PDA

View Full Version : சச்சின் டெண்டுல்கர்!!!



aren
17-02-2010, 02:05 AM
சச்சின் டெண்டுல்கர்!!!

கடந்த நான்கு டெஸ்டு போட்டியில் நான்கு சதங்களை அடித்துள்ளார் சச்சின். இது ஒரு சிறந்த சாதனையாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.

அவர் ஒவ்வொரு முறை இந்த சதங்களை அடித்தபோதும் ஆட ஆரம்பித்தவுடனேயே எனக்குத் தோன்றியது இவர் நிச்சயம் சதம் அடிப்பார் என்று. இதற்குக் காரணம் ரிக்கி போண்டிங் வெகு அருகாமையில் வந்துவிட்டார் அவரை இவர் தொடவிடமாட்டார் என்று நான் நினைத்ததே காரணம்.

இது உண்மையா, ரிக்கி போண்டிங் தன்னை மிஞ்சிவிடக்கூடாது என்பதால்தான் இப்படி ஒரு சதம் முடிந்தவுடன் அடுத்த சதம் அடிக்கிறாரா?

நான் என் மனதில் நினைப்பது சரியா தவறா? சரியென்றால் அவர் அவருடைய ரெக்கார்டுக்காக மட்டுமே ஆடுகிறாரா, நாட்டுக்காக ஆடவில்லையா என்ற கேள்வி என் மனதில் எழுந்தது.

சமீபத்தில்கூட பங்களாதேஷில் நடந்து முத்தரப்பு ஒரு நாள் போட்டியில் பங்கேற்கவில்லை ஆனால் டெஸ்ட் போட்டிக்கு வந்துவிட்டார்.

அதிக டெஸ்ட் போட்டிகள் இந்த வருடம் இல்லை என்று குறைபட்டுக்கொண்டவரும் இவரே.

என்னுடைய சந்தேகம் சரியானதா?

அருள்
17-02-2010, 02:32 AM
சச்சின் என்றாலே சாதனை தான் .

aren
17-02-2010, 02:37 AM
சச்சின் என்றாலே சாதனை தான் .

நன்றி அருள். சச்சின் சாதனை படைக்கிறார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்.

என்னுடைய கேள்வி, அவர் சாதனைக்காகத்தான் அதுவும் ரிக்கி பாண்டிங்கை கொஞ்சம் தள்ளியே வைத்திருக்கவேண்டும் என்ற நினைப்பில் சதம் அடிக்கிறாரா என்ற அச்சம் எனக்கு இருக்கிறது.

அருள்
17-02-2010, 03:33 AM
நன்றி அருள். சச்சின் சாதனை படைக்கிறார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்.

என்னுடைய கேள்வி, அவர் சாதனைக்காகத்தான் அதுவும் ரிக்கி பாண்டிங்கை கொஞ்சம் தள்ளியே வைத்திருக்கவேண்டும் என்ற நினைப்பில் சதம் அடிக்கிறாரா என்ற அச்சம் எனக்கு இருக்கிறது.

சந்தேகமே வேணாம். அதான் உண்மை. எல்லாருக்குமே அந்த எண்ணம் இருந்தால்தான் சாதனை புரியமுடியும். அந்த எண்ணத்தை தவறாக எடுத்துக்கபடாது

தாமரை
17-02-2010, 03:40 AM
ஒரு நாள் போட்டிகளில் அவரின் இடத்தை நிரப்ப கம்பீர் சேவாக் ஆகியோர் இருக்கின்றனர். ஆனால் ஐந்து நாள் போட்டிகளில்?

இரண்டு குறிக்கோள்கள் ஒரே திசையில் இருக்கும் பொழுது அவற்றை நோக்கி பயணித்தல் நல்லதுதானே!!

ஓவியன்
17-02-2010, 05:44 AM
செல்வண்ணா கூறியது போல, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் வீழ்த்த முடிந்தால் தப்பில்லைத்தானே....

மாஸ்லோவின் விதிப்படி டெண்டுல்கர் இப்போது Esteem needs என்பதனைக் கடந்து, Self-actualisation என்ற நிலையில் இருக்கிறார் போல...

aren
17-02-2010, 05:53 AM
இதே செஞ்சுரி அடிக்கும் வேகம் முன்னால் இல்லாமல் இருந்தது, ஆனால் பாண்டிங் அருகில் வருகிறார் என்றவுடனேயே செஞ்சுரி அடிப்பது ஒரு குறிக்கோளாகவே மாறிவிட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

rajarajacholan
17-02-2010, 07:41 AM
இதே செஞ்சுரி அடிக்கும் வேகம் முன்னால் இல்லாமல் இருந்தது, ஆனால் பாண்டிங் அருகில் வருகிறார் என்றவுடனேயே செஞ்சுரி அடிப்பது ஒரு குறிக்கோளாகவே மாறிவிட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

அப்படி சச்சின் நினைச்சிருந்தா, முன்னமே நிறைய அடிக்க நினைச்சிருக்கலாமே சார். சச்சின் நினைச்சவுடனே சதமும் அடிச்சிட முடியாது. திறமை அவருக்கு மாத்திரம் இல்லை. அவருக்கு பெளல் பன்ற பெளலருக்கும் இருக்கு இல்லயா? அதேமாதிரி, ஒரு போட்டியில சதம் அடிச்சிட்டா, அவரோட பர்ஸ்னல் ஸ்கோர் மாத்திரமல்ல, டீம் ஸ்கோரும் உயரும் இல்லையா, அப்படின்னா அது டீமுக்கு நல்லதுதானே, அப்ப சசின் டீமுக்காகவும் தனக்காகவும் ஆடுறார். சரிங்களா?

தாமரை
17-02-2010, 07:44 AM
ஓரு நாள் ஆட்டத்திற்கும் ஐந்து நாள் ஆட்டத்திற்கும் அதுதானே வித்தியாசம். சச்சின் 100 அடிச்ச உடனே ரிலாக்ஸ் ஆகி அவுட் ஆகிடறார் என்பது தொடர்வதுதான் தவறு..

:D :D :D

சிவா.ஜி
17-02-2010, 08:10 AM
சச்சினின் சாதனை தொடரட்டும். அவருடைய சொந்த சாதனைக்காகத்தான் விளையாடுவதைப் போல தெரிகிறது. ஆனாலும் டீமுக்கும் அது நல்லது என்பதால் தொடரட்டுமே.

aren
17-02-2010, 08:31 AM
அதே அதேதான் சிவாஜி. எனக்கென்னவோ பாண்டிங் அருகில் வருவதால் அடிக்கடி சதம் அடிக்கிறாரோ என்றே தோன்றுகிறது. இதனாலே டீமுக்கு நல்லது என்று நான் ஒப்புக்கொள்கிறேன்.

சே-தாசன்
17-02-2010, 11:13 AM
அப்பிடி சொல்லாதீங்கப்பு.... தலைவர் இப்பிடி ஆடுறதில தப்பு ஒண்ணும் இல்லையே....

இன்பா
18-02-2010, 04:08 AM
ஆரென் அண்ணா!!! சொந்த சாதனைக்காக அடித்தால் அது அணிக்கும் சேர்கிரதல்லவா? அப்படி இருக்கையில் சொந்த ரெக்கார்டுகளுக்காக அடுவது என்பது விமர்சனத்துக்கு அப்பார்பட்டதாகிவிடுகின்றதே.

பாண்டிங்க நெருங்கிக்கொண்டிருக்கிறார் அதனால் சதம் அடித்தே ஆகவேண்டும் என்பதை விட, எல்லா போட்டிகளிலும் சதம் அடிக்க வேண்டும் என்பது தான் ஒவ்வொரு மட்டையாளனின் கனவாக இருக்கும்.

சச்சினை முந்த வேண்டும் என்பதற்காக பாண்டிங் சச்சினை ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார் என்று நான் நினைக்கிறேன்.

தாமரை அண்ணா சொல்வதுப் போல் சதம் அடித்த உடன் கேர்லெஸ் ஆக ஆடுவது சச்சினம் ஒரு மிகப் பெரிய குறையே.

aren
18-02-2010, 10:47 PM
சச்சினைப் போலவே பாண்டிங்கும் இப்போது அடிக்கடி சதம் அடிக்கிறார் என்பதும் உண்மையே.

ஆனால் சச்சின் 100 அடித்தவுடனேயே இதுவரை ஆடியதுபோல் நிதானமாக ஆடாமல் அவுட் ஆகி விடுகிறார்.

சதம் அடிக்க ஆடவில்லையென்றால் சதம் அடித்தபின்பும் நிதானமாக நின்று டீமுக்காக ஆடவேண்டுமே.

அது இங்கே மிஸ்ஸிங் என்றே எனக்குப் படுகிறது.

ஷேவாக்கின் 150க்கு மேலான ஸ்கோரை கவனிக்கவும்.

rajarajacholan
24-02-2010, 11:24 AM
சச்சின் 191. 200ஐ தொடுவார்?

ஓவியன்
24-02-2010, 11:26 AM
சச்சின் 191. 200ஐ தொடுவார்?


ஆடும் வேகத்தைப் பார்த்தால் தொடுவார் போலவே தெரிகிறது...

ஆவலுடன் காத்திருப்போம்..!! :)

rajarajacholan
24-02-2010, 11:27 AM
ரெக்கார்ட்///////

195!!!!

அருள்
24-02-2010, 11:27 AM
இப்போது 196

rajarajacholan
24-02-2010, 11:27 AM
வாவ் சச்சின்... ஒரே படபடப்பா இருக்குங்க

அருள்
24-02-2010, 11:30 AM
முதல் 197

அருள்
24-02-2010, 11:32 AM
சச்சின் முதல் 198

rajarajacholan
24-02-2010, 11:32 AM
இனி எத்தனை அடிச்சாலும் அது முதல் தானுங்க அருள்

rajarajacholan
24-02-2010, 11:34 AM
198!./.

அருள்
24-02-2010, 11:36 AM
ரெக்கார்டு சச்சின் 199

rajarajacholan
24-02-2010, 11:37 AM
இன்னும் ஒரே ஒரு ரன்

அருள்
24-02-2010, 11:43 AM
டோனி டென்ஷன் படுத்துரர்யா

அருள்
24-02-2010, 11:44 AM
சச்சின் 200 ரன் 147 பந்தில் ரெக்கார்டு

rajarajacholan
24-02-2010, 11:45 AM
ஹேஎ... பண்ட்டாஸ்ட்டிக் இன்னிங்க்ஸ்.... சச்சின்,

200!!!

rajarajacholan
24-02-2010, 11:46 AM
இதுவரைக்கும் யாரும் எட்டாத மிகப்பெரரய உலக சாதனை.!!

அக்னி
24-02-2010, 11:46 AM
சச்சின் அவர்களுக்கு வாழ்த்துகள்...
சாதனைகள் தொடரட்டும்...

"பொத்தனூர்"பிரபு
24-02-2010, 11:46 AM
சச்சின் 200 ரன் 147 பந்தில்
__________________

"பொத்தனூர்"பிரபு
24-02-2010, 11:48 AM
சச்சின்னா சாதனை

rajarajacholan
24-02-2010, 11:50 AM
இந்தியா 401/3

தெ.ஆப்பிரிக்கா இதை சேஸ் பன்ன வாய்ப்பு இர்க்கு. ஏன்னா அவங்க ஆஸ்திரேலியா மேட்சை மறந்துட மாட்டாங்க.

நம்ம பவுலருங்க பொத்தாம் பொதுவா போடாம இருந்தா சரி

Akila.R.D
24-02-2010, 11:50 AM
எங்க அப்பா சொல்லிக்கொண்டே இருப்பார்..
என்றாவது ஒரு நாள் சச்சின் ஒரு நாள் போட்டியில் 200 அடிப்பான் நான் பார்க்கத்தான் போறேன்னு...
இன்னிக்கு பார்த்துட்டார்...

மதி
24-02-2010, 11:50 AM
உலக சாதனை படைத்துள்ள சச்சினுக்கு வாழ்த்துக்கள்

rajarajacholan
24-02-2010, 11:52 AM
எங்க அப்பா சொல்லிக்கொண்டே இருப்பார்..
என்றாவது ஒரு நாள் சச்சின் ஒரு நாள் போட்டியில் 200 அடிப்பான் நான் பார்க்கத்தான் போறேன்னு...
இன்னிக்கு பார்த்துட்டார்...

நானும் கூட நிரைய பேருகிட்ட சொல்லியிருகேன். 200 ரன்னை அடிக்க தகுதியான ரெண்டு பேர்ல ஒருத்தர் சச்சின். இன்னொருத்தர் தோனி! இந்தியாவை பொருத்தவரை

aren
24-02-2010, 12:14 PM
அருமையான ஆட்டம். அதைப் பார்க்கும் பாக்யம் எனக்கு இன்று கிடைத்தது.

எனக்குத் தெரிந்து 200 அடிக்க தகுதியான இருவர், ஒருவர் ஷேவாக், இன்னொருவர் கிரிஸ் கையில்.

ஆதி
24-02-2010, 12:18 PM
சச்சின் 200றை தொட்டத்தும், என் அலுவலகத்தில் கை தட்டல்கள், விசில் சத்தங்கள் தூள் கிளப்பிட்டாங்க மக்கள்..

கொஞ்சம் நேரம் மைத்தானத்தில் இருந்த மாதிரி இருந்தது..

நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் சச்சின்.. இதுவரை சச்சின் விளையாடி படைத்த சாதனைகள் எல்லாம் மேலும் சிறப்புற இந்த 200 துணையாய் நிற்கும் என்பதில் ஐயமில்லை..

aren
24-02-2010, 12:28 PM
இதுவரைக்கும் யாருமே 200 அடிக்கவில்லை. சச்சின் அடிச்சிட்டார், இனிமேல் நிறையே பேர் 200 அடிக்கனும்னு ஆடுவார்கள்.

rajarajacholan
24-02-2010, 12:44 PM
இதுவரைக்கும் யாருமே 200 அடிக்கவில்லை. சச்சின் அடிச்சிட்டார், இனிமேல் நிறையே பேர் 200 அடிக்கனும்னு ஆடுவார்கள்.

அதுவேனும்னா உண்மைதாங்க.

400 அடிக்கிற வரைக்கும் பெரிய ஸ்கோரா அது இருந்தது. இப்போ பத்து இருபது மேட்சுக்கு ஒருக்கா 400 ரன் அடிக்கிறாங்க. அடுத்த டார்கெட் 500 தான்

இந்தியாதான் 400 ரன்கள் அதிகம் அடிச்சிருக்கு (3 தடவை)

aren
24-02-2010, 12:49 PM
அதுவேனும்னா உண்மைதாங்க.

400 அடிக்கிற வரைக்கும் பெரிய ஸ்கோரா அது இருந்தது. இப்போ பத்து இருபது மேட்சுக்கு ஒருக்கா 400 ரன் அடிக்கிறாங்க. அடுத்த டார்கெட் 500 தான்

ஒவ்வொரு சாதனையும் அப்படித்தானே நடந்திருக்கு. இதுமாதிரி மக்கள் 200 அடிக்க ஆடுவார்கள். இது நிச்சயம் வெகு சீக்கிரத்தில் நடக்கும், காரணம் மக்களுக்கு இப்பொழுது இது சாத்தியம் என்ற நம்பிக்கை வரும்.

இதுவரைக்கும் 200 எட்டாக்கணியாக இருந்தது, இனிமே மக்களுக்குத் தெரிந்துவிட்டது இது கிடைக்ககூடிய கணி என்று. ஆகையால் நம்பிக்கையுடன் பலர் ஆடுவார்கள்.

aren
24-02-2010, 12:50 PM
அடுத்தது 20/20 ல் 200 அடிக்க வேண்டும் என்று ஆடுவார்கள்.

rajarajacholan
24-02-2010, 12:55 PM
அடுத்தது 20/20 ல் 200 அடிக்க வேண்டும் என்று ஆடுவார்கள்.

ஆமாம் ஆனால் ரொம்பவும் சிரமம்தான். சொல்லம்முடியாது செய்துகாட்டுவிடுவார்கள்

aren
24-02-2010, 01:01 PM
ஆமாம் ஆனால் ரொம்பவும் சிரமம்தான். சொல்லம்முடியாது செய்துகாட்டுவிடுவார்கள்

ஐபிஎல் போட்டியிலேயே 158 அடித்துவிட்டாரே மெக்கல்லம். அதனால அதுவும் சாத்தியம் தான்.

சுத்த வேண்டியதுதானே, பட்டா பாக்யம், அவ்ளோதான் 20/20 கிரிக்கெட்.

xavier_raja
08-03-2010, 09:56 AM
உலக கிரிக்கட் வரலாற்றில் சச்சின் ஒரு சரித்திர சாதனையாளர். நம்மவர்களுக்கு அவரை குறை சொல்வதை தவிர வேறொன்றும் தெரியாது. ஆடாவிட்டால் குற்றம் ஆடினாலும் குற்றம்.

அறிஞர்
09-03-2010, 09:19 PM
சாதனைகளின் ஒட்டுமொத்த வடிவமாய் சச்சின்.. வாழ்த்துக்கள்.

arun
11-03-2010, 03:34 AM
சில நேரங்களில் தனிப்பட்ட சாதனைக்காக சச்சின் ஆடுவதை போல தோன்றினாலும் அது நமது அணிக்கும் பலம் தான் எனவே அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை

"பொத்தனூர்"பிரபு
11-03-2010, 11:01 PM
சில நேரங்களில் தனிப்பட்ட சாதனைக்காக சச்சின் ஆடுவதை போல தோன்றினாலும்
///

கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா???

ஏன் என்று??

arun
12-03-2010, 08:44 AM
ஆரென் சொன்னதை போல அது ஏனென்று சொல்ல இயலவில்லை ஆனாலும் எனது மனதில் சச்சின் தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடுகிறதோ என சில மேட்சுகளை பார்த்தால் தோன்றும்