PDA

View Full Version : ஏமாற்றி விட்டேனோ??இன்பக்கவி
16-02-2010, 01:12 AM
சென்னைப் போக்குவரத்து..
பலருக்கு எரிச்சலையும்
எனக்கு சிறு சந்தோஷத்தை
தருகின்ற விஷயம்..
பலரிடம் சொல்கையில்
கிண்டலையும், கோபத்தையுமே
பரிசாய் பெற்று
வளைந்து வளைந்து
முந்தி அடித்து செல்லும்
வித்தியாசமான சந்தோசத்தை
இன்றுவரை ரசிக்கிறேன்..
காலை நேர போக்குவரத்தில்
அலுவலகம், பள்ளியென
அவசரமாய் அலறியடித்துச் செல்லும்
வாகன ஓட்டிகளைக் கண்டு
பரிதபமாய் பார்த்து, சிரித்து
என்னை மறந்து ரசித்து
வாகனம் ஓட்டி
சென்றுக் கொண்டிருக்கையில்
கருமேகத்தை விலக்கி
ஒரு அழகிய நிலவு
என் கண்முன்னில் பதிய
உற்று நோக்கிய போது
பேருந்தின் பின் இருக்கையில்
அமர்ந்திருந்த அம்மாவின் தோளில்
அனாயாசமாக நின்று
பேருந்தின் கண்ணாடித் தூசிகளை
பிஞ்சு கரங்களால் கிறுக்கி
மங்கலான கண்ணாடிகளை
வெளிச்சமாக்கி வெளிவந்த
அழகிய நிலவை ரசிக்காமல்
இருக்க முடியுமோ??
என்னைக் கண்டு
சிறு புன்னகை உதிர்க்க
எனக்குள் ஆனந்தம்..
என்னை மறைத்துச் செல்லும்
வாகனங்களுகிடையே
என்னை தேடியது ஒரு அழகிய தேவதை..
பேருந்தை பின்தொடர்ந்து
மறைந்து மறைந்து
கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு
பயணித்த போது
எல்லாம் மறந்து சொல்ல இயலா
சந்தோசம் என்னுள்..
நின்று நின்று வரும் பேருந்திற்காக
என் வேகத்தை குறைத்து
தேவதையை முன்னே செல்லவிட்டு
பின் தொடர்ந்து செல்கையில்
குழந்தையின் மகிழ்ச்சியை
விவரிக்க வரிகளில்லை
என்னிடம்..
முடியாத சாலையாக
முடியாத பயணமாக
தொடராதோ என எண்ணங்கள்
மனதில் ஓட
கனத்த இதயத்தோடு
கடைசி புன்னகையை
உதிர்த்துவிட்டு
கண்களால் கொஞ்சி
வேகத்தை கூட்டி
என்னை தேடப்போகும்
தேவதையை நினைத்து
மனம் கலங்கி
வீடு வந்து சேர்ந்தபோதும்
மறக்க முடியவில்லை
தேவதையின் முகத்தை....
சிறுப் பிள்ளையை
ஏமாற்றி விட்டேனோ??
மன பாரம் என்னுள்:traurig001:

அக்னி
16-02-2010, 06:57 AM
எங்குமே
போக்குவரத்தின் நெரிசல்
எரிச்சலானதுதான்.

அவசரமில்லாதபோது
நானும் ரசிப்பதுண்டு.

ஆனால்,
வழிமறிக்கும் தொடருந்துத் தடங்களில்
தடதடக்கும் தொடருந்துகளோடும்,
மேலெழும்பி வீதி வானம் தொட,
கிடைத்த இடைவெளியில்
ஆற்றோடு விரையும் படகுகளோடும்,
என் ரசனை நின்றுவிட்டது.

இப்படியும் இன்னும் ரசிக்கலாம்
எனச் சொல்லுகின்றது உங்கள் கவிதை.
பாராட்டுக்கள்...

இன்னுமொரு நீங்களில்,
அந்தத் தளிரின் சிரிப்புத் தொடர்ந்திருக்கும்
என்றே நினைக்கின்றேன்.

பாப்பாவை பள்ளியில் இறக்கிவிட்டு வந்தபோது,
நிகழ்ந்ததா இது...

கீதம்
16-02-2010, 07:03 AM
புகைவண்டியில் பயணிக்கும்போது இணையாய் வரும் நெடுஞ்சாலைகளில் விரையும் வாகனங்களைப் பார்த்து கை அசைத்து மகிழ்ந்த சிறுவயது நினைவுகளை அசைபோடவைத்துவிட்டது உங்கள் கவிதை. பாராட்டுகள் இன்பக்கவி அவர்களே.

சிவா.ஜி
16-02-2010, 08:09 AM
போக்குவரத்து நெரிசலின் எரிச்சலில் குளிர் காட்டிய தளிர் நிலவு மனதுக்கு இதமாய்த்தான் இருக்கும்.

வாகனமோட்டும் வேளையிலும், நிலவை ரசித்து வந்த கவிதைக்குப் பாராட்டுக்கள் இன்பக்கவி.

இன்பக்கவி
16-02-2010, 12:45 PM
நன்றிகள் அக்னி..
சரியாக சொன்னீர்கள்..
பொதுவாக காலை நேரங்களில் வெளியே செல்வது குறைவு..
பள்ளி வாகனம் வராததால் நான் செல்ல நேரிட்டது..
அப்போது ஏற்பட்ட நெரிசலை ரசித்தேன்...
அக் குழந்தையின் சிரிப்பு இன்னும் என் கண்முன்னே வந்து கொண்டு இருக்கிறது

இன்பக்கவி
16-02-2010, 12:47 PM
புகைவண்டியில் பயணிக்கும்போது இணையாய் வரும் நெடுஞ்சாலைகளில் விரையும் வாகனங்களைப் பார்த்து கை அசைத்து மகிழ்ந்த சிறுவயது நினைவுகளை அசைபோடவைத்துவிட்டது உங்கள் கவிதை. பாராட்டுகள் இன்பக்கவி அவர்களே.

நன்றிகள் கீதம்..
சிறுவயதில் நாமும் இப்படிதான் இருந்து இருப்போம்..
முன்பின் தெரியாத சிலரை காணும் போது குழந்தைகள் சிரித்து மகிழும் போது நமக்கும் ஒரு ஆனந்தம் தான்

இன்பக்கவி
16-02-2010, 12:49 PM
நன்றிகள் சிவா.ஜி...
குழந்தைகள் என்றாலே எனக்கு ரொம்ப உயிர் என்றே சொல்லலாம்...
அதுவும் ஏதேச்சையாக பார்க்கும் சில நொடிகளில் சில குழந்தைகள் முகம் மனதை விட்டு நீங்குவது இல்லை

கலையரசி
16-02-2010, 12:59 PM
போக்குவரத்து நெரிசல் காரணமாக ஏற்படும் எரிச்சலின் இடையிலும் கள்ளங்கபடமற்ற சிறு தளிரின் சிரிப்பை உள்வாங்கி ரசித்த உங்களுக்கு ஒரு ஓ போடலாம் இன்பக்கவி அவர்களே.