PDA

View Full Version : காதலுக்கு....தினம்...என்று?



சிவா.ஜி
13-02-2010, 12:18 PM
விதவிதமான பரிசுகளிலும்
வாழ்த்து மடல்களிலும்
ஒற்றை ரோஜாக்களிலும்
காஃபி ஷாப் கைத்தடவல்களிலும்
கன்ன உரசல்களிலும்
கட்டிப் பிடித்தல்களிலும்
இதழ் முத்தங்களிலும்
இரைச்சல் சத்தங்களிலும்
நடன அரங்கங்களிலும்
நாற்சந்தி முனைகளிலும்
இறைந்து கிடக்கிறது...
கமர்ஷியல் காதல்....
கூவிக் கூவி அழைக்கின்றன
காதலை விற்கும் கடைகள்....
காதலர் தினமாம் இன்று....


காதலுக்கு....தினம்...என்று?

அமரன்
13-02-2010, 07:06 PM
காதலர் தினமாம் இன்று....
காதலுக்கு....தினம்...என்று?

காதலுக்கு எதுக்குங்க தினம்.
காதல்தானே தினம் தினம்!!

ஜனகன்
13-02-2010, 07:32 PM
காதலர் தினத்திற்கு ஓர் நல்ல கவிதை.

கூவிக் கூவி அழைக்கின்றன
காதலை விற்கும் கடைகள்....
காதலர் தினமாம் இன்று....

காதலும் விலைபோகின்றது அதுதான் கவலைக்குரிய விடயம்.

சிவா.ஜி
14-02-2010, 05:04 AM
அதேதான் அமரன். காதலுக்கு எதற்கு தினம். இது காதலர்கள் என சொல்லிக்கொள்பவர்கள் கொண்டாடிக்கொள்ளும் தினம். காதல் கொண்டாடப்பட வேண்டுமே தவிர காதலர் தினம் என்று ஒன்று கொண்டாடப்படுவது தேவையா?

சிவா.ஜி
14-02-2010, 05:06 AM
ஆம் ஜனகன். காதல் இப்போதெல்லாம் கடைகளில் விலைபோகிறது. பதின் வயதுகளில் காதல் இருந்தே ஆகவேண்டுமென்பது கட்டாயமாகிவிட்டது. புரிந்துகொள்ளப்பட்ட காதலாய் இருந்தால் வாழ்த்தலாம்......வெறும் இனக்கவர்ச்சியைக் காதல் என்று சொன்னால் என்ன சொல்வது?

நன்றி ஜனகன்.

rajarajacholan
14-02-2010, 05:58 AM
என்ன விலை காதலே உனக்கு?
வாங்கவா என் மனதைக் கொண்டு,,,,
ப்லா ப்லா ப்லா.
பல.. பல்..

இப்படி ஏதாச்சும் ஆரம்பிப்பீங்கன்னு பாத்தா இப்படி கவுத்திட்டீங்களே சார்.

காதலுக்கு விலையில்லை
காதலில் விலையே இல்லை
காதல் என்றால் விலையில்லை
விலையிருந்தால் அது காதலில்லை.

எப்படிங்க நம்ம காதலர் தின கவிதை?

சிவா.ஜி
14-02-2010, 07:23 AM
நிஜமாவே நல்லாருக்கு. காதலுக்கு விலை காதல்தான். காதல் கொடுத்து காதல் வாங்கு. சரிதானே சோழன்.

அமரன்
14-02-2010, 07:53 AM
அதேதான் அமரன். காதலுக்கு எதற்கு தினம். இது காதலர்கள் என சொல்லிக்கொள்பவர்கள் கொண்டாடிக்கொள்ளும் தினம். காதல் கொண்டாடப்பட வேண்டுமே தவிர காதலர் தினம் என்று ஒன்று கொண்டாடப்படுவது தேவையா?

அன்னையர் தினம்.. தந்தையர் தினம்.. ஆசிரியர் தினம்.. குழந்தைகள் தினம்.. இந்த வரிசைதான் காதலர் தினம். அன்றாடத்தில் கரைந்து விட்ட எங்களுக்கு பண்டிகைகள், திருவிழாக்கள் எப்படியோ அப்படித்தான் காதலில் ``கலந்துவிட்ட`` காதலர்களுக்கு காதலர் தினம்.

விட்டிடுவோம் பாஸ். இருந்திட்டுப் போகட்டும்.

சிவா.ஜி
14-02-2010, 09:05 AM
அப்படீங்கறீங்களா...? சரி அப்ப விட்டுடுவோம் பாஸ். பத்தோட பதிணொண்னு அத்தோட இது ஒண்ணு.....இருந்துட்டு போவட்டும்.

Mano.G.
15-02-2010, 08:52 AM
ஆம் அந்த ஒருநாளில் தான் காதலும்
அன்பும் வெளிபடுதோ? ,
அதற்கான ஆர்ப்பாட்டம் என்ன,?
தொலை காட்ச்சியில் விளம்பரங்கள் என்ன?

அன்பும் காதலும் வியாபாரமாக போய்டுச்சி ஐயா

சிவா.ஜி
15-02-2010, 09:21 AM
ஆமாங்க மனோ.ஜி அவர்களே. ரொம்பத்தான் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். எல்லாமே வியாபாரமாகிவிட்டது.

உமாமீனா
15-02-2011, 05:58 AM
காதலர் தினமாம் இன்று....

காதலுக்கு....தினம்...என்று?

இத இததான் நானும் கேட்கிறேன்