PDA

View Full Version : தசை செயலிழந்த பெண் ,முதல்வருடன் சந்திப்பு



muthuvel
16-02-2010, 07:03 AM
சென்னை :தசை செயலிழப்பு நோய்க்கு உள்ளாகி, கருணை கொலைக்கு விரும்பிய பெண், முதல்வரை சந்திக்க விருப்பம் தெரிவித்ததால், அவரை முதல்வர் கருணாநிதி சந்தித்துப் பேசினார்.




சென்னையைச் சேர்ந்த பெண் அனுராதா; தசை செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர், சமீபத்தில் தனியார், "டிவி'க்கு அளித்த பேட்டி ஒன்றில், முதல்வர் கருணாநிதியை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார். இதை கேள்விப்பட்ட முதல்வரும், அவரை அழைத்து வருமாறு கூறினார்.இதையடுத்து, குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அனுராதாவை, ஆம்புலன்ஸ் மூலம் தலைமைச் செயலகத்துக்கு அழைத்து வந்தனர். முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.




இதுகுறித்து அனுராதாவுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் வசந்தி பாபு கூறியதாவது:அனுராதா தசை செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பொதுவாக இந்த நோய் ஆண்களுக்கு தான் வரும். இந்த நோய் வந்தவர்கள், 25 ஆண்டுகள் வரை தான் வாழ முடியும். ஒவ்வொரு உறுப்பாக செயலிழக்கத் துவங்கிவிடும்.ஆனால், இந்த அனுராதா 45 ஆண்டுகளாக வாழ்வதற்கு அவரது தன்னம்பிக்கை தான் காரணம். ஒரு கட்டத்தில் கருணை கொலை செய்து விடும்படி கூட தெரிவித்தனர். "டிவி'யில் சமீபத்தில் பேட்டியளித்த இவர், முதல்வரை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார். இதையடுத்து, இவரை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.இவரது சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்யும்படி முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டது. மேலும், இந்த நோய்க்கு என பிரத்யேக மருத்துவமனைகள் கிடையாது; அதை உருவாக்கும்படியும் கேட்டுக் கொண்டோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதியளித்தார்.இவ்வாறு வசந்தி பாபு கூறினார்.

நன்றி தினமலர்

Ranjitham
16-02-2010, 02:57 PM
முதல்வா நீ ஒரு முன் உதாரனம் இந்த வயதில் உன்னை என்னென்று சொல்ல?
நன்றியுடன்
இரன்சிதம்

குணமதி
16-02-2010, 05:34 PM
நல்ல செய்தியைத் தந்திருக்கிறீர்கள்.

நன்றி.

தலைப்பில், பெண்ணிற்குப் பின் ஒரு காற்புள்ளி வைத்தீர்களானால், என்னைப்போல், பெண் முதல்வருடன் என்று படிப்பவர்களுக்குத் தெளிவு கிடைக்கும்.

ஜனகன்
16-02-2010, 09:04 PM
தகவலை எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கூருகின்றேன்.

குணமதி
18-02-2010, 01:22 AM
நல்ல செய்தியைத் தந்திருக்கிறீர்கள்.

நன்றி.

தலைப்பில், பெண்ணிற்குப் பின் ஒரு காற்புள்ளி வைத்தீர்களானால், என்னைப்போல், பெண் முதல்வருடன் என்று படிப்பவர்களுக்குத் தெளிவு கிடைக்கும்.


நன்றி முத்துவேல்.