PDA

View Full Version : அறுந்த காதல்



கீதம்
13-02-2010, 10:17 AM
என் அறைக்குள் வாழும்
அந்த வாலறுந்த பல்லி,
உன்னை எனக்கு நினைவூட்டிக்கொண்டேயிருக்கிறது;
முரண்பட்ட கருத்துகளால்
முற்றுப்பெற்ற நம் காதலை
நீ வெட்டிவிட்டபோது,
துடிதுடித்தது என் மனம்,
அந்தப் பல்லியின் அறுந்த வாலைப்போலவே!
மற்றுமொரு வால் வளர்ந்தாலும்,
அசலுக்கும், நகலுக்குமான வேறுபாடு
அதில் நன்றாகவேத் தெரிகிறது!

(பதிவுகளில் வெளிவந்த என் கவிதை)

சிவா.ஜி
13-02-2010, 10:42 AM
இரண்டுமே அறுபட்டவை, இரண்டுமே துடிக்கின்றன....இரண்டுமே மீண்டும் வளர்ந்தாலும் வித்தியாசமுணர்த்தும் அசல்....

கவிதை அசல். வாழ்த்துகள் கீதம் அவர்களே.

rajarajacholan
13-02-2010, 10:49 AM
????

காதலர் தினம் நாளைக்குன்னு பாத்து இப்படி அறுந்த காதலனு கவிதை பாடரீங்களே கீதம் மேடம்?

அமரன்
13-02-2010, 11:05 AM
ஓடிக்கொண்டிருக்கும் முகில் கூட்டத்தில்
ஏதோ ஒரு முகில்
எனக்கான மழையைத் தூவிக்கொண்டிருந்தது..

எங்கு நான் சென்றாலும்
என்னைத் தொடர்ந்து வந்து
தூவிக்கொண்டிருந்த அந்த முகில்
எங்கிருந்தோ வந்த
அடர் காற்றினால் அடித்துச் செல்லப்பட
விழுந்த இடைவெ்ளியில்
வந்து நிரம்பியது
என் மேல் விழுந்த காதல் மழையின்
விளையான இன்னொரு முகில்..

மீண்டும் மழை என் வட்டத்தில்..
ஆனாலும்
புழுக்கம் மட்டும் நின்றபாடில்லை
அடர்கறுப்புப் படர்ந்த என்
மனவான் பரப்பினால்..

துடித்துக் கொண்டிருக்கிறேன்
ஒரு புழுவை மாதிரி..
கூடவே என்னிதயமும் துடித்தபடி..

பாராட்டுகள் கீதம்.

குணமதி
13-02-2010, 11:38 AM
துண்டிக்கப்பட்ட பல்லியின் வால்

கடுமையாக வலியைத் தந்தாலும் -

சிறிது காலத்திலேயே தீர்ந்துவிடும்!

முழுமை பெற்ற நிலையில்...

எதற்காகவோ நீ வெட்டிவிட்ட

காதல் ஏற்படுத்திய மனவலி -

வாழ்வில் என்றுமே தீரப்போவதில்லை!

என்றாலும்-

நீ வாழ்க!

நின் குடும்பம் வாழ்க!

உணர்வான பாடலுக்குப் பாராட்டு!

கீதம்
13-02-2010, 10:29 PM
இரண்டுமே அறுபட்டவை, இரண்டுமே துடிக்கின்றன....இரண்டுமே மீண்டும் வளர்ந்தாலும் வித்தியாசமுணர்த்தும் அசல்....

கவிதை அசல். வாழ்த்துகள் கீதம் அவர்களே.

முழுமையாய்ப் புரிந்துகொள்ளப்பட்ட, முதற்பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சிவாஜி அவர்களே.

கீதம்
13-02-2010, 10:33 PM
????

காதலர் தினம் நாளைக்குன்னு பாத்து இப்படி அறுந்த காதலனு கவிதை பாடரீங்களே கீதம் மேடம்?

அடப்பாவமே! காதலர் தினத்தன்று உங்களை வருந்த வைத்ததற்காக வருந்துகிறேன்.

காதலர்களை விழிப்பாய் வைத்திருக்க என்னாலான கவிதை முயற்சி இது. பின்னூட்டத்திற்கு நன்றி ராஜராஜசோழன் அவர்களே.

கீதம்
13-02-2010, 10:36 PM
ஓடிக்கொண்டிருக்கும் முகில் கூட்டத்தில்
ஏதோ ஒரு முகில்
எனக்கான மழையைத் தூவிக்கொண்டிருந்தது..

எங்கு நான் சென்றாலும்
என்னைத் தொடர்ந்து வந்து
தூவிக்கொண்டிருந்த அந்த முகில்
எங்கிருந்தோ வந்த
அடர் காற்றினால் அடித்துச் செல்லப்பட
விழுந்த இடைவெ்ளியில்
வந்து நிரம்பியது
என் மேல் விழுந்த காதல் மழையின்
விளையான இன்னொரு முகில்..

மீண்டும் மழை என் வட்டத்தில்..
ஆனாலும்
புழுக்கம் மட்டும் நின்றபாடில்லை
அடர்கறுப்புப் படர்ந்த என்
மனவான் பரப்பினால்..

துடித்துக் கொண்டிருக்கிறேன்
ஒரு புழுவை மாதிரி..
கூடவே என்னிதயமும் துடித்தபடி..

பாராட்டுகள் கீதம்.

வலியை வலிக்காமல் சொன்னவிதம் அருமை. காலம் ஆற்றாத காயமுண்டோ?

அமரக்கவிதைக்கு என் நன்றியும் பாராட்டும்.

கீதம்
13-02-2010, 10:38 PM
துண்டிக்கப்பட்ட பல்லியின் வால்

கடுமையாக வலியைத் தந்தாலும் -

சிறிது காலத்திலேயே தீர்ந்துவிடும்!

முழுமை பெற்ற நிலையில்...

எதற்காகவோ நீ வெட்டிவிட்ட

காதல் ஏற்படுத்திய மனவலி -

வாழ்வில் என்றுமே தீரப்போவதில்லை!

என்றாலும்-

நீ வாழ்க!

நின் குடும்பம் வாழ்க!

உணர்வான பாடலுக்குப் பாராட்டு!

தங்கள் வரிகள் மிக அருமை. பாராட்டுக்கு நன்றி குணமதி அவர்களே.

கலையரசி
14-02-2010, 12:43 PM
இனிமேல் வாலறுந்த பல்லியைக் காணும் போதெல்லாம் உங்கள் இந்தக் கவிதை
ஞாபகம் வந்து மனதைப் பாரமாக்கும்.
நல்ல கவிதை. பாராட்டு கீதம்.

இளசு
17-02-2010, 08:34 PM
http://discovermagazine.com/2005/may/ask-discover


ஆபத்தினின்று தப்பிக்க
அறுத்துவிடப்பட்ட வால்...!

பல்லியின் தற்காப்பு நிகழ்வை
காதல், வன்பிரிவு, வலி, தேறல், வடு என
தற்குறிப்பேற்றித் தந்து அசத்தினீர்கள் கீதம்..

பாராட்டுகள்...


உருவான முதலை இழந்து
பிறிதொன்றை ஒட்டினாலும்
அசல் போல வருமா
அங்கலாய்ப்பு தொடரும்...

கீதம்
19-02-2010, 09:41 PM
இனிமேல் வாலறுந்த பல்லியைக் காணும் போதெல்லாம் உங்கள் இந்தக் கவிதை
ஞாபகம் வந்து மனதைப் பாரமாக்கும்.
நல்ல கவிதை. பாராட்டு கீதம்.

தங்கள் நெகிழ்வான பாராட்டுக்கு நன்றி கலையரசி அவர்களே.

கீதம்
19-02-2010, 09:43 PM
http://discovermagazine.com/2005/may/ask-discover


ஆபத்தினின்று தப்பிக்க
அறுத்துவிடப்பட்ட வால்...!

பல்லியின் தற்காப்பு நிகழ்வை
காதல், வன்பிரிவு, வலி, தேறல், வடு என
தற்குறிப்பேற்றித் தந்து அசத்தினீர்கள் கீதம்..

பாராட்டுகள்...


உருவான முதலை இழந்து
பிறிதொன்றை ஒட்டினாலும்
அசல் போல வருமா
அங்கலாய்ப்பு தொடரும்...

விளக்கத்துடனான தங்கள் விமர்சனப் பின்னூட்டத்திற்கும் பாராட்டுக்கும் நன்றி இளசு அவர்களே.

அக்னி
12-03-2010, 06:58 AM
பல்லி அறுத்துவிட்ட
வாலைப் போலே,
என்னை நீ அறுத்தபோதுதான்
தெரிந்துகொண்டேன்,
ஒட்டிக்கொண்டிருந்த
வால்தான் நானென...

பல்லிக்கும் உனக்கும்
வாலை அறுத்துவிட்டதோடு
முடிந்துபோனது...

எனக்கோ
என் மனதை அறுத்துக்
கூறுபோட்டுக்கொண்டேயிருக்கின்றது
அறுந்த அந்த வால்,
வாளாக மாறி...

பாராட்டு...

கீதம்
13-03-2010, 08:46 PM
பிரமாதம்! விடுபட்ட கோணங்களில் ஆராயும் தங்கள் சிந்தனை வெகுவாய்க் கவர்கிறது. பாராட்டும் நன்றியும் அக்னி அவர்களே.

Ravee
14-03-2010, 03:36 AM
ஆழ்ந்த உள்வாங்கல் ஒவ்வொன்றிலும் உங்கள் எளிமையான உவமை கவிதைகள் ... உங்கள் ரசிகன்

கீதம்
15-03-2010, 04:34 AM
ஆழ்ந்த உள்வாங்கல் ஒவ்வொன்றிலும் உங்கள் எளிமையான உவமை கவிதைகள் ... உங்கள் ரசிகன்

மிக்க நன்றி ரவீ அவர்களே.