள் இல்லை எனலாம். 1998 - ல் இந்தியா டுடேயில் சச்சினைப் பற்றி ஒரு கவர் ஸ்டோரி. அவரால் எப்படி இப்படி அடிக்க முடிகிறது என்பது பற்றி ஒரு அலசல். அதில் கவர்ந்த விசயம்.. இவர் உயரம் குறைந்தவர் என்பதால், இவரின் புவி ஈர்ப்பு மையம் (Center of Gravity) கீழேயே இருக்கும். அதனால் இவரின் நிலைப்பாடு (Stability) அதிகம். ஆகவே நன்றாக அடித்து ஆட முடிகிறது என்றெல்லாம் ஆராய்ச்சி.


அவர் முதுகு வலியால் அவதியுற்ற போது, தினமணியில் இப்படி ஒரு கமெண்ட். "இத்தனை நாளாய் தனி ஆளாய் இந்திய அணியை தூக்கிச் சுமந்ததால் தானோ இவருக்கு முதுகு வலி?"

ஒருமுறை அவர் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. நாங்கள் அனைவரும் சோகமாக இருந்தோம். அந்த ஆஸ்திரேலியாவுக்கான ஆட்டத்தில் பந்து வீசி 5 விக்கெட்டுகள் எடுத்து "மேன் ஆஃப் த மேட்ச்" அவர் வாங்கிய போது..."அடப்பாவி..எப்படியாவது நீ வாங்கிடுவியா" என்று ஆச்சரியப்பட்டதுண்டு.

2003 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, பாகிஸ்தான் இந்தியா உடனானப் போட்டியில்.. அதற்கு முதல் நாள் அக்தர் "டெண்டுல்கரை ரன் எடுக்க விடாமல் பந்து வீசும் வித்தை எனக்குத் தெரியும்" என்று கொக்கரிக்க, அடுத்த நாள் அவரின் பந்தை நாறடித்த கதை நாடுக்கே தெரியும். அதுவும் ஆஃப் சைடில் அவர் அடித்த சிக்ஸர் இன்னும் கண் முன்னே....

சச்சின் 0 - 45 & 50 - 90 மின்னல் வேகத்தில் அடிப்பார். 45 - 50 மற்றும் 90 - 100 மெதுவாக அடிப்பார். ஆனால் பந்துக்களின் எண்ணிக்கையில் வித்தியாசம் இருக்காது. ரன் பந்து விகிதம் 90க்கு மேல் எப்போதும் இருக்கும். உடனே அவர் நாட்டுக்காக விளையாடவில்லை. தனக்காக விளையாடுகிறார் என்று வாக்குவாதம் வரும். என் கருத்து..."நீ யாருக்காகவாவது விளையாடு . உன் உந்து சக்தி என்னவாகவாவது இருந்து விட்டுப் போகட்டும். அணிக்குத் தேவை ரன். அணியோடு நீயும் ரன்னில் உயரு". ராணுவ வீரனிடம் போய்.. "நீ நாட்டுக்காக ராணுவத்தில் சேர்ந்தாயா? இல்லை சம்பளத்துகாகக் சேர்ந்தாயா?" என்று கேட்கக் கூடாது. சம்பளம் இல்லாமல் ஒருவரும் ராணுவத்தில் சேர மாட்டார்கள்.

நான் கிரிக்கெட் விளையாடுவதற்கு முன்பே இந்திய அணியில் சேர்ந்து, நான் கிரிக்கெட் விளையாடுவதை மட்டுமல்ல 'பார்ப்பதையே' விட்டுவிட்ட நிலையிலும் இன்னமும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் என் காதலனே... நீ கிரிக்கெட் மீது கொண்ட காதல் வாழ்க!!

சில பேரை ஏன் விரும்புகிறோம் என்று நமக்குத் தெரியாது. இருந்தாலும் விரும்புவோம். எனக்கு ராஜிவ் காந்தி பிடிக்கும். மற்றவர்களை விட்டுவிட்டு ஏன் இவரை மட்டும் பிடிக்கிறது என்பதற்கு என்னிடம் பதில் கிடையாது. ஆனாலும் பிடிக்கும். அது போல சச்சினும்....!!!

சிவா.ஜி
18-02-2010, 02:33 PM
ரொம்ப ரொம்ப சரி லெனின். இன்னாரை ஏன் பிடிக்கிறது என்பதற்கு அவரவர்க்கான காரணங்கள் இருக்கும். சச்சினை பெரும்பாலோருக்குப் பிடிக்கும், அதே சமயம் அதிகமாய் விமர்சிக்கப்படுபவரும் அவரே.

அவர் சதம் அடித்த மேட்சுகளில் பெரும்பாலும் இந்தியா தோற்றிருக்கிறது. சிலர் அதற்கு சச்சின் தனக்காக விளையாடுவதால், மெதுவாக விளையாடி பந்துகளை காலி பண்ணிவிடுகிறார் என்று சொல்வார்கள்.

எப்படியாயினும், ஒரு தலைசிறந்த பேட்ஸ்மேன் நமக்குக் கிடைத்திருப்பதில் அனைவரும் பெருமைப் படவேண்டும்.

(மாங்காய் அடிப்பது......புதுசா இருக்கு...)

lenram80
18-02-2010, 02:55 PM
நன்றி சிவாஜி...உங்களின் பங்களிப்புக்கு.

90களில் சச்சினையும், கங்குலியையும் விட்டுவிட்டால், முதல் 15 ஓவர்களில் ரன் எடுக்க ஆளே இல்லாத சமயங்களில்..ஆபத்பாந்தனாக நின்றவர் சச்சின். வங்காள தேச சுதந்திரக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானின் அகிப் ஜாவித் 4 பந்துகள் வீசி பாதியிலேயே ஓவரை முடித்துக் கொண்டு ஓடியது எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது.

xavier_raja
08-03-2010, 10:13 AM
சச்சின் சதம் அடித்த மேட்ச் எல்லாம் இந்தியா பெரும்பாலும் தோற்கிறது என்ற வாதம் சரியல்ல. எந்த ஒரு வீரரும் ஆரம்பத்தில் இறங்கி கடைசி வரை நின்று அடித்து கொடுத்துவிட்டு போக வேண்டும் என்றால் மற்றவர்கள் எதற்கு. நம்முடைய இந்திய அணியில் நல்ல finishers இல்லை அதனால்தான் அவர் அவுட் ஆனா பிறகு பின்னால் வருபவர்கள் சரிவர முடிபதில்லை (கவனிக்க Ind-Aus Sachin 175) அந்த 13 ரன் எடுக்க துப்பில்லாத மற்றவர்கள் எதற்கு என்பதுதான் என்னுடைய கேள்வி.