PDA

View Full Version : அம்மா



இன்பக்கவி
15-02-2010, 12:30 PM
எனக்கு இ மெயிலில் வந்த படக்கவிதை
http://farm5.static.flickr.com/4030/4358641853_b1cca009f3_o.gif

கலையரசி
15-02-2010, 12:45 PM
மனதைப் பாரமாக்கி விட்டது. மிகவும் நன்று.

கொள்ளி என்று இருக்கவேண்டும். கொல்லி அல்ல.

இன்பக்கவி
15-02-2010, 01:24 PM
நன்றிகள்..
ம்ம்ம்...இது எனக்கு மெயிலில் வந்தது
படித்ததும் மனது பாரமாகி விட்டது

சிவா.ஜி
15-02-2010, 01:55 PM
வேதனை மிகுந்த வரிகள். எந்தத் தாய்க்கும் இந்த நிலை வரக்கூடாது. ஒற்றை சோற்றுப் பருக்கையாவது அனுப்பு என சொல்லும் நிலையை நினைத்து மனது பாரமாகிவிட்டது.

பகிர்வுக்கு நன்றி இன்பக்கவி.

இதே பார்வையில் நான் நம் மன்றத்தில் எழுதிய ஒரு கவிதை இங்கே...


எனக்கு முன்ன
சாமிக்கிட்ட போன எஞ்சாமி,
ஒன்னோட நானும் போயிருந்தா
மண்ணோட போயிருக்கும் இந்த பொறப்பு
நாய்க்கும் வேணா இப்ப
நான் பொழைக்கும் இந்த பொழப்பு!
பிஞ்சிப்போனாலும் ஒதவுமேன்னு
உள்ள வெச்சுக்கிட்டான் பாயை
ஓஞ்சி போன சென்மமின்னு
ஒதுக்கித்தள்ளிட்டான் தாயை!
மவனுக்கு பால் குடுத்த
மாரும் காஞ்சிப்போச்சி,
மருமவ மகராசியால
வயிறும் வறண்டு போச்சி!
பார்வை கொறைஞ்சிப் போச்சி,
கேள்வி மந்தமாச்சி,
நாக்கு ருசி செத்து போச்சி,
பாழாப்போன பசி மட்டும் போவலியே!
நாள பின்ன நான் செத்தா
வாக்கரிசி வெப்பீங்களே,
செத்தவளுக்கு போடறதுல கொஞ்சம் இந்த
பெத்தவளுக்கும் போடுய்யா
பசியால செத்தான்னு பேரு வேணா
சாபம் குடுத்து செத்தான்னு பேச்சு வேணா!

ஜனகன்
15-02-2010, 02:15 PM
மனதை பிசைய வைக்கும் கவிதை வரிகள்.பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி இன்பகவி.

சிவா உங்கள் கவிதையும் மனதை தொட்டது.வாழ்த்துகின்றேன்.

சிவா.ஜி
15-02-2010, 02:20 PM
நன்றி ஜனகன்.

குணமதி
15-02-2010, 04:37 PM
அமைதி.

ஒரு பெருமூச்சு.

வேறென்ன எழுதுவது?

இன்பக்கவி
15-02-2010, 05:41 PM
வேதனை மிகுந்த வரிகள். எந்தத் தாய்க்கும் இந்த நிலை வரக்கூடாது. ஒற்றை சோற்றுப் பருக்கையாவது அனுப்பு என சொல்லும் நிலையை நினைத்து மனது பாரமாகிவிட்டது.

பகிர்வுக்கு நன்றி இன்பக்கவி.

இதே பார்வையில் நான் நம் மன்றத்தில் எழுதிய ஒரு கவிதை இங்கே...


எனக்கு முன்ன
சாமிக்கிட்ட போன எஞ்சாமி,
ஒன்னோட நானும் போயிருந்தா
மண்ணோட போயிருக்கும் இந்த பொறப்பு
நாய்க்கும் வேணா இப்ப
நான் பொழைக்கும் இந்த பொழப்பு!
பிஞ்சிப்போனாலும் ஒதவுமேன்னு
உள்ள வெச்சுக்கிட்டான் பாயை
ஓஞ்சி போன சென்மமின்னு
ஒதுக்கித்தள்ளிட்டான் தாயை!
மவனுக்கு பால் குடுத்த
மாரும் காஞ்சிப்போச்சி,
மருமவ மகராசியால
வயிறும் வறண்டு போச்சி!
பார்வை கொறைஞ்சிப் போச்சி,
கேள்வி மந்தமாச்சி,
நாக்கு ருசி செத்து போச்சி,
பாழாப்போன பசி மட்டும் போவலியே!
நாள பின்ன நான் செத்தா
வாக்கரிசி வெப்பீங்களே,
செத்தவளுக்கு போடறதுல கொஞ்சம் இந்த
பெத்தவளுக்கும் போடுய்யா
பசியால செத்தான்னு பேரு வேணா
சாபம் குடுத்து செத்தான்னு பேச்சு வேணா!

சிவா,
நன்றிகள்..
நீங்கள் பகிர்ந்த கொண்ட கவிதையும் மனதை வருத்துகிறது..
இப்படி எல்லாம் இன்னும் இருக்கா...
என்ன சொல்லுவது...
இதை விட பெரிய கொடுமை பாவ காரியம் ஏதானும் உண்டா???

இன்பக்கவி
15-02-2010, 05:42 PM
நன்றிகள்
குணமதி ஜனகன்

அமரன்
15-02-2010, 09:06 PM
ஆ....
என் புறங்கையிலும்
எரிவு.

கீதம்
16-02-2010, 01:36 AM
மருகும் தாய்களின் வேதனை தீரும் நாள் என்று வருமோ? 'அலமேலுவின் ஆசை' கதையை எழுதத் தூண்டியதும் இந்த ஆற்றாமைதான்.

பகிர்ந்துகொண்டதற்கு நன்றி இன்பக்கவி அவர்களே.

சிவா.ஜி அவர்களின் கவிதை கண்களில் நீர் வரவழைத்தது. வெளியில் சொல்ல முடியா வேதனையிலிருப்போரின் உள்ளக்கிடக்கையை ஆதுரத்துடன் வெளிப்படுத்தியுள்ளீர்கள்..

இன்பக்கவி
16-02-2010, 12:51 PM
ஆ....
என் புறங்கையிலும்
எரிவு.

நன்றிகள் அமரன்...
எனக்கு புரியலையே:confused::confused::confused:

இன்பக்கவி
16-02-2010, 12:53 PM
நன்றிகள்
கீதம்..
இதை படிக்கும் போது இப்படியும் சிலர் இருக்கின்றார்களே என என்னை கோவம் தான் வந்தது:mad:

அருள்
17-02-2010, 02:22 AM
கண்ணில் நீர் துளியுடன்... கவிதை அருமை