PDA

View Full Version : ஒன்றுக்கு மேற்பட்ட மேற்கோள் காட்டல்...

குணமதி
18-02-2010, 11:09 AM
பின்னூட்டம் / மறுமொழியில் ஒன்றுக்கு மேற்பட்ட மேறகோள் (Quote)
காட்டுவது எப்படி?

யாராவது விளக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.

aren
18-02-2010, 11:26 AM
பின்னூட்டம் / மறுமொழியில் ஒன்றுக்கு மேற்பட்ட மேறகோள் (Quote)
காட்டுவது எப்படி?

யாராவது விளக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் பதிலளிக்கும் பொழுது QUOTE என்பதனை கிளிக் செய்கிறீர்கள் இல்லையா, அதற்கு பக்கத்தில் இருக்கும் பட்டனை கிளிக் செய்யுங்கள், அது ஒன்றுக்கு மேற்பட்ட QUOTE காட்டும்.

பாரதி
18-02-2010, 11:26 AM
முதலில் quote பொத்தானை அடுத்து இருக்கும் கூட்டல் குறிகளை அழுத்தி பின்னர் கடைசியாக quote பொத்தானை அழுத்துவதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட மேற்கோள்களை பின்னூட்டத்தில் இடலாம்.

குணமதி
18-02-2010, 11:58 AM
முதலில் quote பொத்தானை அடுத்து இருக்கும் கூட்டல் குறிகளை அழுத்தி பின்னர் கடைசியாக quote பொத்தானை அழுத்துவதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட மேற்கோள்களை பின்னூட்டத்தில் இடலாம்.

மிக்க நன்றி பாரதி.

பா.ராஜேஷ்
19-02-2010, 04:23 PM
ஒரு கதையில் வெகு சில வெவ்வேறு வரிகளை மேற்கோள் காட்ட என்ன செய்ய வேண்டும்?

ஓவியன்
20-02-2010, 03:44 AM
ஒரு கதையில் வெகு சில வெவ்வேறு வரிகளை மேற்கோள் காட்ட என்ன செய்ய வேண்டும்?

அதனை செய்ய தனியான சிறப்பான வழிகள் இது வரை இல்லையென நம்புகிறேன். எத்தனை தடவை தேவையென்றாலும் அத்தனை தடவை அதே பதிவினை பிரதிசெய்து, ஒவ்வொரு பதிவிலும் தேவையில்லாதவற்றை அழித்து, தேவையானவற்றை மேற்கோளிடுவது என் வழமை.

பாரதி
23-02-2010, 02:38 PM
ஒரு கதையில் வெகு சில வெவ்வேறு வரிகளை மேற்கோள் காட்ட என்ன செய்ய வேண்டும்?

பெரிய பதிவுகளில் ஆங்காங்கே எடுத்து மேற்கோள் காட்ட ... நாம் இடும் பின்னூட்டத்தில்
[quote] முதலில் அடைப்புக்குறிக்குள் quote என்ற ஆங்கிலச்சொல்லை இட்டு, நாம் மேற்கோள் காட்ட வேண்டிய வரியை நகல் எடுத்து ஒட்டவும். எத்தனை வரிகளை மேற்கோளிட விரும்புகிறீர்களோ அந்தந்த வரிகளை அதே போல் நகல் எடுத்து ஒட்டவும். (காப்பி - பேஸ்ட்). கடைசியாக அடைப்புக்குறிக்குள் (/) சாய்வுக்குறியையும் quote என்ற ஆங்கிலச் சொல்லை இட்டு உங்கள் பின்னூட்டத்தை இடவும். இது ஒரு ஹெச்.டி.எம்.எல் கட்டளையே.

உதாரணமாக : [ quote]நாம் மேற்கோள் காட்ட விரும்பும் வாக்கியங்கள்.[ /quote] அடைப்புக்குறிக்குள் இடைவெளிகள் இருக்கக்கூடாது.

பா.ராஜேஷ்
23-02-2010, 03:11 PM
நன்றி பாரதி அண்ணா. அது எனக்கு தெரிந்ததுதான். வேறு ஏதேனும் வழி இருக்குமோனு தெரிந்து கொள்ளலாமேனு கேட்டேன். பரவாயில்லை, என்னால் பலருக்கும் இது தெரிய நேர்ந்தது.

இன்பக்கவி
26-02-2010, 01:14 PM
நன்றிகள் கேள்வி கேட்டவருக்கும், பதில் அளித்தவர்களுக்கும்...
எனக்கு இந்த திரி பார்த்த பிறகுதான் இந்த விஷயமே தெரியும்..
நன்றிகள் :icon_b:

sofi
03-03-2010, 10:45 PM
நண்பர்களே ..
உங்கள் ஆதரவுக்கும் உதவிக்கும் ரொம்ப நன்றிகள்

பால்ராஜ்
04-03-2010, 12:04 PM
இதைச் செய்வதைப் பற்றி வேறு ஒரு மன்றத்தில் விரிவான விளக்கம் இருந்ததைப் பார்த்திருக்கிறேன். மல்டி கோட்டிங்.. வாசித்து புரிந்து கொள்ளும் அளவுக்கு பொறுமை இல்லை..! ஆனாலும் கூடிய சீக்கிரம் படிக்க முயல வேண்டும் என்று தோன்றுகிறது.

அன்புரசிகன்
04-03-2010, 07:47 PM
இதைச் செய்வதைப் பற்றி வேறு ஒரு மன்றத்தில் விரிவான விளக்கம் இருந்ததைப் பார்த்திருக்கிறேன். மல்டி கோட்டிங்.. வாசித்து புரிந்து கொள்ளும் அளவுக்கு பொறுமை இல்லை..! ஆனாலும் கூடிய சீக்கிரம் படிக்க முயல வேண்டும் என்று தோன்றுகிறது.

மல்டி கோடிங் வசதி நம் மன்றிலும் உள்ளது. அது பொதுவாக எந்த forum software இலும் இருக்கும். இது தான் அது. http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/multiquote_off.gif

ஆனால் இங்கு இவர் கேட்ப்பது அதுவல்ல... ஒரே பதிவை பிச்சு பிச்சு பிரித்து காட்டவேண்டும் என்பது.
உதாரணமாக...

இதைச் செய்வதைப் பற்றி வேறு ஒரு மன்றத்தில் விரிவான விளக்கம் இருந்ததைப் பார்த்திருக்கிறேன்.

மல்டி கோட்டிங்.. வாசித்து புரிந்து கொள்ளும் அளவுக்கு பொறுமை இல்லை..!

ஆனாலும் கூடிய சீக்கிரம் படிக்க முயல வேண்டும் என்று தோன்றுகிறது.

இவ்வாறு...

ஜனகன்
04-03-2010, 08:05 PM
மிகவும் விளக்கமாக தந்த பாரதிக்கு நன்றி. இப்போது நானும் அறிந்து கொண்டேன்.