PDA

View Full Version : இப்ப நினைச்சாலும்....

அமரன்
14-02-2010, 08:09 AM
போன வாரம், நானும் என் மாமாவும் இன்னும் சிலரும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு கட்டத்தில் என் மாமா சொன்னார் நான் சொந்த வீடு வாங்கி 5 வருஷம் ஆச்சு என்று. நானும், ஓ.... அப்படியா மாமா என்றபடி ஒரு பார்வை பார்த்தேன்.. அப்போது பக்கத்திலிருந்தவர் பயங்கரமாகச் சிரித்தார். அங்கிருந்த பலருக்கு ஏன் என்று தெரியவில்லை. உங்களுக்குத் தெரிஞ்சாச் சொல்லுங்கள்?

சிவா.ஜி
14-02-2010, 09:02 AM
அவரோட சொந்த வீட்டை அவர் ஏன் வாங்கனும்?

அமரன்
15-02-2010, 05:22 AM
அவரோட சொந்த வீட்டை அவர் ஏன் வாங்கனும்?

அதுவும் சரிதான்.. நீங்க நிலம் வாங்கி அஞ்சு வருஷம் ஆச்சுன்னு ஆமோதிச்சபடி மாமாவின் தலையைப் பார்த்த என்னை அவரு பார்த்துட்டார் சிவா!

aren
15-02-2010, 05:27 AM
அதுவும் சரிதான்.. நீங்க நிலம் வாங்கி அஞ்சு வருஷம் ஆச்சுன்னு ஆமோதிச்சபடி மாமாவின் தலையைப் பார்த்த என்னை அவரு பார்த்துட்டார் சிவா!

இதானே வேண்டாங்கிறது. நீங்க சிவாஜியையும் பெண்ஸையும் இப்படி கிண்டல் செய்யக்கூடாது.

samuthraselvam
15-02-2010, 06:55 AM
ஹா ஹா ஹா ஹா.................:lachen001::lachen001:

சிவா அண்ணா மாதிரியா உங்க மாமா? :icon_hmm::icon_hmm::icon_nono::icon_nono:

ஹையோ ஹையோ....:medium-smiley-041::medium-smiley-041::medium-smiley-041:

சிவா.ஜி
15-02-2010, 07:29 AM
ஆஹா....இதான் விஷயமா...? எப்புடியெல்லாம் சிந்திக்குறாங்கப்பா...?

அமரன்
15-02-2010, 08:43 PM
இதானே வேண்டாங்கிறது. நீங்க சிவாஜியையும் பெண்ஸையும் இப்படி கிண்டல் செய்யக்கூடாது.

ஹா ஹா ஹா ஹா.................:lachen001::lachen001:

சிவா அண்ணா மாதிரியா உங்க மாமா? :icon_hmm::icon_hmm::icon_nono::icon_nono:

ஹையோ ஹையோ....:medium-smiley-041::medium-smiley-041::medium-smiley-041:

இப்ப உங்களுக்குத் திருப்தியா ஆரெனாரே:cool:

இன்பக்கவி
16-02-2010, 02:47 PM
இங்க என்னமோ பேசுறாங்க ஆனால் என்ன பேசுராங்கனுதான் தெரியல..:confused::confused::confused:
எப்டியோ சந்தோஷமா இருந்த சரி :icon_b::icon_b::icon_b:

குணமதி
16-02-2010, 05:27 PM
இங்க என்னமோ பேசுறாங்க ஆனால் என்ன பேசுராங்கனுதான் தெரியல..:confused::confused::confused:
எப்டியோ சந்தோஷமா இருந்த சரி :icon_b::icon_b::icon_b:

சரியாகச்சொன்னீர்கள்!

புரியும்படிச் சொன்னால் சிரிப்பில் எல்லாரும் கலந்து கொள்ளலாமே!

இளசு
16-02-2010, 08:33 PM
கண் கூசவில்லையா அமரா உனக்கு????!!!!

உன் குசும்புக்கு அளவில்லையா????

ஜனகன்
16-02-2010, 09:49 PM
அமரன்! இப்பதான் எல்லாம் விழங்குகிறது.

நீங்கள் ஏன் அவர் கண்ணை பார்த்து கதைக்காமல் தலையை பார்த்து கதைத்தீர்கள்.அதுதான் வந்த வினை.

ஓவியன்
17-02-2010, 06:00 AM
பாவம் அந்த மாமா,
தன்னையும்
தன் தலையையும்
தன் மருமகனையும்
நினைத்து வருந்தியிருப்பார்.

செல்வா
21-02-2010, 12:07 PM
நிலம் வாங்கியது மாமா
வீடு கட்டியது ம(மு)ருகனா?

அமரன்
21-02-2010, 09:06 PM
நிலம் வாங்கியது மாமா
வீடு கட்டியது ம(மு)ருகனா?

ரசித்தேன்டா பங்காளி!

இதை வைச்சுத் தொடர் வீடே கட்டிட்டு இருக்கேன்.. மறுதளிர்ப்பு உண்டெனத் தெரிந்தும்..

கடந்த வாரம் ஒரு நாடக ஒத்திகை நடந்திட்டு இருந்துச்சு. நடிகச் சிறார்களுடன் நான் சினேகமாகப் பழகியதால் சத்தம் சந்தடி அதிகமாகவே இருந்துச்சு. அந்த நேரம் பார்த்து மாம்ஸ் வர நிசப்தமானது நிலவரம். அப்போ ஒரு பெரிசு சொல்லிச்சு... அதான் தல வர வேணுங்கிறதுன்னு... நான் சொன்னேன்... முதல் பதிவில் சொன்ன அதே பார்வையுடன்.. எனக்குமா.....? என்று .:)

சிவா.ஜி
22-02-2010, 03:47 PM
பாவம் உங்க மாமா....'தல' ய ஆளாளுக்கு பந்தாடுறாங்களே....!!!

அக்னி
22-02-2010, 04:12 PM
இங்க,
மோட்டேஜ் பத்திக் கதைக்கிறாங்களா..,
மொட்டை பத்திக் கதைக்கிறாங்களான்னு எனக்குப் புரியல...

சிவா.ஜி கவலப்படுறதயும், வக்காலத்து வாங்கறதயும் பார்த்தா... :cool:

விகடன்
05-04-2010, 05:05 AM
ஏன் அமரா?
மாமாவிற்கு மகள் இருக்கா?

அமரன்
05-04-2010, 09:26 AM
ஏன் அமரா?
மாமாவிற்கு மகள் இருக்கா?

இருக்கே...

பத்து வயசுல.

விகடன்
05-04-2010, 11:04 AM
இருக்கே...

பத்து வயசுல.

அதுதானே பார்த்தேன்!

10 வயசுல இருந்தாலும் மாமா ஒன்றைத்தானே தருவார் அமரா...