PDA

View Full Version : நான் கண்ட முதல் காதல்



Ravee
13-02-2010, 05:16 PM
நான் கண்ட முதல் காதல்

http://farm2.static.flickr.com/1283/1318953935_d87c6cf9d0.jpg



நான் கண்ட முதல் காதல்
ஊரில் காதலித்து
உருண்டு புரண்ட பின்னே
விட்டு வந்த உத்தமன் ஒருவன்
அவனை தேடி இங்கு வந்த பேதை
அவள் கையில் இருந்த ஒரே ஆதாரம்
அவன் கொடுத்த ஒரு செல் நம்பர்


நண்பனின் நண்பன்
நடத்திய தொலைபேசி சேவை மையத்தில்
தொடங்கியது முதல் காட்சி
ஒரே எண்ணை சுழற்றினாள்
இருபது முறை
எப்போதும் ஒரே பதில்
இந்த எண் தற்போது
உபயோகத்தில் இல்லை
எல்லோரும் குழம்பி இருக்க
மூலையில் உட்க்கார்ந்து அழுதாள்
இரக்கப்பட்டான் நண்பன்
பண உதவி செய்தான்
திரும்பி போ உன் வீட்டுக்கு என்றான்
மறுத்து விட்டாள்
சாவதை தவிர வேறு வழி இல்லை
எலி மருந்து வாங்க
இரண்டு ரூபாய் போதும் என்றாள்


இரககம் என் நண்பனின் உள்ளத்தில்
அவள் இருக்க பெண்கள் விடுதி
இளைப்பாற அவன் கடை


சிறிது நாளில் பொறுப்புகளை
அவளே எடுத்துக்கொண்டாள்
காலையில் எட்டு மணிக்கு திறப்பாள்
கடை கூட்டி பெருக்கி
சுத்தம் செய்து கல்லாவும் கவனித்தாள்
அவள் ராசி கடை கல்லா கட்டியது
நல்ல வருமானம்
இன்னும் இரண்டு இணைப்பு வாங்கி
லாபம் பார்த்தனர்


ஒருநாள் நண்பன் சொன்னான்
நல்ல பொண்ணாய் இருக்கா
வரும் பிப்ரவரி பதினான்காம் நாள்
என் காதலை சொல்லபோறேன் என்று
வந்தது அந்த நாள்
ஆனால் வரவில்லை அவள்
விடுதியை காலி செய்து விட்டாள் முன்னிரவு
குழப்பத்தில் அவன் புலம்பி தவித்தான்
மதிய வேளை ஒரு அஞ்சல் வந்தது


அன்பான அண்ணா
அவரை சென்ற வாரம் சந்தித்தேன்
பாவம் வேலை பார்த்த இடத்தில்
பணம் காணாமல் போக
இவர் தலை மேல் விழுந்துவிட்டது.
பணம் கட்டினால் வேலை கிடைக்கும் என்றார்கள்
வேறு வழி இல்லாமல் இதை செய்கிறேன்
நீங்கள் இணைப்பு வாடகைக்கு வைத்திருந்த பணம்
இருபத்தி இரண்டாயிரம்
என் வாழ்க்கையை மீட்டுக்கொடுத்தது
மன்னிக்கவும் என் வாழ் நாளில் ஒரு நாள்
உங்கள் கடனை அடைபேன்.,
இப்படிக்கு உங்கள் தங்கை XXXX


துண்டிக்கப்பட்டது அவன்
இதயம் மட்டும் இல்லை -
இணைப்புகளும்தான்.

gans5001
22-02-2010, 04:45 AM
மன்னிக்கவும். இதை கவிதை என ஏற்க மனம் மறுக்கிறது.

Ravee
22-02-2010, 08:38 AM
ஆமாம் கதை போன்ற விசயங்களை சொல்லும் போது உரையாடல் போல சில சமயம் ஆகி விடுகிறது . கவனத்தில் கொள்கிறேன் .